search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "National Disaster Response Force"

    • தேசிய பேரிடர் மீட்புப்படை [NDRF] கேரளா வந்தடைந்துள்ளது.
    • மாநிலத்தின் தீயணைப்புத்துறை, வனத்துறை மற்றும் போலீசுடன் சேர்ந்து மக்களை மீட்கும் பணியில் ஈடுபடுகின்றனர்.

    நிலச்சரிவுகள் என்பது மேடான இடங்களில் உள்ள பகுதி சரிவை நகருவதாகும். நிலநடுக்கம், கனமழையால் வெள்ளம், எரிமலை வெடிப்பினால் ஏற்படும் அதிர்வுகளால் ஏற்படும் அதீத புவி ஈர்ப்பு விசையினால் மேடான பகுதிகள் கீழ் நோக்கி நகர்கின்றன. மண்ணும் பாறைகளும் பலவீனமாக மலைச்சரிவுகளின் உள்ள வெற்றிடங்கள், துளைகள் மற்றும் வெடிப்புகளில் கனமழை போன்ற சமயங்களில் பெருக்கெடுக்கும் அதிக நீரினால் ஏற்படும் அழுத்தமே நிலச்சரிவுக்கு காரணமாகிறது.

    கனமழை, நிலநடுக்கம் உள்ளிட்டவற்றைக் கணிக்கும்போது மலைப்பிரதேசங்களில் நிலச்சரிவுக்கான எச்சரிக்கையும் சேர்ந்தே விடுக்கப்படும். இந்தியாவின் பல்வேறு இடங்களில் மேடான பகுதிகளில் மக்கள் வாழ்ந்து வருவதால் நிலச்சரிவினால் ஏற்படும் உயிரிழப்புகளும் தவிர்க்க முடியாததாகிறது.

    தற்போது கேரளாவின் வயநாடு மாவட்டத்தில் பெய்து வரும் கனமழையால் மேட்டுப்பட்டி, சூரல் மலை, முண்டகை ஆகிய பல்வேறு இடங்களில் ஏற்பட்டுள்ள நிலச்சரிவுகளிலும் அதுவே புலனாகிறது. இந்த பேரிடரில் சிக்கி இதுவரை 24 பேர் உயிரிழந்துள்ள அப்பகுதிகளில் வசிக்கும் 400 குடும்பங்களைச் சேர்ந்த 1000 பேர் சிக்கித் தவிக்கின்றனர்.

    கனமழையால் அவர்களை மீட்பது மீட்பு குழுக்களுக்கு பெரும் சிக்கலாக மாறியுள்ளது. அங்கு சிக்கியுள்ள மக்களை மீட்க தேசிய பேரிடர் மீட்புப்படை [NDRF] கேரளா வந்தடைந்துள்ளது. இந்த படையைச் சேர்ந்த குழுக்கள், மாநிலத்தின் தீயணைப்புத்துறை, வனத்துறை மற்றும் போலீசுடன் சேர்ந்து மக்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

     

     

    அப்பகுதிகளுக்குச் செல்லும் பாலங்கள் சேதமடைந்துள்ளதால் மீட்புப்பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது. தேசிய பேரிடர் மீட்புப்பணி [NDRF] என்பது 2006 ஆம் ஆண்டு மத்திய அரசால் தொடங்கப்பட்ட அமைப்பாகும். இந்த மீட்புப்பணியில் தற்போது மொத்தம் 13,000 வீரர்கள் உள்ளனர். இவர்கள் நாடு முடிவதிலும் நடக்கும் பேரிடர்களில் சிக்கியுள்ள மக்களை மீட்க பயன்படுத்தப்படுத்தப்படுகின்றனர். இதன் தற்போதைய செயல் இயக்குநராக பியூஷ் ஆனந்த் ஐபிஎஸ் உள்ளார். 

    • புயல் சுழற்சி காரணமாக கேரள மாநிலத்தில் கனமழைக்கு வாய்ப்பு.
    • இன்றும் நாளையும் கனமழை முதல் மிக கனமழையும் பெய்யும்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலத்தில் கடந்த மாத இறுதியில் தென்மேற்கு பருவமழை பெய்ய தொடங்கியது. அதில் இருந்தே அனைத்து மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்தது. ஒருசில மாவட்டங்களில் கனமழை கொட்டியது.

    இந்நிலையில் தென்கிழக்கு அரபிக்கடலில் ஏற்பட்டிருக்கும் புயல் சுழற்சி காரணமாக கேரள மாநிலத்தில் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்யும் என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

    அதில் குறிப்பாக மாநிலத்தில் இன்றும் நாளையும் கனமழையும், 23-ந்தேதி மிக கனமழையும் பெய்யும் என்று கூறப்பட்டிருக்கிறது. வானிலை மையம் தெரிவித்தபடியே கடந்த சில நாட்களாக கேளாவில் பல மாவட்டங்களில் கனமழை கொட்டி வருகிறது.

    மேலும் கேரள கடற்கரை பகுதிகளில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் கடல் சீற்றம் ஏற்பட்டு அலைகள் ஆக்ரோஷமாக அடிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டி ருக்கிறது. கனமழை பெய்யும் என்று கூறப்பட்டுள்ள மாவட்டங்களில் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    கனமழை மற்றும் பலத்த காற்று எச்சரிக்கை விடுக்கப்பட்டிருப்பதால் கேரள மாநிலத்துக்கு தேசிய பேரிடர் மீட்பு குழு விரைந்தது. மீட்பு பணிக்கு தேவையான அனைத்து உபகரணங்களுடன் மொத்தம் 9 குழுக்கள் கேரளா வந்திருக்கின்றன.

    கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள் இடுக்கி, பத்தினம்திட்டா, ஆலப்புழா, எர்ணாகுளம், மலப்புரம், கொல்லம், கோழிக்கோடு, திருச்சூர், வயநாடு ஆகிய மாவட்டங்களில் தேசிய பேரிடர் மீட்பு படை வீரர்கள் களமிறக்கப்பட்டுள்ளதாக அரக்கோணம் 4-வது பட்டாலியன் கமாண்டன்ட் தெரிவித்திருக்கிறார்.

    மழையால் ஏற்படும் பாதிப்புகளை உடனுக்குடன் தெரிந்துகொண்டு மீட்பு பணிகளை மேற்கொள்வ

    தற்காக தேசிய பேரிடர் மீட்பு படை மூலம் கேரளாவில் அவசர கால செயல்பாட்டு கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டி ருக்கிறது. அந்த அறை அரக்கோணத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறையுடன் இணைக்கப்பட்டு நிலைமை கண்காணிக்கப்பட்டு வருகிறது.

    • தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் பிரதம மந்திரியின் தலைமையில் நிறுவப்பட்டுள்ளது.
    • பேரிடர் மேலாண்மை ஆணையம் 3 நிலைகளில் நிறுவப்பட்டுள்ளது.

    பேரிடர் மேலாண்மைச் சட்டம், 2005 இன் படி, "பேரழிவு"என்பது இயற்கை அல்லது மனிதனால் உருவாக்கப்பட்ட விபத்தினால் அல்லது அலட்சியத்தால் ஏற்படும். ஒரு இயற்கை பேரழிவில் பூகம்பம், வெள்ளம், நிலச்சரிவு, சூறாவளி, சுனாமி, நகர்ப்புற வெள்ளம் ஆகியவை அடங்கும். மனிதனால் உருவாக்கப்பட்ட பேரழிவு அணு, உயிரியல் மற்றும் இரசாயனமாக இருக்கலாம்.

    பேரிடர் மேலாண்மைக்கான தேசியக் கொள்கை, பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் படியாக தயாரிக்கப்பட்டது. இது பேரிடர்களை முழுமையான முறையில் கையாள்வதற்கான கட்டமைப்பு வழங்குகிறது. சட்டத்தின் விதிகளின் கீழ், பேரிடர் மேலாண்மை ஆணையம் 3 நிலைகளில் நிறுவப்பட்டுள்ளது. தேசிய, மாநில மற்றும் மாவட்டம்.

     

    கோப்புப்படம் 

    கோப்புப்படம் 

    1. தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் பிரதம மந்திரியின் தலைமையில் நிறுவப்பட்டுள்ளது, மேலும் அதன் செயல்பாடுகளை நிறைவேற்ற உதவுவதற்காக செயலாளர்களின் தேசிய செயற்குழு உருவாக்கப்பட்டது.

    2. மாநில அளவில், மாநில முதல்வர் தலைமையில் ஒரு மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் உருவாக்கப்பட்டது. அதற்கு மாநில செயற்குழுவின் உதவி உள்ளது. அதேபோல் மாவட்ட அளவில், மாவட்ட பேரிடர் மேலாண்மை ஆணையங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

    இருப்பினும், இயற்கைப் பேரிடரை தேசியப் பேரிடராகக் குறிப்பிடும் நிர்வாக அல்லது சட்டம் எதுவும் இல்லை. இதன் விளைவாக, ஒரு பேரிடர் தேசிய பேரிடராக தகுதி பெறுவதற்கான நிலையான தரநிலை எதுவும் இல்லை.

     

    கோப்புப்படம் 

    கோப்புப்படம் 


    10-வது நிதி ஆணையம் (1995-2000) இது சம்பந்தமாக ஒரு ஆலோசனையை பரிசீலித்தது. மாநிலத்தின் மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பகுதியை ஒரு பேரிடர் பாதித்தால், அது தேசிய பேரிடராக வகைப்படுத்தப்பட வேண்டும் என்று பரிந்துரைக்கப்பட்டது.

    எவ்வாறாயினும், விதிவிலக்கான தீவிரத்தன்மையின் பேரழிவு ஒவ்வொரு வழக்கின் அடிப்படையில் தீர்மானிக்கப்பட வேண்டும் என்று கூறியது. ஒரு பேரிடரை தேசிய பேரிடர் என்று வகைப்படுத்துவதற்கு முன் பின்வருவனவற்றைக் கருத்தில் கொள்கிறார்கள்:

    • பேரழிவின் அளவு மற்றும் அதற்காக தேவைப்படும் உதவியின் அளவு.

    • சிக்கலைத் தீர்ப்பதற்கான அரசின் நிவாரண நடவடிக்கைகள் மற்றும் அனுசரிப்பு.

    • பகுதிகளின் சேதம், உயிர் சேதம் ஆகியவற்றை பொறுத்து அமைகிறது.

    • தாமிரபரணி ஆற்றில் குளிக்கவோ, ஆற்றின் கரையோர பகுதிகளுக்கு செல்லாமல் பாதுகாப்பாக இருக்கும்படி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
    • மெழுகுவர்த்தி, டார்ச் லைட், செல்போன் பவர் பேங்க், கொசுவர்த்தி உள்ளிட்டவை கையிருப்பு இருக்க வேண்டும்.

    நெல்லை:

    நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் நேற்று முதல் கனமழை பெய்து வருகிறது.

    தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக தாழ்வான இடங்களில் வெள்ளம் சூழந்துள்ளது. மேலும் அணைகள், ஆறுகள் மற்றும் நீர்நிலைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

    தாமிரபரணி ஆற்றில் வினாடிக்கு 5 ஆயிரம் கன அடிக்கு மேல் தண்ணீர் செல்வதால் ஆற்றங்கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    தூத்துக்குடி மாவட்டத்தில் மருதூர் மற்றும் ஸ்ரீவைகுண்டம் அணைக்கட்டு பகுதிகள், கலியாவூர் முதல் புன்னக்காயல் வரை தாமிரபரணி ஆற்றங்கரையோர கிராமங்களில் வசிக்கும் பொதுமக்கள் தாமிரபரணி ஆற்றில் குளிக்கவோ, ஆற்றின் கரையோர பகுதிகளுக்கு செல்லாமல் பாதுகாப்பாக இருக்கும்படி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    மேலும் தாமிரபரணி ஆற்றில் பொதுமக்கள் மற்றும் கால்நடைகள் இறங்கா தவாறு கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் கிராம உதவியாளர்கள் மூலம் கண்காணித்திட ஸ்ரீவைகுண்டம், ஏரல் மற்றும் திருச்செந்தூர் தாசில்தார்களுக்கு அறிவுறுத்தப்பட்டு கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தபட்டுள்ளது.

    மேலும், பொதுமக்கள் அத்தியாவசிய தேவையான குடிநீர், ஓரிரு நாட்களுக்கு தேவையான அத்தியாவசிய உணவுப் பொருட்கள் கையிருப்பில் வைத்துக் கொள்ளுமாறு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

    மெழுகுவர்த்தி, டார்ச் லைட், செல்போன் பவர் பேங்க், கொசுவர்த்தி உள்ளிட்டவை கையிருப்பு இருக்க வேண்டும்.

    ஒரு சில இடங்களில் மின் சப்ளை பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது என்பதால் குடிநீர் சப்ளை மற்றும் போர் மோட்டார் இயக்கத்தில் தடை ஏற்பட வாய்ப்புள்ளது.

    எனவே எங்கெங்கு வாய்ப்புள்ளதோ அந்த ஊர்களில் எல்லாம் குடிநீர் டேங்க், சின்டெக்ஸ் டேங்க் உள்ளிட்டவற்றை இன்றே நிரப்பி வைத்துக்கொள்ள வேண்டும் என நெல்லை மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன் கேட்டுக் கொண்டுள்ளார்.

    இதற்கிடையே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களுக்கு 25 பேர் கொண்ட 4 தேசிய பேரிடர் மீட்பு படை குழு வருகை தர உள்ளது.

    • நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி மாவட்டங்களில் நேற்றிரவு முதல் கனமழை பெய்து வருகிறது.
    • 100 பேர் கொண்ட 4 குழுக்கள் மீட்பு உபகரணங்களுடன் விரைகின்றன.

    தென் இலங்கை கடற்கரை பகுதியை ஒட்டிய வங்கக்கடல் பகுதிகளில் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் தென் மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.

    குறிப்பாக, நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி மாவட்டங்களில் நேற்றிரவு முதல் கனமழை பெய்து வருகிறது.

    இதன் எதிரொலியால், நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி மாவட்டங்களுக்கு தேசிய பேரிடர் மீட்பு படை விரைந்துள்ளது.

    தமிழ்நாடு அரசு பேரிடர் மேலாண்மை ஆணையம் கேட்டுக் கொண்டதின் பேரில் முன்செனச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    இதில், 100 பேர் கொண்ட 4 குழுக்கள் மீட்பு உபகரணங்களுடன் விரைந்துள்ளன. 

    தமிழகத்துக்கு 7-ம் தேதி ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ள நிலையில், 6 மாவட்டங்களுக்கு தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். #TNRain #RedAlert #NDRF

    சென்னை:

    தமிழ்நாட்டின் தென் பகுதி வளி மண்டலத்தில் மேல் அடுக்கு சுழற்சி நிலவுகிறது.

    இதன் காரணமாக தமிழ் நாட்டில் கடந்த 4 நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது.

    தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் வருகிற 9-ந் தேதி வரை பரவலாக மழை பெய்யும். சில இடங்களில் பலத்த மழை பெய்யக்கூடும். சில இடங்களில் மிக பலத்த மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

    இந்த நிலையில் அரபிக் கடலின் தென்கிழக்கு பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி இருக்கிறது. அது இன்று புயல் சின்னமாக மாற உள்ளது. அந்த புயல் சின்னம் ஓமன் நாட்டை நோக்கி நகரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    என்றாலும் அந்த புயல் தாக்கம் காரணமாக கேரளா, கர்நாடகா, தமிழ்நாடு 3 மாநிலங்களிலும் நாளை (ஞாயிற்றுக்கிழமை) மிக மிக பலத்த மழை பெய்யும் என்று ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

    நாளை தமிழ்நாட்டின் தென் பகுதிகளிலும், மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களிலும் மிக மிக பலத்த மழை பெய்யும் என்று வானிலை இலாகா எச்சரித்துள்ளது. இதையடுத்து தமிழக அரசு பல்வேறு முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற் கொண்டுள்ளது.

    தென்கிழக்கு அரபிக் கடலில் ஏற்பட்டுள்ள புயல் சின்னம் காரணமாக தமிழ்நாட்டுக்குள் ஈரப்பதம் மிக்க காற்று வீசும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. மேலும் நீலகிரி, தேனி, திண்டுக்கல், கோவை, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் மிக மிக பலத்த மழைக்கு வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டுள்ளது.

    இதையடுத்து இந்த 6 மாவட்டங்களுக்கும் பேரிடர் மீட்பு குழு அனுப்பப்பட்டுள்ளது. அவர்கள் எந்த சவாலையும் சமாளிக்கும் வகையில் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.

    இந்த நிலையில் நாளை மறுநாள் (திங்கட்கிழமை) வங்கக் கடல் பகுதியில் தமிழகம் அருகே குறைந்த காற்றழுத்தம் உருவாக உள்ளது. அது புயலாக மாறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் தமிழ்நாட்டின் கடலோர மாவட்டங்களில் திங்கட்கிழமை, செவ்வாய்க் கிழமைகளில் பரலாக மழை இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் கூறி உள்ளது.

    அந்த புயல் சின்னம் நகர் வதை பொறுத்து தமிழ்நாட்டின் வட மாவட்டங்களில் மழை பொழிவு இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. 2 புயல் சின்னங்கள் அடுத்தடுத்து தமிழ் நாட்டுக்குள் தாக்கத்தை ஏற்படுத்துவதால் கூடுதல் முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

     


    இதற்கிடையே நேற்று பகலில் விட்டு விட்டு பெய்த மழை இரவிலும் நீடித்தது. சென்னையில் விடிய விடிய மழை பெய்தது. இன்று காலை மழை சற்று ஓய்ந்து இருந்தது. இதனால் சென்னையில் இன்று பள்ளி, கல்லூரிகள் இயங்கின.

    ஆனால் பலத்த மழை விடிய விடிய நீடித்த காரணத்தால் தேனி, திருவாரூர், நீலகிரி மாவட்டங்களில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மதுரை மாவட்டத்தில் சில பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை கொடுக்கப்பட்டுள்ளது.

    திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பகுதியில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

    புதுச்சேரியில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் இன்று நான்காவது நாளாக பரவலாக மழை நீடித்தது. அனைத்து மாவட்ட கலெக்டர்களும் மீட்பு பணிகளுக்கு தயாராக இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

    நாளையும், நாளை மறு நாளும் மிக மிக பலத்த மழைக்கு வாய்ப்பு இருப்பதால் ஆழ்கடல் பகுதிக்கு சென்ற மீனவர்கள் அனைவரும் திரும்ப அழைக்கப்பட்டு விட்டனர். கடல் மிகவும் சீற்றத்துடன் இருப்பதால் கடலுக்குள் யாரும் செல்லக்கூடாது என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

    மழை பாதிப்பு சேதங்களை கண்காணித்து நடவடிக்கை எடுப்பதற்கு ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் தலைமையில் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. அவர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பகுதிகளில் தங்கியிருக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

    மிக பலத்த மழைக்கு வாய்ப்பு இருப்பதாக ரெட் அலர்ட் விடப்பட்டு இருப்பதால் பொதுமக்கள் கவனமுடன் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. மலை பிரதேசங்களுக்கு பயணம் மேற்கொள்ள வேண்டாம் என்று சுற்றுலா பயணிகள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

    குறிப்பாக மூணாறு, பாலக்காடு பகுதிகளில் உள்ளவர்கள் கவனமாக இருக்க அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. நீர்நிலை பகுதிகளுக்கு பொதுமக்கள் செல்ல வேண்டாம் என்றும் வெள்ள பகுதிகளில் நின்று செல்பி எடுப்பதை தவிர்க்க வேண்டும் என்றும் உத்தர விடப்பட்டுள்ளது.

    ரெட் அலர்ட் எச்சரிக்கையை தொடர்ந்து பல மாவட்டங்களில் இன்றே நிவாரண முகாம்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்கள் அந்த முகாம்களில் வந்து தங்கி கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    மேற்கு தொடர்ச்சி மலையையொட்டி உள்ள மாவட்டங்களில் அதிக மழை பெய்யும் என்று அகில இந்திய வானிலை ஆய்வு மையம் கூறி இருப்பதால் அதற்கேற்ப நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. மழை நீரை அகற்றவும், கீழே விழும் மரங்களை அகற்றவும் எந்திரங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

    முக்கிய மாவட்டங்களில் அவசர கட்டுப்பாட்டு மையம் மற்றும் 24 மணி நேரமும் செயல்படும் மையங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

    சுற்றுலா பயணிகள் தனுஷ்கோடிக்கு செல்வதை 3 நாட்களுக்கு தவிர்க்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. அது போல மழை அதிகரிக்கும்போது வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

    கேரள அரசு திருச்சூர், இடுக்கி, மலப்புரம் மாவட்டங்களில் இருந்து அணைகளில் தண்ணீர் திறந்து விட உத்தரவிட்டுள்ளது. எனவே அந்த தண்ணீர் வரும் பகுதிகளில் உள்ள தமிழக மக்கள் உஷாராக இருக்கும்படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

    நாளை (7-ந்தேதி) ரெட் அலர்ட்டை முதலில் கேரளா, தமிழ்நாடு ஆகிய 2 மாநிலங்களுக்கு மட்டுமே அகில இந்திய வானிலை ஆய்வு மையம் கூறி இருந்தது. ஆனால் நேற்று இரவு கர்நாடகாவிலும் பலத்த மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

    இதையடுத்து கர்நாடகா மாநிலத்தில் உள்ள 12 மாவட்டங்கள் உஷார் படுத்தப்பட்டுள்ளன. காவிரி நதிநீர் பிடிப்பு பகுதிகளிலும் மிக பலத்த மழை பெய்யும் என்று தெரிய வந்துள்ளது.

    இதற்கிடையே அரபிக் கடல், வங்க கடல் இரண்டு இடங்களிலும் புயல் சின்னம் உருவாக இருப்பதால் கொச்சி மற்றும் விசாகப்பட்டினத்தில் உள்ள கடற்படை தளங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. கடற்படை வீரர்கள் மீட்பு பணி செய்வதற்கு 24 மணி நேரமும் தயார் நிலையில் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    மீனவர்களுக்கு உதவுவதற்காக கொச்சி கடற்படை தலைமையகத்தில் இருந்து ஆங்கிலம், தமிழ், மலையாளம், இந்தி ஆகிய மொழிகளில் அறிவிப்புகள் வெளியிடப்பட்டு வருகின்றன. தமிழ்நாடு, கர்நாடகாவை விட கேரளாவுக்கு அதிக பாதிப்பு ஏற்படும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்து இருப்பதால் கேரளாவுக்கு தேசிய பேரிடர் மீட்பு குழுக்கள் அதிகளவில் அனுப்பப்பட்டுள்ளன. #TNRain #RedAlert #NDRF

    தமிழகத்துக்கு வரும் 7-ம் தேதி ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ள நிலையில், 4 மாவட்டங்களுக்கு தேசிய பேரிடர் மீட்பு படையினர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். #TN #RedAlert #NDRF #Rain #TNRain
    வேலூர்:

    தமிழகம் மற்றும் கேரளாவில் வரும் 7 மற்றும் 8 ஆகிய தேதிகளில் மிக கனமழை பெய்வதற்கான வாய்ப்புகள் இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதற்காக ரெட் அலர்ட் விடுக்கப்பட்டது.

    இந்த ரெட் அலர்ட்டை தொடர்ந்து கடலோர மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் பாதுகாப்பான இடங்களில் இருக்குமாறும், கடலில் மீன் பிடிக்க சென்றவர்களை கரை திரும்புமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    இந்த மழையில் இருந்து தமிழகத்துக்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள அனைத்து மாவட்ட அதிகாரிகளுடனும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று ஆலோசனை மேற்கொண்டார்.

    இந்நிலையில், தமிழகத்தின் மதுரை, கோவை, நீலகிரி, கன்னியாகுமரி ஆகிய 4 மாவட்டங்களுக்கு தேசிய பேரிடர் மீட்புப்படையினர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். அரக்கோணத்தில் இருந்து இந்த மீட்புக்குழு தற்போது இந்த 4 மாவட்டங்களுக்கு விரைந்துள்ளது. #TN #RedAlert #NDRF #Rain #TNRain
    ×