என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "nationalist congress"
- வருங்காலத்தில் எந்தத் தேர்தலிலும் போட்டியிட மாட்டேன்.
- கட்சி சார்பில் யாரையாவது நிறுத்துவேன் என்றார்.
மும்பை:
மகாராஷ்டிரா மாநிலம் பாராமதி தொகுதியில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:
நான் ஆட்சியில் இல்லை. மாநிலங்களவை உறுப்பினராக எனது பதவிக்காலம் ஒன்றரை ஆண்டுகள் மட்டுமே உள்ளது.
ஒன்றரை ஆண்டுகளுக்குப் பிறகு, நான் மீண்டும் மாநிலங்களவைக்குச் செல்வதா, இல்லையா என்பதை நான் ஆலோசிக்க வேண்டும்.
மக்களவை தேர்தலில் போட்டியிட மாட்டேன். வருங்காலத்தில் எந்தத் தேர்தலிலும் போட்டியிட மாட்டேன். கட்சி சார்பில் யாரையாவது நிறுத்துவேன்.
இதுவரை 14 தேர்தல்களில் போட்டியிட்டுள்ளேன். எந்தத் தேர்தலிலும் நீங்கள் என்னை வீட்டுக்குப் போக விடவில்லை.
ஒவ்வொரு தேர்தலிலும் நீங்கள் என்னை வெற்றி பெறச் செய்தீர்கள். புதிய தலைமுறையை கொண்டுவர வேண்டும்.
நான் சமூக சேவையை விடவில்லை. எனக்கு அதிகாரம் வேண்டாம். ஆனால் மக்களுக்கு சேவை செய்வதை விடவில்லை என தெரிவித்தார்.
- எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கை அடிப்படையில் என்சிபி கட்சியின் சின்னமான கடிகாரத்தை அஜித் பவாருக்கு ஒதுக்கியது
- கடிக்காத சின்னத்தை முடக்க வேண்டும் என்று சரத்பவார் உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார்
அஜித் பவருக்கு ஒர்க் அவுட் ஆன டைம்.. கடிகார சின்னத்தை பயன்படுத்த தடை இல்லை - உச்சநீதிமன்றம்
மகாராஷ்டிராவில் வரும் நவம்பர் 20 ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு நடத்தப்பட்டு நவமபர் 23 ஆம் தேதி முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. ஆளும் மாகாயுதி [ பாஜக - அஜித் பவார் தேசியவாத காங்கிரஸ் - ஷிண்டே சிவசேனா] மற்றும் மகா விகாஸ் அகாதி [காங்கிரஸ் - சரத் பவார் தேசியவாத காங்கிரஸ் - உத்தவ் சிவசேனா] ஆகிய இரண்டு கூட்டணிகள் களத்தில் உள்ளன.
சரத் பவார் தலைமையில் செயல்பட்டு வந்த தேசியவாத காங்கிரசை [என்சிபி] அவரது அண்ணன் மகன் அஜித் பவார் இரண்டாக உடைத்தார். 40 எம்.எல்.ஏ.க்கள் அஜித்பவாருக்கு ஆதரவு கொடுத்தனர். அஜித்பவாரின் ஆதரவாளர்கள் 9 பேருக்கு பா.ஜ.க., கூட்டணி அரசில் அமைச்சர் பதவி கொடுக்கப்பட்டது. அஜித் பவாருக்கு துணை முதல்வர் பதவி வழங்கப்பட்டது.
எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கை அடிப்படையில் என்சிபி கட்சியின் சின்னமான கடிகாரத்தை அஜித் பவாருக்கு ஒதுக்கி அவரது தலைமையிலான அணிதான் உண்மையான தேசியவாத காங்கிரஸ் கட்சி என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதனால் சரத் பாவருக்கு வேறு சின்னம் ஒதுக்கி அவரது தலைமையிலான அணி தேசியவாத காங்கிரஸ் (சரத்பவார்) என்று அழைத்துக் கொள்ளலாம் என்றும் தேர்தல் ஆணையம் கூறியது.
கட்சியின் பெயர் மற்றும் சின்னத்தை அஜித்பவார் அணிக்குக் கொடுத்ததை எதிர்த்து சரத்பவார் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்திருக்கிறார். அம்மனு நிலுவையில் இருக்கும் நிலையில் அதன் மீதான தீர்ப்பு வரும்வரை அஜித் பவாரின் கடிக்காத சின்னத்தை முடக்க வேண்டும் என்று சரத்பவார் கடந்த மாதம் உச்ச நீதிமன்றத்தில் புதிய மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். இந்நிலையில் தேர்தல் நெருங்கும் சமயத்தில் இந்த மனு மீதான விசாரணை இன்று நடைபெற்றது.
இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் சூர்யகாந்த், தீபான்கர் தத்தா மற்றும் உஜ்ஜல் பூயான் ஆகியோர் அடங்கிய அமர்வு,வழக்கில் இறுதி தீர்ப்பு வரும்வரை அஜித் பாவர் கடிகார சின்னத்தை பயன்படுத்த எந்த தடையும் இல்லை என்று தீர்ப்பளித்தனர்.
மேலும் சின்னத்தை பயன்படுத்துவது தொடர்பாக ஏற்கவே வழங்கப்பட்ட அறிவுறுதல்களின்படி கவனமாகச் செயல்பட வேண்டும் என்றும் வாக்காளர்களைக் குழப்பி திசை திருப்பும் விதமான செயல்களில் ஈடுபட்டால் அது நீதிமன்ற அவமதிப்பாகக் கருதப்படும் என்றும் நீதிபதிகள் எச்சரித்தனர்.
எனவே நடக்க உள்ள சட்டமன்றத் தேர்தலில் அஜித் பவார் கடிகார சின்னத்தைப் பயன்படுத்த உள்ளதால் இந்த தீர்ப்பு சரத் பவாருக்கு பின்னடைவாக அமைத்துள்ளது. முன்னதாக அஜித் பவார் தேசியவாத காங்கிரஸ் 38 வேட்பாளர்கள் கொண்ட முதல் கட்டப் பட்டியலை வெளியிட்டுள்ளது. கட்சித் தலைவரும் துணை முதல்வருமான அஜித் பவார் பாராமதி தொகுதியில் போட்டியிடுகிறார். அறிவிக்கப்பட்ட 38 பேரில் 26 பேர் தற்போது சட்டப்பேரவை உறுப்பினர்களாக உள்ளவர்கள் ஆவர்.
- அஜித் பவார் அணியைச் சேர்ந்த அமைச்சர் பாபா ஆத்ராம் என்பவரது மகள் பாக்கியஸ்ரீ சரத்பவார் தேசியவாத காங்கிரஸ் அணிக்கு தாவ உள்ளார்
- எனது மகளையும் மருமகனையும் ஆற்றில் தூக்கி வீசுங்கள் என்று பாபா ஆத்ரம் கடுமையாக பேசியிருந்தார்.
மகாராட்டிர தேர்தல் நெருங்குவதை ஒட்டி துணை முதல்வர் அஜித் பவாரின் தேசியவாத - பாஜக - ஷிண்டே சிவசேனா ஆகியோர் இடம்பெற்றுள்ள மஹாயுதி கூட்டணியில் குழப்பம் நீடித்து வருகிறது. சித்தப்பா சரத் பவாரின் தேசியவாத காங்கிரசை உடைத்து தனது ஆதரவாளர்களுடன் தங்கள் பக்கம் வந்த அவரது அண்ணன் மகன் அஜித் பவாரின் நடவடிக்கைகளை பாஜக மேலிடம் சந்தேகக் கண்களோடு கவனித்து வருகிறது.
குறிப்பாக மக்களவைத் தேர்தலில் சரத் பவார் அணி சார்பில் இந்திய கூட்டணி வேட்பாளராக போட்டியிட்டு வென்ற சகோதரி சுப்ரியா சூலேவை எதிர்த்து தனது மனைவியை நிறுத்தியிருக்கக்கூடாது என்று அஜித் பவார் கூறியது கூட்டணியில் விரிசல் ஏற்பட்டு வருவதை வெளிப்படையாக காட்டியது.
மக்களவைத் தேர்தலில் மகாராஷ்டிர பாஜக கூட்டணி பின் தங்கியதற்கு அஜித் பவார் அணி தான் காரணம் என்ற சலசலப்பும் கூட்டணி கட்சிகள் மத்தியில் இருந்து வருகிறது. எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் தான் போட்டியிடவில்லை என்று அறிவித்த அஜித் பவார் மகனை நிறுத்த திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது. இந்நிலையில் குடும்பத்தை உடைத்தது பெரிய தவறு என்று அஜித் பவார் பொதுவெளியில் மீண்டும் வருத்தப்பட்டு உள்ளார்.
அஜித் பவார் அணியைச் சேர்ந்த அமைச்சர் பாபா ஆத்ராம் என்பவரது மகள் பாக்கியஸ்ரீ சரத்பவார் தேசியவாத காங்கிரஸ் அணிக்கு தாவ உள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு எனது மகளையும் மருமகனையும் ஆற்றில் தூக்கி வீசுங்கள் என்று பாபா ஆத்ரம் கடுமையாக பேசியிருந்தார். இந்நிலையில் கட்சிரோலி நகரில் நடந்த ஜனசம்மான் பேரணியில் கலந்துகொண்ட அஜித் பவார், ஒரு மகளை அவரது தந்தையை விட யாரும் அதிகமாக நேசிக்க மாட்டார்கள், உங்களை [பாக்கியஸ்ரீ] ஜில்லா பிரெசிடெண்டாக ஆக்கினார் உங்கள் தந்தை.
ஆனால் நீங்கள் இப்போது அவருடன் சண்டை போடுவது சரிதானா? உங்கள் தந்தைக்கு நீங்கள் ஆதரவாக இருக்க வேண்டும். அவரை விட்டு செல்வது குடும்பத்தை உடைப்பது போன்றது, தனது சொந்த குடும்பத்தையே உடைக்கும் ஒருவரை இந்த சமூகம் எப்போதும் ஏற்றுக்கொள்ளாது. நானும் அதை அனுபவித்திருக்கிறேன், எனது தவறை நான் ஏற்றுகொண்டடேன் என்று தெரிவித்துள்ளார்.
சரத் பவாரை விட்டு வெளியேறியதைத் தவறு என்று அஜித் பாவர் கூறியுள்ளது பாஜக மேலிடத்தில் கொந்தளிப்பை எப்ராடுத்தியுள்ளதாக அரசியல் வட்டாரங்களில் பேச்சு அடிபடுகிறது.
- அவர்கள் அருகே உட்கார்ந்த பின்னர் வெளியே வந்ததும் எனக்கு குமட்டல் தான் வருகிறது என்று சுகாதாரத் துறை அமைச்சர் தனாஜி சாவந்த் தெரிவித்துள்ளார்.
- தானாஜியை அமைச்சர் பதவியிலிருந்து உடனடியாக நீக்கவில்லை என்றால் நாங்கள் கூட்டணியை விட்டு நிச்சயம் வெளியேறுவோம் என்று தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிர சட்டமன்றத் தேர்தல் விரைவில் நடக்க உள்ள நிலையில் அஜித் பவார் தேசியவாத - பாஜக - ஷிண்டே சிவசேனா ஆகியோர் இடம்பெற்றுள்ள மஹாயுதி கூட்டணியில் அதிருப்தி அலை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. பிரதமர் மோடி திறந்து வைத்த சிவாஜி சிலை உடைந்த விவகாரத்தில் சொந்த கூட்டணி அரசை எதிர்த்தே அஜித் பவார் தேசியவாத காங்கிரசார் போராட்டம் நடத்தியது அந்த விரிசலை மேலும் அதிகப்படுத்தியுள்ளது.
இந்நிலையில் இதற்கெல்லாம் மேலாக, மஹாயுதி கூட்டணியில் அஜித் பவார் தேசியவாத காங்கிரசுடன் இருக்கும் ஏக்நாத் ஷிண்டே சிவசேனா காட்சியைச் சேர்ந்த அம்மாநில சுகாதாரத் துறை அமைச்சர் தனாஜி சாவந்த் தெரிவித்துள்ள கருத்து கூட்டணியில் பெரும் புகைச்சலை ஏற்படுத்தியுள்ளது.
தாராஷிவ் பகுதியில் நடந்த நிகழ்ச்சியில் ஒன்றில் பேசிய தனாஜி சாவந்த், நான் அசல் சிவசேனா காரன், எனது மாணவப் பருவத்தில் இருந்தே தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரசை எனக்கு பிடித்ததில்லை. இதுதான் உண்மை. அதனால் இப்போது சட்டமன்றத்தில் அஜித் பவாருடனும் தேசியவாத காங்கிரஸ் அமைச்சர்களுடன் அருகருகே அமருவதை கூட என்னால் சகித்துக்கொள்ள முடியவில்லை. அவர்கள் அருகே உட்கார்ந்த பின்னர் வெளியே வந்ததும் எனக்கு குமட்டல் தான் வருகிறது என்று தெரிவித்துள்ளார்.
STORY | Sit next to NCP ministers at cabinet meetings but it's nauseating: Shiv Sena's Tanaji SawantREAD: https://t.co/fMan6gEu4UVIDEO: (Full video available on PTI Videos - https://t.co/n147TvqRQz) pic.twitter.com/YQIlgm72Hf
— Press Trust of India (@PTI_News) August 30, 2024
இந்த கருத்து அஜித் பவார் அணியினரிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இதுக்குறுய்த்து பேசிய அஜித் பவார் தேசியவாத காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் உமேஷ் பாட்டீல் கூறுகையில், எங்களை அவமதிக்கும் வகையில் தானாஜி தொடர்ந்து செயல்பட்டு வருகிறார். இதுபோன்ற பேச்சுக்களைக் கேட்டுக்கொண்டிருப்பதை விட, மஹாயுதி கூட்டணியை விட்டு வெளியேறுவதே சிறந்தது. தானாஜியை அமைச்சர் பதவியிலிருந்து உடனடியாக நீக்கவில்லை என்றால் நாங்கள் கூட்டணியை விட்டு நிச்சயம் வெளியேறுவோம் என்று தெரிவித்துள்ளார்.
இந்த விவகாரம் குறித்துப் பேசியுள்ள அஜித் பவார், நான் மக்களுக்காக வேலை செய்து கொண்டிருக்கிறேன், விமர்சனங்களுக்கு செவி சாய்ப்பதில்லை. எனக்கு எதிராக பேசுபவர்களை பற்றி எனக்கு கவலை இல்லை என்று தெரிவித்துள்ளார். இதற்கிடையே சுயமரியாதையை இழந்து, இன்னும் அந்த கூட்டணியில் அஜித் பவார் நீடிக்க வேண்டுமா?' என சரத் பவார் அணி தேசியவாத காங்கிரசார் கேள்வி எழுப்பியுள்ளனர்.
- அஜித் பவார் அணியிலிருந்து 18 முதல் 19 எம்எல்ஏக்கள் சரத் பவார் அணிக்கு வந்துவிடுவார்கள் என்று கூறப்பட்டது
- சட்டமன்றத் தேர்தல் விரைவில் வர உள்ள நிலையில் முக்கியத் தலைவர்களின் இந்த கட்சித் தாவல் அம்மாநில அரசியலில் புயலைக் கிளப்பியுள்ளது.
மகாராஷ்டிராவின் பழம்பெரும் கட்சியான சரத்பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சி இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கிறது. முன்னதாக சரத் பவாரின் அண்ணன் மகன் அஜித் பவார் கட்சியை உடைத்து தனது ஆதரவாளர்களுடன் பாஜகவுக்கு ஆதரவு அளித்து கடந்த 2022 ஆம் ஆண்டு பாஜக - ஷிண்டே சிவசேனா கூட்டணி ஆட்சியைப் பிடித்தபோது மகாராஷ்டிராவின் துணை முதலமைச்சர் ஆனார்.
சரத் பவார் அணி - அஜித் பவார் அணி என தேசியவாத காங்கிரஸ் பிரிந்து மகாராஷ்டிர அரசியல் களத்தை விறுவிறுப்பாக்கியுள்ள நிலையில் விரைவில் அம்மாநிலத்தில் வர உள்ள சட்டமன்ற தேர்தல் அந்த விறுவிறுப்பை இரட்டிப்பாக்கியுள்ளது.
நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் சரத் பவார் தேசியவாத காங்கிரஸ், உத்தவ் தாக்கரே சிவசேனா காங்கிரசின் இந்தியா கூட்டணியை ஒருங்கிணைத்த மஹா விகாஸ் அகாதி கூட்டணி மொத்தம் உள்ள 48 இடங்களில் 30 இடங்களை கைப்பற்றியது.
அஜித் -பவார் தேசியவாத காங்கிரஸ், ஏக்நாத் ஷிண்டே சிவசேனா, பாஜகவின் என்டிஏ கூட்டணியை ஒருங்கிணைத்த மஹாயுதி கூட்டணி 17 இடங்களை மட்டுமே கைபற்றி பின்தங்கியது.
இதன் விளைவாக ஜூன் 27 தொடங்கி ஜூலை 12 வரை நடந்த சட்டமன்ற மழைக்காலக் கூட்டத் தொடருக்குப்பின் பாஜகவுடன் உள்ள அஜித் பவார் அணியிலிருந்து 18 முதல் 19 எம்எல்ஏக்கள் தங்கள் அணிக்கு வந்துவிடுவார்கள் என்று பேச்சு அடிபட்டது.
சரத் பவாரும், எதிர்க் கூட்டணியில் உள்ள எம்.எல்.ஏக்கள் மீண்டும் எங்களிடம் வருவதில் மகிழ்ச்சிதான். ஆனால் எங்களின் கட்சியை பலவீனப்படுத்தும் நோக்கத்தில் வருபவர்களை நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம். மாறாக எங்கள் கட்சியை வலுப்படுத்த விரும்புபவர்களாகவும் கட்சியின் கண்ணியத்தை குலைக்காதவர்களாகவும் இருந்தால் மட்டுமே அவர்களை ஏற்றுக்கொள்வோம் என்று தெரிவித்திருந்தார்.
சமீபத்தில் நடந்த மேலவைத் தேர்தலில் எம்எல்ஏக்கள் கட்சி மாறி வாக்களிக்காமல் இருக்க ரிஸார்டுகளில் பாதுகாக்கப்பட்ட சம்பவமும் அரங்கேறியது.
இந்த நிலையில் பாஜக கூட்டணி தேசியவாத காங்கிரஸ் அஜித் பவார் அணியிலிருந்து பிம்ப்ரி சின்ச்வாட் பகுதியைச் சேர்ந்த நான்கு முக்கிய தலைவர்கள் விலகி உள்ளனர். பிம்ப்ரி சின்ச்வாட் பிரிவின் தலைவரான அஜித் கவாஹனே, மாணவர் தலைவர் யாஷ் சானே மற்றும் ராகுல் போஸ்லே, பங்கஜ் பாலேகர் அஜித் பவாரிடமிருந்து பிரிந்துள்ள நிலையில் சரத் பவாரை சந்தித்து தங்களது ஆதரவை தெரிவித்துள்ளனர்.
மகாராஷ்டிராவில் சட்டமன்றத் தேர்தல் விரைவில் வர உள்ள நிலையில் முக்கியத் தலைவர்களின் இந்த கட்சித் தாவல் அம்மாநில அரசியலில் புயலைக் கிளப்பியுள்ளது. இவர்களைத் தொடர்ந்து விரைவில் பலர் சரத் பவாரிடமே திரும்பி வருவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- மராட்டியத்தில் ஆட்சி மாற்றம் தேவைப்படுகிறது.
- சிவசேனா, காங்கிரஸ் ஆகிய கட்சிகள் கூட்டணியாகப் போட்டியிடும்.
மும்பை:
மராட்டியத்தில் 2019 பேரவைத் தோ்தலில் பா.ஜனதா-சிவசேனா கூட்டணிக்கு பெரும்பான்மை கிடைத்தது. ஆனால், முதல்-மந்திரி பதவியைத் தர மறுத்ததால் பா.ஜனதாவுடனான கூட்டணியை முறித்த சிவசேனா, எதிா்க்கட்சிகளாக இருந்த தேசியவாத காங்கிரஸ்-காங்கிரசுடன் இணைந்து ஆட்சி அமைத்தது. சிவசேனா தலைவா் உத்தவ் தாக்கரே முதல்-மந்திரி ஆனார்.
ஆனால், 2022-ம் ஆண்டு சிவசேனா மூத்த தலைவா் ஏக்நாத்ஷிண்டே கட்சியை உடைத்து, பா.ஜனதாவுடன் கைகோர்த்தாா். இதனால், உத்தவ் தாக்கரே முதல்-மந்திரி பதவியை இழந்தாா். ஷிண்டே புதிய முதல்- மந்திரி ஆனார்.
பா.ஜனதாவின் தேவேந்திரபட்னாவிஸ் துணை முதல்-மந்திரி ஆனார். இதன்பிறகு தேசியவாத காங்கிரஸ் கட்சியை உடைத்த சரத்பவாரின் நெருங்கிய உறவினா் அஜித்பவாரும் ஆளும் கூட்டணியில் இணைந்து துணை முதல்-மந்திரி பதவியைப் பெற்றாா்.
சமீபத்தில் நடைபெற்ற பாராளுமன்றத் தோ்தலில் எதிா்க்கட்சிகளின் மகா விகாஸ் அகாடி கூட்டணி மொத்தமுள்ள 48 இடங்களில், 30 தொகுதிகளில் வென்றது. பாராளுமன்றத் தோ்தலில் பா.ஜனதா தனிப்பெரும்பான்மை பெற முடியாமல் போனதற்கு மராட்டியத்தில் ஏற்பட்ட தோல்வியும் முக்கியக் காரணமாக இருந்தது.
இந்த நிலையில், சட்டசபை தோ்தலில் எதிா்க்கட்சிகளின் கூட்டணி ஆளும் கூட்டணிக்கு கடும் சவால் அளிக்க இருக்கிறது.
இந்த நிலையில் புனேயில் நிருபர்களுக்கு பேட்டியளித்த சரத்பவாா் கூறியதாவது:-
மராட்டியத்தில் ஆட்சி மாற்றம் தேவைப்படுகிறது. அதை மக்களுக்கு ஏற்படுத்தித் தர வேண்டியது எதிா்க்கட்சிகள் கூட்டணியின் கடமையாகும். எனவே, சட்டசபைத் தோ்தலில் (சரத்பவாா் தலைமை) தேசியவாத காங்கிரஸ், (உத்தவ்தாக்கரே தலைமை) சிவசேனா, காங்கிரஸ் ஆகிய கட்சிகள் கூட்டணியாகப் போட்டியிடும்.
தொகுதிப் பங்கீடு பேச்சுவாா்த்தை இதுவரை தொடங்கப்படவில்லை. எனினும், விரைவில் இது தொடா்பாக கூட்டணிக் கட்சிகளின் கூட்டம் நடைபெறும். பாராளுமன்றத் தோ்தலில் எங்கள் கூட்டணிக்கு மக்கள் நல்ல வரவேற்பை அளித்தாா்கள்.
இடதுசாரிகள், பி.டபிள்யூ.பி. கட்சி ஆகியவையும் எங்கள் கூட்டணியில் உள்ளன. பாராளுமன்றத் தோ்தலில் அக்கட்சிகளுக்கு தொகுதி ஒதுக்க முடியவில்லை. எனினும், சட்ட சபைத் தோ்தலில் அவா்களுக்கு கூடுதல் முக்கியத்துவம் அளிப்பது எங்கள் கடமை என்றாா்.
பெண்களுக்கு மாதம் ரூ.1,500 நிதியுதவி, ஆண்டுக்கு மூன்று எரிவாயு சிலிண்டா் இலவசம் உள்ளிட்ட பல்வேறு கவா்ச்சிகரமான வாக்குறுதிகளை மராட்டியத்தில் ஆளும் கூட்டணி இடைக்கால பட்ஜெட்டில் அறிவித்துள்ளது குறித்த கேள்விக்கு, 'இந்த அறிவிப்புகள் எதற்காக என்பது அனைவருக்கும் தெரியும்.
சில நாட்களுக்கு வேண்டுமானால் இதை வைத்து பரபரப்பாகப் பேச முடியும். கையில் பணம் இல்லாமல் சந்தைக்கு பொருள் வாங்கச் செல்வதுபோல உள்ளது ஆளும் கட்சியின் நிலை.
இவ்வாறு சரத்பவாா் கூறினார்.
- பாஜக வேட்பாளரை விட 28,000 வாக்குகள் அதிகம் பெற்று லங்கே வெற்றி பெற்றார்.
- லங்கேவுக்கு ஆங்கிலம் பேச வராது என்று பாஜக வேட்பாளர் கிண்டலடித்தார்.
மகாராஷ்டிரா மாநிலம் அகமத் நகர் பாராளுமன்ற தொகுதியில் வென்ற பெற்ற தேசியவாத காங்கிரஸ் வேட்பாளர் நிலேஷ் தனியன்தேவ் லங்கே ஆங்கிலத்தில் உறுதிமொழி கூறி பதவி ஏற்றுக் கொண்டார்.
ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்த லங்கேவுக்கு ஆங்கிலம் அவ்வளவாக பேச வராத நிலையில் தேர்தல் பிரச்சாரத்தின் போது இவர் எதிர்த்துப் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் சுஜய் பாட்டில் உங்களால் ஆங்கிலத்தில் பேச முடியுமா என கேலி செய்தார்.
மேலும் லங்கே ஆங்கிலத்தில் பேசினால் தேர்தலில் போட்டியிடுவதில் இருந்து தான் வாபஸ் பெற்று கொள்வதாக நக்கல் அடித்து இருந்தார்.
ஆனால் நடந்து முடிந்த தேர்தலில் பாஜக வேட்பாளரை விட 28,000 வாக்குகள் அதிகம் பெற்று லங்கே வெற்றி பெற்றார்.
தேர்தலில் வெற்றி பெற்ற பின்னர் பேசிய லங்கே, பாராளுமன்றத்தில் ஆங்கிலத்தில் தான் பேசுவேன், கேள்வி கேட்பேன் என்று பேசியிருந்தார்.
- ஜூன் 27 தொடங்கி ஜூலை 12 வரை சட்டமன்றக் மழைக்காலக் கூட்டத்தொடர் நடைபெற உள்ளது
- கட்சியை உடைத்த அஜித் பவார் அதில் 40 எம்எல்ஏக்களுடன் பாஜக பக்கம் சாய்ந்தது குறிப்பிடத்தக்கது.
மகாராஷ்டிராவின் பழம்பெரும் கட்சியான சரத்பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சி இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கிறது. முன்னதாக சரத் பவாரின் மகன் அஜித் பவார் கட்சியை உடைத்து தனது ஆதரவாளர்களுடன் பாஜகவுக்கு ஆதரவு அளித்து கடந்த 2022 ஆம் ஆண்டு பாஜக - ஷிண்டே சிவசேனா கூட்டணி ஆட்சியைப் பிடித்தபோது மகாராஷ்டிராவின் துணை முதலமைச்சர் ஆனார்.
சரத் பவார் அணி - அஜித் பவார் அணி என தேசியவாத காங்கிரஸ் பிரிந்து மகாராஷ்டிர அரசியல் களத்தை விறுவிறுப்பாக்கியுள்ள நிலையில் விரைவில் அம்மாநிலத்தில் வர உள்ள சட்டமன்ற தேர்தல் அந்த விறுவிறுப்பை இரட்டிப்பாகியுள்ளது.
இந்த நிலையில்தான் ஜூன் 27 தொடங்கி ஜூலை 12 வரை நடக்க உள்ள சட்டமன்ற மழைக்காலக் கூட்டத் தொடருக்குப்பின் பாஜகவுடன் உள்ள அஜித் பவார் அணியிலிருந்து 18 முதல் 19 எம்எல்ஏக்கள் தங்கள் அணிக்கு வந்துவிடுவார்கள் என சரத் பவாரின் உறவினரும் தேசியவாத காங்கிரசின் முக்கிய தலைவருமான ரோகித் பவார் தெரிவித்துள்ளது மகாராஷ்டிர அரசியலில் பூதத்தைக் கிளப்பியுள்ளது.
நேற்று நடந்த பொதுக்கூட்டத்தில் ரோகித் பவார் கூறியதாவது, வரும் சட்டமன்ற குளிர்காலக் கூட்டத்தொடரில் ஆட்சியில் உள்ள பாஜக - ஷிண்டே கூட்டணி அரசிடம் தங்களது தொகுதிகளுக்கு தேவையான வளர்ச்சி நிதியை கேட்டு வாங்கியதும் அஜித் பவார் பக்கம் இருக்கும் 18 முதல் 19 எம்எல்ஏக்கள் வரை மீண்டும் எங்களிடமே திரும்பி வந்துவிடுவர் என்று தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிர மாநிலத்தில் கடந்த 2019 இல் நடந்த சட்டமன்றத் தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் மொத்தமாக 54 இடங்களில் வென்ற நிலையில் கட்சியை உடைத்த அஜித் பவார் அதில் 40 எம்எல்ஏக்களுடன் பாஜக பக்கம் சாய்ந்தது குறிப்பிடத்தக்கது.
- இணையமைச்சர் பதவியை ஏற்க முடியாது என்பதை பாஜக தலைமைக்கு தெரிவித்துவிட்டேன்
- மோடி அமைச்சரவையில் அஜித் பவார் கட்சி இடம்பெறவில்லை
மகாராஷ்டிராவில் உள்ள 48 தொகுதிகளில் பாஜக 17 இடங்களில் மட்டும் தான் வென்றது. அதில் 1 இடத்தில் மட்டும் தான் அஜித் பவார் கட்சி வென்றது. அக்கட்சியின் பிரஃபுல் படேல் எம்.பி.யாக தேர்வானார்.
இந்நிலையில், மத்திய அமைச்சரவையில் பிரஃபுல் படேலுக்கு வழங்கப்பட்ட இணையமைச்சர் பதவியை ஏற்க அஜித் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சி மறுப்பு தெரிவித்துள்ளது. அதனால் மோடி அமைச்சரவையில் அஜித் பவார் கட்சி இடம் பெறவில்லை.
இது தொடர்பாக பேசிய மராட்டிய துணை முதல்வர் அஜித் பவார், "பிரஃபுல் படேல் ஏற்கனவே ஒன்றிய அமைச்சராக பதவி வகித்துள்ளார். அப்படி இருக்கும்போது இணையமைச்சர் பதவியை ஏற்பதில் எங்களுக்கு உடன்பாடு இல்லை. எங்களுக்கு ஒன்றிய அமைச்சர் பதவி வேண்டும் என கேட்டுள்ளோம். அமைச்சர் பதவிக்காக காத்திருக்க தயார் என பாஜக தலைமையிடம் தெரிவித்து உள்ளோம்" என்று கூறியுள்ளார்.
- மகாராஷ்டிராவில் ஏப்ரல் 19 முதல் மே 20 வரை 5 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது
- மகாராஷ்டிராவில், உத்தவ் தாக்ரேவின் சிவசேனா, சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சிகள் கூட்டணியில் உள்ளன
மகாராஷ்டிராவில் பா.ஜ.க எம்.பி உன்மேஷ் பாட்டீல், உத்தவ் தாக்கரே முன்னிலையில் அவரது கட்சியில் இணைந்துள்ளார்.
ஜல்கான் தொகுதி எம்.பி உன்மேஷ் பாட்டீலுக்கு மீண்டும் போட்டியிட பாஜக வாய்ப்பு மறுத்த நிலையில், அவர் உத்தவ் தாக்கரேவின் சிவசேனா கட்சியில் இணைந்துள்ளார்.
மகாராஷ்டிராவில், உத்தவ் தாக்ரேவின் சிவசேனா, சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சிகள் கூட்டணியில் உள்ளன. அதில், ஜல்கான் தொகுதி சிவசேனாவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. ஆகவே அந்த தொகுதியில் சிவசேனா சார்பில், உன்மேஷ் பாட்டீல் போட்டியிடலாம் என்று சொல்லப்படுகிறது.
மகாராஷ்டிராவில் ஏப்ரல் 19 முதல் மே 20 வரை 5 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்