என் மலர்
நீங்கள் தேடியது "natti natraj"
- சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் 'கங்குவா'.
- இப்படம் குறித்து நடிகர் நட்டி சில விஷயங்களை பகிர்ந்துள்ளார்.
இயக்குனர் சிவா இயக்கத்தில் சூர்யா தற்போது நடித்து வரும் திரைப்படம் 'கங்குவா'. ஸ்டுடியோ கிரீன் மற்றும் யுவி கிரியேஷன் நிறுவனம் இணைந்து தயாரிக்கும் இந்த படத்தில் பாலிவுட் நடிகை திஷா பதானி, யோகி பாபு, கிங்ஸ்லி, கோவை சரளா, ஆனந்த் ராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கும் இந்த படம் 3டி முறையில் சரித்திர படமாக 10 மொழிகளில் வெளியாகவுள்ளது. 'கங்குவா' திரைப்படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர், மோஷன் போஸ்டர் மற்றும் கிளிம்ப்ஸ் வீடியோவை சமீபத்தில் படக்குழு வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்தது.

இந்நிலையில், 'கங்குவா' படம் குறித்து நடிகர் நட்டி நட்ராஜ் சில விஷயங்களை தெரிவித்துள்ளார். அதில், நீங்கள் படத்தை பாருங்கள், கங்குவா கண்டிப்பாக உங்களுக்கு ஒரு புதுவித அனுபவத்தை கொடுக்கும். படம் மிகவும் அற்புதமாக வந்துள்ளது. படத்தின் திரையில் பிரம்மாண்டத்தை காண்பீர்கள். நானும் இப்படத்தில் ஒரு பகுதியாக இருப்பது மிகவும் சந்தோஷம் என்றார்.

