search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Natural Beauty"

    • குங்குமப்பூ சருமத்தில் உள்ள கரும்புள்ளிகள் வடுக்களை நீக்குகிறது.
    • சருமம் பொலிவற்று கருமையாக இருந்தால் குங்குமப்பூ சிறந்த மருந்தாகும்.

    மலைப்பிரதேசங்களில் அதிகம் விளையக்கூடிய குங்குமப்பூ உடலுக்கு குளிர்ச்சி தரக்கூடியது. குங்குமப்பூவில் வைட்டமின் சி மற்றும் ஈ போன்ற ஆன்டிஆக்ஸிடன்ட்கள் அதிகம் உள்ளன.

    குங்குமப்பூவை பால் (அ) தயிர் அல்லது தேனுடன் கலந்து பயன்படுத்தலாம். இந்த கலவையை முகத்தில் தடவி சிறிது நேரம் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். குங்குமப்பூவில் உள்ள கரோட்டினாய்டுகள் சருமத்தை மென்மையாக்கி, ஈரப்பதத்துடன் வைத்திருக்க உதவும். குங்குமப்பூ சருமத்தில் உள்ள கரும்புள்ளிகள் வடுக்களை நீக்குகிறது.

    குங்குமப்பூவில் உள்ள ஆன்டிமைக்ரோபியல் பண்புகள் முகப்பருவை உண்டாக்கும் பாக்டீரியாக்களை எதிர்த்துப் போராட உதவும். சருமம் பொலிவற்று கருமையாக இருந்தால் குங்குமப்பூ சிறந்த மருந்தாகும். இதில் உள்ள ஆன்டி ஆக்சிடன்ட் இயற்கையாகவே சருமத்தை பளபளப்பாக்கும்.

    கண்களை சுற்றி உள்ள கருவளையங்களுக்கு குங்குமப்பூவை அரைத்து தினமும் தடவி வர மாற்றம் தெரியும். தேங்காய் பாலுடன் சேர்த்து பயன்படுத்தும்போது கண்களுக்கு கீழ் உள்ள கருவளையங்கள் குறையும்.

    குங்குமப்பூவில் உள்ள லிகோபீன் சருமத்தின் நிறத்தை மேம்படுத்த உதவும்.

    குங்குமப்பூ சிலருக்கு சரும ஒவ்வாமையை ஏற்படுத்தலாம். முதலில் ஒரு சிறிய பகுதியில் பரிசோதனை செய்து பின்னர் பயன்படுத்தலாம்.

    • அழகாய் இருக்க வேண்டும் என்ற ஆசை எல்லோருக்கும் இருக்கிறது.
    • இயற்கையான அழகைப்பெற யாரும் முயற்சி எடுப்பதில்லை.

    அழகாய் இருக்க வேண்டும் என்ற ஆசை எல்லோருக்கும் இருக்கிறது. ஆனால் இயற்கையான அழகைப்பெற யாரும் முயற்சி எடுப்பதில்லை. உடலை நன்றாக பராமரித்தாலே அழகாக தோற்றமளிக்கலாம். இயற்கை தோல் பராமரிப்பு என்பது மிகவும் எளிதானது. இயற்கையான விதிமுறைகளை பின்பற்றுவதால் உங்களது தோலுக்கு எந்தவித பின்விளைவுகளும் ஏற்படாது.

    இயற்கை பராமரிப்பை மேற்கொண்டால் பாதிப்பும் இருக்காது. பலனும் நீண்ட காலத்திற்கு நீடிக்கும். அதற்கு என்ன செய்ய வேண்டும்?

    தினமும் சிறிது நேரமாவது உடற்பயிற்சி செய்ய வேண்டும். சமச்சீர் உணவை உட்கொள்ள வேண்டும். தினமும் இரவில் 8 மணி நேரம் தூங்க வேண்டும். தினமும் 2 லிட்டர் முதல் 3 லிட்டர் வரை தண்ணீர் குடிக்க வேண்டும். புத்தம் புதிய பழங்களை தினமும் சாப்பிட வேண்டும். காய்கறிகள், கீரைகளை சாப்பாட்டில் அதிகம் சேர்த்து கொள்ள வேண்டும். எண்ணெய் மற்றும் வறுத்த உணவுகளை தவிர்க்க வேண்டும். ஜங்க்புட் அயிட்டங்களை தொடவே கூடாது.

    கூடுமானவரை செயற்கை மேக்-அப் செய்வதை தவிர்க்க வேண்டும். அப்படி அவசியம் செய்ய வேண்டும் என்றால், நீண்ட நேரம் நீடித்து இருக்கக் கூடிய மேக்-அப்பை செய்யக் கூடாது. எப்போதும் ரிலாக்சாக இருக்க பழகிக் கொள்ள வேண்டும். சிறிது நேரமாவது தியானம் அல்லது யோகா செய்ய வேண்டும்.

    செயற்கை அழகு சாதன பொருட்களை பயன்படுத்தக் கூடாது. உங்களின் தோல் மருத்துவரை 6 மாதத்திற்கு ஒருமுறையாவது கன்சல்ட் செய்ய வேண்டும்.

    இந்த எளிய நடைமுறைகளை பின்பற்றினாலே போதும், உங்களது முகம் மட்டும் அல்ல உடலின் அனைத்து தோல் பகுதிகளும் மிருதுவாகவும் பார்ப்பதற்கு பளபளப்பாகவும் இருக்கும். தோலை பொலிவுபடுத்துவதற்காக செயற்கை அழகுசாதன பொருட்களை தேடிப்போக வேண்டியதில்லை. அதனால் ஏற்படும் பக்க விளைவுகளால் நீங்கள் அவஸ்தைப்படவும் தேவையில்லை.

    அதுமட்டுமல்ல நீண்டகாலத்திற்கு இந்த பலன் நீடித்து இருக்கும். வயதான காலத்திலும் கூட சில ஆண்களும், பெண்களும் பார்ப்பதற்கு பளபளவென்று காணப்படுவார்கள். அவர்களின் தோலில் சுருக்கமோ, சொர சொரப்புத்தன்மையோ இருக்காது. அதற்கு காரணம், இது போன்ற இயற்கை பராமரிப்புதான். எனவே நீங்களும் இந்த பராமரிப்பை கடைபிடித்தால் வயதான காலத்திலும் உங்களது தோல் பார்ப்பதற்கு இளமையானதாகத் தோன்றும்.

    • 'மாய்ஸ்சுரைசர்' சருமத்தின் ஈரப்பதத்தை தக்கவைத்து, பொலிவை அதிகரிக்க உதவும்.
    • வீட்டில் இருக்கும் இயற்கையான பொருட்களையே மாய்ஸ்சுரைசராக பயன்படுத்தும் முறையை பார்க்கலாம்.

    பப்பாளியில் சருமத்தைப் பொலிவாக்கும் மூலக்கூறுகள் உள்ளன. சூரிய ஒளியால் ஏற்படும் தோல் அழற்சியை குணப்படுத்தும். பப்பாளியை தொடர்ந்து உபயோகித்து வந்தால் சரும வறட்சி நீங்கும். 'மாய்ஸ்சுரைசர்' சருமத்தின் ஈரப்பதத்தை தக்கவைத்து, பொலிவை அதிகரிக்க உதவும். ஒரு சில மாய்ஸ்சுரைசர்களில் இருக்கும் ரசாயனக் கலவைகள் சருமத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடும். இதைத் தவிர்க்க, வீட்டில் இருக்கும் இயற்கையான பொருட்களையே மாய்ஸ்சுரைசராக பயன்படுத்தும் முறைகளைப் பற்றி தெரிந்துகொள்வோம்.

    தேங்காய் எண்ணெய், தேன்: தேங்காய் எண்ணெய்யில் இருக்கும் நிறைவுற்ற கொழுப்புகள், சருமத்துக்கு ஈரப்பதத்தைக் கொடுத்து அதை நீரேற்றத்துடன் வைத்திருக்க உதவும். முகப்பரு பிரச்சினையால் பாதிக்கப்பட்டவர்கள் இதை பயன்படுத்துவதைத் தவிர்க்கலாம். தேன் சிறந்த மாய்ஸ்சுரைசராக செயல்படுகிறது. இதில் உள்ள பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் ஆன்டி செப்டிக் பண்புகள் முகப்பருக்களை குணமாக்கும்.

    பயன்படுத்தும் முறை: தேங்காய் எண்ணெய் மற்றும் தேன் இரண்டையும் சம அளவு எடுத்து நன்றாகக் கலந்து, முகம், கழுத்து மற்றும் கைகளில் தடவவும். 20 முதல் 30 நிமிடங்கள் கழித்து, வெதுவெதுப்பான தண்ணீரில் கழுவவும். தேங்காய் எண்ணெய்க்கு மாற்றாக, ஆலிவ் எண்ணெய்யையும் பயன்படுத்தலாம்.

    பாலாடை, வாழைப்பழம்: காய்ச்சி ஆறவைத்த பாலில் இருந்து உருவாகும் 'பாலாடை' (பிரஷ் கிரீம்) சிறந்த மாய்ஸ்சுரைசிங் பண்புகளைக் கொண்டுள்ளது. பழங்காலத்தில் இருந்தே பாலாடையை சரும பராமரிப்புக்காக பயன்படுத்தி வருகின்றனர். இதை வாழைப்பழத்துடன் கலந்து பயன்படுத்தும்போது, அதன் பலன் இரட்டிப்பாகும். பாலாடை மற்றும் வாழைப்பழம் சேர்ந்த கலவை சருமத்துக்கு ஈரப்பதத்தை மட்டுமில்லாமல் தேவையான ஊட்டச்சத்துக்களையும் தருகிறது. கடுமையான குளிர் கால நாட்களில், சருமத்தை ஆரோக்கியமாக பராமரிப்பதற்கும் இது உதவும்.

    பயன்படுத்தும் முறை: பழுத்த வாழைப்பழத்தை நன்றாக மசித்து, பிசைந்து கொள்ளவும். அதனுடன் ஒரு டேபிள் ஸ்பூன் அளவு பாலாடையை சேர்க்கவும். இதை மிருதுவான பசை போல கலந்து முகத்தில் தடவவும். 20 நிமிடங்கள் கழித்து, வெதுவெதுப்பான தண்ணீரில் சுத்தமான துணியை நனைத்து முகத்தை துடைக்கவும். வாழைப்பழத்தை சேர்க்க விரும்பாதவர்கள், பாலாடையை மட்டும் பயன்படுத்தலாம்.

    பப்பாளி டோனர்: பப்பாளியில் சருமத்தைப் பொலிவாக்கும் மூலக்கூறுகள் உள்ளன. இதில் உள்ள ஊட்டச்சத்துக்கள், சருமத்தை ஆரோக்கியமாகவும், பளபளப்பாகவும் பராமரிக்க உதவும். பப்பாளி, சூரிய ஒளியால் ஏற்படும் தோல் அழற்சியை குணப்படுத்தும். பப்பாளியை தொடர்ந்து உபயோகித்து வந்தால் சரும வறட்சி நீங்கும்.

    பயன்படுத்தும் முறை: ஒரு பப்பாளிப் பழத்துண்டை பொடிதாக நறுக்கவும். பின்னர் அதை மிக்சியில் போட்டு கூழாக அரைக்கவும். முகத்தை நன்றாக சுத்தம் செய்த பின்பு, பப்பாளி கூழை பஞ்சில் நனைத்து முகம், கழுத்து ஆகிய பகுதிகளில் தடவவும். இவற்றை தவிர ஆலிவ் எண்ணெய், ஷியா வெண்ணெய், கற்றாழை ஜெல், அவகேடோ பழம், சூரியகாந்தி எண்ணெய், பாதாம் எண்ணெய், வெள்ளரி காய், மோர், தயிர், விளக்கெண்ணெய், ரோஜாவில் இருந்து தயாரிக்கப்பட்ட பன்னீர் ஆகியவற்றையும் மாய்ஸ்சுரைசர்களாக உபயோகிக்கலாம்.

    ×