search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Nature rages"

    • புதுகுப்பம் மீனவகிராமத்தில் இயற்கை சீற்றத்தால் அலைகள் அதிகரித்து வந்தது.
    • மீனவ மக்கள் பயன்படுத்துவதற்காக மீன் வலை பின்னும் கூடத்தை அமைச்சர் திறந்து வைத்தார்.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த புது குப்பம் மீனவ கிராமத்தில் கடல் அலைகளால் அரிப்பு ஏற்பட்டு மீனவர்கள் அவதி அடைந்து வந்தனர் ஒவ்வொரு ஆண்டும் மழைக்காலங்களில் போது இயற்கை சீற்றத்தால் அலைகள் அதிகரித்து கடற்கரை பரப்பு கரைந்து வந்தது.

    இதனை தடுக்க கருங்கல் தடுப்பு சுவர் அமைக்க அப்பகுதி மீனவமக்கள் வலியுறுத்தி வந்தனர்.

    மீனவர்களின் கோரிக்கையை ஏற்று மீன்வளத்துறை சார்பாக ரூ. 9 கோடி மதிப்பில் புதுக்குப்பம் கிராம கடற்கரை பகுதியில் இருபுறமும் சிறு அலை தடுப்புச் சுவர் மற்றும் மீன் வலை பின்னும் கூடமும் அமைக்கப்பட்டது.

    இந்நிலையில் இதன் திறப்பு விழா நடை பெற்றது.

    நிகழ்ச்சிக்கு பூம்புகார் சட்டமன்ற உறுப்பினரும் மாவட்ட செயலாளருமான நிவேதா முருகன் தலைமை வகித்தார்.

    மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் மகாபாரதி ,எம்.பி. ராமலிங்கம், சீர்காழி எம்எல்ஏ பன்னீர்செல்வம் ஒன்றிய செயலாளர் பஞ்சு.குமார்,பிரபாகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    மீனவ மக்கள் பயன்படுத்துவதற்காக சிறு அலை தடுப்புச் சுவர் மற்றும் மீன் வலை பின்னும் கூடத்தை அமைச்சர் மெய்யநாதன் திறந்து வைத்தார்.

    இதேபோன்று மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான பெருந்தோட்டம் ஏரியில் சுற்றுலா மையம் அமைக்கும் திட்டம் குறித்து சுற்றுச்சூழல் காலநிலை மாற்றுத்துறை அமைச்சர் மெய்யநாதன் நேரில் ஆய்வு செய்து அதிகாரிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டார்.

    அதனை தொடர்ந்து பெருந்தோட்டம் ஏரியில் சுற்றுலா மையம் அமைப்பதற்கான திட்ட வரைவுகளை தயார் செய்யும் படி பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

    • மக்கள் எளிதில் அறிந்துகொள்ள கூடிய வகையில் நன்னிலம் பகுதியில் வேளாண் கல்லூரி கொண்டுவருதல் அவசியம்.
    • புதிய உத்திகளை தொழில்நுட்பத்தை அறிந்துகொள்ள நவீன வேளாண் அறிவியல் கல்வி என்பது மிக அவசியமாக தேவைப்படுகிறது.

    நன்னிலம்:

    திருவாரூர் மாவட்டம், நன்னிலம் தாலுகா, விவசாயம் சார்ந்த மக்கள் நிறைந்த பகுதியாகும்.

    இப்பகுதி முழுமையாக விவசாய பின்னணியையும் விவசாயக் கூலித் தொழிலாளர்களைக் கொண்ட பகுதிகளில் இருந்து வருகிறது. இப்பகுதியில் கலை, அறிவியல் கல்லூரி இயங்கி வருகிறது.

    தற்போது உள்ள நவீன வேளாண் தொழில்நுட்பத்தை, இப்பகுதி மக்கள் எளிதில் அறிந்துகொள்ள கற்றுக்கொள்ள கூடிய வகையில், வேளாண் பல்கலைக்கழகத்தின் ஒரு பகுதியாக, நன்னிலம் பகுதியில் வேளாண் கல்லூரி கொண்டுவருதல் அவசியம் என நன்னிலம் பகுதி மக்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். விவசாயம் என்பது தற்போதைய காலகட்டத்தில், காலநிலை மாற்றத்தின் காரணமாக, இயற்கை சீற்றத்தால் பாதிப்படைந்து வரும் நிலையில், புதிய உத்திகளை தொழில்நுட்பத்தை அறிந்து கொள்ள, நவீன வேளாண் அறிவியல் கல்வி என்பது மிக அவசியமாக தேவைப்படுகிறது.

    பல்வேறு கோவிலில் உள்ள நிலங்கள் விவசாயம் சார்ந்த நிலங்கள் உள்ள காரணத்தினாலும், விளைநிலங்களை கொண்டு புதிய வகையான பயிர் வகைகளை கண்டறியவும் விதை உற்பத்தியை மேம்படுத்தவும் அரசின் வருமானத்தை பெருக்கும் வகையில் வேளாண் துறை அறநிலையத்துறை இணைந்து நன்னிலம் பகுதியில் ஏழை எளிய விவசாய மக்கள் பிள்ளைகள், வேளாண்மை அறிவைப் பெற்று கொள்ள, விவசாய கல்லூரி அமைக்கப்பட வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்து வருகிறார்கள்.

    ×