என் மலர்
நீங்கள் தேடியது "Nawaz kani"
- தி.மு.க. கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு ராமநாதபுரம் தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
- கடந்த தேர்தலிலும் ராமநாதபுரத்தில் நவாஸ் கனி போட்டியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை:
தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தை தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், தி.மு.க. கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு ராமநாதபுரம் தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
ஐ.யூ.எம்.எல். கட்சி சார்பில் நவாஸ் கனி போட்டியிடுவார் என்றும், ஏணி சின்னத்தில் போட்டியிடுவார் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த பாராளுமன்ற தேர்தலிலும் ராமநாதபுரத்தில் நவாஸ் கனி போட்டியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
- சாட்டை துரை முருகன் கடந்த ஏப்ரல் 27ம் தேதி ஒரு வீடியோ வெளியிட்டிருந்தார்
- தேர்தலில் வெற்றி பெற வைக்க நவாஸ் கனி பணம் விநியோகம் செய்ததாக சட்டை துரைமுருகன் பேசியுள்ளார்
5 கோடி ரூபாய் நஷ்ட ஈடு வழங்க கோரி இராமநாதபுரம் எம்.பி நவாஸ் கனியின் வழக்கறிஞர் யூ டியூபர் சாட்டை துரைமுருகனுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
சாட்டை துரை முருகன் கடந்த ஏப்ரல் 27ம் தேதி ஒரு வீடியோ வெளியிட்டிருந்தார். அதில், "நவாஸ் கனியை வெற்றி பெற வைக்க இராமநாதபுரம் கோபாலபட்டினம் பகுதி ஜமாத், ரூ.10 லட்சம் வழங்கியதாக' பேசியுள்ளார்.
அதாவது, தேர்தலில் வெற்றி பெற வைக்க நவாஸ் கனி பணம் விநியோகம் செய்ததாக சாட்டை துரைமுருகன் பேசியுள்ளார்.
அந்த நோட்டீசில், "சாட்டை துரை முருகன் தெரிவித்த கருத்துக்கள் அனைத்தும் உண்மைக்கு புறம்பானவை என்றும், தன்னுடைய நற்பெயருக்கும் கூட்டணி கட்சிக்கு களங்கம் ஏற்படுத்தும் நோக்கில் உள்ளது. ஆகவே சாட்டை துரைமுருகன் 5 கோடி நஷ்ட ஈடு வழங்க வேண்டும்" என்று நவாஸ் கனி தெரிவித்துள்ளார்.
இந்த நோட்டீஸ் தொடர்பாக சாட்டை துரைமுருகன் பதில் அளிக்காத பட்சத்தில், அவருக்கு எதிராக சிவில் மற்றும் கிரிமினல் வழக்குகள் தொடரப்படும் என்று நவாஸ் கனி எச்சரிக்கை விடுத்துள்ளார்.