search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "NCC students"

    • பேரணியை பள்ளி தலைமை ஆசிரியர் ஜோசப் கென்னடி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
    • மாணவர்கள் துணிப்பையை பயன்படுத்துவோம் என்ற விழிப்புணர்வு கோஷங்களை எழுப்பியவாறு பேரணியாக சென்றனர்.

    நெல்லை:

    பாளையில் பிளாஸ்டிக் ஒழிப்பை வலியுறுத்தி தூய சவேரியார் மேல்நிலைப்பள்ளி என்.சி.சி. மாணவர்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் 100 பேர் கலந்து கொண்ட விழிப்புணர்வு பேரணி இன்று நடந்தது.

    பேரணியை பள்ளி தலைமை ஆசிரியர் ஜோசப் கென்னடி கொடியசைத்து தொடங்கி வைத்தார். இப்பேரணியில் கலந்து கொண்ட மாணவர்கள் பிளாஸ்டிக் நாட்டின் அழிவுக்கும், மக்களின் மரணத்துக்கும் காரணமாகும். பிளாஸ்டிக்கை வாங்காதீர்கள், துணிப்பையை பயன்படுத்துவோம் என்ற விழிப்புணர்வு கோஷங்களை எழுப்பியவாறு பேரணியாக சென்றனர்.

    மேலும் பொதுமக்களுக்கு பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு துண்டுபிரசுரங்கள் மற்றும் துணிப்பைகளை மாணவர்கள் கொடுத்தனர்.

    இந்த பேரணி தூய சவேரியார் மேல்நிலைப்பள்ளியில் தொடங்கி மாவட்ட நூலகம், தலைமை தபால் அலுவலகம், தெற்கு பஜார், ஜான்ஸ் கல்லூரி வழியாக சென்று மீண்டும் தூய சவேரியார் மேல்நிலைப்பள்ளி வரை சென்றது. ஏற்பாடுகளை இந்திய ராணுவ சுபேதார்கள் ஜஹாங்கீர், சிவன், ஹவில்தார்கள் மணி, ஹரி, செந்தில்குமார், என்.சி.சி. அலுவலர் அருள்ராஜ் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

    • முகாமில் 433 தரைப்படை மாணவர்கள் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர்.
    • பயிற்சியில் சிறந்து விளங்கிய மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

    திருச்செந்தூர்:

    தூத்துக்குடி (29) தமிழ்நாடு தேசிய மாணவர் படை, தரைப்படை பிரிவின் ஆபீசர் கமாண்டிங் லெப்டினன்ட் கர்னல் பிரதோஷ் தலைமையில் சிவகாசி பி.எஸ்.ஆர். பொறியியல் கல்லூரியில் என்.சி.சி. வருடாந்திர பயிற்சி முகாம் கடந்த 5-ந் தேதி முதல் 14-ந் தேதி வரை நடைபெற்றது.

    இந்த முகாமில் 5 கல்லூரிகள், 11 பள்ளிக்கூ டங்களில் இருந்து 433 தரைப்படை மாணவர்கள் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர். இவர்களுக்கு தேசிய மாணவர் படை அதிகாரிகள், ராணுவ அதிகாரிகள் பயிற்சி அளித்தனர். இந்த பயிற்சி முகாமில் அடிப்படை உடற்பயிற்சி, ஆயுதங்களை கையாளுதல், துப்பாக்கி சுடுதல், மேப்ரீடிங், யோகா கலைகள், சமூகநல தொண்டு செய்தல், மரம் நடுதல், தேசிய ஒருமை ப்பாட்டு விழிப்புணர்வு, கராத்தே, முதலுதவி விழிப்புணர்வு ஆகியவற்று க்கான பயிற்சி அளிக்கப்பட்டது.

    முகாமில் ரத்ததானம் செய்வது குறித்து மருத்துவ அலுவலர்கள் செந்தட்டி காளை, வைத்தீஸ் ஆகி யோர் சிறப்பு விருந்தி னர்களாக கலந்து கொண்டு விளக்கி கூறினர். 79 மாண வர்கள் ரத்ததானம் செய்தனர். இதில் ஆதித்த னார் கல்லூரி மாணவர்கள் 12 பேர் ரத்ததானம் செய்தனர். முகாம் பயிற்சியில் சிறந்து விளங்கிய மாணவர்களுக்கு சிறப்பு பரிசுகள் மற்றும் பதக்க ங்கள் வழங்கப்பட்டது.

    இதில் துப்பாக்கி சுடுதல் போட்டியில் திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரி பொருளியல்துறை மாணவர் முத்துவேல் முதலிடத்தையும், டிரில் பயிற்சியில் ஆதித்தனார் கல்லூரி பொருளியல்துறை மாணவர் விஜய் பிரபாகரன் முதலிடத்தையும், விஷ்ணு 2-வது இடத்தையும் பிடித்தனர்.

    மேலும் மெரினா 2023 குடியரசுதின அணிவகுப்பில் கலந்து கொண்ட ஆதித்தனார் கல்லூரி விலங்கியல்துறை மாணவர் முருகப் பெரு மாள், பொருளியல்துறை மாணவர் விஷ்ணு ஆகி யோரும் கவுரவிக்கப்பட்டு, பதக்கங்கள் வழங்கப்பட்டது.

    இதற்கான ஏற்பாடுகளை ஆபிஸர் கமாண்டிங் லெப்டினன்ட் கர்னல் பிரதோஷ், என்.சி.சி. அதிகாரிகள் சிவமுருகன், மாதவன், ஷேக்பீர் முகமது காமீல், சத்யன், ரவீந்திரகுமார், ஐசக் கிருபாகரன், ராணுவ அதிகாரிகள் பிரகாஷ் வரதராஜன், ரவி, சுரேஷ், அருண்குமார், முருகன், என்.சி.சி. அலுவலக அமைச்சக பணியாளர்கள் செய்திருந்தனர்.

    பதக்கங்கள் பெற்ற மாணவர்களை கல்லூரி முதல்வர் மகேந்திரன், செயலாளர் ஜெயக்குமார், துறைத்தலைவர்கள் மற்றும் என்.சி.சி. அதிகாரி லெப்டினன்ட் சிவமுருகன் ஆகியோர் பாராட்டினர்.

    • பாளை தனியார் பள்ளி மைதானத்தில் என்.சி.சி மாணவிகளுக்கு துப்பாக்கி சுடும் போட்டி நடைபெற்றது.
    • போட்டியில் முதல் நாளில் மொத்தம் 60 மாணவிகள் பங்கேற்றனர்.

    நெல்லை:

    பாளை தனியார் பள்ளி மைதானத்தில் என்.சி.சி மாணவிகளுக்கு துப்பாக்கி சுடும் போட்டி நடைபெற்றது. தேசிய மாணவியர் மூன்றாம் படைப் பிரிவினருக்கு கர்னல் தீபக்சிங் சாமந்த் தலைமையில் நடைபெற்ற இந்த போட்டியில் நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த ஏராளமான பள்ளி மற்றும் கல்லூரிகளை சேர்ந்த என்.சி.சி. மாணவிகள் பங்கேற்றுள்ளனர்.

    நேற்று தொடங்கிய இந்த போட்டியில் முதல் நாளில் மொத்தம் 60 மாணவிகள் பங்கேற்றனர்.அதில் சிறந்த முறையில் துப்பாக்கி சூட்டில் ஈடுபட்ட 30 மாணவிகள் இரண்டாம் கட்ட போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டனர். தொடர்ந்து இன்று இரண்டாம் நாள் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் 30 மாணவிகள் பங்கேற்றுள்ள நிலையில் அதில் 10 பேர் இறுதியாக தேர்வு செய்யப்பட்டு அவர்கள் வரும் மார்ச் மாதம் மதுரையில் நடைபெறும் தென்னிந்திய அளவிலான துப்பாக்கி சுடும் போட்டியில் பங்கேற்க இருக்கின்றனர். போட்டியில் மாணவர்களை தேர்வு செய்ய ஒவ்வொருவருக்கும் தலா 3 சுற்றுகள் வாய்ப்பு வழங்கப்பட்டது. அதில் சரியாக இலக்கை நோக்கி சுட்ட மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.

    • மாணவர்கள் பள்ளி வளாகத்தில் இருந்து கடற்கரை பூங்கா வரை ஒற்றுமை ஓட்டம் நடத்தினர்.
    • நிகழ்ச்சியில் அனைவரும் தேசிய ஒருமைப்பாட்டு உறுதி மொழியை ஏற்றனர்.

    ஆறுமுகநேரி:

    காயல்பட்டினம் எல்.கே. மேல்நிலைப்பள்ளியின் சார்பில் தேசிய ஒருமைப்பாட்டு தின விழா நடைபெற்றது. இதனை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்ட தேசிய மாணவர் படை லெப்ட் இன் கர்னல் சுனில் உத்தம் அறிவுறுத்தலின் பேரில் பள்ளியின் என்.சி.சி. மாணவர்கள் பள்ளி வளாகத்தில் இருந்து கடற்கரை பூங்கா வரை ஒற்றுமை ஓட்டம் நடத்தினர்.

    இதனை பள்ளி தலைமை ஆசிரியர் செயது அகமது தொடங்கி வைத்தார். உதவி தலைமை ஆசிரியர் செயது முகைதீன் முன்னிலை வகித்தார். இதில் அனைவரும் தேசிய ஒருமைப்பாட்டு உறுதி மொழியை ஏற்றனர். ஏற்பாடுகளை பள்ளியின் தேசிய மாணவர் படை அலுவலர் முகமது காமில் செய்திருந்தார்.

    • என்.சி.சி மாணவர்களின் வருடாந்திர பயிற்சி முகாம் நேற்று துவங்கியது.
    • முகாமில் 10 என்சிசி அதிகாரிகள், 5 ராணுவ பயிற்றுநர்கள் உள்ளிட்ட 15 பேர் பயிற்சி அளிக்கின்றனர். பள்ளி, கல்லூரிகளைச் சேர்ந்த சுமார் 300 என்சிசி மாணவர்கள் பங்கேற்றுள்ளனர்.

    புதுச்சேரி;

    காரைக்கால் அறிஞர் அண்ணா அரசு கலை கல்லூரியில் 8 நாட்கள் நடைபெறும் என்சிசி மாணவர்களின் வருடாந்திர பயிற்சி முகாம் நேற்று துவங்கியது. இப்பயிற்சி முகாமை என்சிசி கமாண்டிங் அதிகாரி கர்னல் எல்.கே.ஜோஷி தொடங்கி வைத்தார். இம்முகாமில் ராணுவப் நடை பயிற்சி, துப்பாக்கியை பிரித்தல், மீண்டும் கோர்த்தல் மற்றும் சுடுதல் பற்றிய பயிற்சி, துப்புரவு பணி, தலைமைப் பண்பு உள்ளிட்ட பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.

    முகாமின் நிறைவில் கலை நிகழ்ச்சிகள், விளையாட்டு போட்டிகள் மற்றும் கேம்ப் பையர் நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளது. முகாமில் 10 என்சிசி அதிகாரிகள், 5 ராணுவ பயிற்றுநர்கள் உள்ளிட்ட 15 பேர் பயிற்சி அளிக்கின்றனர். பள்ளி, கல்லூரிகளைச் சேர்ந்த சுமார் 300 என்சிசி மாணவர்கள் பங்கேற்றுள்ளனர்.

    திருப்பத்தூர் அருகே உள்ள அ.தெக்கூர் விசாலாட்சி கலாசாலை மேல்நிலைப்பள்ளி தேசிய மாணவர் படை(என்.சி.சி.) மாணவர்களுக்கு மலையேற்ற பயிற்சி, சிங்கம்புணரி அருகே உள்ள பிரான்மலையில் நடைபெற்றது.
    திருப்பத்தூர்:

    திருப்பத்தூர் அருகே உள்ள அ.தெக்கூர் விசாலாட்சி கலாசாலை மேல்நிலைப்பள்ளி தேசிய மாணவர் படை(என்.சி.சி.) மாணவர்களுக்கு மலையேற்ற பயிற்சி, சிங்கம்புணரி அருகே உள்ள பிரான்மலையில் நடைபெற்றது. இதில் தேசிய மாணவர் படையைச் சேர்ந்த 100 மாணவர்கள், தேசிய படை அதிகாரி வடிவேல் தலைமையில் மலையேற்ற பயிற்சியை மேற்கொண்டனர்.

    இந்த பயிற்சி குறித்து மாணவர்களுக்கு தேசிய மாணவர் படை 9-வது பேரணி ஹவில்தார் சஞ்சீவிகுமார் விளக்கம் அளித்தார்.

    பின்னர் 2,500 அடி உயரம் உள்ள பிரான்மலையை மாணவர்கள் கடந்து சென்று, அங்கு வந்த சுற்றுலா பயணிகளிடம் காடுகளின் அவசியம் மற்றும் அவற்றை பாதுகாப்பது குறித்தும், பிளாஸ்டிக் ஒழிப்பு, சுற்றுச்சூழல் தூய்மை மற்றும் மரம் நடுதல் அவசியம் குறித்தும், தூய்மை இந்தியா திட்டம் குறித்தும் விளக்கினார்.

    ×