search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பாளையில் பிளாஸ்டிக் ஒழிப்பை வலியுறுத்தி என்.சி.சி. மாணவர்கள் விழிப்புணர்வு பேரணி
    X

    என்.சி.சி. மாணவர்கள் சார்பில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்ற போது எடுத்தபடம்.

    பாளையில் பிளாஸ்டிக் ஒழிப்பை வலியுறுத்தி என்.சி.சி. மாணவர்கள் விழிப்புணர்வு பேரணி

    • பேரணியை பள்ளி தலைமை ஆசிரியர் ஜோசப் கென்னடி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
    • மாணவர்கள் துணிப்பையை பயன்படுத்துவோம் என்ற விழிப்புணர்வு கோஷங்களை எழுப்பியவாறு பேரணியாக சென்றனர்.

    நெல்லை:

    பாளையில் பிளாஸ்டிக் ஒழிப்பை வலியுறுத்தி தூய சவேரியார் மேல்நிலைப்பள்ளி என்.சி.சி. மாணவர்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் 100 பேர் கலந்து கொண்ட விழிப்புணர்வு பேரணி இன்று நடந்தது.

    பேரணியை பள்ளி தலைமை ஆசிரியர் ஜோசப் கென்னடி கொடியசைத்து தொடங்கி வைத்தார். இப்பேரணியில் கலந்து கொண்ட மாணவர்கள் பிளாஸ்டிக் நாட்டின் அழிவுக்கும், மக்களின் மரணத்துக்கும் காரணமாகும். பிளாஸ்டிக்கை வாங்காதீர்கள், துணிப்பையை பயன்படுத்துவோம் என்ற விழிப்புணர்வு கோஷங்களை எழுப்பியவாறு பேரணியாக சென்றனர்.

    மேலும் பொதுமக்களுக்கு பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு துண்டுபிரசுரங்கள் மற்றும் துணிப்பைகளை மாணவர்கள் கொடுத்தனர்.

    இந்த பேரணி தூய சவேரியார் மேல்நிலைப்பள்ளியில் தொடங்கி மாவட்ட நூலகம், தலைமை தபால் அலுவலகம், தெற்கு பஜார், ஜான்ஸ் கல்லூரி வழியாக சென்று மீண்டும் தூய சவேரியார் மேல்நிலைப்பள்ளி வரை சென்றது. ஏற்பாடுகளை இந்திய ராணுவ சுபேதார்கள் ஜஹாங்கீர், சிவன், ஹவில்தார்கள் மணி, ஹரி, செந்தில்குமார், என்.சி.சி. அலுவலர் அருள்ராஜ் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

    Next Story
    ×