என் மலர்
நீங்கள் தேடியது "N.D.Tiwari"
உத்தரகாண்ட் முன்னாள் முதல்வர் என்.டி.திவாரியின் மகன் ரோகித் திவாரி கொலை வழக்கில் கைதான அபூர்வா திவாரிக்கு டெல்லி சாகேத் நீதிமன்றம் 2 நாள் போலீஸ் காவல் பிறப்பித்துள்ளது. #RohitShekharTiwari #ApoorvaTiwari
புதுடெல்லி:
உத்தரகாண்ட் முன்னாள் முதல்வர் என்.டி.திவாரியின் மகன் ரோகித் சேகர் திவாரி கடந்த 16-ம் தேதி டெல்லியில் உள்ள அவரது வீட்டில் உயிரிழந்தார். பிரேத பரிசோதனை அறிக்கையில், அவரது கழுத்து நெரிக்கப்பட்டிருப்பதும், அவர் மூச்சுத்திணறி இறந்திருப்பதும் தெரியவந்தது. இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து, ரோகித்தின் மனைவி அபூர்வா, உறவினர்களிடம் விசாரணை நடத்தினர்.
ரோகித்தின் தாயார் உஜ்வாலா அளித்த தகவலின் பேரில் மருமகள் அபூர்வாவிடம் போலீசார் விசாரித்தனர். விசாரணையில் அவர் முன்னுக்குபின் முரணாக பேசியதால் சந்தேகம் உறுதியானது. விசாரணையின் முடிவில் அபூர்வாவை போலீசார் கைது செய்தனர்.
இதற்கிடையே, டெல்லி சாகேத் நீதிமன்றத்தில் அபூர்வா திவாரி ஆஜர்படுத்தப்பட்டார். தொடர் விசாரணைக்காக அபூர்வா திவாரியை 2 நாள் போலீஸ் காவலில் வைக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இந்நிலையில், போலீஸ் காவல் முடிந்து சாகேத் நீதிமன்றத்தில் அபூர்வா திவாரி இன்று ஆஜர்படுத்தப்பட்டார். மேலும் அவரை விசாரிக்க இருப்பதால், அபூர்வா திவாரிக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல் பிறப்பித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். #RohitShekharTiwari #ApoorvaTiwari
உத்தரகாண்ட் முன்னாள் முதல்வர் என்.டி.திவாரியின் மகன் ரோகித் திவாரி கொலை வழக்கில் கைதான அபூர்வா திவாரிக்கு டெல்லி சாகேத் நீதிமன்றம் 2 நாள் போலீஸ் காவல் பிறப்பித்துள்ளது. #RohitShekharTiwari #ApoorvaTiwari
புதுடெல்லி:
உத்தரகாண்ட் முன்னாள் முதல்வர் என்.டி.திவாரியின் மகன் ரோகித் சேகர் திவாரி கடந்த 16-ம் தேதி டெல்லியில் உள்ள அவரது வீட்டில் உயிரிழந்தார். பிரேத பரிசோதனை அறிக்கையில், அவரது கழுத்து நெரிக்கப்பட்டிருப்பதும், அவர் மூச்சுத்திணறி இறந்திருப்பதும் தெரியவந்தது.
இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து, ரோகித்தின் மனைவி அபூர்வா மற்றும் உறவினர்களிடம் விசாரணை நடத்தினர்.

ரோகித்தின் தாயார் உஜ்வாலா அளித்த தகவலின் பேரில் மருமகள் அபூர்வாவிடம் போலீசார் விசாரித்தனர். விசாரணையில் அவர் முன்னுக்குபின் முரணாக பேசியதால் சந்தேகம் உறுதியானது. விசாரணையின் முடிவில்அபூர்வாவை போலீசார் இன்று கைது செய்தனர்.
இந்நிலையில், டெல்லி சாகேத் நீதிமன்றத்தில் அபூர்வா திவாரி ஆஜர்படுத்தப்பட்டார். தொடர் விசாரணைக்காக அபூர்வா திவாரியை 2 நாள் போலீஸ் காவலில் வைக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர். #RohitShekharTiwari #ApoorvaTiwari