search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "NDTV"

    • பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் இந்திய அரசியலமைப்பைக் கிழித்து எறிந்துவிடும் என்று காங்கிரஸ் குற்றம் சாட்டி வருகிறது.
    • மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் காங்கிரஸின் குற்றச்சாட்டுக்கு மறுப்பு தெரிவித்துள்ளார்.

    பாராளுமன்ற மக்களவைத் தேர்தல் நடந்து வரும் நிலையில் இந்தியா கூட்டணியின் காங்கிரஸ் கட்சியும் என்டிஏ கூட்டணியின் பாஜக கட்சியும் ஒன்றை ஒன்று கடுமையாக விமர்சித்து வருகிறது. காங்கிரஸ் வாக்கு ஜிகாத்தில் ஈடுபடுகிறது என்று பாஜக குற்றம்சாட்டிவரும் நிலையல்ல பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் இந்திய அரசியலமைப்பைக் கிழித்து எறிந்துவிடும் என்று காங்கிரஸ் குற்றம் சாட்டி வருகிறது.

    இந்நிலையில் என்.டி.டிவிக்கு அளித்த பேட்டியில் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் காங்கிரஸின் குற்றச்சாட்டுக்கு மறுப்பு தெரிவித்துள்ளார். பேட்டியில் அவர் பேசுகையில், 1976 ஆம் ஆண்டில், முதல் முறையாக இந்திய அரசியலமைப்பின் முகப்புரையில் மாற்றம் செய்யப்பட்டது. அதை இந்திரா காந்திதான் செய்தார்.

     

    ஆனால் இப்போது தேவையில்லாமல், பாஜக அரசியலமைப்பை மாற்றும் என்று இதை தேர்தல் பிரச்சனையாக்க காங்கிரஸ் முயல்கிறது என்று கூறினார். முன்னதாக கடந்த 1976 ஆம் ஆண்டு இந்திரா காந்தி ஆட்சி காலத்தில், இந்திய அரசியலமைப்பின் முன்னுரையில் 'சோசியலிச' 'மதச்சார்பற்ற' என்ற வார்த்தைகள் சேர்க்கப்பட்டு 'தேசத்தின் ஒற்றுமை' என்ற வாக்கியம், 'தேசத்தின் ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாடு' என்று மாற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    மேலும் ஜாதி அடிப்படையிலான இட ஒதுக்கீட்டை பாஜக ஒழிந்துவிடும் என்ற காங்கிரஸின் விமர்சனம் குறித்துப் பேசிய ராஜ்நாத் சிங், இட ஒதுக்கீட்டை ஏன் ஒழிக்கப்போகிறோம்? ஓபிசி,எஸ்.சி, எஸ்டிக்கு இடஒதுக்கீடு தேவை, ஆனால் மத அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று எதிர்க்கட்சியினர் பேசுகிறார்கள். எந்தச் சூழ்நிலையிலும் மத அடிப்படையிலான இட ஒதுக்கீடு வழங்க மாட்டோம் என்று தெரிவித்தார். 

    ×