என் மலர்
நீங்கள் தேடியது "Neil Nitin Mukesh"
- ‘கத்தி’ படத்தில் வில்லனாக நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்களிடையே பிரபலமானார்.
- எதைச் சொல்லியும் கேட்காமல் 4 மணிநேரம் பிடித்து வைத்திருந்தனர்.
பாலிவுட்டில் பிரபலமான நடிகர் நீல் நிதின் முகேஷ். இவரது தாத்தா முகேஷ் பிரபலமான பாடகர். அப்பா நிதினும் பாடகர். இப்படி சினிமாவில் பிரபலமாக நடிகராக நிதிஷ் அறியப்படுகிறார்.
கடந்த 2014-ம் ஆண்டு வெளியான விஜயின் 'கத்தி' படத்தில் வில்லனாக நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்களிடையே பிரபலமானார்.
இந்த நிலையில், இந்தியர் என்பதை சொல்லியும் கேட்காமல் 4 மணி நேரம் நியூயார்க் காவல்துறையினர் காவலில் வைத்திருந்த சம்பவத்தை நீல் நிதின் முகேஷ் மிகவும் வருத்தத்துடன் நினைவு கூர்ந்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் கூறும் போது:- நான் 'நியூயார்க்' படத்தில் நடித்துக் கொண்டிருந்த சமயம். பார்ப்பதற்கு இந்தியர் போல இல்லை, போலி பாஸ்போர்ட்டில் அமெரிக்காவில் நுழைந்ததாக குற்றம்சாட்டி நியூயார் விமான நிலையத்தில் காவலர்கள் சிறைபிடித்தனர். எதைச் சொல்லியும் கேட்காமல் 4 மணிநேரம் பிடித்து வைத்திருந்தனர்.
4 மணி நேரத்துக்குப் பின் அவர்கள் என்னிடம் வந்து, 'என்ன சொல்ல போகிறாய்?' எனக் கேட்டனர். அதற்கு நான் 'என்னைப் பற்றி கூகுளில் தேடிப் பாருங்கள்' என்றேன். அதன் பிறகே விடுவிக்கப்பட்டேன்" என்றார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்
