என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "new movie"

    • ஒரு தாயின் பாசப் போராட்டத்தை வெளிப்படுத்தும் திகில் படமாக 'பிஹைண்ட் 'என்கிற திரைப்படம் உருவாகி உள்ளது.
    • லியா என்கிற பாத்திரத்தில் சோனியா அகர்வால் சிறப்பாக நடித்துள்ளார்

    ஒரு தாயின் பாசப் போராட்டத்தை வெளிப்படுத்தும் திகில் படமாக 'பிஹைண்ட் 'என்கிற திரைப்படம் உருவாகி உள்ளது.

    இப்படத்தை அமன் ரஃபி எழுதி இயக்கி உள்ளார். ஷிஜா ஜினு படத்திற்கான கதையை எழுதி தனது பாவக்குட்டி கிரியேஷன்ஸ் பட நிறுவனம் சார்பில் தயாரித்துள்ளார்.

    ஒரு தாய் தனது குழந்தைக்கு அமானுஷ்யமான ஆபத்து வந்து இருப்பதை உணர்கிறாள். ஆனால் அந்தத் தாயின் கணவன் அதை ஒரு மாயை என்று கூறி அலட்சியப்படுத்துகிறான்.

    ஆனால் தாய் ஆபத்தினை உணர்ந்து காப்பாற்றுவதில் கவனமாக இருக்கிறாள்.ஒரு கட்டத்தில் கணவனும் அந்த அபாயம் உண்மைதான் என்று உணர்ந்து கொள்கிறான். அப்படிப்பட்ட சூழலில் தன் குழந்தைக்கு ஆபத்தை விளைவிக்கப் பின் தொடரும் அந்தத் தீய சக்தியை எதிர்த்து தாய் தீவிரமாகப் போராடுகிறாள் . அவள் தனது குழந்தையை மீட்டாளா? அந்த ஆபத்து எத்தகையது? அது யாரால் ஏற்படுகிறது போன்ற கேள்விகளுக்கு விடை சொல்வது தான் பிஹைண்ட் திரைப்படம்.

     

    லியா என்கிற பாத்திரத்தில் சோனியா அகர்வால் சிறப்பாக நடித்துள்ளார்.இவர் தென்னிந்திய முன்னணி நடிகர்களான விஜய், தனுஷ், ஜெயம் ரவி, சிம்பு, சுதீப் ஆகியோருடன் நடித்துப் புகழ் பெற்றவர்.

     

    அவரது மகளாக மினு மோல் நடித்துள்ளார். சோனியா அகர்வாலின் கணவராக டாம் நடித்துள்ளார். இப்படம் தமிழ் மற்றும் மலையாள மொழிகளில் உருவாகிறது.

     

    அமன் ரஃபி இயக்கியுள்ள இந்தப் படத்திற்கு சந்தீப் சங்கரதாஸ் மற்றும் டி. ஷமீர் முகமத் ஒளிப்பதிவு செய்துள்ளார்கள். வைசாக் ராஜன் படத்தொகுப்பு செய்துள்ளார். இசை முரளி அப்பாதத்,ஆரிப் அன்சார் மற்றும் சன்னி மாதவன்.

    இந்தப் படத்தின் முன்னோட்டமாக டிரெய்லர் விரைவில் வெளியாக உள்ளது.

    • 'தங்கம்' அல்லது ' ராணா' என 'டைட்டில்' வைக்கப்படும் என இணைய தளத்தில் தகவல் பரவி வருகிறது
    • இந்நிலையில் இந்தப் படத்தின் ''டைட்டில்' நாளை ( 22 - ந் தேதி) வெளியாக உள்ளது.

    சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது இயக்குனர் டி.ஜே.ஞானவேலின் 'வேட்டையன்' படத்தில் நடித்து வருகிறார். இப்படம் இந்த ஆண்டின் இறுதியில் தியேட்டர்களில் வெளியாக உள்ளது.

    இந்த படத்துக்குப் பிறகு ரஜினி இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்துக்கு தற்காலிகமாக தலைவர்-171 என்று பெயர் வைக்கப்பட்டு உள்ளது. 'சன் பிக்சர்ஸ்' நிறுவனம் இந்தப் படத்தை தயாரிக்கிறது. இப்படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார்.




    ரஜினியின் 'பர்ஸ்ட் லுக்' போஸ்டர் கடந்த சில வாரங்களுக்கு முன் வெளியானது. மேலும் ரசிகர்களிடம் இது மிகப்பெரிய வரவேற்பு பெற்றது.இதில் ரஜினி தனது கைகளில் தங்க கடிகாரம் - கை விலங்கு அணிந்து இருந்தார். மேலும் அந்த படத்தில் ரஜினிகாந்த் 'தாதா' வேடத்தில் நடிக்கிறார் என்ற தகவல் பரவியது.

    மேலும் தலைவர் -171 படம் தங்கக் கடத்தல் பின்னணி கதையை கொண்டு உருவாக உள்ளதாகவும் இந்தப் படத்தில் ரஜினி 'மாபியா' ''டான்" வேடத்தில் நடிக்கிறார் எனவும் கூறப்படுகிறது.

    இந்நிலையில் தலைவர் 171- படத்தில் ரஜினியுடன் இணைந்து நடிக்க பிரபல இந்தி நடிகர் ரன்வீர் சிங்குடன் தற்போது இயக்குனர் லோகேஷ் கனகராஜ் பேச்சுவார்த்தை நடத்தி உள்ளார். இப்படத்தில் நடிக்க ரன்வீர் சம்மதித்து உள்ளதாக தகவல் வெளியாகியது.



    ரஜினியுடன் நடிகை ஷோபனா 32 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இணைந்து நடிக்கவுள்ளதாக தகவல் வெளியானது. ரஜினி படத்தில் நடிகை ஸ்ருதிஹாசன் ,நடிகர் சத்யராஜ் இணைய உள்ளதாக தகவல் வெளியானது.

    இந்தப் படத்தின் 'சூட்டிங்' வரும் ஜூன் மாதம் தொடங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. படத்தின் "பர்ஸ்ட் லுக்" போஸ்டர் முன்னதாக வெளியாகி ஏராளமான ரசிகர்களை கவர்ந்தது.




    இந்நிலையில் இந்தப் படத்தின் ''டைட்டில்' நாளை ( 22 - ந் தேதி) வெளியாக உள்ளது.தலைவர் - 171 படத்துக்கு 'டைட்டில்' கழுகு, ராணா, தங்கம் அல்லது கடிகாரம் என 4 பெயர்கள் சமூக வலைதளங்களில் வலம் வருகின்றன. இந்த 4 ல் ஒன்றுதான் இந்த படத்தின் டைட்டிலாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இப்படத்தில் ரஜினியின் மகளாக ஸ்ருதி நடிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது . 'டைட்டில்' டீசர் வெளியான பிறகு இது குறித்த அறிவிப்புகள் வெளியாக உள்ளது

    கடந்த சில தினங்களாக இப்படத்தின் டைட்டில் பற்றிய தகவல் இணையத்தில் வெளியாகி வருகின்றன. முதலில் இப்படத்திற்கு டைட்டில் 'கழுகு' என பெயர் கூறப்பட்டது.




    இந்நிலையில் தற்போது இப்படத்திற்கு 'தங்கம்' அல்லது ' ராணா' என 'டைட்டில்' வைக்கப்படும் என இணைய தளத்தில் தகவல் பரவி வருகிறது. தலைவர் 171' படத்தில் ரஜினி வாட்ச் ரிப்பேர் செய்பவராக நடிக்கிறார் எனவும் கூறப்படுகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • 'சன் பிக்சர்ஸ்' நிறுவனம் இந்தப் படத்தை தயாரிக்கிறது. இப்படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார்.
    • படத்தின் ஃபர்ஸ்ட் லும் மற்றும் முன்னோட்டம் நாளை ஏப்ரல் 22 ஆம் தேதி வெளியிடவுள்ளனர்.

    சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது இயக்குனர் டி.ஜே.ஞானவேலின் 'வேட்டையன்' படத்தில் நடித்து வருகிறார். இப்படம் இந்த ஆண்டின் இறுதியில் தியேட்டர்களில் வெளியாக உள்ளது.

    இந்த படத்துக்குப் பிறகு ரஜினி இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்துக்கு தற்காலிகமாக தலைவர்-171 என்று பெயர் வைக்கப்பட்டு உள்ளது. 'சன் பிக்சர்ஸ்' நிறுவனம் இந்தப் படத்தை தயாரிக்கிறது. இப்படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார்.

    ரஜினியின் 'பர்ஸ்ட் லுக்' போஸ்டர் கடந்த சில வாரங்களுக்கு முன் வெளியானது. மேலும் ரசிகர்களிடம் இது மிகப்பெரிய வரவேற்பு பெற்றது.இதில் ரஜினி தனது கைகளில் தங்க கடிகாரம் - கை விலங்கு அணிந்து இருந்தார். மேலும் அந்த படத்தில் ரஜினிகாந்த் 'தாதா' வேடத்தில் நடிக்கிறார் என்ற தகவல் பரவியது.

    படத்தில் ரன்வீர் சிங் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். ஸ்ருதி ஹாசன் ரஜினிக்கு மகளாக நடிக்கவுள்ளார் என்ற தகவல் வெளியாகியது. இதைதொடர்ந்து படத்தின் ஃபர்ஸ்ட் லும் மற்றும் முன்னோட்டம் நாளை ஏப்ரல் 22 ஆம் தேதி வெளியிடவுள்ளனர்.

    இதையொட்டி படக்குழுவினர் புது போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில் ரஜினிகாந்தின் கை மட்டும் கடிகாரங்களால் செய்த சங்கிலியை பிடித்து இருக்கிறார். லோகேஷ் கனகராஜ் அவரது எக்ஸ் பக்கத்தில் நாளை ஆறு மணி முதல் D.I.S.C.O என்ற தலைப்பில் போஸ்ட்ரை வெளியிட்டுள்ளார்.

    அந்த டிஸ்கோ என்ற வார்த்தையின் அர்த்தம் என்ன என்று நாளை தான் தெரியும். படத்தின் தலைப்பு டிஸ்கோவாக இருக்குமோ என ரசிகர்களிடம் கேள்வி எழுந்துள்ளது. 

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • . 'சன் பிக்சர்ஸ்' நிறுவனம் இந்தப் படத்தை தயாரிக்கிறது. இப்படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார்.
    • படத்தின் தலைப்பு டிஸ்கோவாக இருக்குமோ என ரசிகர்களிடம் கேள்வி எழுந்துள்ளது

    ரஜினி வேட்டையன் படத்திற்கு பிறகு இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்துக்கு தற்காலிகமாக தலைவர்-171 என்று பெயர் வைக்கப்பட்டு உள்ளது. 'சன் பிக்சர்ஸ்' நிறுவனம் இந்தப் படத்தை தயாரிக்கிறது. இப்படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார்.

    ரஜினியின் 'பர்ஸ்ட் லுக்' போஸ்டர் கடந்த சில வாரங்களுக்கு முன் வெளியானது. மேலும் ரசிகர்களிடம் போஸ்டர் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. மேலும் அந்த படத்தில் ரஜினிகாந்த் 'தாதா' வேடத்தில் நடிக்கிறார் என்ற தகவல் பரவியது.

    படத்தில் ரன்வீர் சிங் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். ஸ்ருதி ஹாசன் ரஜினிக்கு மகளாக நடிக்கவுள்ளார் மற்றும் நாகார்ஜுனா முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கவுள்ளனர் என்ற தகவல் வெளியாகியது. இதைதொடர்ந்து படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் முன்னோட்டம் ஏப்ரல் 22 ஆம் தேதி மாலை 6 மணிக்கு வெளியிடவுள்ளனர்.

    நேற்று லோகேஷ் கனகராஜ் அவரது எக்ஸ் பக்கத்தில் நாளை ஆறு மணி முதல் D.I.S.C.O என்ற தலைப்பில் போஸ்ட்ரை வெளியிட்டார்.

    படத்தின் தலைப்பு டிஸ்கோவாக இருக்குமோ என ரசிகர்களிடம் கேள்வி எழுந்துள்ளது. இன்று மாலை டைட்டில் மற்றும் காட்சி முன்னோட்டம் வெளியாகும் நிலையில் லோகேஷ் கனகராஜ் அவரது துணை இயக்குனர்களுடன் எடுத்த புகைப்படம் வெளியாகியுள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • 'சன் பிக்சர்ஸ்' நிறுவனம் இந்தப் படத்தை தயாரிக்கிறது. இப்படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார்.
    • படத்தில் ரன்வீர் சிங் மற்றும் நாகார்ஜூனா முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.

     வேட்டையன் படத்திற்கு பிறகு ரஜினி இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்துக்கு தற்காலிகமாக தலைவர்-171 என்று பெயர் வைக்கப்பட்டு உள்ளது. 'சன் பிக்சர்ஸ்' நிறுவனம் இந்தப் படத்தை தயாரிக்கிறது. இப்படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார்.

    இப்படத்தின் 'பர்ஸ்ட் லுக்' போஸ்டர் கடந்த சில வாரங்களுக்கு முன் வெளியானது. மேலும் ரசிகர்களிடம் போஸ்டர் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. மேலும் அந்த படத்தில் ரஜினிகாந்த் 'தாதா' வேடத்தில் நடிக்கிறார் என்ற தகவல் பரவியது.

    படத்தில் ரன்வீர் சிங் மற்றும் நாகார்ஜூனா முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். ஸ்ருதி ஹாசன் ரஜினிக்கு மகளாக நடிக்கவுள்ளார் என்ற தகவல் வெளியாகியது. நேற்று லோகேஷ் கனகராஜ் அவரது எக்ஸ் பக்கத்தில் நாளை ஆறு மணி முதல் D.I.S.C.O என்ற தலைப்பில் போஸ்ட்ரை வெளியிட்டார்.

    படத்தின் தலைப்பு டிஸ்கோவாக இருக்குமோ என ரசிகர்களிடம் கேள்வி எழுந்த நிலையில் தற்பொழுது படத்தின் ப்ரோமோ வீடியோ வெளியாகியுள்ளது. படத்தின் பெயர் கூலி  என்று தலைப்பிடப்பட்டுள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து ரிலீசுக்கு தற்போது தயாராகி உள்ளது.
    • ஜூன் 7 -ந் தேதி படம் 'ரிலீஸ்' செய்யப்படும் என படக்குழு அறிவித்துள்ளது.

    மூடுபனி' படம் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமானவர் மோகன்.இந்த படத்தை தொடர்ந்து, கிளிஞ்சல்கள், பயணங்கள் முடிவதில்லை, கோபுரங்கள் சாய்வதில்லை, இதய கோவில், உதயகீதம், பிள்ளைநிலா, 100- வது நாள் என பல வெற்றிப்படங்களில் நடித்தார்.




    80- 90 ம் ஆண்டுகளில் புகழின் உச்சியில் இருந்த இவர் ராதா, நதியா, ராதிகா, அமலா, ரேவதி, நளினி உள்ளிட்ட நடிகைகளுடன் பல படங்களில் நடித்தார். ரேவதியுடன் நடித்த 'மெளன ராகம்' படத்தின் பாடல்கள் மோகனுக்கு பெரும் பெயர் பெற்று தந்தது.

    இந்நிலையில் நீண்ட காலமாக சினிமாவில் ஒதுங்கி இருந்த மோகன் தற்போது 'ஹரா' என்ற ஒரு புதுப் படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார்.



    இப்படத்தை விஜய் ஸ்ரீ இயக்கி உள்ளார். இந்த படத்தில் சாருஹாசன், யோகி பாபு, மொட்டை ராஜேந்திரன், வனிதா விஜயகுமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

    இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து ரிலீசுக்கு தற்போது தயாராகி உள்ளது.




    வருகிற ஜூன் 7 -ந் தேதி இப்படம் தியேட்டர்களில் 'ரிலீஸ்' செய்யப்படும் என படக்குழு அறிவித்துள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • இவர் சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் என்கிற நிறுவனத்தின் மூலம் ஏராளமான படங்களை தயாரித்து வருகிறார்.
    • சமீபத்தில் 'குரங்கு பெடல்' படத்தை எஸ் கே ப்ரொடக்ஷன் தயாரித்துள்ளது. கமலக்கண்ணன் இப்படத்தை இயக்கியுள்ளார்

    நடிப்பது மட்டுமல்லாமல் படத்தயாரிப்பிலும் ஈடுபட்டு வருகிறார் சிவகார்த்திகேயன். இவர் சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் என்கிற நிறுவனத்தின் மூலம் ஏராளமான படங்களை தயாரித்து வருகிறார்.

    சமீபத்தில் 'குரங்கு பெடல்' படத்தை  எஸ் கே ப்ரொடக்ஷன் தயாரித்துள்ளது. கமலக்கண்ணன் இப்படத்தை இயக்கியுள்ளார் இதற்கு முன் இவர் 'வட்டம்' மற்றும் 'மதுபான கடை' ஆகிய படங்களை இயக்கியுள்ளார்.

    காளி வெங்கட் இப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். இத்திரைப்படம் ராசி அழகப்பன் எழுதிய சிறுக்கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது. கிப்ரான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

    இப்படம் கடந்த மே மாதம் 3 ஆம் தேதி வெளியாகி மக்களிடையே கலவையான விமர்சனத்தை பெற்றது. இந்நிலையில் குரங்கு பெடல் திரைப்படம் ஓடிடியில் வெளியாகவுள்ளது. இப்படத்தின் டிஜிட்டல் உரிமையை ஆஹா ஒடிடி தளம் வாங்கியுள்ளது. இப்படம் வரும் ஜூன்14 முதல் ஆஹா ஓடிடியில் வெளியாகவுள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் சிவகார்த்திகேயனை வைத்து ஒரு புதிய படத்தை இயக்கி வருகிறார்.
    • இந்த படம் அடுத்த ஆண்டு ரம்ஜான் பண்டிகைக்கு வெளியாகும் என சல்மான்கான் அறிவித்துள்ளார்.

    ரஜினிகாந்த் - நயன்தாரா நடிப்பில் வெளியான 'தர்பார்' படத்தை ஏ.ஆர். முருகதாஸ் இயக்கிய பின் அப்படம் எதிர்பார்த்த வெற்றியடையாததால் சினிமாவில் சில காலம் அவர் ஒதுங்கி இருந்தார்.

    இந்நிலையில் தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் சிவகார்த்திகேயனை வைத்து ஒரு புதிய படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்திற்கு பிறகு பாலிவுட் நடிகர் சல்மான்கானை வைத்து ஏ.ஆர்.முருகதாஸ் புதிய இந்தி படம் இயக்குகிறார். இப்படத்தில் சல்மான் கானுக்கு ஜோடியாக ரஷ்மிகா மந்தனா நடிக்கிறார்.

    இது "புராணக் கதை' படமாகும். இப்படத்தை பிரபல தயாரிப்பாளர் சஜித்நதியத்வாலா தயாரிக்கிறார். மேலும் சல்மான்கான் 10 ஆண்டுகளுக்கு பிறகு தயாரிப்பாளர் சஜித் நதியத்வாலாவுடன் இணைந்து உள்ளார்.

    ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சல்மான்கான் நடிக்க உள்ள புதிய படத்துக்கு 'சிக்கந்தர்' எனும் 'பெயர் ' வைக்கப்பட்டுள்ளது. இந்த படம் அடுத்த ஆண்டு ரம்ஜான் பண்டிகைக்கு வெளியாகும் எனவும் சல்மான்கான் தற்போது தனது எக்ஸ் இணைய தளத்தில் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

    இந்நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு ஜூன் 18 ஆம் தேதி தொடங்குகிறது என்று அப்படத்தின் தயரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • இயக்குனர் வசந்த குமார் இயக்கத்தில் அருள்நிதி நடித்த மௌனகுரு திரைப்படம் பெரிதும் பேசப்பட்ட படமாக மாறியது.
    • கடைசியாக இயக்குனர் முத்தையா இயக்கத்தில் வெளியான கழுவேத்தி மூர்க்கன் படத்தில் அருள்நிதி நடித்திருந்தார்.

    கடந்த 2010 ஆம் ஆண்டு பாண்டிராஜ் இயக்கத்தில் வெளியான 'வம்சம்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக கால்பதித்தவர் நடிகர் அருள்நிதி. தொடர்ந்து இயக்குனர் வசந்த குமார் இயக்கத்தில் அருள்நிதி நடித்த மௌனகுரு திரைப்படம் பெரிதும் பேசப்பட்ட படமாக மாறியது.

     

    தனித்துவமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வரும் அருள்நிதியின் நடிப்பில் ஹாரர் படமான டிமான்டி காலனி, ஆறாது சினம், பிருந்தாவனம், தகராறு, இரவுக்கு ஆயிரம் கண்கள், கே- 13 உள்ளிட்ட பல படங்கள் வெளியாகியுள்ளது. கடைசியாக இயக்குனர் முத்தையா இயக்கத்தில் வெளியான கழுவேத்தி மூர்க்கன் படத்தில் அருள்நிதி நடித்திருந்தார்.

    இந்நிலையில் அருள்நிதி புதிய படம் ஒன்றில் கமிட்டாகி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 2021 ஆம் ஆண்டு பேஷன் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் வெளியான என்னங்க சார் உங்க சட்டம் என்ற திரைப்படத்தை இயக்கிய பிரபு ஜெயராம் இயக்கும் புதிய படத்தில் அருள்நிதி நடிக்க உள்ளாராம்.

     

    இந்த திரைப்படத்தையும் பேஷன் ஸ்டுடியோஸ் இயக்கவுள்ளது. இந்த புதிய படத்தைக் குறித்த அடுத்தடுத்த அப்டேட் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சாதிய பிரச்னைகளைக் குறித்து என்னங்க சார் உங்க சட்டம் படத்தில் பிரபு ஜெயராம் பேசியிருந்தைப்போல இதுவும் ஒரு சமூக படமாக இருக்குமோ என்ற யூகங்களும் எழத்தொடங்கியுள்ளன .

     உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • ஸ்ரீ கணேஷ் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடிப்பதற்கு கமிட் ஆகியுள்ளார்.
    • தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

    நடிகர் சித்தார்த் இயக்குனர் ஷங்கர் இயக்கிய 'பாய்ஸ்' திரைப்படம் மூலம் கதாநாயகனாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகினார். பின்னர் மணி ரத்னம் இயக்கத்தில் வெளிவந்த 'ஆயுத எழுத்து' திரைப்படத்தின் மூலம் மக்கள் மனதை கவர்ந்தார். நடிகர், தயாரிப்பாளர் என இரண்டு துறைகளில் கவனம் செலுத்தி வருகிறார் சித்தார்த்.

    இவர் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மொழி படங்களிலும் பணியாற்றி வருகிறார். சித்தார்த் நடிப்பில் கடந்த ஆண்டு சித்தா திரைப்படம் வெளியானது. நடிகர் சித்தார்த் இந்த படத்தில் புதிய பரிமாணத்தில் நடித்திருந்த நிலையில் இப்படம் மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்தது.


    அதைத்தொடர்ந்து கமல்ஹாசன், சங்கர் கூட்டணியில் கடந்த ஜூலை 12-ம் தேதி வெளியான இந்தியன் 2 திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் சித்தார்த். அதேசமயம் மிஸ் யூ என்ற திரைப்படத்தையும் கைவசம் வைத்துள்ளார். இந்நிலையில் அடுத்ததாக நடிகர் சித்தார்த், எட்டு தோட்டாக்கள், குருதி ஆட்டம் உள்ளிட்ட படங்களின் இயக்குனர் ஸ்ரீ கணேஷ் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடிப்பதற்கு கமிட் ஆகியுள்ளார்.

    சித்தார்த்தின் 40 ஆவது படமாக உருவாகும் இந்த படத்தில் சித்தார்த்துடன் இணைந்து சரத்குமார் , தேவயானி, மீதா ரகுநாத், சைத்ரா ஆச்சார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.


    சிவகார்த்திகேயனின் மாவீரன் திரைப்படத்தை தயாரித்த சாந்தி டாக்கீஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது. ஏற்கனவே இந்த படம் தொடர்பான அறிவிப்பு வெளியான நிலையில் தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ளது. இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

    ×