search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "New Syllabus"

    • தகவலை சி.பி.எஸ்.இ. பள்ளிகளிடம் மத்திய இடைநிலை கல்வி வாரியம் தெரிவித்துள்ளது.
    • புதிய பாடத் திட்டம் மற்றும் பாடநூல்களைப் பின்பற்றுமாறு சி.பி.எஸ்.இ. பள்ளிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    புதுடெல்லி:

    சி.பி.எஸ்.இ 3 மற்றும் 6-ம் வகுப்புகளுக்கு புதிய பாடத்திட்டம் மற்றும் பாட நூல்களைத் தயாரிக்கும் பணி நடைபெற்று வருவதாகவும் அவை விரைவில் வெளிடப்படும் என்றும் மத்திய இடைநிலை கல்வி வாரியத்திடம் தேசிய கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (என்.சி.இ.ஆர்டி) தெரிவித்து உள்ளது. இந்தத் தகவலை சி.பி.எஸ்.இ. பள்ளிகளிடம் மத்திய இடைநிலை கல்வி வாரியம் தெரிவித்துள்ளது.

    இது தொடர்பாக சி.பி.எஸ்.இ.இயக்குனர் ஜோசப் இமானுவேல் தெரிவித்ததாவது:-

    கடந்த ஆண்டு வரை என்.சி.இ.ஆர்.டி. வெளியிட்ட பாடநூல்களுக்குப் பதிலாக 3 மற்றும் 6-ம் வகுப்புகளுக்கு என்.சி.இ.ஆர்.டி. வெளியிட உள்ள புதிய பாடத் திட்டம் மற்றும் பாடநூல்களைப் பின்பற்றுமாறு சி.பி.எஸ்.இ. பள்ளிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    சி.பி.எஸ்.இ.பள்ளிகளில் வேறு எந்த வகுப்புக்கும் ஏப்ரல் 1 முதல் தொடங்கும் புதிய கல்வியாண்டில் பாடத்திட்டம் மற்றும் பாடநூல்களில் மாற்றம் இருக்காது என்று தெரிவித்தார்.

    • உக்ரைன் போர், தேசப்பற்று ஆகியவை பாடத்திட்டங்களில் புதியதாக சேர்க்கப்பட்டிருக்கிறது
    • மாணவர்கள் துப்பாக்கிகளை கையாளுவதற்கு நிபுணர்களால் பயிற்றுவிக்கப்படுகிறார்கள்

    கடந்த பிப்ரவரியில் ரஷியா, தனது அண்டை நாடான உக்ரைனை ஆக்ரமித்தது. இதனை எதிர்த்து உக்ரைன், அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகளின் உதவியுடன் தீவிரமாக போரிட்டு வருகிறது. போர் 575 நாட்களுக்கும் மேலாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

    போரில் வெற்றி பெற இரு தரப்பும் பல்வேறு வழிகளை கடைபிடித்து வருகிறது. இதில் ஒன்றாக ரஷியா, தன் நாட்டு பள்ளிகளில் குழந்தைகளையும் மறைமுகமாக போரில் ஈடுபடுத்த தயார்படுத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

    ரஷியாவில் பரவலாக அனைத்து இடைநிலைக்கு மேற்பட்ட பள்ளிகளிலும் குழந்தைகளுக்கு பதுங்கு குழி தோண்டுவது, கையெறி குண்டு வீசுவது, துப்பாக்கியை கையாளுதல் உட்பட பல போர்திறன் பயிற்சி அளிக்கப்படுகிறது. நாட்டிற்காக தியாகம் செய்வதை பாராட்டும் விதமாக பள்ளி கல்வியில் பாடதிட்டங்கள் மாற்றப்பட்டிருக்கிறது. பெரும் பொருட்செலவில் இதில் ரஷியா ஈடுபட்டு சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பயிற்சி கூடங்களையும் அமைத்துள்ளது. உக்ரைன் போர், தேசப்பற்று மற்றும் ராணுவ பற்று ஆகியவை பாடத்திட்டங்களில் புதியதாக சேர்க்கப்பட்டிருக்கிறது. பயிற்சிகளுக்கு மாணவ மாணவியர் தாங்களாகவே வர மறுத்தாலும், அரசாங்கத்தால் வற்புறுத்தப்படுகிறார்கள்.

    உயர்நிலை பள்ளிகளில் மாணவர்கள் துப்பாக்கியை பயன்படுத்துவதற்கும், தானியங்கி துப்பாக்கிகளை கையாளுவதற்கும், பிரித்து கோர்ப்பதற்கும் கைதேர்ந்த நிபுணர்களால் பயிற்றுவிக்கப்படுகிறார்கள்.

    மேலும், பள்ளி குழந்தைகள் போர் வீரர்கள் அணியும் உடை மற்றும் தொப்பி ஆகியவற்றை தைத்து தரவும் பயிற்சிகள் நடக்கிறது.

    இன்றைய குழந்தைகளை எதிர்கால ரஷிய போர் வீரர்களாக கட்டாயபடுத்தி மாற்ற முயல்வதற்கு சமூக வலைதளங்களில் பயனர்கள் அந்நாட்டிற்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

    பள்ளி கல்வி அமைச்சர் செங்கோட்டையன் வழிகாட்டுதலின்படி மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் தமிழ்நாட்டில் பள்ளி முன் பருவ கல்விக்கான பாடத் திட்டத்தை தமிழ் மற்றும் ஆங்கில வழியில் தயாரித்துள்ளது. #MinisterSengottaiyan
    சென்னை:

    மத்திய அரசின் மனித வள மேம்பாட்டு அமைச்சகம் பள்ளி முன் பருவ கல்வித் திட்டம் நாடு முழுவதும் ஒரே அமைப்பாக இருக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளது. அதன் அடிப்படையில் தேசிய கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி குழுமம் பள்ளி முன் பருவ கல்விக்கான திட்டத்தினை வடிவமைத்தது.



    பிரிகேஜி, எல்.கே.ஜி., யு.கே.ஜி.க்கான பாடத்திட்டத்தை வடிவமைத்துள்ளது. பள்ளி கல்வி அமைச்சர் செங்கோட்டையன் வழிகாட்டுதலின் படி மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் தமிழ்நாட்டில் பள்ளி முன் பருவ கல்விக்கான பாடத் திட்டத்தை தமிழ் மற்றும் ஆங்கில வழியில் தயாரித்துள்ளது. இப்பாடத் திட்டம் www.tnscert.org என இணையத் தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

    வல்லுனர்கள், கல்வியாளர்கள், ஆசிரியர்கள், பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் இப்பாடத் திட்டத்தினை பார்வையிட்டு தங்களது கருத்துக்களை வருகின்ற 30-ந்தேதிக்குள் கடிதம் வழியாகவோ அல்லது awpb2018@gmail.com என்ற மின்னஞ்சல் வழியாகவோ தெரிவிக்கும்படி இயக்குனர் அறிவொளி தெரிவித்துள்ளார். #MinisterSengottaiyan

    அரியலூரில் உள்ள தனியார் பள்ளியில் தமிழக அரசின் 9-ம் வகுப்பு புதிய பாட புத்தகம் திட்டம் குறித்த அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு பயிற்சி முகாம் நடைபெற்றது.
    அரியலூர்:

    அரியலூரில் உள்ள தனியார் பள்ளியில் தமிழக அரசின் 9-ம் வகுப்பு புதிய பாட புத்தகம் திட்டம் குறித்த அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு பயிற்சி முகாம் நடைபெற்றது. பயிற்சி முகாமை மாவட்ட கல்வி அதிகாரி செல்வம் தொடங்கி வைத்தார். தொடர்ந்து பாடத்தின் எளிமை, பெருமை, அட்டை படம், கியு ஆர் கோடு மற்றும் அதன் 6 இலக்க நம்பர் ஆகியவற்றை குறித்து ஆசிரியர் களுக்கு விளக்கி எடுத் துரைக்கப்பட்டது. இது ஆன் லைன் மற்றும் ஆப் லைன் மூலம் எவ்வாறு பயன்படுத்தலாம் எனவும் ஆசிரியர் களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. புத்தகம் எடுத்து செல்லாமல் ஆசிரியர்கள் பாடம் நடத்தலாம் எனவும் தெரிவிக்கப்பட்டது. இது குறித்து ஆசிரியர்கள் மாணவர்கள் கியுஆர் கோடு மூலம் காணொலி மூலம் பாடத்திட்டத்தை அறிந்து படித்தல் மூலம் அதனை புரிந்து, அறிந்து படிக்க முடியும் என ஆசிரியர்கள் தெரிவித்தனர். இந்த பயிற்சி முகாம் தமிழ், ஆங்கிலம், கணிதம் என ஒவ்வொரு படத்திற்கும் இரண்டு நாட்கள் வீதம் தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறுகிறது.

    6-வகுப்பு ஆசிரியர்களுக்கு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியிலும், 11-ம் வகுப்பு ஆசிரியர்களுக்கு கீழப்பழுவூர் சாமி பள்ளியிலும் பாட புத்தகம் குறித்த ஆசிரியர்களுக்கு விளக்க பயற்சி அளிக்கப்பட்டது. பயிற்சி குறித்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி கூறுகையில், தமிழக அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள பாட திட்டங்கள் மாணவர் களின் திறனானது மேம்படுத்தப்படும். மாணவர்கள் தங்களை அனைத்து விதத்திலும் சி.பி.எஸ்.இ. பள்ளி மாணவர்களிடம் போட்டி போட முடியும் வகையில் வடி வமைக்கப்பட்டுள்ளது. புதிய பாடத்தின் எளிமை, பெருமை, அட்டை படம், கோடு மற்றும் அதன் 6 இலக்க நம்பர் ஆகியவற்றை குறித்து ஆசிரியர் களுக்கு விளக்கி கூறினார். 
    புதிய பாடத்திட்டம் குறித்து ஆசிரியர்களுக்கு அடுத்த மாதம் 15 நாட்கள் பயிற்சி அளிக்கப்பட உள்ளது என அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறினார்.
    சென்னை:

    சென்னை சைதாப்பேட்டையில் உள்ள பனகல் மாளிகையில் முதன்மை கல்வி அலுவலகம் வாடகைக்கு இருந்து வந்தது. அந்த அலுவலகம் எழும்பூர் மாநில மகளிர் பள்ளி வளாகத்தில் உள்ள கட்டிடத்துக்கு மாற்றப்பட்டது. அதன் திறப்பு விழா நேற்று நடைபெற்றது.

    பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் முதன்மை கல்வி அலுவலகத்தை திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் பள்ளி கல்வி இயக்குனர் ரெ.இளங்கோவன், மத்திய இடைநிலை கல்வி இயக்குனர் வி.சி.ராமேஸ்வர முருகன், முன்னாள் எம்.பி. பாலகங்கா உள்பட பலர் கலந்துகொண்டனர். சென்னை முதன்மை கல்வி அதிகாரி மனோகரன் வரவேற்றார்.

    பின்னர் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    மாநில மகளிர் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் உள்ள 4 வகுப்பறைகள் நிரந்தர முதன்மை கல்வி அலுவலகமாக மாற்றப்பட்டுள்ளது. பிளஸ்-1, பிளஸ்-2 தேர்வில் மொழித்தேர்வுகள் இதுவரை 2 தேர்வாக நடைபெற்றது. இப்போது ஒரே தேர்வாக கொண்டுவரப்பட்டுள்ளது. இதை ஆசிரியர்கள் வரவேற்று உள்ளனர்.

    விரைவில் சி.ஏ. பயிற்சி தொடங்கப்படும். திறன் பயிற்சி புதிய பாடத்திட்டத்தில் சேர்க்கப்பட உள்ளது. புதிய பாடத்திட்டம் குறித்து அடுத்த மாதம் 15 நாட்கள் ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    புதிய பாடத்திட்டத்தில் உருவாக்கப்பட்ட 1, 6, 9-ம் வகுப்புகளுக்கான பாடப்புத்தகங்கள் விற்பனை தொடங்கியது.
    சென்னை:

    புதிய பாடத்திட்டத்தில் உருவாக்கப்பட்ட 1, 6, 9-ம் வகுப்புகளுக்கான பாடப்புத்தகங்கள் விற்பனை தொடங்கியது.

    இதுதொடர்பாக பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர் பிரதீப் யாதவ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    1 முதல் 12-ம் வகுப்பு வரையிலான பாடத்திட்டங்களை மாற்றியமைக்க தமிழக அரசு உத்தரவிட்டது. இதில் இந்த கல்வியாண்டுக்கு முதல்கட்டமாக 1, 6, 9 மற்றும் 11-ம் வகுப்புகளுக்கான புதிய பாடநூல்கள் அச்சிடப்பட்டுள்ளன. இந்த பாடநூல்கள் சிறந்த வல்லுநர்களால் மாணவர்கள் எளிதாக புரிந்துகொள்ளத்தக்க வகையில் பாடத்திட்டங்கள் மேம்படுத்தப்பட்டுள்ளதால் பக்கங்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. குயிக் ரெஸ்பான்ஸ் (கியூ.ஆர்.கோடு) போன்ற சிறப்பு அம்சங்களுடன் இவை உருவாக்கப்பட்டுள்ளன.

    பாடநூல்கள் வழக்கமாக அச்சிட பயன்படுத்தப்படும் மேப் லித்தோ தாளுக்கு பதிலாக தரம் உயர்ந்த எலிகண்ட் தாள் பயன்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக 11-ம் வகுப்பு பாடநூல்கள் 60 ஜி.எஸ்.எம். தாளில் ஒரு வண்ண அச்சுக்குப் பதிலாக, 80 ஜி.எஸ்.எம். தாளில் 4 வண்ணங்களில் அச்சிடப்பட்டுள்ளன. மேலட்டைகள் சிறந்த முறையில் அச்சிடப்பட்டு லேமினேஷன் செய்து புதுப்பொலிவுடன் தயாரிக்கப்பட்டுள்ளன.

    புதிய பாடத்திட்டத்தின்படி தயார் செய்யப்பட்டுள்ள 1, 6, 9 மற்றும் 11-ம் வகுப்புகளுக்குரிய விலையில்லா பாடநூல்கள், பள்ளி திறக்கும் அன்றே மாணவ-மாணவர்களுக்கு வழங்க ஏதுவாக அனைத்து மாவட்டங்களுக்கும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

    1, 6, 9-ம் வகுப்புகளுக்கான பாடநூல்கள் விற்பனை தொடங்கப்பட்டுள்ளது. 11-ம் வகுப்புக்கான பாடநூல்கள் ஜூன் 2-வது வாரத்தில் விற்பனை தொடங்கப்பட உள்ளது. நவீன தொழில்நுட்பத்தில் பாடநூல்கள் அச்சடிக்கப்பட்டுள்ளதால் அதற்கேற்றவாறு விற்பனை விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    1, 6, 9-ம் வகுப்பு பாடநூல்கள் ஆன்லைனில் ( www.textbookonline.tn.nic.in) விற்பனை தொடங்கியுள்ளது என்றும் மேலும் டி.பி.ஐ. வளாகத்திலும் புதிய பாடப்புத்தகங்கள் கிடைக்கும் என்றும் தமிழ்நாடு பாடநூல் கல்வியியல் பணிகள் கழக நிர்வாக அதிகாரி ஜெகன்நாதன் தெரிவித்துள்ளார். 
    ×