என் மலர்
நீங்கள் தேடியது "NGK"
என்.ஜி.கே டிரைலரில் இடம்பெறும் நாட்டுல ஒவ்வொன்னும் ஒருவிதமான பைத்தியம், அவனுக்கு இந்த நாட்டுமேலேயே பைத்தியம் என்ற வசனம் ரசிகர்களை கவர்ந்துள்ளது. #NGK
செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் உருவாகி இருக்கும் திரைப்படம் `என்ஜிகே'. அரசியல் கலந்த திரில்லர் படமாக உருவாகியிருக்கும் இதில் சூர்யாவுடன் சாய் பல்லவி, ரகுல் ப்ரீத்தி சிங் நடித்துள்ளனர்.
படத்தில் சூர்யா நந்த கோபாலன் குமரன் (என்.ஜி.கே) என்ற பெயரில் நடித்திருக்கிறார். ஒரு சாதாரண இளைஞாக இருந்து அரசியல் களத்தில் இறங்கி மாற்றத்தை ஏற்படுத்துவது போல் அவரது கதாபாத்திரம் உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.
இப்படம் வருகிற மே 31-ந் தேதி திரைக்கு வரும் நிலையில், இதன் டிரைலர் இன்று வெளியிடப்பட்டது. இதில் நாட்டுல ஒவ்வொன்னும் ஒருவிதமான பைத்தியம், அவனுக்கு இந்த நாட்டுமேலேயே பைத்தியம் என்ற வசனம் ரசிகர்களை கவர்ந்து வருகிறது.
பிரேம் படம் மூலம் மிகவும் பிரபலமாகி தற்போது தமிழில் பல படங்களில் நடித்து வரும் சாய் பல்லவி, வித்தியாசமான ஆசை இருப்பதாக கூறியிருக்கிறார். #SaiPallavi
சூர்யா ஜோடியாக சாய்பல்லவி, நடித்துள்ள என்.ஜி.கே. படம் விரைவில் திரைக்கு வருகிறது. மேலும் படங்களில் நடிக்க கதை கேட்டு வருகிறார். தெலுங்கு, மலையாளத்திலும் பட வாய்ப்புகள் வருகின்றன. சாய்பல்லவி அளித்த பேட்டி வருமாறு:-
“நான் டாக்டருக்கு படித்து விட்டு நடிக்க வந்தேன். சினிமாவுக்கு திட்டம் போட்டு வரவில்லை. இந்த துறையில் தினமும் புதுமையான விஷயங்கள் வந்து கொண்டு இருக்கின்றன. சினிமாவில் எனக்கு வாய்ப்புகள் இருப்பது வரை நடிப்பேன். மார்க்கெட் குறைந்தால் என்னுடைய டாக்டர் தொழிலை பார்க்க போய்விடுவேன்.

எனக்கு சுற்றுப்பயணம் பிடிக்கும். நடனத்திலும் விருப்பம். நான் என்னை மாதிரி இருக்க விரும்புகிறேன். நடித்த படங்களில் வித்தியாசமான படம் தியா. ஒரு தாயாக நடித்தேன். இந்த படம் மூலம் என்னை மேலும் மெருகேற்றினேன். மாற்றங்களை நான் விரும்புவது இல்லை. ஒரே மாதிரி உணவை சாப்பிடுவேன். சிறுவயதில் இருந்து, பழகியவர்களுடன் தான் நட்பாக இருப்பேன்.
ஆனால் சினிமா தொழில் இதற்கு வித்தியாசமானது. எல்லாவித கதாபாத்திரங்களையும் செய்ய ஆசை இருக்கிறது. நான் நடித்த ஒவ்வொரு படமும் வெவ்வேறு விஷயங்களை எனக்கு கற்றுக்கொடுத்து இருக்கிறது. எந்த கதாபாத்திரத்திலும் நடிக்க முடியும் என்ற நம்பிக்கையும் வந்துள்ளது. எல்லோருக்கும் ஒரு கருத்து கொடுக்கிற கதையில் நடிக்க ஆசை இருக்கிறது.” இவ்வாறு சாய்பல்லவி கூறினார்.
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நாயகிகளுள் ஒருவரான சாய் பல்லவி தான் மேக்கப்பை விரும்பாததற்கான காரணத்தை கூறியிருக்கிறார். #SaiPallavi
பிரேமம் படத்தில் மலர் டீச்சராக நடித்து வரவேற்பு பெற்றவர் சாய் பல்லவி. தமிழில் கரு, மாரி 2 என இரண்டு படங்களில் நடித்துள்ளார். சூர்யாவுடன் நடித்துள்ள என்ஜிகே திரைப்படம் மே 31-ந் தேதி திரைக்கு வர உள்ளது.
இந்நிலையில் சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில், ’நான் ஒருபோதும் அழகு சாதன பொருட்கள் விளம்பரத்தில் மட்டும் நடிக்கவே மாட்டேன். அழகு சாதன பொருட்களை பயன்படுத்துவதால் மட்டும் ஒருவருடைய அழகு மாறிவிடாது.

மேக்கப் போட்டால் வேறு ஒருவர் போல தெரிகிறேன் என்று எனக்கு வேண்டியவர்கள் கூறுகிறார்கள். அதன் காரணமாக தான் மேக்கப் போடாமல் நடிக்கிறேன். அதை தான் இயக்குனர்களும் விரும்புகின்றனர்’ என்று அவர் தெரிவித்துள்ளார். #SaiPallavi
செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா - சாய் பல்லவி - ரகுல் ப்ரீத் சிங் நடிப்பில் உருவாகி இருக்கும் `என்ஜிகே' படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. #NGK #Suriya #NGKTeaser
செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் உருவாகி இருக்கும் திரைப்படம் `என்ஜிகே'. அரசியல் கலந்த திரில்லர் படமாக உருவாகியிருக்கும் இதில் சூர்யாவுடன் சாய் பல்லவி, ரகுல் ப்ரீத்தி சிங் நடித்துள்ளனர்.
படத்தில் சூர்யா நந்த கோபாலன் குமரன் (என்.ஜி.கே) என்ற பெயரில் நடித்திருக்கிறார். ஒரு சாதாரண இளைஞாக இருந்து அரசியல் களத்தில் இறங்கி மாற்றத்தை ஏற்படுத்துவது போல் அவரது கதாபாத்திரம் உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.
#NGK releasing on May 31st #NGKfromMay31@Suriya_offl@selvaraghavan@thisisysr@RelianceEntpic.twitter.com/R2iwKcHEz6
— DreamWarriorPictures (@DreamWarriorpic) March 25, 2019
சமீபத்தில் வெளியான படத்தின் டீசரில் அரசியல் வாசனை வீச படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்தது. இந்த நிலையில் படம் வருகிற மே 31-ந் தேதி படம் திரைக்கு வரும் என்று படக்குழு அறிவித்துள்ளது.
ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.ஆர்.பிரகாஷ்பாபு, எஸ்.ஆர்.பிரபு தயாரிக்கும் இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். ஜெகபதி பாபு, பாலா சிங், மன்சூர் அலி கான், முரளி சர்மா, சம்பத் ராஜ் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். #NGK #Suriya #NGKFire #NGKfromMay31
செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகி இருக்கும் `என்ஜிகே' படத்தின் டீசர் வெளியாகி இருக்கும் நிலையில், படத்தில் சூர்யா அரசியல்வாதியாக நடிக்கிறார் என்பது தெரியவந்துள்ளது. #NGK #Suriya #NGKTeaser
செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் உருவாகி இருக்கும் திரைப்படம் `என்ஜிகே' அரசியல் கலந்த திரில்லர் படமாக உருவாகும் இதில் சூர்யாவுடன் சாய் பல்லவி, ரகுல் ப்ரீத்தி சிங் நடித்துள்ளனர்.
இந்த படத்தின் டீசர் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், டீசர் சமூக வலைதளத்தில் கசிந்தது. இதையடுத்து காலை 11 மணியளவில் படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டது. படத்தில் சூர்யா நந்த கோபாலன் குமரன் (என்.ஜி.கே) என்ற பெயரில் நடித்திருக்கிறார். ஒரு சாதாரண இளைஞாக இருந்து அரசியல் களத்தில் இறங்கி மாற்றத்தை ஏற்படுத்துவது போல் அவரது கதாபாத்திரம் உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

உன்ன மாதிரியான ஆளுங்க அரசியலுக்கு வந்தா இந்த ஊரு எவ்வளவு நல்லா இருக்கும், கத்துக்குறேன் தலைவரே என அரசியல் வாசனையுடனான வசனங்களுடன் விவசாயம், சமூக பிரச்சனையையும் படத்தில் சொல்லவருவதாக தெரிகிறது.
ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.ஆர்.பிரகாஷ்பாபு, எஸ்.ஆர்.பிரபு தயாரிக்கும் இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். ஜெகபதி பாபு, பாலா சிங், மன்சூர் அலி கான், முரளி சர்மா, சம்பத் ராஜ் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். #NGK #Suriya #NGKTeaser #NGKFire
என்ஜிகே டீசர்:
இழந்ததை பற்றி கவலை இல்லை என்று நடிகை ரகுல் ப்ரீத் சிங் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் கூறியிருக்கிறார். #RakulPreetSingh #Dev
தமிழ், தெலுங்கு என 2 மொழி சினிமாவிலும் முன்னணி நடிகையாக இருக்கும் ரகுல் ப்ரீத் சிங் ’தேவ்’ பட விழாவில் அளித்த பேட்டி:-
தமிழ், தெலுங்கு, இந்தி என 3 மொழிகளிலும் ஒரே நேரத்தில் நடிப்பது எப்படி?
என்.ஜி.கே, தேவ் என 2 படங்களையும் நான் ஒப்புக்கொண்டபோதே இந்தியில் அஜய் தேவ்கனுடன் நடிக்கவும் ஒப்பந்தமானேன். இந்தி படத்துக்கு என்னுடைய கால்ஷீட் மட்டும் 100 நாட்கள் தேவைப்பட்டன. அத்துடன் எனது எடையையும் குறைக்க வேண்டியதாகி விட்டது. அடுத்து சிவகார்த்திகேயனுடன் நடிக்கும் சயின்ஸ் பிக்ஷன் படம் இருக்கிறது. என்னை பொறுத்தவரை எந்த மொழி என்பது முக்கியம் அல்ல. தினமும் ஏதாவது ஒரு படப்பிடிப்பில் இருக்க வேண்டும். அதுதான் என் குறிக்கோள்.
சூர்யா, கார்த்தி ஒப்பிட முடியுமா?
இருவருமே பெரிய திறமை சாலிகள். இருவருடனும் பணி புரிவது ஜாலியாக இருந்தது. இருவரில் யார் சிறந்தவர் என்ற கேள்விக்கே இடம் இல்லை.
2 கதாநாயகிகள் கதைகளிலும் நடிப்பது ஏன்?
ஒரு படத்தில் எனது பங்களிப்பை மட்டுமே நான் பார்க்கிறேன். மற்ற நடிகர்களை பற்றி பார்ப்பதில்லை. செல்வராகவனின் பெரிய ரசிகை நான். அவர் படத்தில் நடிக்கும் வாய்ப்பு வரும்போது அதில் யார் எல்லாம் இருக்கிறார்கள் என்று ஆராய்ச்சி செய்ய விரும்பவில்லை. சின்ன கதாபாத்திரமாக இருந்தாலும் அதை பற்றி பேச வைக்க அவரால் முடியும்.

சினிமாவை தவிர வேறு என்ன பிடிக்கும்?
உடற்பயிற்சி. ஒரு நாளைக்கு குறைந்தது 45 நிமிடங்கள் அதற்கு ஒதுக்கிவிடுவேன். அடுத்து கோல்ப் விளையாட்டு. மாதத்துக்கு ஒருமுறையாவது விளையாடுவேன்.
இந்த படத்தை இழந்துவிட்டோமே என்றோ இதில் ஏன் ஒப்புக்கொண்டோம் என்றோ வருத்தப்பட்டது உண்டா?
இழந்ததை பற்றி கவலைப்பட்டது இல்லை. ஆனால் சில படங்களில் நடித்துக்கொண்டு இருக்கும்போது ஏன் இந்த படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டோம் என்று வருத்தப்பட்டுள்ளேன்.
கார்த்தி நடிப்பில் வெளியாக இருக்கும் ‘தேவ்’ படத்துடன் சூர்யாவின் ‘என்.ஜி.கே’ திரைப்படம் இணைந்துள்ளது. #Dev #Karthi #Suriya #NGK
`கடைக்குட்டி சிங்கம்' படத்தை தொடர்ந்து கார்த்தி நடிப்பில் அடுத்ததாக ரிலீசாகவிருக்கும் படம் `தேவ்'. அறிமுக இயக்குனர் ரஜத் இயக்கியிருக்கும் இந்த படத்தில் கார்த்தி ஜோடியாக ரகுல் ப்ரீத் சிங் நடித்துள்ளார். இப்படம் காதலர் தினமான பிப்ரவரி 14-ஆம் தேதி ரிலீசாக இருக்கிறது.

இப்படம் வெளியாகும் திரையரங்குகளில் சூர்யாவின் ‘என்.ஜி.கே’ டீசர் ஒளிபரப்பப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. என்.ஜி.கே படத்தில் சூர்யா நாயகனாகவும் ரகுல் ப்ரீத் சிங், சாய் பல்லவி ஆகியோர் நாயகிகளாகவும் நடித்திருக்கிறார்கள். செல்வராகவன் இயக்கியுள்ள இப்படத்தை ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.
செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகி இருக்கும் `என்ஜிகே' படத்தின் முக்கிய அறிவிப்பு ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது. #NGK #Suriya #NGKTeaser
செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் உருவாகி இருக்கும் திரைப்படம் `என்ஜிகே'. அரசியல் கலந்த திரில்லர் படமாக உருவாகும் இதில் சூர்யா ஜோடியாக சாய் பல்லவி, ரகுல் ப்ரீத்தி சிங் நடித்துள்ளனர்.
ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.ஆர்.பிரபு தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிந்த நிலையில், `என்ஜிகே' படத்தின் டீசர் காதலர் தினத்தை முன்னிட்டு பிப்ரவரி 14-ஆம் தேதி வெளியாகும் என்று படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
The date is fixed for #TeaserCelebration guys!
— DreamWarriorPictures (@DreamWarriorpic) January 25, 2019
Yes! #NGKTeaser from #Feb14. @Suriya_offl@selvaraghavan@thisisysr#NGKFire 🔥🔥🔥 pic.twitter.com/aUp4tvkxV6
படத்தின் போஸ்ட் புரொடக்ஷன்ஸ் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், படத்தை கோடை விடுமுறையில் ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளது. இந்த படத்தில் சரத்குமார், ஜெகபதி பாபு, பாலா சிங், மன்சூர் அலி கான், முரளி சர்மா, சம்பத் ராஜ் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். #NGK #Suriya #NGKTeaser #NGKFire
சூர்யா நடிப்பில் தற்போது உருவாகி வரும் ‘என்.ஜி.கே’ படத்தின் படக்குழுவினருக்கு சிறப்பு பரிசளித்து அவர்களை நெகிழ வைத்திருக்கிறார். #Suriya #NGK
2019-ம் ஆண்டில் மிகவும் எதிர்பார்க்கப்படும் படங்கள் பட்டியலில் ‘என்.ஜி.கே’ ஒன்று. செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா, ரகுல் பிரீத், சிங், சாய்பல்லவி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படப்பிடிப்பு ஜனவரி 12-ம் தேதியுடன் முடிவு அடைந்தது. இதனைத் தொடர்ந்து இயக்குனர்கள் குழு, ஒளிப்பதிவாளர்கள் குழு, கலை இயக்குநர்கள் குழு என அனைவருக்கும் ஒரு பவுன் தங்க காசு பரிசளித்துள்ளார் சூர்யா.
கடைசி நாளில் சூர்யா அளித்த பரிசால், படக்குழுவினர் பெரும் மகிழ்ச்சி அடைந்தனர். ‘என்.ஜி.கே’ படப்பிடிப்பு நிறைவடைந்ததை தொடர்ந்து இயக்குநர் செல்வராகவன் “சூர்யாவுடனான பயணம் சிறப்பானதாக இருந்தது.

அவருடைய திறமை ஈடுபாடு கண்டு வியந்து விட்டேன். ‘என்.ஜி.கே’ படக்குழு அவருக்கு நன்றி கூற கடமைப்பட்டுள்ளோம்” என்று தெரிவித்துள்ளார். இதற்கு பதிலளிக்கும் விதமாக சூர்யா “செல்வராகவன்.. திரைக்கும் முன்னும், திரைக்குப் பின்னும் என்னை புதிய உயரத்துக்கு நகர்த்தியதற்கு நன்றி” என்று குறிப்பிட்டுள்ளார். இறுதிகட்டப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் இப்படத்தை கோடை விடுமுறைக்கு வெளியிடலாம் என்று படக்குழு முடிவு செய்துள்ளது.
செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகி வரும் `என்ஜிகே' படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு முடியும் தருவாயில் உள்ளது. #NGK #Suriya
செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் `என்ஜிகே'. அரசியல் கலந்த திரில்லர் படமாக உருவாகும் இதில் சூர்யா ஜோடியாக சாய் பல்லவி, ரகுல் ப்ரீத்தி சிங் நடிக்கின்றனர்.
ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.ஆர்.பிரபு தயாரிக்கும் இந்த படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு முடியும் தருவாயில் உள்ளது. வெகு விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேநேரத்தில் போஸ்ட் புரொடக்ஷன்ஸ் பணிகளும் துவங்கவிருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
படத்தை கோடை விடுமுறையில் ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளது. இந்த படத்தில் சரத்குமார், ஜெகபதி பாபு, பாலா சிங், மன்சூர் அலி கான், முரளி சர்மா, சம்பத் ராஜ் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். #NGK #Suriya
செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகி வரும் `என்ஜிகே' படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், படத்தின் இசை உரிமையை பிரபல நிறுவனம் ஒன்று வாங்கியுள்ளது. #NGK #Suriya
செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் `என்ஜிகே'. அரசியல் கலந்த திரில்லர் படமாக உருவாகும் இதில் சூர்யா ஜோடியாக சாய் பல்லவி, ரகுல் ப்ரீத்தி சிங் நடிக்கின்றனர்.
ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.ஆர்.பிரபு தயாரிக்கும் இந்த படத்தின் இறுதிகட்ட விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் நிலையில், படத்தின் இசை உரிமையை சோனி மியூசிக் சவுத் நிறுவனம் கைப்பற்றியுள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
Happy to associate with @SonyMusicSouth for #NGK. @Suriya_offl@selvaraghavan@thisisysr@Sai_Pallavi92@Rakulpreet#NGKwithSony#SonyMusicBagsNGKpic.twitter.com/FVbw4yE7d2
— DreamWarriorPictures (@DreamWarriorpic) December 7, 2018
படத்திற்கு இசையமைக்கும் பணிகளில் யுவன் ஷங்கர் ராஜா பிசியாக இருக்கிறார். சமீபத்தில் சித் ஸ்ரீராம் பாடிய ஒரு பாடலை யுவன் ஷங்கர் ராஜா பதிவு செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த மாதத்திற்குள் முழு படப்பிடிப்பையும் முடித்துவிட்டு படத்தை கோடை விடுமுறையில் ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. இந்த படத்தில் சரத்குமார், ஜெகபதி பாபு, பாலா சிங், மன்சூர் அலி கான், முரளி சர்மா, சம்பத் ராஜ் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. #NGK #Suriya
செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகி வரும் `என்ஜிகே' படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. #NGK #Suriya
செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் `என்ஜிகே'. அரசியல் கலந்த திரில்லர் படமாக உருவாகும் இதில் சூர்யா ஜோடியாக சாய் பல்லவி, ரகுல் ப்ரீத்தி சிங் நடிக்கின்றனர்.
ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.ஆர்.பிரபு தயாரிக்கும் இந்த படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு நடந்து கொண்டிருப்பதாக படத்தின் தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு அவரது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார். இந்த மாதத்திற்குள் முழு படப்பிடிப்பையும் முடித்துவிட்டு படத்தை கோடை விடுமுறையில் ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.
#NGK Final Schedule🙂 https://t.co/s7obRAhpbZ
— S.R.Prabhu (@prabhu_sr) December 3, 2018
இதற்கிடையே என்ஜிகே படத்திற்கு இசையமைக்கும் பணிகளும் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த படத்தில் சரத்குமார், ஜெகபதி பாபு, பாலா சிங், மன்சூர் அலி கான், முரளி சர்மா, சம்பத் ராஜ் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். #NGK #Suriya