என் மலர்
நீங்கள் தேடியது "night club"
- கேளிக்கை விடுதியின் மேற்கூரை திடீரென இடிந்து விழுந்தது.
- கட்டிடத்தின் இடிபாடுகளில் பலர் சிக்கி கொண்டனர்.
சாண்டோ டொமிங்கோ:
கரீபியன் தீவு நாடான டொமினிகன் குடியரசு நாட்டின் சாண்டோ டொமிங்கோவில் பிரபல இரவு கேளிக்கை விடுதியான ஜெட் செட் என்னும் விடுதி அமைந்திருந்தது.
இந்த விடுதிக்கு உள்ளூரைச் சேர்ந்தவர்கள் மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்து வரும் சுற்றுலா பயணிகளும் அதிகளவில் கூடுவார்கள்.
அந்த விடுதியில் கடந்த திங்கட்கிழமை இசைக்கச்சேரி ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில் ஏராளமானோர் அங்கு கூடினர். இதில், அரசியல்வாதிகள், பேஸ்பால் விளையாட்டு வீரர்கள் உள்ளிட்ட பிரபலங்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
அப்போது திடீரென கேளிக்கை விடுதியின் மேற்கூரை இடிந்து விழுந்தது. இதில் இடிபாடுகளில் பலர் சிக்கி கொண்டனர். கட்டிட இடிபாடுகளில் சிக்கி 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருந்தனர். 100-க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்தனர். மீட்பு படையினர் விரைந்து சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டனர். இடிபாடுகளை அகற்றி அதில் சிக்கியவர்களை மீட்டனர்.
சுமார் 12 மணி நேரத்திற்குப் பிறகு இடிபாடுகளுக்கு அடியில் இருந்து உயிருடன் சிலர் மீட்கப்பட்டதாக மீட்புக்குழு தெரிவித்தது.
இந்நிலையில், படுகாயம் அடைந்த 160 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர். அவர்களில் பலர் இறந்ததால் தற்போது பலி எண்ணிக்கை 218 ஆக உயர்ந்துள்ளது. அதேசமயம் இறந்தவர்களில் பலர் சுற்றுலா பயணிகள் என்பதால் அவர்களை அடையாளம் காண்பதில் சிக்கல் நிலவுகிறது. எனவே உடைமைகளை வைத்து அவர்களை அடையாளம் காணும் முயற்சியில் போலீசார் இறங்கி உள்ளனர்.
- கேளிக்கை விடுதியில் வாடிக்கையாளர்கள் மற்றும் ஊழியர்கள் இருந்தனர்.
- அப்போது அங்கு ஆயுதங்களுடன் நுழைந்தவர் அங்கிருந்தவர்களை பிணைக்கைதிகளாக சிறைபிடித்தார்.
ஆம்ஸ்டர்டாம்:
நெதர்லாந்து நாட்டின் தலைநகர் ஆம்ஸ்டர்டாம் அருகே அமைந்துள்ள சிறிய நகரம் ஈடி. இந்நகரில் இரவுநேர கேளிக்கை விடுதி ஒன்று செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில், இந்த கேளிக்கை விடுதியில் இன்று வாடிக்கையாளர்கள் மற்றும் ஊழியர்கள் இருந்தனர். அப்போது அந்த கேளிக்கை விடுதிக்குள் ஆயுதங்களுடன் நுழைந்த நபர் அங்கிருந்தவர்களை பிணைக்கைதிகளாக சிறைபிடித்தார்.
தகவலறிந்த அங்கு விரைந்து வந்த போலீசார் அருகிலுள்ள குடியிருப்புகளில் இருந்து மக்களை பாதுகாப்பாக வெளியேற்றினர். தொடர்ந்து பிணைக்கைதிகளை மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
- பல மணி நேரத்துக்கு பின்னர் பிணைக் கைதிகளில் 3 பேர் விடுவிக்கப்பட்டனர்.
- கைது செய்யப்பட்டுள்ள நபரிடம் விசாரணை நடந்து வருகிறது.
நெதர்லாந்தின் ஈத் நகரில் உள்ள இரவு கேளிக்கை விடுதி ஒன்றில் ஆயுதங்களுடன் புகுந்த மர்ம நபர் அங்கிருந்தவர்களை பிணைக்கைதிகளாக பிடித்தனர்.போலீசார் விரைந்து வந்து பிணைக்கைதிகளை மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டனர். பல மணி நேரத்துக்கு பின்னர் பிணைக் கைதிகளில் 3 பேர் விடுவிக்கப்பட்டனர்.
அதன்பின் 4-வது நபரும் பத்திரமாக வெளியே வந்தார். இதுகுறித்து நெதர்லாந்து போலீசார் கூறும்போது, கடைசி பிணைக் கைதியும் விடுவிக்கப்பட்டார். ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். தற்போதைய சூழலில் கூடுதல் விவரங்களை தெரிவிக்க இயலாது என தெரிவித்தனர்.
இதற்கிடையே, இந்த சம்பவத்தில் பயங்கரவாத நோக்கம் இருப்பதாக சந்தேகிக்க எந்த காரணமும் இல்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.கைது செய்யப்பட்டுள்ள நபரிடம் விசாரணை நடந்து வருகிறது.
- தென் ஆப்பிரிக்காவின் இரவு விடுதியில் 20 பேர் இன்று உயிரிழந்த நிலையில் கிடந்தனர்.
- 20 பேரின் மர்ம மரணம் பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஜோகன்னஸ்பர்க்:
தென் ஆப்பிரிக்காவின் தெற்கு நகரான கிழக்கு லண்டனில் நைட் கிளப் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த விடுதியில் நிறைய பேர் நேற்று கூடியிருந்தனர்.
இந்நிலையில், இரவு விடுதியில் இன்று காலை சுமார் 20 பேர் உயிரிழந்த நிலையில் கிடந்தனர். அவர்களது மர்ம மரணம் பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விடுதியில் ஒருவருக்கொருவர் சண்டையிட்டுக் கொண்டனரா அல்லது வேறு ஏதேனும் விவகாரமா என்பது பற்றிய விவரங்கள் வெளியாகவில்லை.