என் மலர்
நீங்கள் தேடியது "nikkhi kalrani"
- நிக்கி கல்ராணியும், நடிகர் ஆதியும் காதலித்து சமீபத்தில் திருமணம் செய்துக் கொண்டனர்.
- தற்போது தான் கர்ப்பமாக இருப்பதாக வெளியான செய்திகள் குறித்து பதிவிட்டுள்ளார்.
தமிழில் டார்லிங் படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நிக்கி கல்ராணி. தொடர்ந்து யாகாவா ராயினும் நாகாக்க, வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன், நெருப்புடா, கலகலப்பு-2, சார்லி சாப்ளின் உள்பட பல படங்களில் நடித்துள்ளார். நிக்கி கல்ராணியும், மிருகம், ஈரம், அரவாண் உள்ளிட்ட பல படங்களில் நடித்த ஆதியும் காதலித்து சமீபத்தில் இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்துக் கொண்டனர்.

ஆதி - நிக்கி கல்ராணி
தற்போது நிக்கி கல்ராணி கர்ப்பமாக உள்ளதாக இணையத்தில் தகவல் பரவி வந்த நிலையில், இதுகுறித்து அவர் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், இந்த பெரிய செய்தியை நானே அறிவேன். இப்போது என் சார்பாக ஒரு சிலர் வைரலான அறிவிப்பை வெளியிட்டுள்ளனர், தயவுசெய்து குழந்தை பிறக்கும் தேதியையும் எனக்குத் தெரிவிக்கவும். நான் கர்ப்பமாக இல்லை. எதிர்காலத்தில் இந்த அற்புதமான செய்தியை வெளியிடும் முதல் நபராக நான் இருப்பேன். தயவுசெய்து வதந்திகளுக்கு யாரும் நம்ப வேண்டாம் என்று நிக்கி கல்ராணி பதிவிட்டுள்ளார்.