என் மலர்
நீங்கள் தேடியது "Nikki Galrani"
- நெய்யர் ஃபிலிம்ஸ் சார்பில் கிரிஷ் நெய்யர் தயாரிப்பில் ஆக்ஷன் கிங் அர்ஜூன் நடித்திருக்கும் புதிய படம் "விருந்து".
- இப்படம் ஆகஸ்ட் 29 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக இருக்கிறது.
நெய்யர் ஃபிலிம்ஸ் சார்பில் கிரிஷ் நெய்யர் தயாரிப்பில் ஆக்ஷன் கிங் அர்ஜூன் நடித்திருக்கும் புதிய படம் "விருந்து".
கதாநாயகியின் அம்மா, அப்பா மர்ம மரணத்தில் இருக்கும் ரகசியம், கதாநாயகியை துரத்தும் கொலையாளிகள் என அட்வென்ச்சர் கலந்து விறுவிறுப்பான திரைக்கதை எழுதி இயக்கி இருக்கிறார் இயக்குனர் கண்ணன் தாமர கண்ணன்.
அர்ஜூன் உடன் கிரீஷ் நெய்யர், நிக்கி கல்ராணி, ஹரீஷ் பெரடி, சோனா நாயர் மற்றும் அஜூ வர்கீஸ் ஆகியோர் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இந்த படத்தின் எழுத்தாளர் தினேஷ் பள்ளத், இசையமைப்பு பணிகளை ரதீஷ் வெகா மற்றும் சனந்த் ஜார்ஜ் கிரேஸ் ஆகியோர் மேற்கொள்கின்றனர். படத்தொகுப்பு பணிகளை வி.டி. ஸ்ரீஜித் மேற்கொள்கிறார். கலை இயக்க பணிகளை சஹாஸ் பாலா, பாடல்களை மோகன் ராஜன் எழுதியுள்ளார்.
முழுக்க முழுக்க ஆக்சன், ஃபேமிலி சென்டிமென்ட், திரில்லர் சாயலில் படம் முழுவதும் உருவாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் இப்படத்தின் கிளைமாக்ஸ் காட்சியை யாரும் யூகிக்க முடியாத வகையில் படமாக்கி இருப்பது இப்படத்தின் சிறப்பு.
இப்படம் ஆகஸ்ட் 29 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக இருக்கிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- ஆதி நடிப்பில் சப்தம் என்ற திகில் படம் நேற்று வெளியாகி இருக்கிறது.
- சினிமாவை பொறுத்தவரை தமிழ், தெலுங்கு என நான் பிரித்து பார்ப்பதில்லை.
மிருகம் படத்தில் அறிமுகமாகி தமிழ், தெலுங்கு மொழி படங்களில் நடித்து பிரபல கதாநாயகனாக இருப்பவர் ஆதி. இவரது நடிப்பில் சப்தம் என்ற திகில் படம் நேற்று வெளியாகி இருக்கிறது.
இந்த நிலையில் அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:-
சினிமாவை பொறுத்தவரை தமிழ், தெலுங்கு என நான் பிரித்து பார்ப்பதில்லை. கதையைதான் பார்ப்பேன். எல்லா கதாநாயகர்களுடனும் வில்லனாக நடிக்க ஆசை இருக்கிறது. எல்லா வில்லனுடம் கதாநாயகனாக நடிக்க ஆசை இருக்கிறது.
டைரக்ஷன் என்பது அழுத்தமான பணி. நடிகராகவே வண்டியை ஓட்டி விடுவோமே. சப்தம் படத்தில் நடித்தபோது நிறைய அமானுஷ்ய விஷயங்கள் நடந்தது. சில தினங்களுக்கு முன்பு ஐதராபாத்தில் நான், லைலா, அறிவழகன் பேசிக் கொண்டிருந்தபோது கூட லைட் ஆடிக்கொண்டே இருந்தது. இப்படி பல விஷயங்கள் அடிக்கடி நடந்ததால் ஈசியாக நினைக்க தோன்றிவிட்டது.
கண்ணுக்கு தெரியாத கடவுளை நம்பும்போது பேய் இருக்கலாம் என்று நம்ப தோன்றுகிறது.
கதாநாயகிகளுடன் நெருக்கமான காட்சிகளில் நடிப்பதற்கு திருமணத்திற்கு முன்பு யாருடைய அனுமதியும் தேவை இல்லை. திருமணத்திற்கு பிறகு அப்படிப்பட்ட காட்சிகளுக்கு பொண்டாட்டியோட அனுமதி தேவை.
அப்படி அனுமதி வாங்கி கொண்டால் வீட்டில் சண்டை இருக்காது. எல்லா படத்தின் கதை பற்றியும் மனைவியுடன் கலந்து பேசி ஆலோசனை செய்வேன். ஆனால் முடிவு நான் எடுப்பதுதான். இந்த வருடம் தமிழ் சினிமாவில் என்னுடைய நடிப்பில் பல படங்கள் வர இருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்."
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- நிக்கி கல்ராணியும், நடிகர் ஆதியும் காதலிப்பதாக கூறிவந்த நிலையில் அண்மையில் இருவருக்கும் திருமணம் நடந்தது.
- இதையடுத்து நிக்கி கல்ராணி சின்னத்திரை நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றுள்ளார்.
தமிழில் டார்லிங் படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நிக்கி கல்ராணி. தொடர்ந்து யாகாவா ராயினும் நாகாக்க, வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன், நெருப்புடா, கலகலப்பு-2, சார்லி சாப்ளின் உள்பட பல படங்களில் நடித்து இருக்கிறார். நிக்கி கல்ராணியும், நடிகர் ஆதியும் காதலிப்பதாக கூறி வந்த நிலையில் சமீபத்தில் இருவீட்டார் சம்மதத்துடன் இவர்களுக்கு திருமணம் நடந்து முடிந்தது.

இதையடுத்து நிக்கி கல்ராணி சின்னத்திரையில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றுள்ளார். பிரபல தனியார் தொலைக்காட்சி ஒன்றில் வெளியாகும் 'வெல்லும் திறமை' என்ற நிகழ்ச்சியில் நடிகை நிக்கி கல்ராணி, பிரபல நடிகரும் கராத்தே நிபுணருமான ஷிஹான்ஹுசைனி மற்றும் நடன இயக்குனர் ஸ்ரீதர் ஆகியோர் நடுவர்களாக பங்கேற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.








Started a new project with new team today 😊 produced by TD Raja , debut director Kathir, @nikkigalrani@actorsathish@SamCSmusicpic.twitter.com/f4vaYbim8n
— M.Sasikumar (@SasikumarDir) February 4, 2019


