என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Nilavembu Kasayam"
- ஆனந்தபுரம் சார்பாக நடைபெற்ற மருத்துவ முகாமிற்கு டாக்டர் ரெய்சா தலைமையிலான மருத்துவ குழுவினர் பங்கேற்றனர்.
- முகாமில் மருத்துவ பிரிவு மூலம் அனைவருக்கும் நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது.
சாத்தான்குளம்:
சாத்தான்குளம் வட்டார பகுதிகளில் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் ஐலின் சுமதி ஆலோசனையின்படி சாத்தான்குளம் வட்டாரத்தில் கந்தசாமிபுரம், சுப்பராயபுரம், பொத்தகாலன்விளை, தாய்விளை, வாலிவிளை , பெரியதாழை மற்றும் எள்ளுவிளை ஆகிய 7 இடங்களில் மழைக்கால சிறப்பு காய்ச்சல் மருத்துவ முகாம்கள் நடைபெற்றது.
முதலூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் சார்பில் நடைபெற்ற மருத்துவ முகாமிற்கு டாக்டர்.ஸ்வீட்லின் சசிதா தலைமையிலான குழுவினரும், ஆனந்தபுரம் சார்பாக நடைபெற்ற மருத்துவ முகாமிற்கு டாக்டர் ரெய்சா தலைமையிலான மருத்துவ குழுவினரும், படுக்கப்பத்து சார்பாக நடைபெற்ற மருத்துவ முகாமிற்கு டாக்டர் குருசாமி தலைமையிலான குழுவினரும் பங்கேற்றனர். காய்ச்சல் போன்ற சிறு உபாதைகளுக்கு மருந்து, மாத்திரைகள் வழங்கப்பட்டது. இதில் ஏராளமான நோயாளிகள் பயன்பெற்றனர். சித்த மருத்துவ பிரிவு மூலம் அனைவருக்கும் நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது.
சுகாதார ஆய்வாளர்கள் கிறிஸ்டோபர் செல்வதாஸ், மந்திரராஜன், ஜெயபால், கிராம சுகாதார செவிலியர்கள், செவிலியர்கள், மருந்தாளுனர்கள், பகுதி சுகாதார செவிலியர்கள், இளம் சுகாதார ஆய்வாளர்கள், மக்களை தேடி மருத்துவத் திட்ட கிராம பெண் தன்னார்வல பணியாளர்கள், ஆஷா பணியாளர்கள் மற்றும் மஸ்தூர் பணியாளர்கள் முகாமில் கலந்து கொண்டனர். மக்களை தேடி மருத்துவத் திட்ட பெண் தன்னார்வல பணியாளர்கள் மூலம் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு மற்றும் ரத்த அழுத்த பரிசோதனைகள் செய்யப்பட்டது. தொடர்ந்து குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளில் குடிநீரில் குளோரின் அளவு பரிசோதனை செய்யப்பட்டது. கிராம பகுதிகளில் டெங்கு மஸ்தூர் பணியாளர்கள் மூலம் கொசுப்புழு ஒழிப்பு பணியும் மேற்கொள்ளப்பட்டது.
- வாசுதேவநல்லூர் பத்மஸ்ரீ டாக்டர் சிவந்தி ஆதித்தனார் மனவளர்ச்சி குன்றியோர் சிறப்புப்பள்ளியில் நிலவேம்பு கசாயம் வழங்கும் விழா நடைபெற்றது.
- சித்தா மருத்துவர் ஆரோக்கியராஜ் மாணவர்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கினார்.
சிவகிரி:
வாசுதேவநல்லூர் மகாத்மா காந்திஜி சேவா சங்கத்தின் கீழ் இயங்கும் பத்மஸ்ரீ டாக்டர் சிவந்தி ஆதித்தனார் மனவளர்ச்சி குன்றியோர் சிறப்புப் பள்ளியில் மழைக்கால நோய்த்தொற்று தடுப்பு அலுவலர் (நெல்லை மற்றும் தென்காசி) டாக்டர் உஷா அறிவுறுத்தலின்படி மாணவர்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கும் விழா நடைபெற்றது. வாசுதேவநல்லூர் அரசு ஆரம்ப சுகாதார நிலைய சித்தா மருத்துவர் ஆரோக்கியராஜ் விழாவிற்கு தலைமை தாங்கி மாணவர்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கினார். பள்ளியின் தாளாளர் தவமணி, தலைமை ஆசிரியர் சங்கரசுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் சிறப்பு ஆசிரியர்கள் சாந்தி, ஹெலன் இவாஞ்சிலின், இயன்முறை மருத்துவர் புனிதா, உதவி ஆசிரியர் பூமாரி, கவிதா ஆகியோர் கலந்து கொண்டனர்.
- எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பாக டெங்கு காய்ச்சலை தடுக்கும் நிலவேம்பு கசாயம் வழங்கும் முகாம் நடை பெற்றது.
- கணேசபுரம் ஆதி திராவிட தொடக்க பள்ளி மாணவர்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது.
நெல்லை:
எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பாக டெங்கு காய்ச்சலை தடுக்கும் நிலவேம்பு கசாயம் வழங்கும் முகாம் நடை பெற்றது. முகாமினை எஸ்.டி.பி.ஐ. கட்சியின் நெல்லை மாநகர் மாவட்ட பொதுச் செயலாளர் எஸ்.எஸ்.எ.கனி தொடங்கி வைத்தார். வார்டு துணை தலைவர் அப்துல் வதூத் தலைமை தாங்கினார்.
நிர்வாகிகள் அலியார் செய்யது முஹம்மது, சத்தார் அலி,ஞானியார், சலீம் தீன், வக்கீல் ஆரிப் பாட்ஷா, காதர்மீரான்,அஹமது ஆகியோர் முன்னிலை வகித்தனர். 49-வது பகுதி அனைத்து தெருக்களில், மற்றும் கணேசபுரம் ஆதி திராவிட தொடக்க பள்ளி மாணவர்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை சுற்றுச்சூழல் பாதுகாப்பு அணி மாவட்ட தலைவர் பக்கீர் முகம்மது லெப்பை, வதூத் செய்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்