என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Nithya"
- கோவையைச் சேர்ந்த வித்யா, நித்யா ஆகிய இரட்டை சகோதரிகள் சீனாவில் நடக்க உள்ள ஆசிய விளையாட்டு போட்டிக்கு தேர்வாகி உள்ளனர்.
- ஆசிய விளையாட்டு போட்டிகள் சீனாவில் வருகிற 23-ந்தேதி தொடங்க உள்ளது.
கோவை:
ஆசிய விளையாட்டு போட்டிகள் சீனாவில் வருகிற 23-ந்தேதி தொடங்க உள்ளது. இதில் பங்கேற்க உள்ள வீரர்-வீராங்கனைகள் பட்டியலை தேசிய விளையாட்டு ஆணையம் வெளியிட்டு உள்ளது.
இதில் கோவையைச் சேர்ந்த வித்யா, நித்யா ஆகிய இரட்டை சகோதரிகள் சீனாவில் நடக்க உள்ள ஆசிய விளையாட்டு போட்டிக்கு தேர்வாகி உள்ளனர். இவர்களில் வித்யா 400 மீட்டர் ஓட்டப் போட்டிக்கு தேர்வாகி உள்ளார். 100 மீட்டர் தடை தாண்டும் போட்டிக்கு நித்யா தேர்வாகி இருக்கிறார்.
ஆசிய விளையாட்டு போட்டிக்கு தேர்வாகி உள்ள நித்யா, வித்யா ஆகிய 2 பேரும் சிறு வயது முதலே தடகள விளையாட்டு மீது அதிக ஆர்வம் கொண்டிருந்தனர். இதன் காரணமாக அவர்கள் பள்ளிப்படிப்பு மட்டுமின்றி விளையாட்டு போட்டிகளிலும் தீவிர ஆர்வம் காட்டினார்கள். இது அவர்களின் தந்தை ராமராஜூக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. எனவே அவர் மகள்களின் எதிர்கால கனவுக்கு உறுதுணையாக இருந்தார்.
ராமராஜ், கோவை தனியார் நிறுவனம் ஒன்றில் ரூ.10 ஆயிரம் மாத சம்பளத்தில் டிரைவராக வேலை பார்த்து வந்தார். வாடகை வீட்டில் வசித்த போதிலும் ராமராஜ் கடும் பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியில் குழந்தைகளை ஈரோட்டில் உள்ள தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தில் சேர்த்து படிக்க வைத்தார். அங்கு வித்யாவும், நித்யாவும் குடும்ப கஷ்டத்தை உணர்ந்து கடினமாக படித்தனர். தடகள விளையாட்டு போட்டிகளிலும் ஜொலித்தனர்.
இது அவர்களுக்கு மத்திய அரசு நிறுவனங்களில் வேலைவாய்ப்பை பெற்று தந்துள்ளது. வித்யா தற்போது கேரள மாநில ரெயில்வே துறையில் அதிகாரியாக வேலை பார்த்து வருகிறார். நித்யா சென்னை வருமான வரித்துறையில் அதிகாரியாக உள்ளார்.
சீனாவில் நடக்க உள்ள ஆசிய விளையாட்டு போட்டியில் பங்கேற்க இந்தியா சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளது சகோதரிகளிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து வித்யா கூறுகையில், நாங்கள் சர்வதேச விளையாட்டு போட்டிகளில் முதல்முறையாக பங்கேற்பது பெருமையாக உள்ளது. இதற்காக நாங்கள் விளையாட்டு மட்டுமின்றி பொருளாதார நிலையிலும் பல்வேறு தடைகளை தாண்டி இந்த நிலைக்கு வந்து உள்ளோம். இது எங்களின் கடின உழைப்புக்கு கிடைத்த வெற்றி என்று தெரிவித்தார். அரியானா மாநிலம் சண்டிகர் பகுதியில் சமீபத்தில் நடந்த இந்தியன் கிராண்ட் பிரிக்ஸ் போட்டியில் 400 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் வித்யா பதக்கம் வென்றது இங்கு குறிப்பிடத்தக்கது.
நித்யா கூறுகையில், நாங்கள் 8-ம் வகுப்பு படிக்கும்போதே தடகள போட்டிகளில் சாதிக்க தொடங்கி விட்டோம். 10-ம் வகுப்பு படித்தபோது தேசியஅளவில் முதலாவதாக பதக்கத்தை தட்டிப்பறித்தேன். நாங்கள் போக வேண்டிய தூரம் இன்னும் அதிகம் உள்ளது. ஆசிய விளையாட்டு போட்டிகளில் இந்தியா சார்பில் நாங்கள் இருவரும் பங்கேற்பது மனதளவில் சற்று நெருக்கடியாக உள்ளது. இதில் நாங்கள் வெற்றி பெற்றால் அடுத்தாண்டு நடக்க உள்ள ஒலிம்பிக் போட்டிக்கு தகுதிபெற முடியும்.
நாங்கள் இதுவரை தடகள போட்டிகளுக்காக சொந்த காசை செலவழித்து வருகிறோம். ஆசிய விளையாட்டு போட்டியில் பெரியளவில் சாதித்தால் எங்களுக்கு ஸ்பான்சர்ஷிப் கிடை க்க வாய்ப்பு உள்ளது. ஒலிம்பிக் போட்டியில் சகோதரிகள் பங்கேற்பது மிகவும் அரிதான நிகழ்வு தான். அப்படியான நிலையில் நாங்கள் 2 பேரும் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்றால் இந்தியா மட்டுமின்றி தமிழகத்துக்கும் பெருமை கிடைக்கும்.
எங்களின் தந்தை ராமராஜ் கோவையில் தற்போதும் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். தாயும், தந்தையும் வாடகை வீட்டில் வசித்து வருகின்றனர். அவர்களுக்கு சொந்தமாக வீடு கட்டி தர வேண்டும். வசதியாக வாழவைக்க வேண்டும் என்ற ஆசை உள்ளது. நாஙகள் சீனாவில் நடக்க உள்ள ஆசிய விளையாட்டு போட்டியில் நிச்சயமாக வெற்றி பெற்று அடுத்தாண்டு நடக்க உள்ள சர்வதேச ஒலிம்பிக் போட்டிக்கு தகுதிபெறுவோம், நிச்சயமாக சாதனை படைப்போம் என்று தெரிவித்து உள்ளார்.
- பெண்களுக்கான 100 மீட்டர் தடை தாண்டும் ஓட்டத்தில் ஆந்திர வீராங்கனை ஜோதி புதிய சாதனை படைத்ததோடு தங்கப்பதக்கம் பெற்றார்.
- 100 மீட்டர் தடை தாண்டும் ஓட்டத்தில் தமிழக வீராங்கனை வெள்ளி பதக்கம் வென்றார்.
ராஞ்சி:
26-வது தேசிய பெடரேசன் கோப்பை தடகள சாம்பியன்ஷிப் போட்டி ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் நடைபெற்று வருகிறது.
பெண்களுக்கான 100 மீட்டர் தடை தாண்டும் ஓட்டத்தில் ஆந்திர வீராங்கனை ஜோதி புதிய சாதனை படைத்ததோடு தங்கப்பதக்கம் பெற்றார்.
அவர் பந்தய தூரத்தை 12.89 வினாடியில் கடந்தார். இதற்கு முன்பு அவர் 13.43 வினாடியில் கடந்ததே சாதனையாக இருந்தது. தனது சாதனையை முறியடித்து ஜோதி புதிய சாதனை நிகழ்த்தினார்.
தமிழக வீராங்கனை நித்யா 2-வது இடத்தை பிடித்து வெள்ளிப் பதக்கம் பெற்றார். அவர் பந்தய தூரத்தை 13.44 வினாடியில் கடந்தார். ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த சப்னாகுமாரி 13.58 வினாடி யில் கடந்த வெண்கல பதக்கம் வென்றார்.
வட்டு எறியும் போட்டியில் மத்திய பிரதேச வீராங்கனை ஷாலினி சவுத்ரி தங்கம் வென்றார்.
ஆண்களுக்கான 110 மீட்டர் தடை தாண்டும் ஓட்டத்தில் மராட்டியத்தை சேர்ந்த தேஜஸ் அசோக்கும், சங்கிலி குண்டு எறிதல் பஞ்சாப்பை சேர்ந்த தம்ஜீத் சிங்கும் தங்கம் வென்றனர்.
- மாதவரம் பொன்னியம்மன்மேடு வி.பி.சி. நகர் முதல் தெருவை சேர்ந்தவர் கலைச்செல்வன்.
- இவர் நடிகர் தாடி பாலாஜியின் மனைவி நித்யாவிடம் ரூ.94 ஆயிரம் கடன் வாங்கி இருந்தார்.
மாதவரம் பொன்னியம்மன்மேடு வி.பி.சி. நகர் முதல் தெருவைச் சேர்ந்தவர் கலைச்செல்வன் (29). இவர் அதே பகுதியில் வசித்து வரும் நடிகர் தாடி பாலாஜியின் மனைவி நித்யாவிடம் ரூ.94 ஆயிரம் கடன் வாங்கி இருந்தார். இதில் ரூ.52 ஆயிரத்தை திருப்பி கொடுத்த கலைச்செல்வன் மீதி பணத்தை கொடுக்கவில்லை என்று தெரிகிறது.
இந்த நிலையில் பணம் தொடர்பாக நேற்று இரவு கலைச்செல்வனின் வீட்டிற்கு சென்று நித்யா கேட்டார். இதில் அவர்களுக்குள் மோதல் ஏற்பட்டது. ஒருவரையொருவர் தாக்கிக்கொண்டதாகவும் தெரிகிறது. இதுகுறித்து இருதரப்பினரும் மாதவரம் போலீசில் புகார் செய்தனர். இன்ஸ்பெக்டர் சிவகுமார் அவர்களிடம் விசாரணை நடத்தி வருகிறார்.
- நடிகர் தாடி பாலாஜியும் அவரது மனைவி நித்யாவும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.
- இவர்களது விவாகரத்து வழக்கு நிலுவையில் உள்ளது.
திரைப்பட நடிகரும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நடித்து வருபவருமான தாடி பாலாஜியின் மனைவி நித்யா (35). இவர்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் தற்போது பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். மேலும் இவர்களின் விவாகரத்து வழக்கு நிலுவையில் உள்ளது.
நித்யா தற்போது மாதவரம் அடுத்த பொன்னியம்மன்மேடு சாஸ்திரி நகரில் தனது மகளுடன் வசித்து வருகிறார். அதே பகுதியில் வசித்து வருபவர் ஓய்வு பெற்ற ஆசிரியர் மணி (வயது 62). இருவருக்கும் கார் நிறுத்துவது தொடர்பாக கருத்து வேறுபாடு இருந்து வந்துள்ளது.
மணியின் காரை கடந்த 10 நாட்களுக்கு முன்பு நித்யா சேதப்படுத்திள்ளார். இதனை மணி அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்ததில் நித்யா சேதப்படுத்தியது உறுதியானது. இது குறித்து மணி கொடுத்த புகாரின் பேரில் மாதவரம் போலீசார் நேற்று நித்யா மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்