என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "No Bag Day"
- இன்றைய தினம் மாணவர்கள் புத்தகப்பை இன்றி கைகளை வீசியபடி பள்ளிகளுக்கு சென்றனர்.
- தனியார் பள்ளி மாணவர்கள் வழக்கம்போல் இன்று புத்தகப்பையுடன் பள்ளிக்கு சென்றனர்.
புதுச்சேரி:
புதுவை அரசு பள்ளிகளில் சி.பி.எஸ்.இ. பாடத்திட்டம் இந்த கல்வி ஆண்டு முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது.
கடந்த 2020-ம் ஆண்டு மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகம் வெளியிட்ட கல்விக்கொள்கையில் புத்தகப்பை இல்லா தினம் கடைபிடிப்பது தொடர்பாக அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதன்படி புதுவையில் கடந்த 27-ந் தேதி அனைத்து பள்ளிகளும் மாதத்தின் கடைசி வேலை நாளில் புத்தகப் பை இல்லாத தினத்தை கடைபிடிக்க வேண்டும் என்று கல்வித்துறை உத்தரவு பிறப்பித்தது.
அன்றைய தினம் பள்ளிகளில் கைவினை, வினாடி வினா, விளையாட்டு போன்றவற்றிற்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
மேலும் மாதத்தின் கடைசி நாள் விடுமுறை தினமாக இருக்கும் பட்சத்தில் முந்தைய வேலை நாளை புத்தக பையில்லா தினமாக பின்பற்ற அரசு உத்தரவிட்டிருந்தது.
இந்த நிலையில் ஜூலை மாதத்தின் கடைசி வேலை நாளான இன்று (திங்கட்கிழமை) மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து பிராந்திய அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவர்களுக்கு புத்தகப்பை இன்றி பள்ளிக்கு வருமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தனர்.
இதனால் இன்றைய தினம் மாணவர்கள் புத்தகப்பை இன்றி கைகளை வீசியபடி பள்ளிகளுக்கு சென்றனர்.
பள்ளிகளிலும் மாணவர்களுக்கு கைவினை பொருட்கள் செய்தல் விளையாட்டு, கலை நிகழ்ச்சி, வினாடி வினா, விவாத நிகழ்வு உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்பட்டது.
அரசின் கல்வித்துறை உத்தரவில் தனியார் பள்ளிகளும் புத்தகப் பையில்லா தினத்தை கடைபிடிக்கும்படி தெரிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால் பெரும்பாலான தனியார் பள்ளியில் இந்த உத்தரவை செயல்படுத்தவில்லை. இதனால் தனியார் பள்ளி மாணவர்கள் வழக்கம் போல் இன்று புத்தகப்பையுடன் பள்ளிக்கு சென்றனர். சில தனியார் பள்ளிகளில் இன்று ஏற்கனவே திட்டமிட்டபடி மாதாந்திர தேர்வுகளும் நடத்தப்பட்டது.
- புதுவையில் உள்ள அனைத்து பள்ளிகள் அனைத்து மாதத்தின் கடைசி வேலை நாளை புத்தகமில்லா தினமாக கடைபிடிக்க வேண்டும்.
- ஒரு வேளை மாதத்தின் கடைசிநாள் விடுமுறை தினமாக இருந்தால் அதற்கு முந்தைய நாள் புத்தகமில்லா தினமாக கடைபிடிக்க வேண்டும்.
புதுச்சேரி:
மாணவர்களின் மன அழுத்தம் போக்க புதுவை கல்வித்துறை பல்வேறு திட்டங்களை செயல்படுத்துகிறது.
மாணவர்களின் பாடச்சுமை, மன அழுத்தம் குறைக்க ஆண்டுக்கு 10 நாள் புத்தகமில்லா தினமாக (நோ பேக் டே) கடைபிடிக்க கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து பள்ளிகல்வித்துறை இணை இயக்குனர் பள்ளிகளுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:-
மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் 2020-ல் கொண்டுவந்த புத்தகப்பை கொள்கையின்படி ஆண்டுக்கு 10 நாள் புத்தகமில்லாத தினமாக கடைபிடிக்க அறிவுறுத்தியுள்ளது.
கலை, வினாடி-வினா, விளையாட்டு, கைவினைகளில் மாணவர்களை ஊக்கப்படுத்த அறிவுறுத்தியுள்ளது.
எனவே புதுவையில் உள்ள அனைத்து பள்ளிகள் அனைத்து மாதத்தின் கடைசி வேலை நாளை புத்தகமில்லா தினமாக கடைபிடிக்க வேண்டும். ஒரு வேளை மாதத்தின் கடைசிநாள் விடுமுறை தினமாக இருந்தால் அதற்கு முந்தைய நாள் புத்தகமில்லா தினமாக கடைபிடிக்க வேண்டும். இந்த தினத்தில் மாணவர்களை புத்தகப்பை கொண்டுவர கட்டாயப்படுத்தக்கூடாது. இதை பள்ளிகள் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
- ஒவ்வொரு மாதமும் 4-ம் சனிக்கிழமை மாணவர்கள் புத்தகம் இல்லாமல் பள்ளிக்கு வரலாம்.
- நீட் தேர்வுக்காக பயிற்சி வகுப்புகள் வல்லுநர்களை கொண்டு சிறப்பாக நடத்தப்பட வேண்டும்.
புதுச்சேரி:
புதுச்சேரி பள்ளிகளில் கைவேலை, கலை விளையாட்டுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் மாதத்தில் ஒருநாள் மாணவர்களுக்கு 'நோ பேக் டே' அறிமுகம் செய்யப்படவுள்ளது.
தெலுங்கானா கவர்னரான தமிழிசை சவுந்தரராஜன் அந்த மாநில பள்ளி மாணவர்களின் புத்தக சுமையை குறைக்கும் வகையில் 'நோ பேக் டே' என்ற பெயரில் புத்தக பை இல்லாத தினமாக மாதத்தில் ஒருநாளை அறிவித்துள்ளார்.
அதன்படி ஒவ்வொரு மாதமும் 4-ம் சனிக்கிழமை மாணவர்கள் புத்தகம் இல்லாமல் பள்ளிக்கு வரலாம்.
அதேபோல் புதுச்சேரியிலும் மாதத்தில் ஒருநாள் பள்ளி மாணவர்களுக்கும் புத்தக பை இல்லாத தினத்தை கடைபிடிக்க கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் உத்தரவிட்டுள்ளார்.
அந்நாளில் கை வேலை, கலை விளையாட்டுக்கு முக்கியத்துவம் அளிக்க அறிவுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பான ஆலோசனைக் கூட்டம் கவர்னர் மாளிகையில் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் தலைமையில் நடந்தது.
கூட்டத்தில் சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தை நடைமுறைப்படுத்துதல், ஆசிரியர்களுக்கு பயிற்சி அளித்தல், மாணவர்களுக்கு பாடப் புத்தகங்கள், சீருடை வழங்குதல், பொதுத்தேர்வு தேர்ச்சி சதவீதம் அதிகரித்தல், டிஜிட்டல் ஸ்மார்ட் வகுப்பறைகள் அமைக்கும் பணியை விரைவாக முடிக்க வேண்டும். மாணவர்களுக்கான மதிய உணவில் வாரத்தில் 2 நாட்களாவது சிறு தானிய உணவு வழங்க வேண்டும்.
நீட் தேர்வுக்காக பயிற்சி வகுப்புகள் வல்லுநர்களை கொண்டு சிறப்பாக நடத்தப்பட வேண்டும். பொதுத் தேர்வுகளில் தேர்ச்சி சதவீதம் குறைவாக இருப்பதை உடனே ஆய்வு செய்து அதனை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
படிப்பைத் தொடர முடியாமல் இடைநின்ற மாணவர்களை கண்டறிந்து, அவர்களை பள்ளிக்கு வர ஊக்கப்படுத்த வேண்டும் அரசுப் பள்ளிகளில் பொதுத்தேர்வுகளில் முதல் இடங்களை பெறும் மாணவர்களுக்கு ஊக்கத்தொகை கொடுத்து மாணவர்கள் தினம் கொண்டாடப்பட வேண்டும் ஆகியவை குறித்து ஆலோசிக்கப்பட்டது.
- கிலோ கணக்கில் மாணவர்கள் நோட்டு, புத்தகங்களை சுமந்து செல்வதால் நாளடைவில் அவர்களுக்கு பல்வேறு பாதிப்புகள் ஏற்படும் அபாயம் உள்ளது.
- இந்த கல்வியாண்டு முதல் பள்ளிகளில் மாதாந்திர ‘நோ பேக் டே’ திட்டம் அமல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
திருப்பதி:
குழந்தைகள் 5 வயது பூர்த்தியான பின்னர் பள்ளிகளில் சேர்க்கப்பட்டனர். அப்படியே பள்ளிக்கு அழைத்துச் சென்றாலும் அங்குள்ள ஆசிரியர் குழந்தைகளை தலையை சுற்றி காதை தொடுமாறு கூறுவார். அப்படி காதை தொட்ட குழந்தைகள் தான் பள்ளியில் சேர்க்கப்பட்டனர்.
ஆனால் இன்று காலம் மாறிவிட்டது. 2½ வயது ஆகிவிட்டாலே மழலையர் பள்ளிகளில் குழந்தைகள் சேர்க்கப்படுகின்றனர். அவர்களுக்கு புத்தகம் பை வீட்டு பாடம் என ஆரம்பத்திலேயே சுமைகள் அதிகரிக்கிறது.
கிலோ கணக்கில் மாணவர்கள் நோட்டு, புத்தகங்களை சுமந்து செல்வதால் நாளடைவில் அவர்களுக்கு பல்வேறு பாதிப்புகள் ஏற்படும் அபாயம் உள்ளது.
இதுதொடர்பாக பெற்றோர், பள்ளி நிர்வாகத்தினர் கவனிக்க வேண்டிய சில விஷயங்கள் குறித்து டாக்டர்கள் எச்சரிக்கை எடுத்துள்ளனர்.
பள்ளி மாணவர்களின் முதுகு எலும்பை பாதுகாப்பது பெற்றோர் மற்றும் ஆசிரியர்களின் முக்கிய கடமையாகும். மாணவர்களின் தோள் பையின் எடை அதிகரிப்பதால் கழுத்து வலி, முதுகுவலி, தோள் பட்டை வலி மற்றும் முதுகு எலும்பு வளைதல் ஆகிய உடல்நல பாதிப்புகள் உண்டாகின்றன.
தவறான தோள் பையை பயன்படுத்துவது மற்றும் தோள் பையை தவறான முறையில் தொடர்ந்து பயன்படுத்துவதால் எதிர்காலத்தில் இளம் வயதிலேயே முதுகு கூன் விழுதல், சுவாச கோளாறு, முதுகு தண்டுவட சவ்வு விலகுதல் போன்ற பிரச்சனைகள் வரும் அபாயம் உள்ளது எனக் கூறியுள்ளனர்.
பள்ளிக் குழந்தைகளின் புத்தக பை சுமையை குறைக்க தெலுங்கானா மாநில அரசு இந்த கல்வியாண்டில் புதிய திட்டம் ஒன்றை தொடங்கியுள்ளது.
தெலுங்கானாவில் மாணவர்களின் சுமையை குறைக்க வாரத்தில் ஒரு நாள் 'நோ பேக் டே' புதிய திட்டத்தை அரசு அறிவித்துள்ளது.
அதன்படி இந்த கல்வியாண்டு முதல் பள்ளிகளில் மாதாந்திர 'நோ பேக் டே' திட்டம் அமல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இதில் ஒவ்வொரு மாதமும் 4-வது சனிக்கிழமையன்று இந்த 'நோ பேக் டே' கடைபிடிக்கப்படும்.
அந்த நாட்களில் புத்தக பை கொண்டு செல்ல வேண்டாம்.
ஆண்டு முழுவதும் மொத்தம் 10 பேக் இல்லாத நாட்கள் கடைபிடிக்கப்பட உள்ளது. இதன்மூலம் மாணவர்கள் புத்தக பையை சிரமத்தோடு சுமந்து வருவது தடுக்கப்பட்டுள்ளது.
தெலுங்கானா மாநில கல்வி காலண்டர் வெளியிடப்பட்டது. அதில் ஜூன் 12, 2023 முதல் ஏப்ரல் 23, 2024 வரையிலான கல்வியாண்டில் 'நோ பேக் டே' நாளாக அறிவித்த தேதிகளை கோடிட்டு காட்டியுள்ளது.
இந்த 'நோ பேக் டே' நாளில் மாணவர்களுக்கு வாசிப்பு பயிற்சி, யோகா மற்றும் தியானம் உள்ளிட்ட சிறப்பு வகுப்புகள் நடைபெறும்.
இதுகுறித்து அந்த மாநில கல்விச் செயலாளர் கூறியதாவது:-
இந்த 'நோ பேக் டே' நாளில் பள்ளி மாணவர்களுக்கு பாடங்களை தவிர மற்ற செயல்களில் ஈடுபடுவதற்கான வாய்ப்பு உருவாகி உள்ளது.
இந்த 'நோ பேக் டே' நாள் கடைபிடிக்கப்படுவதால் யோகா, விளையாட்டு திறன் வளர்ப்பு பயிற்சி அளிக்கப்படும்.
இதன்மூலம் மாணவர்கள் கற்றல் திறன் மற்றும் பொது அறிவு வளரும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்