search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "No Spin"

    ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் கேப்டன் ஸ்டீவ் வாக் மிகவும் சுயநலவாதி என்று சுழற்பந்து ஜாம்பவான் ஷேன் வார்னே குற்றம்சாட்டியுள்ளார். #Warne #SteveWaugh
    ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் சுழற்பந்து ஜாம்பவான் ஷேன் வார்னே. இவர் புதிய புத்தகம் ஒன்றை எழுதியுள்ளார். விரைவில் வெளிவரக்கூடிய ‘No Spin’ என்ற இந்த புத்தகத்திலும் முன்னாள் கேப்டன் ஸ்டீவ் வாக்கை வசைபாடியுள்ளார். அவர் அந்த புத்தகத்தில் கூறி இருப்பது பற்றி டைம் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. அந்த புத்தகத்தில் வார்னே கூறியிருப்பதாவது:-

    ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டனான ஸ்டீவ் வாக் மிகப்பெரிய சுயநலவாதி. அவரை போன்ற சுயநலவாதி வேறு யாருமில்லை. 1999-ம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் தொடரின்போது நான் அணிக்கு துணை கேப்டனாக இருந்தேன். முதல் 3 டெஸ்ட் போட்டியில் எனது பந்துவீச்சு சுமாராக இருந்தது. இதனால் 4-வது டெஸ்டில் என்னை அணியில் இருந்து ஸ்டீவ் வாக் நீக்கினார்.

    ஆலன் பார்டர் என் மீது நம்பிக்கை வைத்து இருந்தார். ஆனால் அவர் நீக்கியது ஏமாற்றமாக இருந்தது. முக்கியமான போட்டியில் அவர் என்னை நம்பவில்லை. ஸ்டீவ் வாக்கை நான் நல்ல நண்பராக கருதியவன். நான் எப்போதுமே அவருக்கு ஆதரவாக இருந்துள்ளேன். ஆனால் அந்த இடத்தில் என்னை கைவிட்டு விட்டார். இதனால் நான் மனம் உடைந்து போனேன்.

    முதல் 3 டெஸ்ட்டில் ஸ்டீவ் வாக்கின் கேப்டன் ஷிப் மற்றும் பீல்டிங் வியூகம் குறித்து சில வீரர்கள் என்னிடம் விமர்சனம் செய்தனர். நான் அப்போதும் கூட ஸ்டீவ் வாக்குக்கு ஆதரவாகவே பதில் அளித்தேன். ஆனால் அவர் எனக்கு கைமாறு செய்யவில்லை.

    கேப்டன் கனவுடன் ஸ்டீவ் வாக் முற்றிலும் வேறு ஒரு மனிதராகி விட்டார். அவர் என்னை நீக்கியதால் அல்ல. நான் சரியாக ஆடவில்லை எனில் நீக்குவது பற்றி எனக்கு கவலையில்லை. ஆனால் வெறும் ஆட்டம் மட்டுமே அங்கு வி‌ஷயமில்லை. அதையும் தாண்டி சில வி‌ஷயங்கள் இருந்தன என்பதுதான் முக்கியம்.

    வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான 4-வது டெஸ்டில் என்னை நீக்கியதால் ஸ்டீவ் வாக்கை பழி தீர்க்க நினைத்தேன்.



    1999 உலக கோப்பையை வென்ற பிறகு இலங்கை சென்றோம். காயம் அடைந்த ஸ்டீவ் வாக் 2-வது டெஸ்டில் ஆட வேண்டும் என்ற பிடிவாதத்தில் இருந்தார். நான் அப்போது பழி தீர்க்க ஆசைப்பட்டேன். அவர் ஆடக்கூடாது என்று நான் நினைத்தேன். ஆனால் ஸ்டீவ் வாக் பக்கம் பயிற்சியாளர் இருந்ததால் அவருக்கு சாதகமாகி விட்டது.

    இவ்வாறு வார்னே தனது புத்தகத்தின் ஒரு பகுதியில் தெரிவித்துள்ளார்.

    ஸ்டீவ்வாக் 1999-ல் ஆஸ்திரேலிய அணிக்கு உலக கோப்பையை பெற்றுக் கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
    ×