search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Nokia 2.1"

    ஹெச்.எம்.டி. குளோபல் நிறுவனம் தனது நோக்கியா ஸ்மார்ட்போனிற்கு ஆண்ட்ராய்டு 9.0 பை அப்டேட் வழங்க துவங்கியிருக்கிறது. #Nokia #AndroidPie



    நோக்கியா 6 ஸ்மார்ட்போனிற்கான ஆண்ட்ராய்டு 9.0 பை அப்டேட்டை சமீபத்தில் வழங்கியதை தொடர்ந்து ஹெச்.எம்.டி. குளோபல் நிறுவனம் பை அப்டேட்டை தனது நோக்கியா 2.1 ஸ்மார்ட்போனிற்கு வழங்கியிருக்கிறது.

    கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் அறிமுகமான நோக்கியா 2.1 ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ (கோ எடிஷன்) இயங்குதளத்துடன் அறிமுகமானது. அந்த வகையில் ஆண்ட்ராய்டு பை அப்டேட் பெறும் முதல் ஆண்ட்ராய்டு கோ எடிஷன் ஸ்மார்ட்போனாக நோக்கியா 2.1 இருக்கிறது.



    ஆண்ட்ராய்டு பை (கோ எடிஷன்) மாடலில் பூட் வேகம் அதிகரிப்பதோடு, வெரிஃபைடு பூட் போன்ற பாதுகாப்பு அம்சம் வழங்குகிறது. இத்துடன் கோ எடிஷன் செயலிகளில் டேட்டா பயன்பாட்டு விவரங்களை வழங்கும் டேஷ்போர்டு வழங்குகிறது. ஆண்ட்ராய்டு கோ எடிஷனின் மெசேஜஸ் ஆப் 50 சதவிகிதம் சிறியதாகவும், போன் ஆப் இம்முறை காலர் ஐ.டி. மற்றும் ஸ்பேம் டிடெக்‌ஷன் போன்ற வசதிகளை வழங்குகிறது. 

    நோக்கியா ஆண்ட்ராய்டு கோ ஸ்மார்ட்போனிற்கு ஆண்ட்ராய்டு பை அப்டேட் வழங்கப்பட்டிருக்கும் நிலையில், வரும் வாரங்களில் மேலும் சில ஸ்மார்ட்போன்களுக்கு பை அப்டேட் வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 



    நோக்கியா 2.1 சிறப்பம்சங்கள்: 

    - 5.5 இன்ச் 1280x720 பிக்சல் ஹெச்.டி. டிஸ்ப்ளே
    - 1.4 ஜிகாஹெர்ட்ஸ் குவாட் கோர் ஸ்னாப்டிராகன் 425 சிப்செட்
    - அட்ரினோ 308 GPU
    - 1 ஜிபி ரேம் 
    - 8 ஜிபி மெமரி
    - மெமரியை நீட்டிக்கும் வசதி
    - ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ (கோ எடிஷன்), ஆன்ட்ராய்டு பி அப்டேட்
    - டூயல் சிம் ஸ்லாட்
    - 8 எம்பி ஆட்டோஃபோகஸ் பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ்
    - 5 எம்பி செல்ஃபி கேமரா
    - 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
    - 4100 எம்.ஏ.ஹெச். பேட்டரி
    ×