search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Nokia 3.1"

    ஹெச்.எம்.டி. குளோபல் நிறுவனம் இந்தியாவில் நோக்கியா ஸ்மார்ட்போன் மாடல்களின் விலையை குறைத்துள்ளது. #Nokia6Plus #Smartphones

    இந்தியாவில் நோக்கியா 3.1 மற்றும் நோக்கியா 6.1 ஸ்மார்ட்போன்களின் விலையை குறைப்பதாக ஹெச்.எம்.டி. குளோபல் அறிவித்துள்ளது. புதிய அறிவிப்பின் படி நோக்கியா 3.1 விலை தற்சமயம் ரூ.8,999 ஆகவும் நோக்கியா 6.1 ஸ்மார்ட்போனின் விலை ரூ.11,999 என மாறியுள்ளது.

    முன்னதாக ஹெச்.எம்.டி. குளோபல் தனது நோக்கியா 5.1 பிளஸ் மற்றும் நோக்கியா 6.1 பிளஸ் ஸ்மார்ட்போன்களின் விலையை குறைத்தது. இந்தியாவில் நோக்கியா 3.1 ஸ்மார்ட்போன் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதத்தில் ரூ.11,999 விலையில் அறிமுகமானது. இந்த ஸ்மார்ட்போன் 3 ஜி.பி. ரேம், 32 ஜி.பி. மெமரியுடன் கிடைக்கிறது.

    நோக்கியா 3.1 ஸ்மார்ட்போன் 5.2 இன்ச் ஹெச்.டி. பிளஸ் 720x1440 பிக்சல் டிஸ்ப்ளே, ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ, ஆக்டா-கோர் மீடியாடெக் MT6750 சிப்செட், 13 எம்.பி. பிரைமரிு கேமரா, 8 எம்.பி. செல்ஃபி கேமரா மற்றும் 2900 எம்.ஏ.ஹெச். பேட்டரி கொண்டிருக்கிறது.

    நோக்கியா 6.1 ஸ்மார்ட்போனின் 3 ஜி.பி. ரேம், 32 ஜி.பி. மெமரி மாடல் ரூ.1,500 விலை குறைக்கப்பட்டு தற்சமயம் ரூ.11,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இதேபோன்று நோக்கியா 6.1 ஸ்மார்ட்போனின் 4 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி மாடல் ரூ.13,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

    கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் அறிமுகமான நோக்கியா 6.1 ஸ்மார்ட்போன் ரூ.16,999 எனும் விலையில் விற்பனை செய்யப்பட்டு பின் கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் ரூ.1,500 விலை குறைக்கப்பட்டது.

    நோக்கியா 6.1 ஸ்மார்ட்போன் 5.5 இன்ச் ஃபுல் ஹெச்.டி. 1080x1920 பிக்சல் ஐ.பி.எஸ். எல்.சி.டி. பேனல், ஆக்டா-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 630 பிராசஸர் மற்றும் ஆண்ட்ராய்டு ஓரியோ இயங்குதளம் கொண்டு இயங்குகிறது. #Nokia6Plus #Smartphones
    இந்தியாவில் சில தினங்களுக்கு முன் அறிமுகமான நோக்கியா 3.1 ஸ்மார்ட்போனின் விற்பனை துவங்கியது. புதிய நோக்கியா ஸ்மார்ட்போனுடன் வழங்கப்படும் சலுகைகளை தொடர்ந்து பார்ப்போம். #Nokia3 #smartphone
    ஹெச்.எம்.டி. குளோபல் நிறுவனத்தின் நோக்கியா 3.1, நோக்கியா 3 மாடலின் மேம்படுத்தப்பட்ட ஸ்மார்ட்போன் சில தினங்களுக்கு முன் இந்தியாவில் வெளியானது. மே மாதம் ரஷ்யாவில் நடைபெற்ற விழாவில் இந்த ஆன்ட்ராய்டு ஒன் ஸ்மார்ட்போன் அறிமுகமானது. இந்நிலையில் புதிய நோக்கியா ஸ்மார்ட்போனின் விற்பனை இந்தியாவில் துவங்கியது.

    நோக்கியா 3.1 ஸ்மார்ட்போனில் 5.2 இன்ச் ஹெச்.டி. பிளஸ் 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே, மீடியாடெக் MT6750 சிப்செட், 2 ஜிபி ரேம், ஆன்ட்ராய்டு 8.0 ஓரியோ இயங்குதளம், எதிர்காலத்தில் ஆன்ட்ராய்டு பி அப்டேட் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. புகைப்படங்களை எடுக்க 13 எம்பி பிரைமரி கேமரா, 8 எம்பி செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது.

    பின்புறம் பாலிகார்போனேட் மற்றும் பக்கவாட்டுகளில் அலுமினியம் மூலம் உருவாக்கப்பட்டு இருக்கும் நோக்கியா 3.1 டூயல் டைமண்ட் கட் வடிவமைப்பு கொண்டிருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் 2900 எம்.ஏ.ஹெச். பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது.

    நோக்கியா 3.1 ஸ்மார்ட்போனுடன் வழங்கப்படும் அறிமுக சலுகைகள்:

    - நோக்கியா 3.1 ஸ்மார்ட்போனினை ஆஃப்லைனில் வாங்குவோர் பேடிஎம் மால் கியூ.ஆர். கோட் ஸ்கேன் செய்தால் ரீசார்ஜ் மற்றும் பேடிஎம் பேமென்ட்களில் 10% கேஷ்பேக் பெற முடியும்.

    - நோக்கியா 3.1 வாங்குவோருக்கு கூடுதலாக ரூ.250 திரைப்பட கேஷ்பேக் வவுச்சர்கள் வழங்கப்படுகிறது. பேடிஎம் மூலம் குறைந்த பட்சம் இரண்டு டிக்கெட்களை வாங்கும்போது இதனை பயன்படுத்தி கொள்ளலாம்.

    - தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை கொண்டு பணம் செலுத்தும் போது 5% கேஷ்பேக் வழங்கப்படுகிறது.

    - ஐடியா மற்றும் வோடபோன் பயனர்களுக்கு இரண்டு சலுகைகள் வழங்கப்படுகின்றன. அதன்படி ரூ.149-க்கு ரீசார்ஜ் செய்வோருக்கு தினமும் 1 ஜிபி டேட்டா, அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், தினமும் 100 எஸ்.எம்.எஸ். உள்ளிட்டவை 28 நாட்களுக்கு வழங்கப்படுகிறது.

    கூடுதலாக 2ஜி/3ஜி போன் பயன்படுத்துவோர் புதிய நோக்கியா 3.1 ஸ்மார்ட்போனுக்கு மாறும் போது கூடுதலாக தினமும் 1 ஜிபி டேட்டா 28 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. இதேபோன்று ரூ.595 ரீசார்ஜ் செய்யும் போது 6 மாதங்களுக்கு 8 ஜிபி டேட்டா, தினமும் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், தினமும் 100 எஸ்.எம்.எஸ். உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.

    நோக்கியா 3.1 சிறப்பம்சங்கள்

    - 5.2 இன்ச் 720x1440 பிக்சல் ஹெச்.டி.+ 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
    - ஆக்டாகோர் மீடியாடெக் MT6750N சிப்செட்
    - மாலி T860 GPU
    - 2 ஜிபி ரேம்
    - 16 ஜிபி மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - ஆன்ட்ராய்டு 8.0 ஓரியோ
    - டூயல் சிம் ஸ்லாட்
    - 13 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ், f/2.0
    - 8 எம்பி செல்ஃபி கேமரா, f/2.0
    - 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
    - 2990 எம்.ஏ.ஹெச். பேட்டரி

    நோக்கியா 3.1 ஸ்மார்ட்போன் புளு/காப்பர், பிளாக்/க்ரோம் மற்றும் வெள்ளை/ஐயன் நிறங்களை கொண்டிருக்கிறது. இந்தியாவில் நோக்கியா அதிகாரப்பூர்வ இணையதளம், பேடிஎம் மால் வலைதளம் மற்றும் ஆஃப்லைனில் விற்பனை செய்யப்படுகிறது. இந்தியாவில் நோக்கியா 3.1 ஸ்மார்ட்போன் விலை ரூ.10,499 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. #Nokia3 #smartphone
    ஹெச்.எம்.டி. குளோபல் நிறுவனத்தின் புதிய நோக்கியா ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. புதிய ஸ்மார்ட்போனின் விலை மற்றும் அசம்ங்களை பார்ப்போம். #Nokia3 #smartphone

    ஹெச்.எம்.டி. குளோபல் நிறுவனத்தின் நோக்கியா 3.1, நோக்கியா 3 மாடலின் மேம்படுத்தப்பட்ட ஸ்மார்ட்போன் இந்தியாவில் வெளியிடப்பட்டுள்ளது. மே மாதம் ரஷ்யாவில் நடைபெற்ற விழாவில் இந்த ஆன்ட்ராய்டு ஒன் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், தற்சமயம் இந்தியாவில் அறிமுகமாகியுள்ளது.

    நோக்கியா 3.1 ஸ்மார்ட்போனில் 5.2 இன்ச் ஹெச்.டி. பிளஸ் 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே, மீடியாடெக் MT6750 சிப்செட், 2 ஜிபி ரேம், ஆன்ட்ராய்டு 8.0 ஓரியோ இயங்குதளம், எதிர்காலத்தில் ஆன்ட்ராய்டு பி அப்டேட் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. புகைப்படங்களை எடுக்க 13 எம்பி பிரைமரி கேமரா, 8 எம்பி செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது.

    பின்புறம் பாலிகார்போனேட் மற்றும் பக்கவாட்டுகளில் அலுமினியம் மூலம் உருவாக்கப்பட்டு இருக்கும் நோக்கியா 3.1 டூயல் டைமண்ட் கட் வடிவமைப்பு கொண்டிருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் 2900 எம்.ஏ.ஹெச். பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது.

    நோக்கியா 3.1 சிறப்பம்சங்கள்

    - 5.2 இன்ச் 720x1440 பிக்சல் ஹெச்.டி.+ 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
    - ஆக்டாகோர் மீடியாடெக் MT6750N சிப்செட்
    - மாலி T860 GPU
    - 2 ஜிபி ரேம்
    - 16 ஜிபி மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - ஆன்ட்ராய்டு 8.0 ஓரியோ
    - டூயல் சிம் ஸ்லாட்
    - 13 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ், f/2.0
    - 8 எம்பி செல்ஃபி கேமரா, f/2.0
    - 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
    - 2990 எம்.ஏ.ஹெச். பேட்டரி

    நோக்கியா 3.1 ஸ்மார்ட்போன் புளு/காப்பர், பிளாக்/க்ரோம் மற்றும் வெள்ளை/ஐயன் நிறங்களை கொண்டிருக்கிறது. இந்தியாவில் நோக்கியா அதிகாரப்பூர்வ இணையதளம், பேடிஎம் மால் வலைதளம் மற்றும் ஆஃப்லைனில் விற்பனை செய்யப்படுகிறது. இந்தியாவில் நோக்கியா 3.1 ஸ்மார்ட்போன் விலை ரூ.10,499 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 

    அறிமுக சலுகைகள்:

    - நோக்கியா 3.1 ஸ்மார்ட்போனினை ஆஃப்லைனில் வாங்குவோர் பேடிஎம் மால் கியூ.ஆர். கோட் ஸ்கேன் செய்தால் ரீசார்ஜ் மற்றும் பேடிஎம் பேமென்ட்களில் 10% கேஷ்பேக் பெற முடியும்.

    - நோக்கியா 3.1 வாங்குவோருக்கு கூடுதலாக ரூ.250 திரைப்பட கேஷ்பேக் வவுச்சர்கள் வழங்கப்படுகிறது. பேடிஎம் மூலம் குறைந்த பட்சம் இரண்டு டிக்கெட்களை வாங்கும்போது இதனை பயன்படுத்தி கொள்ளலாம்.

    - தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை கொண்டு பணம் செலுத்தும் போது 5% கேஷ்பேக் வழங்கப்படுகிறது.

    - ஐடியா மற்றும் வோடபோன் பயனர்களுக்கு இரண்டு சலுகைகள் வழங்கப்படுகின்றன. அதன்படி ரூ.149-க்கு ரீசார்ஜ் செய்வோருக்கு தினமும் 1 ஜிபி டேட்டா, அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், தினமும் 100 எஸ்.எம்.எஸ். உள்ளிட்டவை 28 நாட்களுக்கு வழங்கப்படுகிறது.

    கூடுதலாக 2ஜி/3ஜி போன் பயன்படுத்துவோர் புதிய நோக்கியா 3.1 ஸ்மார்ட்போனுக்கு மாறும் போது கூடுதலாக தினமும் 1 ஜிபி டேட்டா 28 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. இதேபோன்று ரூ.595 ரீசார்ஜ் செய்யும் போது 6 மாதங்களுக்கு 8 ஜிபி டேட்டா, தினமும் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், தினமும் 100 எஸ்.எம்.எஸ். உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. #Nokia3 #smartphone
    ×