என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » nokia 32
நீங்கள் தேடியது "Nokia 3.2"
ஹெச்.எம்.டி. குளோபல் நிறுவனம் இந்தியாவில் புதிய நோக்கியா ஸ்மார்ட்போனினை பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்துள்ளது.
ஹெச்.எம்.டி. குளோபல் நிறுவனம் நோக்கியா 4.2 ஸ்மார்ட்போனை தொடர்ந்து நோக்கியா 3.2 மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. முன்னதாக இந்த ஸ்மார்ட்போன் சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழாவில் அறிமுகம் செய்யப்பட்டது.
புதிய நோக்கியா 3.2 ஸ்மார்ட்போனில் 6.26 இன்ச் ஹெச்.டி. பிளஸ் a-Si TFT எல்.சி.டி. ஸ்கிரீன், குவால்காம் ஸ்னாப்டிராகன் 429 சிப்செட், 3 ஜி.பி. ரேம், ஆண்ட்ராய்டு 9.0 பை இயங்குதளம், 13 எம்.பி. பிரைமரி கேமரா, 5 எம்.பி. செல்ஃபி கேமரா மற்றும் ஃபேஸ் அன்லாக் வசதி வழங்கப்படுகிறது.
இத்துடன் இந்த ஸ்மார்ட்போனில் நோட்டிஃபிகேஷன் லைட் கீ மற்றும் பிரத்யேக கூகுள் அசிஸ்டண்ட் பட்டன் வழங்கப்பட்டுள்ளது. இதன் 3 ஜி.பி. ரேம் மாடலின் பின்புறம் கைரேகை சென்சார் வழங்கப்பட்டுள்ள நிலையில், டூயல் சிம் ஸ்லாட், மைக்ரோ எஸ்.டி. கார்டு ஸ்லாட் மற்றும் 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.
நோக்கியா 3.2 சிறப்பம்சங்கள்:
- 6.26 இன்ச் 720x1520 பிக்சல் ஹெச்.டி. பிளஸ் TFT LCD ஸ்கிரீன், செல்ஃபி நாட்ச்
- குவால்காம் ஸ்னாப்டிராகன் 429 சிப்செட்
- அட்ரினோ 504 GPU
- 2 ஜி.பி. / 3 ஜி.பி. ரேம்
- 16 ஜி.பி. / 32 ஜி.பி. மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- 13 எம்.பி. பிரைமரி கேமரா, F2.2/1.12µm பிக்சல்
- 5 எம்.பி. செல்ஃபி கேமரா, F2.2/1.12µm பிக்சல்
- பிரத்யேக கூகுள் அசிஸ்டண்ட் பட்டன்
- 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி
- வோ-வைபை, ப்ளூடூத் 4.2, வைபை
- ஆண்ட்ராய்டு 9 பை
- மைக்ரோ யு.எஸ்.பி.
- ஃபேஸ் அன்லாக்
- கைரேகை சென்சார் (32 ஜி.பி. மெமரி மாடலில் மட்டும்)
நோக்கியா 3.2 ஸ்மார்ட்போன் பிளாக் மற்றும் ஸ்டீல் என இரண்டு நிறங்களில் கிடைக்கிறது. இதன் 2 ஜி.பி. ரேம் வெர்ஷன் விலை ரூ.8,990 என்றும் 3 ஜி.பி. ரேம் வெர்ஷனின் விலை ரூ.10,790 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன் விற்பனை மே 23 ஆம் தேதி துவங்குகிறது.
அறிமுக சலுகைகள்:
- நோக்கியா அதிகாரப்பூர்வ வலைதளத்தில் நோக்கியா 3.2 ஸ்மார்ட்போனை வாங்குவோர் “LAUNCHGIFT” எனும் குறியீட்டை பயன்படுத்தும் போது ரூ.1000 கிஃப்ட் கார்டு பெறலாம். இச்சலுகை ஜூன் 30 ஆம் தேதி வரை வழங்கப்படுகிறது.
- ஸ்மார்ட்போன் வாங்கியதில் இருந்து முதல் ஆறு மாதங்களுக்கு ஸ்கிரீனை ஒரு முறை மட்டும் இலவசமாக சரி செய்து கொள்ளும் வசதி வழங்கப்படுகிறது. இச்சலுகையும் ஜூன் 30 ஆம் தேதி வரை வழங்கப்படுகிறது.
- வோடபோன் ஐடியா சந்தாதாரர்களுக்கு ரூ.2,500 மதிப்புள்ள உடனடி கேஷ்பேக் வழங்கப்படுகிறது. இந்த வவுச்சர்களை ரூ.199 மற்றும் அதற்கும் அதிக சலுகைகளை தேர்வு செய்யும் போது பெற்றிட முடியும்.
- இத்துடன் நோக்கியா 3.2 ஸ்மார்ட்போன் வாங்குவோர் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தும் போது 10 சதவிகித கேஷ்பேக் வழங்கப்படுகிறது. இச்சலுகை மே 23 ஆம் தேதி துவங்கி ஜூன் 15 ஆம் தேதி வரை வழங்கப்படுகிறது.
ஹெச்.எம்.டி. குளோபல் நிறுவனத்தின் இரண்டு புதிய நோக்கியா ஸ்மார்ட்போன்கள் அந்நிறுவன வலைதளத்தில் பட்டியலிடப்பட்டுள்ளது. #Nokia
ஹெச்.எம்.டி. குளோபல் நிறுவனம் சர்வதேச மொபைல் காங்கிரஸ் 2019 விழாவில் அறிமுகம் செய்த நோக்கியா 4.2 மற்றும் நோக்கியா 3.2 ஸ்மார்ட்போன்கள் நோக்கியா இந்தியா வலைதளத்தில் பட்டியலிடப்பட்டுள்ளது. புதிய ஸ்மார்ட்போன்களின் சிறப்பம்சங்களும் வலைதளத்தில் இடம்பெற்றிருக்கிறது.
புதிய ஸ்மார்ட்போன்களின் விலை மற்றும் விற்பனை பற்றி இதுவரை எவ்வித தகவலும் வழங்கப்படவில்லை. முன்னதாக நோக்கியா 4.2 ஸ்மார்ட்போன் மலேசியாவில் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், தற்சமயம் நோக்கியா 3.2 ஜெர்மனியில் முன்பதிவு செய்யப்படுகிறது.
விற்பனை பற்றி இதுவரை எவ்வித தகவலும் இடம்பெறாத நிலையில், இன்னும் சில தினங்களில் ஸ்மார்ட்போனின் விற்பனை துவங்கலாம் என தெரிகிறது.
நோக்கியா 3.2 சிறப்பம்சங்கள்:
- 6.26 இன்ச் ஹெச்.டி. பிளஸ் TFT LCD ஸ்கிரீன், செல்ஃபி நாட்ச்
- குவால்காம் ஸ்னாப்டிராகன் 429 சிப்செட்
- 2 ஜி.பி. / 3 ஜி.பி. ரேம்
- 16 ஜி.பி. / 32 ஜி.பி. மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- 13 எம்.பி. பிரைமரி கேமரா, F2.2/1.12µm
- 5 எம்.பி. செல்ஃபி கேமரா, F2.2/1.12µm
- பிரத்யேக கூகுள் அசிஸ்டண்ட் பட்டன்
- 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி
- வோ-வைபை, ப்ளூடூத் 4.2, வைபை
- ஆண்ட்ராய்டு 9 பை
- மைக்ரோ யு.எஸ்.பி.
- ஃபேஸ் அன்லாக்
- கைரேகை சென்சார் (32 ஜி.பி. மெமரி மாடலில் மட்டும்)
சர்வதேச சந்தையில் நோக்கியா 3.2 ஸ்மார்ட்போன் பிளாக் மற்றும் ஸ்டீல் என இரண்டு நிறங்களில் கிடைக்கிறது. இதன் 2 ஜி.பி. ரேம் வெர்ஷன் விலை 139 டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.9,873) என்றும் 3 ஜி.பி. ரேம் வெர்ஷனின் விலை 169 டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.12,005) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
நோக்கியா 4.2 சிறப்பம்சங்கள்:
- 5.71 இன்ச் ஹெச்.டி. பிளஸ் 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
- குவால்காம் ஸ்னாப்டிராகன் 439 பிராசஸர்
- 2 ஜி.பி. / 3 ஜி.பி. ரேம்
- 16 ஜி.பி. / 32 ஜி.பி. மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- 13 எம்.பி. பிரமரி கேமரா, F2.2/1.12µm பிக்சல்
- 2 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா, F2.2/1.75µm பிக்சல் 2 பேஸ் டிடெக்ஷன் மற்றும் பிளாஷ்
- 8 எம்.பி. செல்ஃபி கேமரா, F2.0/1.12µm பிக்சல்
- 3000 எம்.ஏ.ஹெச். பேட்டரி
- கைரேகை சென்சார்
- கூகுள் அசிஸ்டண்ட் பட்டன்
- வைபை, வோல்ட்இ, ப்ளூடூத்
சர்வதேச சந்தையில் நோக்கியா 4.2 ஸ்மார்ட்போன் பிளாக் மற்றும் சிக்னேச்சர் சேண்ட் பின்க் என இருவித நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை 169 டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.12,005) முதல் துவங்குகிறது.
சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழாவில் ஹெச்.எம்.டி. குளோபல் நிறுவனம் பட்ஜெட் விலையில் மூன்று புதிய நோக்கியா மொபைல்களை அறிமுகம் செய்துள்ளது. #MWC2019 # #Nokiamobile
பார்சிலோனாவில் நடைபெற்ற சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழாவில் ஹெச்.எம்.டி. குளோபல் புதிய நோக்கியா மொபைல்களை அறிமுகம் செய்துள்ளது.
நோக்கியாவின் புதிய மொபைல்களான நோக்கியா 1 பிளஸ், நோக்கியா 3.2 மற்றும் நோக்கியா 210 மாடல்கள் பட்ஜெட் விலையில் அறிமுகமாகி இருக்கிறன.
நோக்கியா 1 பிளஸ் சிறப்பம்சங்கள்:
- 5.45 இன்ச் FWVGA+ IPS டிஸ்ப்ளே
- குவாட்கோர் மீடியாடெக் MT6739WW பிராசஸர்
- 1 ஜி.பி. ரேம்
- 8 ஜி.பி. மெமரி
- 8 எம்.பி. பிரைமரி கேமரா, ஃபிளாஷ்
- 5 எம்.பி. செல்ஃபி கேமரா
- ஆண்ட்ராய்டு 9 பை (கோ எடிஷன்)
- 2500 எம்.ஏ.ஹெச். பேட்டரி
- மைக்ரோ யு.எஸ்.பி.
நோக்கியா 1 பிளஸ் ஸ்மார்ட்போன் ரெட், புளு மற்றும் பிளாக் என மூன்று வித நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை 99 டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.7,030) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
நோக்கியா 3.2 சிறப்பம்சங்கள்:
- 6.26 இன்ச் ஹெச்.டி. பிளஸ் TFT LCD ஸ்கிரீன், செல்ஃபி நாட்ச்
- குவால்காம் ஸ்னாப்டிராகன் 429 சிப்செட்
- 2 ஜி.பி. / 3 ஜி.பி. ரேம்
- 16 ஜி.பி. / 32 ஜி.பி. மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- 13 எம்.பி. பிரைமரி கேமரா, F2.2/1.12µm
- 5 எம்.பி. செல்ஃபி கேமரா, F2.2/1.12µm
- பிரத்யேக கூகுள் அசிஸ்டண்ட் பட்டன்
- 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி
- வோ-வைபை, ப்ளூடூத் 4.2, வைபை
- ஆண்ட்ராய்டு 9 பை
- மைக்ரோ யு.எஸ்.பி.
- ஃபேஸ் அன்லாக்
- கைரேகை சென்சார் (32 ஜி.பி. மெமரி மாடலில் மட்டும்)
நோக்கியா 3.2 ஸ்மார்ட்போன் பிளாக் மற்றும் ஸ்டீல் என இரண்டு நிறங்களில் கிடைக்கிறது. இதன் 2 ஜி.பி. ரேம் வெர்ஷன் விலை 139 டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.9,873) என்றும் 3 ஜி.பி. ரேம் வெர்ஷனின் விலை 169 டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.12,005) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
நோக்கியா 210 சிறப்பம்சங்கள்:
- 2.4 இன்ச் QVGA டிஸ்ப்ளே
- மீடியாடெக் MT6260A பிராசஸர்
- வி.ஜி.ஏ. பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ்
- 16 எம்.பி. இன்டெர்னல் மெமரி
- எஃப்.எம். ரேடியோ
- எம்.பி.3 பிளேயர்
- ஃபேஸ்புக், ஸ்நேக் கேம்
- செயலிகளை டவுன்லோடு செய்ய ஆப் ஸ்டோர்
- டூயல் சிம் ஸ்லாட்
- 1020 எம்.ஏ.ஹெச். பேட்டரி
- மைக்ரோ யு.எஸ்.பி. போர்ட்
நோக்கியா 210 மொபைல் போன் சார்கோல், ரெட் மற்றும் கிரே என மூன்று வித நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை 35 டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.2,480) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
ஹெச்.எம்.டி. குளோபல் நிறுவனத்தின் புதிய நோக்கியா ஸ்மார்ட்போன் வைபை சான்று பெற்றிருக்கிறது. #Nokia #Smartphone
சர்வதேச மொபைல் காங்கிரஸ் 2019 விழாவில் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படும் நோக்கியா 3.2 ஸ்மார்ட்போனின் புதிய விவரங்கள் இணையத்தில் லீக் ஆகியுள்ளது. நோக்கியா நிறுவனம் TA-1157 என்ற மாடல் நம்பர் கொண்ட புதிய ஸ்மார்ட்போனினை உருவாக்கும் பணிகளில் சமீப காலமாக ஈடுபட்டுள்ளது.
இந்த ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள் மற்றும் மாடல் நம்பர் உள்ளிட்டவற்றை வைத்து பார்க்கும் போது நோக்கியா 3.1 மாடலின் மேம்பட்ட வெர்ஷனாக இது இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் நோக்கியா 3.2 என்று அழைக்கப்படலாம் என்றும் தெரிகிறது.
புதிய நோக்கியா ஸ்மார்ட்போன் கூகுளின் ஆண்ட்ராய்டு ஒன் திட்டத்தின் கீழ் அறிமுகமாகும் என கூறப்படுகிறது. முன்னதாக இந்த ஸ்மார்ட்போன் அமெரிக்காவின் எஃப்.சி.சி. வலைதளத்தில் இந்த ஸ்மார்ட்போன் அறிமுகமாகி இருந்தது. அதன்படி நோக்கியா 3.2 ஸ்மார்ட்போனில் டூயல் பிரைமரி கேமரா வழங்கப்படுகிறது. இத்துடன் எல்.இ.டி. ஃபிளாஷ் யூனிட் ஒன்றும் வழங்கப்படுகிறது.
புகைப்படம் நன்றி: SlashLeaks
தற்சமயம் இந்த ஸ்மார்ட்போன் வைபை அலையன்ஸ் சான்று பெற்றிருக்கிறது. இதில் ஸ்மார்ட்போனின் மேலும் சில விவரங்கள் கிடைத்திருக்கிறது. அதன்படி நோக்கியா 3.2 ஸ்மார்ட்போனில் வைபை 802.11 b/g/n மற்றும் வைபை டைரக்ட் வசதி வழங்கப்படுகிறது. இத்துடன் ஆண்ட்ராய்டு 9 பை இயங்குதளம் பிரீ-இன்ஸ்டால் செய்யப்படுகிறது.
மற்ற அம்சங்களை பொருத்தவரை நோக்கியா 3.2 ஸ்மார்ட்போனில் 2 ஜி.பி. ரேம், 16 ஜி.பி. மெமரியும், 3 ஜி.பி. ரேம், 32 ஜி.பி. மெமரி என இருவித வேரியண்ட்களில் அறிமுகமாகிறது. இத்துடன் மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதியும் வழங்கப்படலாம் என தெரிகிறது.
நோக்கியா 3.2 ஸ்மார்ட்போன் 3000 எம்.ஏ.ஹெச். பேட்டரி மூலம் சக்தியூட்டப்படலாம் என்றும் கூறப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனுடன் ஹெச்.எம்.டி. குளோபல் நோக்கியா 9 பியூர் வியூ, நோக்கியா 4.2 மற்றும் நோக்கியா 1 பிளஸ் உள்ளிட்ட ஸ்மார்ட்போன்களையும் அறிமுகம் செய்யலாம்.
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X