search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "nominate"

    காமன்வெல்த் விசாரணை தீர்ப்பாய தலைவர்-உறுப்பினர் பதவிக்கு மத்திய அரசின் நியமனத்தை ஏற்க சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி ஏ.கே.சிக்ரி மறுப்பு தெரிவித்துள்ளார். #CommonwealthTribunal #JusticeAKSikri
    புதுடெல்லி:

    லண்டனை தலைமையிடமாக கொண்டு காமன்வெல்த் விசாரணை தீர்ப்பாயம் செயல்பட்டு வருகிறது. இதன் தலைவர்-உறுப்பினர் பதவிக்கு இந்தியாவின் சார்பில் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி ஏ.கே.சிக்ரியின் பெயரை மத்திய அரசு பரிந்துரை செய்திருந்தது. கடந்த மாதம் அவரின் சம்மதத்தை கேட்ட பின்பு மத்திய அரசு இந்த சிபாரிசை மேற்கொண்டது.



    இந்த நிலையில் மத்திய அரசுக்கு அளித்த சம்மதத்தை வாபஸ் பெறுவதாக நீதிபதி ஏ.கே.சிக்ரி நேற்று தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மத்திய அரசுக்கு கடிதம் எழுதி இருப்பதாக அவருக்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்தன.

    மேலும் அந்த வட்டாரங்கள் கூறுகையில், “கடந்த மாதம் மத்திய அரசு கேட்டுக்கொண்டதால் நீதிபதி சிக்ரி தனது ஒப்புதலை தெரிவித்தார். ஆனால் ஆண்டுக்கு இரண்டு அல்லது மூன்று முறைதான் இந்த தீர்ப்பாயத்தில் பங்கேற்கவேண்டி இருக்கும் என்பதால் தற்போது நீதிபதி தனது விருப்பத்தை திரும்ப பெறுகிறார்” என்றும் தெரிவித்தன.

    நீதிபதி ஏ.கே.சிக்ரி, சுப்ரீம் கோர்ட்டின் 2-வது மூத்த நீதிபதி என்பதும், வருகிற மார்ச் மாதம் 6-ந் தேதி அவர் பதவியில் இருந்து ஓய்வு பெறுகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. #CommonwealthTribunal #JusticeAKSikri 
    அமெரிக்காவின் அணுசக்தி பிரிவு தலைவர் பதவிக்கு இந்திய வம்சாவளியை சேர்ந்த பெண் அதிகாரி ரீட்டா பரன்வாலை டிரம்ப் பரிந்துரைத்துள்ளார். #DonaldTrump #RitaBaranwal #NuclearEnergyOffice
    வாஷிங்டன்:

    அமெரிக்காவின் அதிநவீன அணு உலைகளின் மேம்பாட்டுக்கான புதிய சட்டம் ஒன்றில் ஜனாதிபதி டிரம்ப், கடந்த வாரம் கையெழுத்து போட்டார். இதன் தொடர்ச்சியாக அமெரிக்காவின் எரிசக்தி துறையின் கீழ் உள்ள அணுசக்தி பிரிவுக்கு புதிய தலைவர் தேர்வு நடக்கிறது.

    இந்த பதவிக்கு இந்திய வம்சாவளியை சேர்ந்த பெண் அதிகாரி ரீட்டா பரன்வாலை டிரம்ப் பரிந்துரைத்துள்ளார். இவரை செனட் உறுப்பினர்கள் ஓட்டுப்போட்டு தேர்வு செய்வார்கள்.



    இதில் அவரது நியமனம் உறுதியானால், அமெரிக்காவின் அணுசக்தி தொழில்நுட்ப ஆய்வு, மேம்பாடு மற்றும் நிர்வாகத்துக்கு ரீட்டாவே பொறுப்பாவார் என வெள்ளை மாளிகை செய்தி வெளியிட்டு உள்ளது. இவர் தற்போது அமெரிக்க அணுசக்தி துறையில் விரைவான கண்டுபிடிப்புக்கான திட்டத்தின் இயக்குனராக பணியாற்றி வருகிறார்.

    அமெரிக்காவின் எம்.ஐ.டி.யில் பி.ஏ. பட்டம் பெற்ற இவர் மிக்சிகன் பல்கலைக்கழகத்தில் பி.எச்.டி. பட்டமும் பெற்று உள்ளார். பின்னர் நாட்டின் அணுசக்தி துறையின் பல்வேறு பிரிவுகளில் பணியாற்றி இருப்பது குறிப்பிடத்தக்கது. #DonaldTrump #RitaBaranwal #NuclearEnergyOffice
    இந்தியாவுக்கான புதிய தூதராக டாக்டர் ரோன் மால்காவை நியமித்து இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு உத்தரவிட்டுள்ளார். #BenjaminNetanyahu #RonMalka
    ஜெருசலேம்:

    இந்தியாவுக்கான இஸ்ரேல் தூதராக பணியாற்றியவர் டேனியல் கார்மன். இவரது பதவிக்காலம் ஆகஸ்டு மாதத்துடன் நிறைவடைந்தது. இதையடுத்து, புதிய தூதரை நியமிக்கும் பணிகளில் பிரதமர் நேதன்யாகு ஈடுபட்டு வந்தார்.

    அதன்படி, சட்ட கல்லூரியின் மூத்த பேராசிரியரும், வங்கி துறையில் பணியாற்றி அனுபவம்  வாய்ந்தவருமான டாக்டர் ரோன் மால்கா என்பவரை இந்தியாவுக்கான தூதராக நியமனம் செய்து உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக இந்திய அரசின் ஒப்புதலுக்கு காத்திருக்கிறோம் என அதிகாரிகள் தெரிவித்தனர். #BenjaminNetanyahu #RonMalka
    மும்பை ஐகோர்ட் நீதிபதியாக இருந்த தஹில் ரமணியை சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதியாக கொலிஜியம் பரிந்துரை செய்துள்ளது. #Collegium #TahilRamani #IndiraBanerjee #ChennaiHighCourt
    புதுடெல்லி:

    சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையில் நீதிபதிகளை தேர்ந்தெடுக்கும் கொலிஜியம் செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பு தான் சுப்ரீம் கோர்ட்டுக்கான நீதிபதிகளை மத்திய அரசுக்கு பரிந்துரைத்து வருகிறது.

    இதற்கிடையே, சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதியாக உள்ள இந்திரா பானர்ஜியை சுப்ரீம் கோர்ட் நீதிபதியாக நியமிக்க கொலிஜியம் இன்று பரிந்துரை செய்துள்ளது. தனது பரிந்துரையை கொலிஜியம் மத்திய அரசுக்கு அனுப்பியுள்ளது. 

    இதேபோல், குஜராத் ஐகோர்ட் நீதிபதியாக உள்ள எம் ஆர் ஷா பாட்னா ஐகோர்ட் நீதிபதியாக நியமனம் செய்யவும் பரிந்துரைத்துள்ளது.

    கவுகாத்தி ஐகோர்ட் நீதிபதியாக உள்ள ரிஷிகேஷ் ராய், கேரள ஐகோர்ட் தலைமை நீதிபதியாக (பொறுப்பு) நியமனம் செய்யவும் கொலிஜியம் பரிந்துரைத்துள்ளது. 

    மேலும், உத்தரகாண்ட் மாநில தலைமை நீதிபதியாக உள்ள கே.எம்.ஜோசப் பெயரையும் இரண்டாவது முறையாக கொலிஜியம் பரிந்துரைத்துள்ளது. ஏற்கனவே, கே.எம்.ஜோசப் பரிந்துரையை மத்திய அரசு நிராகரித்தது குறிப்பிடத்தக்கது.

    இந்நிலையில், சென்னை ஐகோர்ட்டுக்கு புதிய தலைமை நீதிபதியாக தஹில் ரமணியை நியமிக்கலாம் என கொலிஜியம் பரிந்துரை செய்துள்ளது.

    தஹில் ரமணி மும்பை ஐகோர்ட்டில் இருந்து பதவி உயர்வுடன் சென்னைக்கு மாற்றப்படலாம். தற்போதைய தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி பதவி உயர்வு பெற்று சுப்ரீம் கோர்ட்டுக்கு செல்வதை தொடர்ந்து இவரை கொலிஜியம் பரிந்துரை செய்துள்ளது. #Collegium #Tahilramani #ChennaiHighCourt #IndiraBanerjee
    சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதியாக உள்ள இந்திரா பானர்ஜியை சுப்ரீம் கோர்ட் நீதிபதியாக நியமிக்க கொலிஜியம் இன்று பரிந்துரை செய்துள்ளது. #Collegium #IndiraBanerjee #KMJoseph
    புதுடெல்லி:

    சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையில் நீதிபதிகளை தேர்ந்தெடுக்கும் கொலிஜியம் செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பு தான் சுப்ரீம் கோர்ட்டுக்கான நீதிபதிகளை மத்திய அரசுக்கு பரிந்துரைத்து வருகிறது.

    இந்நிலையில், சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதியாக உள்ள இந்திரா பானர்ஜியை சுப்ரீம் கோர்ட் நீதிபதியாக நியமிக்க கொலிஜியம் இன்று பரிந்துரை செய்துள்ளது. தனது பரிந்துரையை கொலிஜியம் மத்திய அரசுக்கு அனுப்பியுள்ளது. 

    மேலும், உத்தரகாண்ட் மாநில தலைமை நீதிபதியாக உள்ள கே.எம்.ஜோசப் பெயரையும் இரண்டாவது முறையாக கொலிஜியம் பரிந்துரைத்துள்ளது.

    ஏற்கனவே, கே.எம்.ஜோசப் பரிந்துரையை மத்திய அரசு நிராகரித்தது குறிப்பிடத்தக்கது. #Collegium #IndiraBanerjee #KMJoseph
    ×