search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "non-vegetarian feast"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பாஜக எம்.பி. வினோத் பிந்த் அலுவலகத்தில் நவம்பர் 14 இரவு அசைவ விருந்து அளிக்கப்பட்டது.
    • இந்த விருந்தில் 250க்கும் மேற்பட்ட மக்கள் கலந்துகொண்டு உணவருந்தினர்.

    உத்தரபிரதேச மாநிலம் மிர்சாபூர் மாவட்டத்தில் உள்ள பாஜகவின் பதோஹி தொகுதி எம்.பி. வினோத் பிந்த் அலுவலகத்தில் நவம்பர் 14 இரவு அசைவ விருந்து அளிக்கப்பட்டது. இந்த விருந்தில் 250க்கும் மேற்பட்ட மக்கள் கலந்துகொண்டு உணவருந்தினர்.

    அப்போது மட்டன் குழம்பில் ஆட்டுக்கறி இல்லாததால் கோவமான இளைஞர் ஒருவர் உணவு பரிமாறிய நபரிடம் இது தொடர்பாக வாக்குவாதம் செய்துள்ளார். பின்னர் வாக்குவாதம் கைகலப்பாகி இரண்டு தரப்பினர் சண்டையிட்டு கொண்டனர்.

    இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலான நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • திருவிழா 3 நாட்கள் நடைபெறுவது வழக்கம்.
    • திருப்பலியும், பக்தர்கள் காணிக்கை வழங்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல்-பழனி சாலையில் முத்தழகுபட்டியில் பழமையான புனித செபஸ்தியார் கோவில் உள்ளது. இங்கு ஒவ்வொரு ஆண்டும் திருவிழா 3 நாட்கள் நடைபெறுவது வழக்கம்.

    அதன்படி இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதற்காக செபஸ்தியார் உருவம் பொறித்த கொடி முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு 60 அடி கொடி கம்பத்தில் ஏற்றப்பட்டது.

    அப்போது சமாதானத்தை வலியுறுத்தும் வகையில் புறாக்களும் பறக்க விடப்பட்டது. இதனைத் தொடர்ந்து ஆடம்பர கூட்டுத் திருப்பலியும் பக்தர்கள் காணிக்கை வழங்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

    இந்த கோவிலில் திருவிழாவுக்கு பல்வேறு ஊர்களைச் சேர்ந்த பொதுமக்கள் வந்திருந்து காணிக்கை வழங்குவது வழக்கம்.

    செபஸ்தியாரிடம் ஏதாவது ஒரு வேண்டுகோள் வைத்து அது நிறைவேறியவுடன் காணிக்கையாக ஆடு, கோழி, சேவல், அரிசிமூடை, காய்கறிகள் உள்ளிட்ட பொருட்களை தங்களால் இயன்ற அளவுக்கு வழங்குவார்கள். அவ்வாறு பக்தர்கள் காணிக்கையாக வழங்கிய பொருட்களைக் கொண்டே உணவு தயாரித்து அதனை பொதுமக்களுக்கு வழங்குவது வழக்கம்.

    அதன்படி இந்த ஆண்டு 150க்கும் மேற்பட்ட ஆடுகளும், 1000க்கும் மேற்பட்ட கோழி மற்றும் சேவல்களும் காணிக்கையாக வழங்கப்பட்டது. இன்று காலை முதல் ஆடுகள், கோழிகள், சேவல்களை உரித்து சுத்தம் செய்யும் பணியில் உள்ளூர் இளைஞர்கள் ஈடுபட்டனர்.

    சுத்தம் செய்யப்பட்ட இறைச்சியை பிரம்மாண்ட அண்டாக்களில் சமைத்து செபஸ்தியாருக்கு படையல் போடப்படும். அதன்பிறகு இன்று மதியம் முதல் நள்ளிரவு வரை பக்தர்களுக்கு அசைவ உணவு அன்னதானமாக வழங்கப்படும்.

    இன்று காலை முதல் உணவு தயாரிக்கும் பணியில் நூற்றுக்கணக்கான ஆண்களும், பெண்களும் கலந்து கொண்டனர். வருடம் முழுவதும் நடைபெறும் இந்த வினோத திருவிழாவை காண பல்வேறு ஊர்களில் இருந்தும் பக்தர்கள் வருகை தருவது வழக்கம். அதன்படி இன்று நடக்கும் அன்னதான விருந்தில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    இது குறித்து விழாக்குழுவினர் தெரிவிக்கையில், ஜாதி மத பேதமின்றி சமூக ஒற்றுமையை எடுத்துக் காட்டும் வகையில் புனித செபஸ்தியார் கோவில் திருவிழா 350-வது ஆண்டாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த திருத்தலத்தில் என்ன வேண்டுதல் வைத்தாலும் அதனை செபஸ்தியார் நிறைவேற்றி தருவார் என்று பக்தர்கள் நம்புகின்றனர்.

    தங்கள் வேண்டுதலை நிறைவேற்றிய செபஸ்தியாருக்கு பக்தர்கள் வழங்கும் காணிக்கை பொருட்களைக் கொண்டே அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது என்றனர்.

    • தி.மு.க. இளைஞரணியின் இருசக்கர வாகன பேரணி நடந்தது.
    • இதில் பரமக்குடிக்கு வருகை தந்த இளைஞர்களுக்கு முருகேசன் எம்.எல்.ஏ. அசைவ விருந்து வழங்கினார்.

    பரமக்குடி

    தி.மு.க இளைஞரணியின் 2-வது மாநில மாநாடு அடுத்த மாதம் 17-ந்தேதி சேலத்தில் நடைபெற உள்ளது.

    இதைெயாட்டி இளை ஞர் அணி மாநில மா நாட்டையொட்டி இருசக்கர வாகன பேரணியை அமைச்சர் உதயநிதி ஸ்டா லின் கன்னியாகுமரியில் தொடங்கி வைத்தார்.தமிழகம் முழுவதும் இந்த இருசக்கர வாகன பேரணி செல்லும் நிலையில் நேற்று ராமநாதபுரத்திற்கு வருகை தந்தது.

    பேரணியில் 188 பேர் பங்கேற்றுள்ளனர். பரமக்குடி சட்டமன்ற தொகுதிக்கு வருகை தந்த தி.மு.க. இளைஞரணியின் இருசக்கர வாகன பேரணிக்கு முருகேசன் எம்.எல்.ஏ. தலைமையில் மலர்தூவி உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதில் பரமக்குடி நகர் மன்ற தலைவர் சேது கருணாநிதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    இருசக்கர வாகன பேரணியில் வந்தவர்களுக்கு பரமக்குடி எம்.எல்.ஏ. முருகேசன் ஏற்பாட்டில் தனியார் கல்யாண மண்டபத்தில் அசைவ விருந்து வழங்கப்பட்டது.

    ஆட்டுக்கறி குழம்பு, நாட்டுக்கோழி கிரேவி, வஞ்சரம் மீன் வறுவல், சிக்கன், மீன் குழம்பு என விருந்து அளிக்கப்பட்டது. இருசக்கர வாகன பேரணியில் கலந்து கொண்டவர்களுக்கு பரமக்குடி எம்.எல்.ஏ. முருகேசன் உணவு பரிமாறினர்.

    ×