என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "noth korea"

    வடகொரியா அதிபருடன் பேச்சுவார்த்தை நடத்த ஒப்புக்கொண்டுள்ள டொனால்ட் டிரம்ப் இதுதொடர்பாக அமெரிக்க வெளியுறவுத்துறை அதிகாரிகளை வடகொரியாவுக்கு அனுப்பியுள்ளார். #USdelegationinNKorea #TrumpKimsummit
    வாஷிங்டன்:

    அணு ஆயுத விவகாரம் தொடர்பாக அமெரிக்காவுக்கும், வடகொரியாவுக்கும் இடையே பயங்கர மோதல் வெடித்தது. இதனால் அண்மைக்காலமாக வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன் அமெரிக்காவுடன் சமரச போக்கை மேற்கொண்டு வருகிறார். அமெரிக்க ஜனாதிபதி டிரம்பை சந்தித்து பேசுவதற்கும் தயார் என்று அறிவித்தார். இதனால் இருவரும் சிங்கப்பூரில் அடுத்த மாதம்(ஜூன்) 12-ந் தேதி சந்தித்து பேச முடிவு செய்யப்பட்டது.

    இதற்கு முதலில் ஒப்புக்கொண்ட டிரம்ப் பின்பு மறுத்தார். இதற்கிடையே தனது நாட்டின் அணு ஆயுத சோதனைக் கூடத்தை கிம் ஜாங் அன் முற்றிலுமாக தகர்த்ததுடன் டிரம்பை சந்தித்து பேசுவதிலும் உறுதியாக இருந்தார். இதற்காக தென்கொரிய அதிபர் மூன் ஜே இன்னுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தையும் நடத்தினார். இதற்கு பலனும் கிடைத்தது. கிம் ஜாங் அன் உடனான சந்திப்பை மீண்டும் டிரம்ப் உறுதிப்படுத்தினார். 

    இதைத்தொடர்ந்து, வடகொரியா அதிகாரிகளுடன் ஆலோசனை செய்வதற்காக அமெரிக்க அதிகாரிகளை பியாங்யாங் நகருக்கு அனுப்பி வைத்துள்ளதாக தனது டுவிட்டர் பக்கத்தில் டொனால்ட் டிரம்ப் குறிப்பிட்டுள்ளார். 

    பிரமாதமான வளங்களை கொண்ட வடகொரியா பொருளாதாரம் மற்றும் நிதியமைப்பில் ஒருநாள் உயர்ந்த நாளாக உருவாகும் என நம்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். #USdelegationinNKorea #TrumpKimsummit
    ×