search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Nozomi Okuhara"

    சீனாவில் நடைபெற்று வரும் உலக பேட்மிண்டன் பைனல்ஸில் இந்திய வீராங்கனை பிவி சிந்து சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார். #PVSindhu
    உலக பேட்மிண்டன் இறுதி சுற்று போட்டி சீனாவின் குவாங்சோவ் நகரில் நடந்து வருகிறது. பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டிக்கு இந்தியாவின் பிவி சிந்து, நொசோமி ஒகுஹாரா ஆகியோர் முன்னேறினார்கள்.

    இன்று இறுதிப் போட்டி நடைபெற்றது. இதில் பிவி சிந்து 21-19, 21-17 என ஒகுஹாராவை வீழ்த்தி முதன்முறையாக உலக பேட்மிண்டன் பைனல்ஸ் கோப்பையை கைப்பற்றினார்.
    கொரியா ஓபன் பேட்மிண்டனில் இந்தியாவின் முன்னணி வீராங்கனை சாய்னா நேவால் ஜப்பான் வீராங்கனையிடம் தோல்வியடைந்தார். #SainaNehwal
    கொரியா ஓபன் பேட்மிண்டன் தொடர் சியோல் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் இந்திய வீராங்கனை சாய்னா நேவால் காலிறுதிக்கு முன்னேறினார். காலிறுதியில் சாய்னா நேவால் ஜப்பானைச் சேர்ந்த நோசோமி ஒகுஹாராவை எதிர்கொண்டார்.

    5-ம் நிலை வீராங்கனையான சாய்னா நேவால் முதல் செட்டை 21-15 என எளிதில் கைப்பற்றினார். சாய்னாவிற்கு பதிலடி கொடுக்கும் வகையில் 3-ம் நிலை வீராங்கனையான ஒகுஹாரா 2-வது செட்டை 21-15 எனக் கைப்பற்றினார்.



    வெற்றியை தீர்மானிக்கும் 3-வது செட்டில் இருவரும் ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். இதனால் மாறிமாறி புள்ளிகள் பெற்றனர். 3-வது செட்டில் ஒரு கட்டத்தில் சாய்னா 16-10 என முன்னிலைப் பெற்றிருந்தார். அதன்பின் 20-16 என முன்னிலை பெற்றிருந்தார்.

    ஒரு புள்ளி எடுத்தால் வெற்றி பெற்று விடலாம் என சாய்னா இருந்த நிலையில், ஒகுஹாரா அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி தொடர்ச்சியாக 6 புள்ளிகள் பெற்று 22-20 என வெற்றி பெற்றார். கடும் போராட்டத்திற்குப் பிறகு சாய்னா தோல்வியடைந்து வெளியேறினார். சாய்னா இந்த தோல்வியின் மூலம் ஒகுஹாராவிற்கு எதிராக தொடர்ந்து மூன்று முறை தோல்வியை சந்தித்துள்ளார்.
    உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடரின் காலிறுதியில் ஜப்பான் வீராங்கனையை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார் பிவி சிந்து. #PVSindhu
    உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடர் சீனாவின் நான்ஜிங் நகரில் நடைபெற்று வருகிறது. பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு காலிறுதி ஒன்றில் இந்திய வீராங்கனை பிவி சிந்து ஜப்பானைச் சேர்ந்த நோசோமி ஒகுஹாராவை எதிர் கொண்டார்.

    இதில் பிவி சிந்து 21-17, 21-19 என நேர்செட் கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறினார். முதல் செட்டில் ஒகுஹாரா 4-1 என முன்னிலையில் இருந்தார். அதன்பின் 7-4 என முன்னிலைப் பெற்றார். அதன்பின் பிவி சிந்து 10-9 என முன்னிலைப் பெற்றார். அதன்பின் 21-17 என பிசி சிந்து முதல் செட்டை கைப்பற்றினார்.



    2-வது செட்டில் பிவி சிந்து 11-8 என முன்னிலைப் பெற்றார். அதன்பின் ஸ்கோர் 11-11, 15-15 என சமநிலையில் சென்றது. அதன்பின் பிவி சிந்து 19-18 என முன்னிலைப் பெற்று, 21-19 என 2-வது செட்டை கைப்பற்றினார். பிசி சிந்து அரையிறுதியில் அகேனா யமகுச்சியை எதிரகொள்கிறார்.
    பாங்காக்கில் நடைபெற்று வரும் தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன் தொடரில் இந்திய வீராங்கனை பிவி சிந்து இறுதிப் போட்டியில் தோல்வியடைந்தார். #PVSindhu
    பாங்காக்கில் நடைபெற்று வரும் தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன் தொடரில் நேற்று  நடைபெற்ற அரையிறுதி சுற்றில் இந்தோனேசியாவின் கிரிகோரியா மரிஸ்காவை வீழ்த்தி பி.வி சிந்து இறுதி போட்டிக்கு முன்னேறினார்.

    இந்நிலையில், இன்று நடைபெற்ற பெண்களுக்கான இறுதிப்போட்டியில் ஜப்பான் வீராங்கனை நோசோமி ஒகுஹாராவை எதிர்க்கொண்டார். மிகவும் கடுமையாக போராடிய பி.வி சிந்து 15-21, 18-21 என்ற செட் கணக்கில் தனது வெற்றி வாய்ப்பை ஜப்பான் வீரரிடம் பறிகொடுத்தார். #PVSindhu
    பாங்காக்கில் நடைபெற்று வரும் தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன் தொடரில் இந்திய வீராங்கனை பிவி சிந்து இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளார். #PVSindhu
    தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன் பாங்காக்கில் நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்ற பெண்களுக்கான அரையிறுதி ஒன்றில் இந்திய வீராங்கனை பிவி சிந்து இந்தோனேசியாவின் கிரிகோரியா மரிஸ்காவை எதிர்கொண்டார்.

    பிவி சிந்துவிற்கு கிரிகோரியா மரிஸ்கா முதல் செட்டில் கடும் நெருக்கடி கொடுத்தார். இருந்தாலும் சமாளித்து விளையாடிய பிவி சிந்து 23-21 எனக்கைப்பற்றினார். ஆனால் 2-வது செட்டை 16-21 என இழந்தார்.



    வெற்றியை தீர்மானிக்கும் 3-வது மற்றும் கடைசி செட்டில் பிவி சிந்து ஆக்ரோசத்துடன் விளையாடினார். முதல் இரண்டு செட்டில் ஈடுகொடுத்த கிரிகோரியா மரிஸ்காவால் 3-வது செட்டில் ஈடுகொடுக்க முடியவில்லை. இதனால் 21-9 என எளிதில் கைப்பற்றி பிவி சிந்து இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.

    இறுதிப் போட்டியில் ஜப்பான் வீராங்கனை நோசோமி ஒகுஹாராவை எதிர்கொள்கிறார்.
    ×