என் மலர்
நீங்கள் தேடியது "NPCI"
- யு.பி.ஐ. முகவரிகள் செயலிழக்கம் செய்யப்பட்டு விடும்.
- யு.பி.ஐ. சேவையை பயன்படுத்த முடியாத நிலை.
தேசிய பேமண்ட் கார்ப்பரேஷன் (NPCI) யு.பி.ஐ. மூலம் பணம் செலுத்தும் நடைமுறைகளில் புதிய விதிமுறைகளை கொண்டுவருகிறது. இந்த விதிமுறைகள் ஏப்ரல் 1ம் தேதி அமலுக்கு வரவுள்ளது. புதிய விதிமுறைகள் பயனர் அனுபவத்தை மேம்படுத்தி, யு.பி.ஐ. பரிவர்த்தனைகளை மேலும் பாதுகாக்கும் என்று கூறப்படுகிறது.
புதிய விதிமுறைகளுக்கு அனைத்து யு.பி.ஐ. உறுப்பினர் வங்கிகள், மூன்றாம் தரப்பு செயலிகள், யு.பி.ஐ. சேவை வழங்குநர்கள் கட்டாயம் பின்பற்ற வேண்டும். புதிய விதிமுறைகளின் படி நீண்ட காலம் செயலிழக்கப்பட்ட நிலையில் உள்ள மொபைல் நம்பர்களுடன் இணைக்கப்பட்டுள்ள யு.பி.ஐ. முகவரிக்கள் செயலிழக்கம் செய்யப்பட்டு விடும்.
ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்களை வங்கிகள் செயலற்றதாக கருதும் போது, பயனர்கள் தங்களது விவரங்களை புதுப்பிக்க வேண்டும். இவ்வாறு செய்ய மறுக்கும் பட்சத்தில் யு.பி.ஐ. சேவையை பயன்படுத்த முடியாத நிலை உருவாகும்.
யு.பி.ஐ. சேவைகளை பயன்படுத்தும் பயனர்கள் தங்களது பதிவு செய்யப்பட்ட மொபைல் எண் செயல்படுவதை உறுதிப்படுத்த வேண்டும். யு.பி.ஐ. முகவரியுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண் நீண்ட காலம் செயலிழந்து இருக்கும் சூழலில், அந்த முகவரி தானாக நீக்கப்பட்டு விடும். இதனால் பயனர்கள் யு.பி.ஐ. பரிவர்த்தனைகளை மேற்கொள்ள முடியாது.
யு.பி.ஐ. சேவைகள் முடக்கப்படாமல் இருக்க சரியான மொபைல் எண் அப்டேட் செய்யப்படுவது அவசியம் ஆகும். இந்தத் திட்டம் தொலைத்தொடர்பு துறை ஏற்கனவே பின்பற்றி வரும் திட்டத்தை தழுவியுள்ளது. தற்போதைய நடைமுறைப்படி நீண்ட காலம் செயலிழந்துள்ள மொபைல் எண்கள் 90 நாட்களுக்கு பிறகு புதிய பயனர்களுக்கு வழங்கப்பட்டு விடும்.
புதிய விதிமுறைகளின் படி பயனரின் வங்கியால் உறுதிப்படுத்தப்பட்ட மொபைல் நம்பர் அவரது எண் சார்ந்த யு.பி.ஐ. முகவரியாக இருக்கும். கூடுதலாக வங்கிகள் மற்றும் யு.பி.ஐ. சேவை வழங்குநர்கள் தங்களது மொபைல் எண் பதிவுகளை வாராந்திர அடிப்படையில் அப்டேட் செய்ய வேண்டும்.
பயனர் நலன்களை மேலும் பாதுகாக்க, எண் யு.பி.ஐ. முகவரிகளை ஒதுக்குவதற்கு முன் பயன்பாடுகளுக்கு வெளிப்படையான ஒப்புதல் தேவைப்படும். இதனை தானாக செயல்படுத்தும் செட்டிங் செயலற்று இருக்கும் என்பதால், பயனர்கள் தாங்களாகவே தேர்வு செய்ய வேண்டும்.
தேசிய பேமண்ட் கார்ப்பரேஷன் உறுதிப்படுத்தும் முறைகள் தாமதமாகும் பட்சத்தில், யு.பி.ஐ. செயலிகள் தற்காலிக நடைமுறைகளை பின்பற்றி யு.பி.ஐ. முகவரி சார்ந்த பிரச்சனைகளுக்கு தீர்வு காண முடியும். எனினும், இதுபோன்ற சம்வங்களை உடனடியாக ஆவணப்படுத்த வேண்டும்.
- யுபிஐ பரிவர்த்தைகளுக்கு கட்டணம் வசூலிப்பது தொடர்பாக தேசிய பேமண்ட் கார்ப்பரேஷன் விளக்கம் அளித்தது.
- தேசிய பேமண்ட் கார்ப்பரேஷன் சார்பில் 1.1 சதவீதம் வரை பரிவர்த்தனை கட்டணம் வசூலிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
பிரீபெயிட் பேமண்ட் இன்ஸ்ட்ரூமெண்ட் சார்ந்து யுபிஐ மூலம் மேற்கொள்ளப்படும் ரூ. 2 ஆயிரத்திற்கும் அதிகமான பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் வசூலிக்க தேசிய பேமண்ட் கார்ப்பரேஷன் (என்பிசிஐ) பரிந்துரை வழங்கி இருக்கிறது. இதன் மூலம் வங்கிகள் மற்றும் பேமண்ட் சேவை வழங்குவோர் அதிக வருவாய் ஈட்ட முடியும்.
அந்த வகையில் இதற்கான கட்டணம் ஏப்ரல் 1 ஆம் தேதி மூலம் வசூலிக்கப்பட இருக்கிறது. இதோடு செப்டம்பர் 30 ஆம் தேதி இந்த கட்டணங்கள் பரிசீலனை செய்யப்பட உள்ளன. இதன் முழு விவரங்களை பார்ப்போம்.
பிபிஐ எனப்படும் பிரீபெயிட் பேமண்ட் இன்ஸ்ட்ரூமெண்ட் மூலம் மேற்கொள்ளப்படும் ரூ. 2 ஆயிரத்திற்கும் அதிக பரிவர்த்தனைகளுக்கு 1.1 சதவீதம் வரை கட்டணம் செலுத்த வேண்டும். ரூ. 2 ஆயிரத்திற்கும் குறைந்த பரிவர்த்தனைகளுக்கு எவ்வித கட்டணமும் வசூலிக்கப்படாது.

இதற்கான கட்டணம் ஆன்லைன் வர்த்தக பரிவர்த்தனைகளுக்கு மட்டுமே வசூலிக்கப்படும். அதே சமயம் பயனர்களிடம் இருந்து கட்டணம் வசூலிப்பது பற்றி இறுதி முடிவை வணிகர்களே எடுக்கலாம். வழக்கமான யுபிஐ பரிவர்த்தனைகள், அதாவது ஒருவர் நேரடியாக தனது வங்கி கணக்கில் இருந்து மற்றொருவரின் வங்கி கணக்கிற்கு அனுப்பும் தொகைக்கு எவ்வித கூடுதல் கட்டணமும் வசூலிக்கப்படாது.
இந்தியாவில் யுபிஐ சார்ந்த பரிவர்த்தனைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதோடு, பிரபலமான ஒன்றாகவும் இருந்து வருகிறது. இதன் மூலம் பயனர்கள் வங்கி அக்கவுண்ட்களில் இருந்து மொபைல் போன் மூலமாகவே பணம் அனுப்ப முடியும். பிபிஐ-க்கள் என்பது பணத்தை வைத்துக் கொண்டு பரிமாற்றம் செய்ய அனுமதிக்கும் டிஜிட்டல் வாலெட்கள் ஆகும்.
பேடிஎம், போன்பெ மற்றும் கூகுள்பே உள்ளிட்டவை பிரீபெயிட் பேமண்ட் இன்ஸ்ட்ரூமெண்ட் சேவையை வழங்கி வருகின்றன. பரிவர்த்தனையை மேற்கொள்ள வங்கி சார்பில் பரிவர்த்தனை கட்டணம் வசூலிக்கப்படுகின்றன. தேசிய பேமண்ட் கார்ப்பரேஷன் வெளியிட்டு இருக்கும் புதிய அறிவிப்பின் படி, யுபிஐ பரிவர்த்தனைகளுக்கான கட்டணங்களை வசூலிக்க பிரீபெயிட் பேமண்ட் இன்ஸ்ட்ரூமெண்ட் சேவைகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளன.