என் மலர்
நீங்கள் தேடியது "Offers"
- ஹோண்டா நிறுவனம் இந்திய சந்தையில் தனது கார் மாடல்களுக்கு அசத்தல் சலுகைகளை அறிவித்துள்ளது.
- புது சலுகைகள் கார் மாடல், வேரியண்ட் மற்றும் ஒவ்வொரு பகுதிக்கும் ஏற்ப வேறுபடும் என அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
ஜப்பான் நாட்டை சேர்ந்த ஆட்டோ உற்பத்தியாளரான ஹோண்டா நவம்பர் மாதத்திற்கான சலுகை விவரங்களை அறிவித்து இருக்கிறது. கார் மாடல், வேரியண்ட் மற்றும் ஒவ்வொரு பகுதிக்கும் ஏற்ப வேறுபடும். புதிய சலுகைகள் நவம்பர் 30 ஆம் தேதி வரை பொருந்தும்.
நவம்பர் மாத சலுகைகளை பொருத்தவரை ஹோண்டா WR-V மாடலுக்கு அதிகபட்ச பலன்கள் வழங்கப்படுகிறது. அந்த வகையில் ஹோண்டா WR-V வாங்குவோர் ரூ. 63 ஆயிரத்து 144 வரையிலான பலன்களை பெறலாம். இதில் ரூ. 30 ஆயிரம் தள்ளுபடி அல்லது ரூ. 36 ஆயிரத்து 144 மதிப்புள்ள இலவச அக்சஸரீக்கள், பழைய கார் எக்சேன்ஜ் செய்யும் போது ரூ. 10 ஆயிரம் தள்ளுபடி, கூடுதலாக ரூ. 5 ஆயிரம் லாயல்டி போனஸ், ரூ. 7 ஆயிரம் எக்சேன்ஜ் போனஸ், ரூ. 5 ஆயிரம் கார்ப்பரேட் தள்ளுபடி வழங்கப்படுகிறது.

ஹோண்டா சிட்டி 5th Gen மாடலுக்கு ரூ. 59 ஆயிரத்து 292 வரையிலான பலன்கள் வழங்கப்படுகிறது. இதன் மேனுவல் டிரான்ஸ்மிஷன் மாடலுக்கு ரூ. 30 ஆயிரம் தள்ளுபடி அல்லது ரூ. 32 ஆயிரத்து 292 மதிப்புள்ள இலவச அக்ச்ஸரீக்கள் வழங்கப்படுகிறது. இத்துடன் பழைய கார் எக்சேன்ஜ் செய்யும் போது ரூ. 10 ஆயிரம் தள்ளுபடி, ரூ. 5 ஆயிரம் லாயல்டி போனஸ் வழங்கப்படுகிறது. இதுதவிர ரூ. 7 ஆயிரம் எக்சேன்ஜ் போனஸ், ரூ. 5 ஆயிரம் கார்ப்பரேட் தள்ளுபடி வழங்கப்படுகிறது.
இதன் பெட்ரோல் சிவிடி மாடலுக்கு ரூ. 20 ஆயிரம் எக்சேன்ஜ் சள்ளுபடி, ரூ. 5 ஆயிரம் லாயல்டி போனஸ், பழைய கார் எக்சேன்ஜ் செய்யும் போது ரூ. 7 ஆயிரம் தள்ளுபடி, ரூ. 5 ஆயிரம் கார்ப்பரேட் தள்ளுபடி வழங்கப்படுகிறது.
ஹோண்டா ஜாஸ் மாடலை வாங்கும் போது ரூ. 25 ஆயிரம் வரையிலான பலன்கள் வழங்கப்படுகிறது. இதில் கார் எக்சேன்ஜ் செய்யும் போது ரூ. 10 ஆயிரம் தள்ளுபடி, ரூ. 7 ஆயிரம் எக்சேன்ஜ் போனஸ், ரூ. 3 ஆயிரம் கார்ப்பரேட் தள்ளுபடி, ரூ. 5 ஆயிரம் லாயல்டி போனஸ் உள்ளிட்ட பலன்கள் வழங்கப்படுகிறது.
ஹோண்டா அமேஸ் மாடலுக்கு ரூ. 10 ஆயிரம் தள்ளுபடி அல்லது ரூ. 11 ஆயிரத்து 896 மதிப்பிலான அக்சஸரீக்கள், ரூ. 5 ஆயிரம் லாயல்டி போனஸ் மற்றும் ரூ. 3 ஆயிரம் மதிப்பிலான கார்ப்பரேட் தள்ளுபடி வழங்கப்படுகிறது. ஹோண்டா சிட்டி 4th Gen வாங்கும் போது ரூ. 5 ஆயிரம் லாயல்டி பலன்கள் மட்டும் வழங்கப்படுகிறது. இதுதவிர வேறு எந்த பலன்களும் இந்த மாடலுக்கு வழங்கப்படவில்லை.
- ஆப்பிள் நிறுவனம் செப்டம்பர் மாத வாக்கில் புதிய ஐபோன் 14 சீரிஸ் மாடல்களை அறிமுகம் செய்தது.
- இந்தியாவில் ஐபோன் 14 மாடலுக்கு அசத்தல் தள்ளுபடி வழங்கப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஆப்பிள் நிறுவனம் முற்றிலும் புதிய ஐபோன் 14 சீரிஸ் மாடல்களை செப்டம்பர் மாத வாக்கில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. புதிய ஐபோன் 14 மாடலில் ஆப்பிள் நிறுவனத்தின் ஏ15 பயோனிக் பிராசஸர் வழங்கப்பட்டு இருக்கிறது. ஃபார் அவுட் நிகழ்வில் அறிமுகம் செய்யப்பட்ட ஐபோன் 14 மாடலுக்கு ஜியோமார்ட் விற்பனை மையங்களில் அசத்தல் தள்ளுபடி வழங்கப்படுகிறது.
இந்திய சந்தையில் புதிய ஐபோன் 14 மாடலின் விலை ரூ. 79 ஆயிரத்து 900 என துவங்குகிறது. எனினும், ஜியோமார்ட் விற்பனையகத்தில் ஐபோன் 14 விலை ரூ. 77 ஆயிரத்து 900 என மாற்றப்பட்டு இருக்கிறது. இத்துடன் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகள் மற்றும் மாத தவணை முறையை பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு ரூ. 5 ஆயிரம் வரை கூடுதல் கேஷ்பேக் வழங்கப்படுகிறது.

அந்த வகையில் ஐபோன் 14 (128 ஜிபி) மாடலின் விலை ரூ. 7 ஆயிரம் வரை குறைந்துவிடும். ஆப்லைன் விற்பனை மையத்தில் இந்த சலுகை வழங்கப்படும் நிலையில், ஜியோமார்ட் ஆன்லைனில் ஐபோன் 14 (128 ஜிபி) விலை ரூ. 79 ஆயிரத்து 900 என்றே குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 14 சீரிசில்- ஐபோன் 14, ஐபோன் 14 பிளஸ், ஐபோன் 14 ப்ரோ மற்றும் ஐபோன் 14 ப்ரோ மேக்ஸ் போன்ற மாடல்களை விற்பனை செய்து வருகிறது. இதில் ஐபோன் 14 மாடல் 128 ஜிபி, 256 ஜிபி மற்றும் 512 ஜிபி போன்ற மெமரி ஆப்ஷன்களில் கிடைக்கிறது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் புளூ, பர்பில், மிட்நைட், ஸ்டார்லைட் மற்றும் ரெட் போன்ற நிறங்களில் கிடைக்கிறது.
ஐபோன் 14 (256 ஜிபி) மாடலின் விலை ரூ. 89 ஆயிரத்து 900 என்றும் 512 ஜிபி விலை ரூ. 1 லட்சத்து 09 ஆயிரத்து 900 என்றும் விலை நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. ஐபோன் 14 மாடலில் 6.1 இன்ச் சூப்பர் ரெட்டினா XDR OLED டிஸ்ப்ளே, ஆப்பிள் ஏ15 பயோனிக் பிராசஸர், அதிகபட்சம் 512 ஜிபி மெமரி, 12MP பிரைமரி கேமரா, 12MP அல்ட்ரா வைடு கேமரா, 12MP ஆட்டோபோகஸ் செல்பி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது.
- பிஎஸ்என்எல் நிறுவனம் பிராட்பேண்ட் சேவையில் புது சலுகைகளை அறிவித்து இருக்கிறது.
- புது பிஎஸ்என்எல் பைபர் பிராட்பேண்ட் சலுகையின் முதல் மாத கட்டணத்தில் 90 சதவீதம் வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது.
பிஎஸ்என்எல் நிறுவனம் ரூ. 499 விலை பிராட்பேண்ட் சலுகையை அறிவித்து இருக்கிறது. இது பழைய பெயரில் கிடைக்கும் புது சலுகை ஆகும். ரூ. 499 சலுகை பிஎஸ்என்எல் பைபர் சேவையின் பேசிக் திட்டம் ஆகும். முன்னதாக இந்த சலுகை ரூ. 449 விலையில் வழங்கப்பட்டு வந்தது. தற்போது ரூ. 449 பிஎஸ்என்எல் சலுகை அதே பலன்களுடன் வேறு பெயரில் வழங்கப்பட்டு வருகிறது.
புதிய ரூ. 499 சலுகை தற்போது பிஎஸ்என்எல் பைபர் பேசிக் என பெயர் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. பழைய ரூ. 449 சலுகை பைபர் பேசிக் நியோ என அழைக்கப்படுகிறது. இரு சலுகைகளும் வழங்கப்படும் பலன்கள் பற்றி தொடர்ந்து பார்ப்போம். ஏற்கனவே பிஎஸ்என்எல் நிறுவனம் ரூ. 499 விலையில் பிராட்பேண்ட் சலுகையை வழங்கி வந்துள்ளது. எனினும், கடந்த சில காலமாக இந்த சலுகை நீக்கப்பட்டு இருந்தது.

தற்போது பிஎஸ்என்எல் ரூ. 499 சலுகையில் 40Mbps வேகத்தில் 3.3TB வரையிலான டேட்டா மற்றும் அன்லிமிடெட் வாய்ஸ் காலிங் வசதி வழங்கப்படுகிறது. நிர்ணயிக்கப்பட்ட டேட்டா அளவு தீர்ந்ததும் டேட்டா வேகம் 4 Mbps ஆக குறைந்து விடும். இத்துடன் முதல் மாத கட்டணத்தில் 90 சதவீதம் தள்ளுபடி, அதிகபட்சம் ரூ. 500 வரை தள்ளுபடி பெறும் வசதி வழங்கப்படுகிறது.
பிஎஸ்என்எல் ரூ. 449 பைபர் பேசிக் நியோ சலுகையில் முன்பை போன்றே 30Mbps வேகத்தில் மாதம் 3.3TB டேட்டா வழங்கப்படுகிறது. இந்த டேட்டா தீர்ந்ததும் டேட்டா வேகம் 4 Mbps ஆக குறைந்து விடும். இரு சலுகைகள் தவிர பிஎஸ்என்எல் நிறுவனம் ரூ. 775 மற்றும் ரூ. 275 போன்ற சலுகைகளை விரைவில் நீக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இரு சலுகைகளும் சுதந்திர தினத்தை ஒட்டி விளம்பர நோக்கில் அறிவிக்கப்பட்டவை ஆகும்.
- ஏர்டெல் நிறுவனம் இந்திய சந்தையில் சில சலுகைகளை அதிரடியாக நீக்கியது.
- நீக்கிய சலுகைகளுக்கு மாற்றாக சிலவற்றை ஏர்டெல் மாற்றியமைத்து வருகிறது.
இந்திய சந்தையில் முன்னணி டெலிகாம் நிறுவனமான பாரதி ஏர்டெல் ரூ. 199 விலை சலுகையை மீண்டும் அறிவித்து இருக்கிறது. முன்னதாக சில பிரீபெயிட் சலுகைகளை அதிரடியாக நீக்கிய ஏர்டெல் சிலவற்றின் பலன்களை மாற்றியமைத்து மீண்டும் அதே விலையில் அறிவித்து வருகிறது.
ஏற்கனவே வழங்கப்பட்டு வந்த ஏர்டெல் ரூ. 199 விலை சலுகையில் தினமும் 1ஜிபி டேட்டா, 24 நாட்கள் வேலிடிட்டி வழங்கப்பட்டது. பின் இந்த சலுகையில் தினமும் 1.5 ஜிபி டேட்டா வழங்கப்பட்டு வந்தது. தற்போது இந்த சலுகையின் வேலிடிட்டியும் 30 நாட்களாக அதிகரிக்கப்பட்டு இருக்கிறது.

ஏர்டெல் ரூ. 199 சலுகையில் தற்போது 30 நாட்கள் வேலிடிட்டி, 3 ஜிபி டேட்டா, அன்லிமிடெட் வாய்ஸ் கால், 300 எஸ்எம்எஸ் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. இத்துடன் இலவச ஹெலோ டியூன்ஸ், வின்க் மியூசிக் சந்தா, உள்ளூர் எஸ்எம்எஸ் ரூ. 1, எஸ்டிடி எஸ்எம்எஸ் ரூ. 1.5 பைசாவுக்கு வழங்கப்படுகிறது.
நிர்ணயிக்கப்பட்ட டேட்டா அளவு தீர்ந்ததும் டேட்டாவுக்கான கட்டணம் 1MB-க்கு ரூ. 50 பைசா வசூலிக்கப்படும். மொத்தத்தில் 300 எஸ்எம்எஸ் இந்த சலுகையில் வழங்கப்படுகிறது. எனினும், இது தினமும் அதிகபட்சம் 100 ஆகவே நிர்ணயம் செய்யப்பட்டு உளள்ளது. சலுகை தீர்ந்ததும், அதன் பலன்கள் தானாகவே காலாவதியாகி விடும்.
- இந்திய டெலிகாம் சந்தையில் முன்னணி நிறுவனமாக இருக்கும் ரிலையன்ஸ் ஜியோ அவ்வப்போது சலுகைகளை மாற்றி வருகிறது.
- நாட்டின் பல்வேறு நகரங்களில் 5ஜி சேவையை வழங்கும் பணிகளிலும் ரிலையன்ஸ் ஜியோ ஈடுபட்டு வருகிறது.
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் சந்தா வழங்கும் பிரீபெயிட் சலுகைகளை முழுமையாக நீக்கிவிட்டது. அக்டோபர் மாதத்தில் இருந்தே ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் சந்தா வழங்கும் ரிசார்ஜ் சலுகைகளை நீக்க துவங்கியது. இதில் முதற்கட்டமாக ரூ. 499 மற்றும் ரூ. 601 சலுகைகள் நீக்கப்பட்டன.
இதை அடுத்து இரு சலுகைகளில் மட்டுமே டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் சந்தா வழங்கப்பட்டது. இவற்றின் விலை முறையே ரூ. 1,499 மற்றும் ரூ. 4 ஆயிரத்து 199 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. தற்போது இந்த இரு சலுகைகளும் நீக்கப்பட்டுள்ளன. இதனால் இரு சலுகைகளும் ரிலையன்ஸ் ஜியோ வலைதளத்தில் காணப்படவில்லை. இவை மூன்றாம் தரப்பு ரிசார்ஜ் தளங்களிலும் பட்டியலிடப்படவிவல்லை.

அந்த வகையில், இரு சலுகைகளும் சத்தமின்றி நீக்கப்பட்டு விட்டதாகவே தெரிகிறது. முன்னதாக ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் ரூ. 399, ரூ. 419, ரூ. 499, ரூ. 583, ரூ. 601, ரூ. 783, ரூ. 799, ரூ. 1099 மற்றும் ரூ. 1199 விலை சலுகைகளை நீக்கியது. இவை அனைத்திலும் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் சந்தா வழங்கப்பட்டு இருக்கிறது.
இந்திய டெலிகாம் சந்தையில் ஜியோவுக்கு போட்டி நிறுவனங்களான ஏர்டெல் மற்றும் வி (வோடபோன் ஐடியா) தொடர்ந்து இந்த சேவைகள் அடங்கிய சலுகைகளை வழங்கும் நிலையில், ஜியோ ஏன் இந்த நடவடிக்கையை எடுத்தது என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. ஏர்டெல் மற்றும் வி நிறுவனங்கள் தற்போதும் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார், அமேசான் பிரைம் மற்றும் நெட்ஃப்ளிக்ஸ் சேவைகள் வழங்கும் ரிசார்ஜ் சலுகைகளை வழங்கி வருகின்றன.
அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் இந்தியன் பிரீமியர் லீக் 2023 (ஐபிஎல் 2023) போட்டிகளை ஒளிபரப்பும் உரிமத்தை ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழுமத்தின் அங்கமான வியாகாம் 18 கைப்பற்றி இருக்கிறது. டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் அடுத்த ஆண்டு ஐபிஎல் போட்டிகளை ஒளிபரப்ப முடியாது என்பதால், ஜியோ இந்த நடவடிக்கையை மேற்கொண்டு இருக்கலாம் என தெரிகிறது.
- 2022 உலக கோப்பை கால்பந்து போட்டிகள் கத்தார் நாட்டில் நடைபெற இருக்கிறது.
- ஜியோ நிறுவனம் உலக கோப்பை கால்பந்து தொடரை முன்னிட்டு புது சலுகைகளை அறிவித்து இருக்கிறது.
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் கால்பந்து ரசிகர்களை கவரும் வகையில் ஐந்து சர்வதேச ரோமிங் சலுகைகளை அறிவித்து இருக்கிறது. கத்தாரில் நவம்பர் 20 ஆம் தேதி துவங்க இருக்கும் உலக கோப்பை கால்பந்து தொடரை முன்னிட்டு கத்தார் பயணம் செய்ய திட்டமிடுவோருக்கு இந்த சலுகைகள் பயனுள்ளதாக இருக்கும்.
உலக கோப்பை கால்பந்து போட்டிகளை காண கத்தார், ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் சவுதி அரேபியா பயணம் செய்ய இருக்கும் கால்பந்து ரசிகர்களுக்காக இந்த ரோமிங் சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. கத்தாரில் நடைபெற இருக்கும் போட்டிகளுக்கு ஏற்ப சிறந்த சலுகைகளை வாடிக்கையாளர்கள் விரும்பும் வகையில் தேர்வு செய்து கொள்ளலாம். புதிய சர்வதேச ரோமிங் சலுகைகளை வாடிக்கையாளர்கள் மைஜியோ செயலி அல்லது ஜியோ அதிகாரப்பூர்வ வலைதளத்தில் இருந்து வாங்கிடலாம்.

புதிய சர்வதேச ரோமிங் சலுகைகளின் விலை ரூ. 1,122 என துவங்குகிறது. ஜியோ ரூ. 1122 ரோமிங் சலுகை ஐந்து நாட்கள் வேலிடிட்டி கொண்டுள்ளது. இதில் 1 ஜிபி டேட்டா கிடைக்கும். நிர்ணயிக்கப்பட்ட டேட்டா அளவு தீர்ந்ததும், டேட்டாவுக்கான கட்டணம் மாறிவிடும்.
ஜியோ ரூ. 1599 சலுகை 15 நாட்கள் வேலிடிட்டி கொண்டுள்ளது. இதில் 150 நிமிடங்களுக்கு வாய்ஸ் கால் வழங்கப்படுகிறது. இதில் உள்ளூர் அழைப்புகள், இந்தியாவுக்கான அழைப்புகள், இன்கமிங் அழைப்புகள் உள்ளிட்டவை அடங்கும். இத்துடன் 1 ஜிபி டேட்டா, 100 எஸ்எம்எஸ் வழங்கப்படுகிறது. வைபை காலிங் நிறைவு பெற்றதும், அழைப்புகளுக்கான கட்டணம் ரூ. 1 ஆக மாறிவிடும்.
ஜியோ ரூ. 3 ஆயிரத்து 999 ரோமிங் சலுகையில், 250 நிமிடங்களுக்கு உள்ளூர் அழைப்புகள், இந்தியாவுக்கான வாய்ஸ் கால், 250 நிமிடங்கள் இன்கமிங் அழைப்புகள், 3 ஜிபி டேட்டா, 100 எஸ்எம்எஸ் உள்ளிட்ட பலன்கள் வழங்கப்படுகிறது. ஜியோ ரூ. 5 ஆயிரத்து 122 சலுகையில் 5 ஜிபி டேட்டா, 21 நாட்கள் வேலிடிட்டி கொண்டுள்ளது.
ரூ. 6 ஆயிரத்து 799 ஜியோ ரோமிங் சலுகையில் 500 நிமிடங்களுக்கு உள்ளூர் அழைப்புகள், இந்தியாவுக்கான அழைப்புகள், 500 நிமிடங்களுக்கு இன்கமிங் அழைப்புகள், 5 ஜிபி டேட்டா, 100 எஸ்எம்எஸ் உள்ளிட்ட பலன்கள் வழங்கப்படுகிறது. இவற்றில் நிர்ணயிக்கப்பட்ட வைபை காலிங் நிறைவு பெற்றதும், அழைப்புக்கான கட்டணம் ரூ. 1 ஆக மாறி விடும்.
- பாரதி ஏர்டெல் நிறுவனம் இந்திய டெலிகாம் சந்தையில் 5ஜி சேவைகளை வெளியிடும் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறது.
- இது மட்டுமின்றி தனது பிரீபெயிட் சலுகை மற்றும் அதன் பலன்களையும் அவ்வப்போது மாற்றிக் கொண்டே வருகிறது.
பாரதி ஏர்டெல் நிறுவனம் தனது குறைந்த பட்ச சலுகை விலையை உயர்த்தி இருக்கிறது. 28 நாட்கள் வேலிடிட்டி கொண்ட குறைந்தபட்ச ஏர்டெல் சலுகை விலை தற்போது 57 சதவீதம் அதிகரிக்கப்பட்டு இருக்கிறது. அதன்படி புதிய விலை ரூ. 155 என மாறி இருக்கிறது. இந்த சலுகை விவரங்கள் ஏர்டெல் ஹரியானா மற்றும் ஒடிசா மாநில வலைதளங்களில் இடம்பெற்று இருக்கிறது.
மேற்படி ரூ. 99 விலையில் வழங்கி வந்த பிரீபெயிட் சலுகையை ஏர்டெல் அதிரடியாக நீக்கி இருக்கிறது. இந்த சலுகையில் பயனர்களுக்கு 200MB டேட்டா, அழைப்புகள் நொடிக்கு 2.5 பைசா கட்டணத்தில் வழங்கப்படுகிறது. தற்போது ஹரியானா மற்றும் ஒடிசாவில் ஏர்டெல் குறைந்தபட்ச ரிசார்ஜ் விலை ரூ. 155 ஆகும். இதில் 1 ஜிபி டேட்டா, 300 எஸ்எம்எஸ் போன்ற பலன்கள் வழங்கப்படுகிறது.

தற்போது சோதனை அடிப்படையில் இந்த சலுகை இரு பகுதிகளில் மட்டும் வழங்கப்படுகிறது. சோதனை முடிவுக்கு ஏற்ப இந்த சலுகை நாடு முழுக்க வழங்கப்படலாம் என தகவல் வெளியாகி உள்ளது. ரூ. 155-க்கும் குறைந்த விலையில் 28 நாட்கள் அழைப்புகள், எஸ்எம்எஸ் மற்றும் டேட்டா பலன்களை வழங்கும் அனைத்து சலுகைகளையும் நீக்க ஏர்டெல் முடிவு செய்து இருப்பதாக கூறப்படுகிறது.
புதிய மாற்றம் காரணமாக வாடிக்கையாளர்கள் தங்களின் மொபைல் எண்ணை ஆக்டிவேட் செய்த நிலையில் வைத்திருக்க ரூ. 155 விலையில் ரிசார்ஜ் செய்ய வேண்டியது அவசியம் ஆகும். மாதாந்திர சலுகையில் எஸ்எம்எஸ் சேவையை பெறவாவது ரூ. 155 விலை சலுகையை ரிசார்ஜ் செய்வது அவசியமாகி விடும்.
- ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தனது பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கு டேட்டா சலுகையை அறிவித்து இருக்கிறது.
- ஏர்டெல் வழங்கும் டேட்டா பேக் சலுகையின் விலை ரூ. 301 என நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது.
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் 2022 உலக கோப்பை கால்பந்து தொடரை ஒட்டி புது பிரீபெயிட் சலுகையை அறிவித்து இருக்கிறது. புதிய ஜியோ ரூ. 222 விலை சலுகையில் பயனர்களுக்கு கூடுதல் டேட்டா வழங்கப்படுகிறது. அந்த வகையில், இந்த சலுகையில் அழைப்புகளோ அல்லது வேலிடிட்டி போன்ற பலன்களோ இடம்பெறவில்லை. புதிய கால்பந்து டேட்டா பேக் பிரீபெயிட் சலுகை பயன்படுத்தும் அனைவருக்கும் வழங்கப்படுகிறது.
அந்த வகையில், இந்த சலுகையை பெறும் முன் ஏற்கனவே ஒரு சலுகையில் ரிசார்ஜ் செய்திருப்பது அவசியம் ஆகும். புதிய ரூ. 222 சலுகையை ரிலையன்ஸ் ஜியோ "Football World Cup Data Pack" என அழைக்கிறது. எனினும், இந்த சலுகை உலக கோப்பை கால்பந்து தொடர் நிறைவு பெற்றாலும் தொடர்ந்து வழங்கப்படும் என்றே தெரிகிறது. எதுவாயினும், இந்த சலுகையை தேர்வு செய்வோர் ஏற்கனவே ரிசார்ஜ் செய்திருக்கும் முதன்மை சலுகை நிறைவு பெறும் போது இதற்கான வேலிடிட்டி முடிந்து விடும்.

ஜியோ ரூ. 222 4ஜி டேட்டா பேக் விவரங்கள்:
ரிலையன்ஸ் ஜியோ ரூ. 222 சலுகையில் 50 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. இந்த சலுகை விவரங்கள் மைஜியோ செயலியில் இடம்பெற்று இருக்கிறது. கூடுதல் டேட்டா பயனர் ஏற்கனவே பயன்படுத்தும் சலுகையில் உள்ள அன்றாட டேட்டா தீர்ந்ததும் பயன்படுத்திக் கொள்ளலாம். கட்டணத்தை பொருத்தவரை புது சலுகையில் ஒரு ஜிபி டேட்டாவுக்கு ரூ. 4.44 செலவாகிறது. இது போட்டி நிறுவனங்களை விட குறைவு ஆகும்.
ஏர்டெல் நிறுவனம் 50 ஜிபி டேட்டாவை ரூ. 301 விலையில் வழங்கி வருகிறது. அந்த வகையில் ஏர்டெல் ஒரு ஜிபி டேட்டாவுக்கான கட்டணம் ரூ. 6.02 ஆகும். ரிலையன்ஸ் ஜியோ ரூ. 222 சலுகையை ஆன்லைன் வலைதளம் அல்லது ரிடெயில் ஸ்டோர் சென்று நேரடியாகவும் ரிசார்ஜ் செய்து கொள்ள முடியும்.
- நாட்டின் முன்னணி ஆன்லைன் வலைதளமான அமேசான் ஏராளமான பொருட்களுக்கு அவ்வப்போது சிறப்பு சலுகை கொண்ட விற்பனையை நடத்தி வருகிறது.
- பண்டிகை காலக்கட்டத்தில் அனைத்து பொருட்களுக்கும் அதிரடி சலுகை, விலை குறைப்பு கொண்ட விற்பனைகள் நடத்தப்பட்டன.
அமேசான் இந்தியா வலைதளத்தில் "ஸ்மார்ட்போன் அப்கிரேடு டேஸ்" சிறப்பு விற்பனை அறிவிக்கப்பட்டு இருக்கிறது. கடந்த மாதமும் இதே போன்ற விற்பனை நடைபெற்ற நிலையில், தற்போது டிசம்பர் மாதத்திறகான சலுகைகள் அறிவிக்கப்பட்டு இருக்கின்றன. இந்த சிறப்பு விற்பனையில் புதிய ஸ்மார்ட்போன் மற்றும் அக்சஸரீக்களுக்கு சிறப்பு சலுகைகள் மற்றும் தள்ளுபடி வழங்கப்படுகிறது.
சிறப்பு விற்பனையின் அங்கமாக சியோமி, ஐகூ, ரியல்மி, டெக்னஓ, ஒப்போ மற்றும் லாவா நிறுவன ஸ்மார்ட்போன் மாடல்களை அசத்தல் சலுகை மற்றும் தள்ளுபடியுடன் வாங்கிட முடியும். ரெட்மி A1, ஐகூ Z6 லைட், ரெட்மி 11 பிரைம் 5ஜி, டெக்னோ ஸ்பார்க் 9, ஒப்போ F21s ப்ரோ 5ஜி, ரெட்மி நோட் 11 மற்றும் ரியல்மி நார்சோ 50i போன்ற ஸ்மார்ட்போன்களுக்கு சிறப்பு வங்கி சலுகைகள் மற்றும் வட்டியில்லா மாத தவணை முறை சலுகைகள் வழங்கப்படுகிறது.

இன்று (டிசம்பர் 10) துவங்கி இருக்கும் "ஸ்மார்ட்போன் அப்கிரேடு டேஸ்" சிறப்பு விற்பனை டிசம்பர் 14 ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இதில் வழங்கப்படும் சிறந்த சலுகை விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.
சியோமி
ரெட்மி A1 ரூ. 5 ஆயிரத்து 579 முதல்
ரெட்மி 10A ரூ. 7 ஆயிரத்து 469 முதல்
ரெட்மி 11 பிரைம் 5ஜி ரூ. 11 ஆயிரத்து 999 முதல்
ரெட்மி நோட் 11 ரூ. 10 ஆயிரத்து 999 முதல்
ஐகூ
ஐகூ நியோ 6 ரூ. 26 ஆயிரத்து 999, 3 அல்லது 6 மாதங்களுக்கு வட்டியில்லா மாத தவணை முறை வசதி
ஐகூ Z6 ப்ரோ ரூ. 19 ஆயிரத்து 999 முதல்
ஐகூ Z6 லைட் ரூ. 12 ஆயிரத்து 499 முதல்
டெக்னோ
டெக்னோ பாப் 6 ப்ரோ ரூ. 5 ஆயிரத்து 579 முதல்
டெக்னோ ஸ்பார்க் 9 ரூ. 7 ஆயிரத்து 649 முதல்
டெக்னோ போவா 5ஜி ரூ. 14 ஆயிரத்து 299 முதல்
டெக்னோ கேமான் 19 மாண்ட்ரியன் ரூ. 16 ஆயிரத்து 999 முதல்
ரியல்மி
ரியல்மி நார்சோ 50i ரூ. 5 ஆயிரத்து 499 முதல்
ரியல்மி நார்சோ 50A பிரைம் ரூ. 8 ஆயிரத்து 999 முதல்
ஒப்போ
ஒப்போ F21s ரூ. 24 ஆயிரத்து 499 முதல், 6 மாதங்களுக்கு வட்டியில்லா மாத தவணை முறை வசதி
ஒப்போ A76 ரூ. 15 ஆயிரத்து 490 முதல்
ஒப்போ A77s ரூ. 16 ஆயிரத்து 999 முதல்
லாவா
லாவா பிளேஸ் NXT ரூ. 8 ஆயிரத்து 369 முதல்
லாவா Z3 ரூ. 6 ஆயிரத்து 299 முதல்
வங்கி சலுகைகள்:
ஹெச்டிஎப்சி வங்கி கிரெடிட் அல்லது டெபிட் கார்டு மாத தவணை முறைகளில் வாடிக்கையாளர்கள் குறைந்தபட்சம் ரூ. 5 ஆயிரம் மதிப்பிலான பொருட்களை வாங்கும் போது 10 சதவீதம், அதிகபட்சம் ரூ. 1000 வரை தள்ளுபடி பெறலாம். இதே போன்று ஃபெரடல் வங்கி கிரெடிட் கார்டு பயன்படுத்தும் போது 10 சதவீதம், அதிகபட்சம் ரூ. 1250 வரை தள்ளுபடி பெறலாம்.
- சாம்சங் நிறுவனம் இந்திய சந்தையில் ஸ்மார்ட் டிவி வாங்குவோருக்காக சிறப்பு சலுகைகளை அறிவித்து இருக்கிறது.
- இத்துடன் ஸ்மார்ட் டிவி-க்களுக்கு சிறப்பு பரிசு மற்றும் அசத்தலான வங்கி சலுகைகளும் வழங்கப்படுகிறது.
சாம்சங் நிறுவனம் "The Big Game Fest" பெயரில் சிறப்பு திட்டத்தை அறிவித்து இருக்கிறது. தற்போது நடைபெற்று வரும் 2022 உலக கோப்பை கால்பந்து தொடரை ஒட்டி இந்த திட்டம் அறிவிக்கப்பட்டு இருக்கிறது. விளம்பர நோக்கில் அறிவிக்கப்பட்டு இருக்கும் திட்டத்தின் கீழ் சாம்சங் நிறுவனத்தின் பிரீமியம், பெரிய ஸ்கிரீன் டிவிக்களை வாங்குவோருக்கு சிறப்பு பரிசுகள் வழங்கப்படுகின்றன.
தி பிக் கேம் ஃபெஸ்ட் வாடிக்கையாளர்களுக்கு நிச்சயிக்கப்பட்ட பரிசுகளை வழங்குகிறது. இதில் வாடிக்கையாளர்கள் சாம்சங் நிறுவனத்தின் பிரீமியம், பெரிய ஸ்கிரீன் டிவி மாடல்களான நியோ QLED 8K, நியோ QLED, QLED, தி ஃபிரேம் டிவி, தி ஃபிரீஸ்டைல் ப்ரோஜெக்டர் உள்ளிட்டவைகளை வாங்கும் போது பரிசுகளை பெறலாம். இதுதவிர சாம்சங் நியோ QLED, QLED டிவி வாங்கும் போது பத்து ஆண்டுகளுக்கு நோ-ஸ்கிரீன் பர்ன்-இன் வாரண்டி வழங்கப்படுகிறது.

தேர்வு செய்யப்பட்ட டிவி மாடல்களை வாங்கும் போது வாடிக்கையாளர்கள் ரூ. 1 லட்சத்து 09 ஆயிரத்து 999 மதிப்புள்ள சாம்சங் கேலக்ஸி S22 அல்ட்ரா அல்லது ரூ. 49 ஆயிரத்து 900 மதிப்புள்ள சாம்சங் அல்ட்ரா ஸ்லிம் சவுண்ட்பார் HW-S801B பெற முடியும். சாம்சங் ஃபிரீஸ்டைல் ப்ரோஜெக்டர் வாங்குவோருக்கு சாம்சங் சவுண்ட் டவர் T40 இலவசமாக வழங்கப்படுகிறது. இத்துடன் 75 இன்ச் UHD டிவி வாங்குவோருக்கு ரூ. 18 ஆயிரத்து 400 மதிப்புள்ள கேலக்ஸி A23 ஸ்மார்ட்போன் வழங்கப்படுகிறது.
வங்கி சலுகைகள்:
சாம்சங் நிறுவனம் முன்னணி வங்கிகளான ஐசிஐசிஐ, கோடக் மற்றும் ஆர்பிஎல் உடன் இணைந்து மாதம் ரூ. 1990 எனும் மிக குறைந்த மாத தவணை முறை, அதிகபட்சம் 20 சதவீதம் வரை கேஷ்பேக் உள்ளிட்ட சலுகைகள் வழங்கப்படுகிறது. இவை விளம்பர நோக்கில் அறிவிக்கப்பட்டு இருக்கும் சலுகைகள் ஆகும். இவை ஆஃப்லைன் வலைதளங்கள் மற்றும் சாம்சங் வலைதளத்தில் வழங்கப்படுகிறது.
- விவோ நிறுவனம் தனது ஸ்மார்ட்போன் மாடல்களுக்கு அசத்தல் சலுகை வழங்கும் சிறப்பு விற்பனையை அறிவித்து இருக்கிறது.
- இதில் விவோ நிறுவன ஸ்மார்ட்போன் மாடல்களுக்கு அசத்தல் தள்ளுபடி, வங்கி சலுகை மற்றும் கேஷ்பேக் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.
விவோ இந்தியா நிறுவனம் தனது விவோ V25 சீரிஸ், விவோ Y75 சீரிஸ் மற்றும் விவோ Y35 போன்ற ஸ்மார்ட்போன் மாடல்களுக்கு டிசம்பர் 31 ஆம் தேதி வரை சிறப்பு சலுகை மற்றும் தள்ளுபடி உள்ளிட்டவைகளை வழங்குகிறது. இதில் ஸ்மார்ட்போன்களுக்கு அதிகபட்சம் ரூ. 2 ஆயிரத்து 500 வரை கேஷ்பேக் வழங்கப்படுகிறது.
இந்திய சந்தையில் 8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி, 12 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி என இருவித வேரியண்ட்களில் கிடைக்கும் விவோ V25 ப்ரோ ஸ்மார்ட்போன்களின் விலை முறையே ரூ. 35 ஆயிரத்து 990 மற்றும் ரூ. 39 ஆயிரத்து 990 என நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது. தற்போது சிறப்பு விற்பனையின் கீழ் விவோ V25 ப்ரோ மாடலை வாங்குவோர் ஐசிஐசிஐ வங்கி பரிவர்த்தனை செய்யும் போது ரூ. 2 ஆயிரத்து 500 வரை கேஷ்பேக் பெறலாம்.

இதுதவிர ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா பயனர்களுக்கும் இதே சலுகை வழங்கப்படுகிறது. இந்த சலுகை கிரெடிட் கார்டு, கிரெடிட் கார்டு மாத தவணை மற்றும் டெபிட் கார்டு மாத தவணை உள்ளிட்டவைகளுக்கு கிடைக்கும். விவோ V25 ஸ்மார்ட்போனின் 8 ஜிபி ரேம், 128 ஜிபி மற்றும் 12 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மாடல்கள் முறையே ரூ. 27 ஆயிரத்து 999 மற்றும் ரூ. 31 ஆயிரத்து 999 விலையில் விற்பனை செய்யப்பட்டு வந்தது.
இரு வேரியண்ட்களை வாங்கும் ஐசிஐசிஐ, ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா வாடிக்கையாளர்கள் ரூ. 2 ஆயிரம் கேஷ்பேக் பெற முடியும். இந்திய சந்தையில் ரூ. 20 ஆயிரத்து 990 மற்றும் ரூ. 21 ஆயிரத்து 990 விலைகளில் விற்பனை செய்யப்பட்டு வந்த விவோ Y75 4ஜி மற்றும் விவோ Y75 5ஜி ஸ்மார்ட்போன்களுக்கு தற்போது ரூ. 1500 கேஷ்பேக் வழங்கப்படுகிறது. முன்பை போன்றே இந்த மாடல்களுக்கும் ஐசிஐசிஐ மற்றும் ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படுகிறது.
இதே போன்று விவோ Y35 ஸ்மார்ட்போனை வாங்கும் ஐசிஐசிஐ மற்றும் ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா வாடிக்கையாளர்களுக்கு ரூ. 1000 கேஷ்பேக் வழங்கப்படுகிறது. இந்திய சந்தையில் விவோ Y35 ஸ்மார்ட்போன் ரூ. 18 ஆயிரத்து 499 விலையில் வெளியிடப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.
- ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் இந்தியாவில் 5ஜி சேவையை வெளியிடும் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறது.
- 90 நாட்கள் வேலிடிட்டி வழங்கும் புது சலுகையை ரிலையன்ஸ் ஜியோ அறிவித்து இருக்கிறது.
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தினமும் 2 ஜிபி டேட்டா வழங்கும் புது சலுகையை அறிவித்து இருக்கிறது. பிரீபெயிட் பயனர்களுக்கு அறிவிக்கப்பட்டு இருக்கும் புது சலுகையின் விலை ரூ. 749 ஆகும். இதில் தினமும் 2 ஜிபி டேட்டா, அன்லிமிடெட் வாய்ஸ் கால், எஸ்எம்எஸ் போன்ற பலன்கள் வழங்கப்படுகிறது. 90 நாட்கள் வேலிடிட்டி கொண்ட புது சலுகையில் மொத்தம் 180 ஜிபி டேட்டா கிடைக்கும்.
ஜியோ ரூ. 719 சலுகையும் இதே போன்ற பலன்களை வழங்கி வருகிறது. எனினும், இதன் வேலிடிட்டி 84 நாட்கள் ஆகும். இவை தவிர ரூ. 249 - 23 நாட்கள், ரூ. 299 - 28 நாட்கள், ரூ. 533 - 56 நாட்கள், ரூ. 2 ஆயிரத்து 879 - 365 நாட்கள் வேலிடிட்டி வழங்கும் சலுகைகளை ரிலையன்ஸ் ஜியோ வழங்கி வருகிறது. இந்த சலுகைகள் அனைத்திலும் தினமும் 2 ஜிபி டேட்டா வழங்குகின்றன.

மற்ற சலுகைகளை போன்றே புது சலுகையிலும் ஜியோடிவி, ஜியோசினிமா, ஜியோசெக்யுரிட்டி மற்றும் ஜியோகிளவுட் என ஏராளமான ஜியோ சேவைகளின் சந்தா வழங்கப்படுகிறது. புது சலுகை மட்டுமின்றி ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தனது பயனர்களுக்கு அன்லிமிடெட் 5ஜி டேட்டாவை வழங்கி வருகிறது. எனினும், இந்த சலுகை ரூ. 239 அல்லது அதற்கும் அதிக சலுகையை ரிசார்ஜ் செய்திருப்பவர்களுக்கு மட்டுமே வழங்கப்படும்.
ரிலையன்ஸ் ஜியோ அறிவித்து இருக்கும் புதிய ரூ. 749 விலை சலுகை ஜியோ அதிகாரப்பூர்வ வலைதளம், மைஜியோ செயலி உள்ளிட்ட தளங்களில் கிடைக்கிறது. இதுதவிர மூன்றாம் தரப்பு செக்பாயிண்ட்களிலும் இந்த சலுகை கிடைக்கும் என எதிர்பார்க்கலாம்.