என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Offers"

    • சியோமி நிறுவனத்தின் புது ரெட்மி நோட் சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் சமீபத்தில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டன.
    • ரெட்மி நோட் 12 சீரிசில் - நோட் 12 5ஜி, நோட் 12 ப்ரோ 5ஜி மற்றும் நோட் 12 ப்ரோ பிளஸ் 5ஜி என மூன்று மாடல்கள் கிடைக்கின்றன.

    சியோமியின் துணை பிராண்டு ரெட்மி இந்திய சந்தையில் தனது ரெட்மி நோட் 12 சீரிஸ் ஸ்மார்ட்போன்களை கடந்த வாரம் (ஜனவரி 5) அறிமுகம் செய்தது. இந்த நிலையில், புதிய ரெட்மி நோட் 12 சீரிஸ் மாடல்களுக்கான விற்பனை இன்று (ஜனவரி 11) துவங்கியது. இந்திய சந்தையில் ரோட்மி நோட் 12 சீரிசில் ரெட்மி நோட் 12 5ஜி, ரெட்மி நோட் 12 ப்ரோ மற்றும் ரெட்மி நோட் 12 ப்ரோ பிளஸ் என மூன்று மாடல்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

    இதில் ரெட்மி நோட் 12 5ஜி ஸ்மார்ட்போன் 4 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி, 6 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி என இருவித ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இதன் விற்பனை அமேசான் தளத்தில் நடைபெறுகிறது. இந்த ஸ்மார்ட்போன் மிஸ்கிட் பிளாக், மேட் பிளாக் மற்றும் ஃபிராஸ்டெட் கிரீன் என மூன்று நிறங்களில் கிடைக்கிறது.

    ரெட்மி நோட் 12 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் 6 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி, 8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மற்றும் 8 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி என மூன்று வேரியண்ட்களில் கிடைக்கிறது. ரெட்மி நோட் 12 ப்ரோ பிளஸ் மாடல் 8 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி மற்றும் 12 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி என இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கிறது.

    ரெட்மி நோட் 12 ப்ரோ மற்றும் ரெட்மி நோட் 12 ப்ரோ பிளஸ் மாடல்கள் ப்ளிப்கார்ட் தளத்தில் விற்பனை செய்யப்படுகின்றன. இந்த ஸ்மார்ட்போன்கள் அப்சிடியன் பிளாக், ஆர்க்டிக் வைட் மற்றும் ஐஸ்பெர்க் புளூ என மூன்று வித நிறங்களில் கிடைக்கிறது. இவை தவிர மூன்று ஸ்மார்ட்போன்களும் Mi வலைதளம், Mi ஸ்டூடியோ மற்றும் Mi பார்ட்னர் ஸ்டோர்களிலும் விற்பனை செய்யப்படுகிறது.

    புது ரெட்மி நோட் 12 சீரிஸ் ஸ்மார்ட்போன்களை வாங்குவோர் ஐசிஐசிஐ வங்கி கிரெடிட் கார்டு பயன்படுத்தும் போதும், எக்சேன்ஜ் சலுகையின் கீழ் சிறப்பு தள்ளுபடி பெற முடியும். ரெட்மி நோட் 12 வாங்குவோருக்கு ரூ. 1500, நோட் 12 ப்ரோ மற்றும் நோட் 12 ப்ரோ பிளஸ் மாடல்களுக்கு ரூ. 3 ஆயிரம் வரையிலான தள்ளுபடி வழங்கப்படுகிறது. இத்துடன் பழைய சியோமி/Mi அல்லது ரெட்மி ஸ்மார்ட்போன் வாங்கும் போது ரூ. 1000 தள்ளுபடி வழங்கப்படுகிறது.

    விலை விவரங்கள்:

    ரெட்மி நோட் 12 5ஜி 4 ஜிபி ரேம், 128 ஜிபி ரூ. 17 ஆயிரத்து 999

    ரெட்மி நோட் 12 5ஜி 6 ஜிபி ரேம், 128 ஜிபி ரூ. 19 ஆயிரத்து 999

    வங்கி தள்ளுபடி மற்றும் எக்சேன்ஜ் சலுகைகளை பெறும் பட்சத்தில் இந்த ஸ்மார்ட்போனினை முறையே ரூ. 15 ஆயிரத்து 499 மற்றும் ரூ. 17 ஆயிரத்து 499 விலையில் வாங்கிட முடியும்.

    ரெட்மி நோட் 12 ப்ரோ 6 ஜிபி, 128 ஜிபி ரூ. 24 ஆயிரத்து 999

    ரெட்மி நோட் 12 ப்ரோ 8 ஜிபி, 128 ஜிபி ரூ. 26 ஆயிரத்து 999

    ரெட்மி நோட் 12 ப்ரோ 8 ஜிபி, 256 ஜிபி ரூ. 27 ஆயிரத்து 999

    ரெட்மி நோட் 12 ப்ரோ பிளஸ் 8 ஜிபி, 256 ஜிபி ரூ. 29 ஆயிரத்து 999

    ரெட்மி நோட் 12 ப்ரோ பிளஸ் 12 ஜிபி, 256 ஜிபி ரூ. 32 ஆயிரத்து 999

    அறிமுக சலுகையாக ஐசிஐசிஐ வங்கி கார்டு மற்றும் மாத தவணை முறைக்கு ரூ. 3 ஆயிரம் உடனடி தள்ளுபடி மற்றும் ரூ. 3 ஆயிரம் எக்சேன்ஜ் போனஸ் வழங்கப்படுகிறது. ஏற்கனவே பயன்படுத்தி வரும் பழைய சியோமி, Mi அல்லது ரெட்மி ஸ்மார்ட்போன்களை எக்சேன்ஜ் செய்யும் போது கூடுதலாக ரூ. 1000 தள்ளுபடி வழங்கப்படுகிறது.

    • யமஹா நிறுவனம் தமிழ் நாட்டில் தனது வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு சலுகைகளை அறிவித்து இருக்கிறது.
    • பொங்கல் பண்டிகையை ஒட்டி அறிவிக்கப்பட்டு இருக்கும் சிறப்பு சலுகைகள் இம்மாத இறுதிவரை வழங்கப்பட இருக்கின்றன.

    இந்திய சந்தையில் முன்னணி இருசக்கர வாகனங்கள் உற்பத்தியாளராக இருக்கும் யமஹா மோட்டார் இந்தியா தமிழ் நாட்டு வாடிக்கையாளர்களுக்கு பொங்கல் பண்டிகையை ஒட்டி சிறப்பு சலுகைகளை அறிவித்து இருக்கிறது. இந்த சலுகைகள் ஜனவரி 31 ஆம் தேதி வரை அமலில் இருக்கும். தற்போது பொங்கல் பண்டிகை சிறப்பு சலுகைகள் யமஹா FZ மற்றும் ஃபசினோ 125சிசி ஹைப்ரிட் மாடலின் டிரம் வேரியண்டிற்கு அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

    சலுகை விவரங்கள்:

    யமஹா FZ மாடலை வாங்குவோருக்கு ரூ. 7 ஆயிரம் வரை கேஷ்பேக், ரூ. 7 ஆயிரத்து 999 முன்பணம், மாதம் ரூ. 1999 எனும் குறைந்த மாத தவணை முறை மற்றும் 0 சதவீத வட்டி வழங்கப்படுகிறது.

    யமஹா ஃபசினோ 125 Fi ஹைப்ரிட் டிரம் மாடலை வாங்கும் போது ரூ. 1500 வரை கேஷ்பேக், ரூ. 3 ஆயிரத்து 999 எனும் மிக குறைந்த முன்பணம், மாதம் ரூ. 1999 எனும் மாத தவணை, 0 சதவீத வட்டி போன்ற சலுகைகள் வழங்கப்படுகிறது.

    பொங்கல் பண்டிகையை ஒட்டி அறிவிக்கப்பட்டு இருக்கும் சலுகைகள் தமிழ் நாட்டு வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே பிரத்யேகமாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது. சலுகைகள் யமஹா விற்பனை மையங்களில் பெற முடியும். இதுபற்றிய கூடுதல் விவரங்களை யமஹா விற்பனை மையங்களில் அறிந்து கொள்ள முடியும்.

    150சிசி யமஹா FZ சீரிசில் சக்திவாய்ந்த ஏர் கூல்டு 4 ஸ்டிரோக் 149சிசி, SOHC, 2 வால்வுகள் கொண்ட சிங்கில் சிலிண்டர் ஃபியூவல் இன்ஜெக்ட் செய்யப்பட்ட என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 12.4 பிஎஸ் பவர், 13.3 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது.

    யமஹா ஃபசினோ ஹைப்ரிட் மாடலில் ஏர் கூல்டு, 4 ஸ்டிரோக் SOHC, இரண்டு வால்வுகள் கொண்ட என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 8.2 பிஎஸ் பவர், 10.3 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இதுதவிர ஏராளமான பயனுள்ள அம்சங்கள் இந்த மாடலில் வழங்கப்பட்டு இருக்கிறது.

    • ஐகூ நிறுவனத்தின் புதிய ஃபிளாக்‌ஷிப் சீரிஸ் ஸ்மார்ட்போன் விற்பனை இந்தியாவில் துவங்கி இருக்கிறது.
    • புதிய ஐகூ 11 5ஜி ஸ்மார்ட்போன் ஆல்ஃபா மற்றும் லெஜண்ட் நிற ஆப்ஷன்களில் கிடைக்கிறது.

    ஐகூ 11 5ஜி ஸ்மார்ட்போனின் விற்பனை இந்தியாவில் துவங்கி இருக்கிறது. முன்னதாக அமேசான் பிரைம் சந்தாதாரர்களுக்கு மட்டும் பிரத்யேக விற்பனை துவங்கியதை அடுத்து தற்போது அனைவருக்கும் விற்பனை செய்யப்படுகிறது. புதிய ஐகூ ஸ்மார்ட்போன் குவால்காம் நிறுவனத்தின் அதிநவீன ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 பிராசஸர் கொண்டிருக்கிறது. புதிய ஐகூ 11 5ஜி ஸ்மார்ட்போன் இருவித நிறங்களில் கிடைக்கிறது.

    மற்ற அம்சங்களை பொருத்தவரை ஐகூ 11 5ஜி மாடலில் 6.78 இன்ச் 2K E6 AMOLED டிஸ்ப்ளே, 144Hz ரிப்ரெஷ் ரேட், LTPO 4.0 தொழில்நுட்பம், 300Hz டச் சாம்ப்லிங் ரேட் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் 50MP பிரைமரி கேமரா, 13MP டெலிபோட்டோ / போர்டிரெயிட் சென்சார், 8MP அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ் வழங்கப்பட்டு இருக்கிறது. செல்ஃபி எடுக்க 16MP கேமரா சென்சார் உள்ளது.

    விலை விவரங்கள்:

    ஐகூ 11 ஸ்மார்ட்போனின் 8 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி மாடல் ஆல்ஃபா மற்றும் கிளாஸ் பேக் விலை ரூ. 59 ஆயிரத்து 999 என்றும் 16 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி, சிலிகான் லெதர் பேக் மற்றும் பிஎம்டபிள்யூ டிசைன் மாடல் விலை ரூ. 64 ஆயிரத்து 999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

    அறிமுக சலுகைகளை பொருத்தவரை ஐகூ 11 5ஜி ஸ்மார்ட்போன் வாங்குவோர் ஹெச்டிஎப்சி மற்றும் ஐசிஐசிஐ வங்கி கார்டுகள் மற்றும் மாத தவணை முறை பரிவர்த்தனைகளின் போது ரூ. 5 ஆயிரம் வரை உடனடி தள்ளுபடி பெற முடியும். இத்துடன் கூடுதலாக கூப்பன் தள்ளுபடி ரூ. 1000 மற்றும் எக்சேன்ஜ் போனஸ் ரூ. 3 ஆயிரம் வரை வழங்கப்படுகிறது. வட்டியில்லா மாத தவணை முறை மாதம் ரூ. 1,373-இல் இருந்து துவங்குகிறது. எக்சேன்ஜ் தள்ளுபடி ரூ. 25 ஆயிரம் வரை வழங்கப்படுகிறது.

    ஐகூ 11 அம்சங்கள்:

    6.78 இன்ச் 3200x1440 பிக்சல் QHD+ வளைந்த E6 LTPO 4.0 AMOLED டிஸ்ப்ளே

    ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 பிராசஸர்

    அட்ரினோ 740 GPU

    8 ஜிபி, 16 ஜிபி LPDDR5X ரேம்

    256 ஜிபி UFS 4.0 மெமரி

    ஆண்ட்ராய்டு 13 மற்றும் ஃபன்டச் ஒஎஸ் 13

    டூயல் சிம் ஸ்லாட்

    50MP பிரைமரி கேமரா, OIS, எல்இடி ஃபிளாஷ்

    8MP அல்ட்ரா வைடு கேமரா

    13MP 2x டெலிபோட்டோ கேமரா

    16MP செல்ஃபி கேமரா

    இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார்

    யுஎஸ்பி டைப் சி ஆடியோ, ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், ஹை-ஃபை ஆடியோ

    5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை 6, ப்ளூடூத் 5.3

    யுஎஸ்பி டைப் சி

    5000 எம்ஏஹெச் பேட்டரி

    120 வாட் அல்ட்ரா ஃபாஸ்ட் ஃபிளாஷ் சார்ஜிங்

    • ப்ளிப்கார்ட் வலைதளத்தில் அசத்தல் சலுகைகள் வழங்கும் சிறப்பு விற்பனையை அறிவித்து இருக்கிறது.
    • சிறப்பு விற்பனையின் கீழ் போக்கோ ஸ்மார்ட்போன் மாடல்களுக்கு அசத்தல் தள்ளுபடி வழங்கப்படுகிறது.

    ப்ளிப்கார்ட் வலைதளத்தில் போக்கோ நிறுவன ஸ்மார்ட்போன் மாடல்களுக்கு சிறப்பு சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. ப்ளிப்கார்ட் பிக் சேவிங்ஸ் டேஸ் சேல் நடைபெற்று வருகிறது. விற்பனையின் அங்கமாக போக்கோ ஸ்மார்ட்போன்களுக்கு இன்று (ஜனவரி 14) சிறப்பு சலுகைகள் வழங்கப்படுகின்றன.

    போக்கோ M4 5ஜி, ஃபிளாக்ஷிப் போக்கோ F4 5ஜி ஸ்மார்ட்போன் உள்ளிட்ட மாடல்கள் இதுவரை இல்லாத விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இத்துடன் எஸ்பிஐ மற்றும் ஐசிஐசிஐ வங்கி கார்டு பயன்படுத்தும் போது 10 சதவீதம் உடனடி தள்ளுபடி வழங்கப்படுகிறது. அதன்படி ஸ்மார்ட்போன்களை ரூ. 6 ஆயிரத்து 999 விலையில் இருந்தே வாங்கிட முடியும்.

    சலுகை விவரங்கள்:

    போக்கோ X4 ப்ரோ 5ஜி 6 ஜிபி + 64 ஜிபி மாடல் ரூ. 13 ஆயிரத்து 999 (ரூ. 4 ஆயிரம் தள்ளுபடி)

    போக்கோ X4 ப்ரோ 5ஜி 6 ஜிபி + 128 ஜிபி மாடல் ரூ. 15 ஆயிரத்து 499 (ரூ. 3 ஆயிரத்து 500 தள்ளுபடி)

    போக்கோ X4 ப்ரோ 5ஜி 8 ஜிபி + 128 ஜிபி மாடல் ரூ. 16 ஆயிரத்து 999 (ரூ. 4 ஆயிரம் தள்ளுபடி)

    போக்கோ F4 5ஜி 6 ஜிபி + 128 ஜிபி மாடல் ரூ. 24 ஆயிரத்து 999 (ரூ. 3 ஆயிரம் தள்ளுபடி)

    போக்கோ F4 5ஜி 8 ஜிபி + 128 ஜிபி மாடல் ரூ. 22 ஆயிரத்து 999 (ரூ. 7 ஆயிரம் தள்ளுபடி)

    போக்கோ F4 5ஜி 12 ஜிபி + 256 ஜிபி மாடல் ரூ. 26 ஆயிரத்து 999 (ரூ. 7 ஆயிரம் தள்ளுபடி)

    போக்கோ M4 5ஜி 4 ஜிபி + 64 ஜிபி மாடல் ரூ. 10 ஆயிரத்து 249 (ரூ. 2 ஆயிரத்து 750 தள்ளுபடி)

    போக்கோ M4 5ஜி 6 ஜிபி + 128 ஜிபி மாடல் ரூ. 12 ஆயிரத்து 249 (ரூ. 2 ஆயிரத்து 750 தள்ளுபடி)

    போக்கோ M4 ப்ரோ 5ஜி 4 ஜிபி + 64 ஜிபி மாடல் ரூ. 11 ஆயிரத்து 249 (ரூ. 3 ஆயிரத்து 750 தள்ளுபடி)

    போக்கோ M4 ப்ரோ 5ஜி 6 ஜிபி + 128 ஜிபி மாடல் ரூ. 13 ஆயிரத்து 249 (ரூ. 3 ஆயிரத்து 750 தள்ளுபடி)

    போக்கோ M4 ப்ரோ 5ஜி 8 ஜிபி + 128 ஜிபி மாடல் ரூ. 14 ஆயிரத்து 249 (ரூ. 4 ஆயிரத்து 750 தள்ளுபடி)

    போக்கோ M4 ப்ரோ AMOLED 6 ஜிபி + 64 ஜிபி மாடல் ரூ. 9 ஆயிரத்து 999 (ரூ. 5 ஆயிரம் தள்ளுபடி)

    போக்கோ M4 ப்ரோ AMOLED 6 ஜிபி + 128 ஜிபி மாடல் ரூ. 10 ஆயிரத்து 999 (ரூ. 5 ஆயிரத்து 500 தள்ளுபடி)

    போக்கோ M4 ப்ரோ AMOLED 8 ஜிபி + 128 ஜிபி மாடல் ரூ. 12 ஆயிரத்து 999 (ரூ. 5 ஆயிரத்து 500 தள்ளுபடி)

    போக்கோ M5 (4 ஜிபி + 64 ஜிபி) மாடல் ரூ. 9 ஆயிரத்து 999 (ரூ. 2 ஆயிரத்து 500 தள்ளுபடி)

    போக்கோ M5 (6 ஜிபி + 128 ஜிபி) மாடல் ரூ. 11 ஆயிரத்து 999 (ரூ. 2 ஆயிரத்து 500 தள்ளுபடி)

    போக்கோ C31 (3 ஜிபி + 32 ஜிபி) மாடல் ரூ. 6 ஆயிரத்து 999 (ரூ. 1,500 தள்ளுபடி)

    போக்கோ C31 (4 ஜிபி + 64 ஜிபி) மாடல் ரூ. 7 ஆயிரத்து 499 (ரூ. 2 ஆயிரம் தள்ளுபடி)

    இந்த சலுகைகள் குறுகிய காலக்கட்டத்திற்கு அறிவிக்கப்பட்டு இருக்கின்றன. இவை ஜனவரி 20 ஆம் தேதி வரை வழங்கப்பட இருக்கிறது.

    • அமேசான் வலைதளத்தில் ஐபோன் 13 மாடலுக்கு சிறப்பு சலுகை அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
    • தற்போது ஐபோன் 13 (128 ஜிபி) மாடல் ரூ. 59 ஆயிரத்து 499 விலையில் பட்டியலிடப்பட்டு இருக்கிறது.

    அமேசான் கிரேட் ரிபப்லிக் டே சேல் பிரைம் சந்தா வைத்திருப்போருக்கு துவங்கி நடைபெற்று வருகிறது. இதில் ஐபோன் 13 (128 ஜிபி) மாடல் ரூ. 59 ஆயிரத்து 499 விலையில் பட்டியலிடப்பட்டு இருக்கிறது. இத்துடன் கூடுதலாக வங்கி சலுகைகளும் அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

    அதன்படி ஸ்டேட் பேங்க் கார்டு வைத்திருப்போர் பத்து சதவீதம் உடனடி தள்ளுபடி, கிரெடிட் கார்டு மாத தவணை முறை, பஜாஜ் ஃபின்சர்வ் இஎம்ஐ கார்டு மற்றும் அமேசான் பே கிரெடிட் கார்டு மூலம் வட்டியில்லா மாத தவணை முறை வசதி உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.

    இதுதவிர பழைய ஸ்மார்ட்போனை எக்சேன்ஜ் செய்யும் போது அதிகபட்சம் ரூ. 20 ஆயிரம் வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. அந்த வகையில், அனைத்து சலுகைகளையும் சேர்க்கும் பட்சத்தில் ஐபோன் 13 மாடலை ரூ. 37 ஆயிரத்து 499 விலையில் வாங்கிட முடியும்.

    முன்னதாக ஆப்பிள் ஐபோன் 13 மாடல் ரூ. 79 ஆயிரத்து 900 விலையில் 2021 வாக்கில் விற்பனைக்கு அறிவிக்கப்பட்டது. அளவில் இந்த மாடல் ஐபோன் 12 போன்றே இருக்கிறது. புகைப்படங்களை எடுக்க ஐபோன் 12 மாடலில் இருப்பதை போன்றே 12MP வைடு மற்றும் அல்ட்ரா வைடு லென்ஸ் வழங்கப்பட்டு இருக்கிறது. அமேசான் மற்றும் ப்ளிப்கார்ட் தளங்களில் ஐபோன் 14 பிளஸ் மாடலுக்கு சிறப்பு சலுகை வழங்கப்படுகிறது.

    அதன்படி ப்ளிப்கார்ட் தளத்தில் ஐபோன் 14 பிளஸ் ரூ. 75 ஆயிரத்து 999 விலையில் பட்டியலிடப்பட்டு இருக்கிறது. இதர வங்கி சலுகைகளை சேர்க்கும் போது ஐபோன் 14 பிளஸ் மாடலை ரூ. 69 ஆயிரத்து 999 விலையில் வாங்கிட முடியும். ஆப்பிள் ஸ்டோர் ஆன்லைனில் ஐபோன் 14 மற்றும் ஐபோன் 14 பிளஸ் மாடல்கள் அதன் அசல் விலையிலேயே விற்பனை செய்யப்படுகிறது. எனினும், ஹெச்டிஎஃப்சி வங்கி கிரெடிட் கார்டு பயன்படுத்தும் போது ரூ. 6 ஆயிரம் கேஷ்பேக் பெறலாம்.

    • ப்ளிப்கார்ட் வலைதளத்தில் நத்திங் போன் (1) மாடலுக்கு அசத்தல் சலுகை அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
    • குறுகிய காலக்கட்டத்திற்கு அறிவிக்கப்பட்டு இருக்கும் சலுகையின் கீழ் நத்திங் போன் (1) விலை குறைந்துள்ளது.

    ப்ளிப்கார்ட் பிங் சேவிங்ஸ் டேஸ் சிறப்பு விற்பனையின் கீழ், நத்திங் நிறுவனத்தின் நத்திங் போன் (1) மாடலுக்கு சிறப்பு சலுகை அறிவிக்கப்பட்டு இருக்கிறது. ஜனவரி 20 ஆம் தேதி வரை நடைபெறும் சிறப்பு சலுகை விற்பனையில் நத்திங் போன் (1) மாடலுக்கு விலை குறைப்பு அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

    அதன்படி நத்திங் போன் (1) மாடலின் விலை ரூ. 25 ஆயிரத்து 999 என குறைக்கப்பட்டு இருக்கிறது. முன்னதாக இந்த ஸ்மார்ட்போன் ரூ. 33 ஆயிரத்து 999 விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. குறுகிய காலக்கட்டத்திற்கு அறிவிக்கப்பட்டு இருக்கும் விலை குறைப்பு, சிறப்பு விற்பனை நிறைவு பெற்றதும் மாற்றப்பட்டு விடும்.

    சலுகை விவரங்கள்:

    நத்திங் போன் (1) 8 ஜிபி ரேம், 128 ஜிபி மாடல் விலை ரூ. 25 ஆயிரத்து 999

    நத்திங் போன் (1) 8 ஜிபி ரேம், 256 ஜிபி மாடல் விலை ரூ. 27 ஆயிரத்து 499

    நத்திங் போன் (1) 12 ஜிபி ரேம், 256 ஜிபி மாடல் விலை ரூ. 35 ஆயிரத்து 499

    ஐசிஐசிஐ மற்றும் சிட்டி வங்கி பயனர்களுக்கு சிறப்பு வங்கி சலுகைகள் வழங்கப்படுகிறது. நத்திங் இயர் (ஸ்டிக்) மாடல் ரூ. 6 ஆயிரத்து 999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இந்த சலுகைகள் ஜனவரி 20 ஆம் தேதி வரை வழங்கப்படும்.

    நத்திங் போன் (1) அம்சங்கள்:

    அம்சங்களை பொருத்தவரை நத்திங் போன் (1) ஸ்மார்ட்போனில் 6.55 இன்ச் FHD+ AMOLED டிஸ்ப்ளே, 120Hz ரிப்ரெஷ் ரேட், குவால்காம் ஸ்னாப்டிராகன் 778ஜி பிளஸ் பிராசஸர், அதிகபட்சம் 12 ஜிபி LPDDR 5 ரேம், 256 ஜிபி UFS 3.1 மெமரி வழங்கப்பட்டு இருக்கிறது. ஆண்ட்ராய்டு 12 சார்ந்த நத்திங் ஒஎஸ் கொண்டிருக்கும் நத்திங் போன் (1) 4500 எம்ஏஹெச் பேட்டரி, 33 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்டுள்ளது.

    இத்துடன் 15 வாட் Qi வயர்லெஸ் மற்றும் 5 வாட் ரிவர்ஸ் வயர்லெஸ் சார்ஜிங், இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார், IP53 போன்ற அம்சங்கள் உள்ளது. புகைப்படங்களை எடுக்க 50MP பிரைமரி கேமரா, OIS, EIS, 50MP சாம்சங் JN1 சென்சார், அல்ட்ரா வைடு லென்ஸ், 16MP செல்பி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது. கனெக்டிவிட்டிக்கு 5ஜி, வைபை 6, ப்ளூடூத் 5.2, என்எஃப்சி மற்றும் யுஎஸ்பி டைப் சி போர்ட் வழங்கப்பட்டு இருக்கிறது.

    • மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் பணியாற்றி வந்த ஊழியர்களில் ஐந்து சதவீதம் பேர் பணி நீக்கம் செய்யப்பட்டனர்.
    • பணி நீக்கம் செய்த போதிலும், மைக்ரோசாப்ட் தொடர்ந்து புது ஊழியர்களை பணியில் அமர்த்தி, மற்ற துறைகளில் முதலீடு செய்ய இருக்கிறது.

    மைக்ரோசாப்ட் தலைமை செயல் அதிகாரி சத்ய நாதெல்லா 10 ஆயிரம் பேரை பணி நீக்கம் செய்வதாக அறிவித்து இருக்கிறார். பணி நீக்கத்தில் பாதிக்கப்பட்டோருக்கு இன்று முதல் நோட்டீஸ் அனுப்பப்பட்டு வருகிறது. பொருளாதார சூழல் காரணமாக கடின முடிவுகளை எடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டு இருப்பதாக சத்ய நாதெல்லா குறிப்பிட்டு இருக்கிறார். தற்போது ஊழியர்களில் ஐந்து சதவீதத்திற்கும் குறைவானோர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

    கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் இருந்து இதுவரை சுமார் 2 லட்சத்து 21 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இவர்களில் சுமார் 99 ஆயிரம் பேர் அமெரிக்கா தவிர்த்த நாடுகளில் வசிப்போர் ஆவர். மைக்ரோசாப்ட் மட்டுமின்றி டுவிட்டர், அமேசான் மற்றும் மெட்டா போன்ற நிறுவனங்களும் பல ஆயிரம் பேரை பணிநீக்கம் செய்யும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றன.

    உலகின் பெரும்பாலான நாடுகளில் பொருளாதார மந்த நிலை ஏற்பட்டு இருப்பது, நுகர்வோர் செலவு செய்வதை குறைந்து இருப்பது போன்ற காரணங்களால் பணி நீக்க நடவடிக்கை எடுக்கப்படுவதாக சத்ய நாதெல்லா நிறுவன ரீதியில் அனுப்பிய அறிக்கையில் தெரிவித்து இருக்கிறார். செலவீனங்களை மறு கட்டமைப்பு செய்து, வருவாயை முறைப்படுத்த பணி நீக்கம் அத்தியாவசியமான ஒன்று ஆகும்.

    பணி நீக்கம் செய்யப்பட்ட போதிலும் புதிதாக ஊழியர்கள் பணியில் அமர்த்தப்படுவர் என்றும், தொடர்ந்து புது முதலீடுகள் செய்யப்படும் என்றும் மைக்ரோசாப்ட் தெரிவித்துள்ளது. பணி நீக்கம் செய்யப்படுவோருக்கு தகவல் தெரிவிக்கும் பணி துவங்கிவிட்ட போதிலும், இந்த ஆண்டின் மூன்றாவது காலாண்டில் தான் இந்த நடவடிக்கைகள் முழுமை பெறும்.

    • ஆப்பிள் நிறுவன சாதனங்களுக்கு அசத்தல் சலுகை அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
    • இந்த சலுகைகள் மட்டுமின்றி வங்கி சார்ந்த கேஷ்பேக் பலன்களும் வழங்கப்படுகிறது.

    ஆப்பிள் இந்தியா ஆன்லைன் ஸ்டோரில் ஏராளமான சாதனங்களுக்கு சிறப்பு சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. பல்வேறு பிரிவுகளில் கிடைக்கும் ஆப்பிள் சாதனங்களுக்கு அதிகபட்சம் ரூ. 10 ஆயிரம் உடனடி தள்ளுபடி, வங்கி சார்ந்த சலுகைகள் அறிவிக்கப்பட்டு இருக்கின்றன.

    ஆப்பிள் ஸ்டோர் ஆன்லைன் சலுகைகள்:

    ஹெச்டிஎப்சி வங்கி கிரெடிட் கொண்டு மேக்புக் ஏர் M2 சிப் மற்றும் மேக்புக் ப்ரோ 13 இன்ச் மாடல்களை வாங்கும் போது அதிகபட்சம் ரூ. 10 ஆயிரம் உடனடி தள்ளுபடி.

    தேர்வு செய்யப்பட்ட ஐபோன் மாடல்களுக்கு அப்கிரேடு செய்யு்ம போது ரூ. 12 ஆயிரம் வரை உடனடி சேமிப்பு வழங்கப்படுகிறது. இதில் ரூ. 7 ஆயிரம் உடனடி சேமிப்பு, எக்சேன்ஜ் சலுகையாக ரூ. 5 ஆயிரம் கூடுதல் சேமிப்புகள் தேர்வு செய்யப்பட்ட ஐபோன் மாடல்களுக்கு வழங்கப்படுகிறது.

    மூன்று அல்லது ஆறு மாதங்கள் வரை தேர்வு செய்யப்பட்ட சாதனங்களை வாங்கும் போகு வட்டியில்லா மாத தவணை முறை வசதி வழங்கப்படுகிறது.

    ஹெச்டிஎப்சி கிரெடிட் கார்டு பயன்படுத்தும் போது கிடைக்கும் உடனடி சேமிப்புகள்

    ஐபோன் 14, ஐபோன் 14 பிளஸ், ஐபோன் 14 ப்ரோ, ஐபோன் 14 மேக்ஸ் வாங்கும் போது ரூ. 7 ஆயிரம்

    ஐபேட் 10th Gen ரூ. 3 ஆயிரம்

    ஐபேட் ஏர் ரூ. 4 ஆயிரம்

    ஐபேட் ப்ரோ 12.9 இன்ச் ரூ. 5 ஆயிரம்

    மேக்புக் ஏர் M2 சிப் ரூ. 10 ஆயிரம்

    மேக்புக் ப்ரோ 13 இன்ச் ரூ. 10 ஆயிரம்

    ஆப்பிள் வாட்ச் அல்ட்ரா ரூ. 5 ஆயிரம்

    ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 8 ரூ. 4 ஆயிரம்

    ஏர்பாட்ஸ் ப்ரோ 2nd Gen ரூ. 2 ஆயிரம்

    ஹெச்டிஎப்சி வங்கி கிரெடிட் கார்டு மற்றும் கிரெடிட் கார்டு மாத தவணைகளுக்கு கேஷ்பேக் சலுகை வழங்கப்படுகிறது. இத்துடன் மூன்று அல்லது ஆறு மாதங்களுக்கு வட்டியில்லா மாத தவணை முறை வசதி வழங்கப்படுகிறது. 

    • ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் சத்தமின்றி இரண்டு புது சலுகைகளை அறிவித்து இருக்கிறது.
    • இரண்டு புது சலுகைகளும் தினமும் 2.5 ஜிபி டேட்டா, அன்லிமிடெட் அழைப்புகளை வழங்குகின்றன.

    ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் இரண்டு புதிய பிரீபெயிட் சலுகைகளை அறிவித்து இருக்கிறது. இவற்றின் விலை ரூ. 899 மற்றும் ரூ. 349 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன. இரு புதிய ஜியோ சலுகைகளும் மைஜியோ செயலி, ஜியோ வலைதளம் மற்றும் இதர மூன்றாம் தரப்பு வலைதளங்களில் பட்டியலிடப்பட்டு உள்ளன.

    புதிதாக அறிவிக்கப்பட்டு இருக்கும் ஜியோ சலுகைகளில் அதிகபட்சம் 90 நாட்களுக்கான வேலிடிட்டி, அன்லிமிடெட் அழைப்புகள், 2.5 ஜிபி டேட்டா மற்றும் இதர பலன்கள் வழங்கப்படுகின்றன. ரிலையன்ஸ் ஜியோ ரூ. 349 சலுகை தினமும் 2.5 ஜிபி டேட்டா, அன்லிமிடெட் வாய்ஸ் கால் உள்ளிட்டவைகளை 30 நாட்கள் வேலிடிட்டியுடன் வழங்குகிறது. இதில் வேலிடிட்டி காலம் முழுக்க 75 ஜிபி டேட்டா கிடைக்கும்.

    இத்துடன் தினமும் 100 எஸ்எம்எஸ், ஜியோ டிவி, ஜியோசினிமா, ஜியோசெக்யுரிட்டி மற்றும் ஜியோகிளவுட் உள்ளிட்டவைகளுக்கான சப்போர்ட் வழங்கப்படுகிறது. இதுதவிர அறிமுக சலுகையாக 5ஜி டேட்டாவும் பயனர்களுக்கு வழங்கப்படுகிறது. ஜியோ ரூ. 899 சலுகையில் அன்லிமிடெட் வாய்ஸ் காலிங்,தினமும் 2.5 ஜிபி டேட்டா, 100 எஸ்எம்எஸ் போன்ற பலன்கள் வழங்கப்படுகிறது. இந்த சலுகையின் வேலிடிட்டி 90 நாட்கள் ஆகும்.

    இந்த சலுகையிலும் ஜியோடிவி, ஜியோசினிமா, ஜியோசெக்யுரிட்டி மற்றும் ஜியோகிளவுட் சந்தா வழங்கப்படுகிறது. ஜியோ ரூ. 349 சலுகை போன்றே ரூ. 899 சலுகையிலும் ஜியோ அறிமுக சலுகை பொருந்தும். ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் இதுவரை நாடு முழுக்க 100 நகரங்களில் ஜியோ 5ஜி சேவையை வழங்கி இருக்கிறது. மேலும் இந்த ஆண்டு இறுதிக்குள் நாடு முழுக்க 5ஜி சேவைகளை வெளியிட ரிலையன்ஸ் ஜியோ திட்டமிட்டுள்ளது.

    • டாடா மோட்டார்ஸ் நிறுவன எலெக்ட்ரிக் கார் மாடல்கள் இந்தியாவில் தொடர்ந்து நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன.
    • ஆட்டோ எக்ஸ்போ 2023 நிகழ்வில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது சியெரா எலெக்ட்ரிக் ப்ரோடோடைப் மாடலை காட்சிக்கு வைத்தது.

    டாடா மோட்டார்ஸ் நிறுவனம் கடந்த ஆண்டு 50 ஆயிரம் எலெக்ட்ரிக் கார்களை விற்பனை மைல்கல்லுடன் நிறைவு செய்தது. உள்நாட்டு சந்தையில் டாடா நெக்சான் EV மற்றும் டிகோர் EV மாடல்கள் தொடர்ந்து நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன. இதைத் தொடர்ந்து கடந்த ஆண்டே டியாகோ EV மாடல் கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது.

    இவை தவிர டாடா மோட்டார்ஸ் நிறுவனம் உற்பத்திக்கு கிட்டத்தட்ட தயார் நிலையில் இருக்கும் ஹேரியர் EV மற்றும் சியெரா EV மாடல்களை ஆட்டோ எக்ஸ்போ 2023 நிகழ்வில் காட்சிக்கு வைத்தது. அந்த வகையில், ஜனவரி 2023 மாதத்திற்கு டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு சலுகைகளை அறிவித்து இருக்கிறது.

    அதன்படி டாடா நெக்சான் EV பிரைம் 2022 மாடலுக்கு ரூ. 40 ஆயிரம் தள்ளுபடி, ரூ. 25 ஆயிரம் எக்சேன்ஜ் போனஸ், ரூ. 15 ஆயிரம் கார்ப்பரேட் போனஸ் வழங்கப்படுகிறது. அந்த வகையில் பயனர்கள் மொத்தத்தில் ரூ. 80 ஆயிரம் எக்சேன்ஜ் போனஸ் வகையில் தள்ளுபடியாக பெற முடியும். டாடா நெக்சான் EV பிரைம் XM வேரியண்ட் தவிர வேறு அனைத்து மாடல்களுக்கும் கிடைக்கும்.

    2022 நெக்சான் EV மேக்ஸ் மாடலுக்கு ரூ. 25 ஆயிரம் தள்ளுபடி, ரூ. 25 ஆயிரம் எக்சேன்ஜ் போனஸ், ரூ. 10 ஆயிரம் கார்ப்பரேட் போனஸ் வழங்கப்படுகிறது. டாடா நெக்சான் EV மேக்ஸ் வாங்கும் போது வாடிக்கையாளர்கள் அதிகபட்சம் ரூ. 60 ஆயிரம் வரை சேமிக்க முடியும். 2022 டிகோர் EV மாடலுக்கு்ம இதே போன்ற சலுகைகள் வழங்கப்படுகின்றன.

    டாடா மோட்டார்ஸ் நிறுவனம் 2023 நெக்சான் EV மாடல்களின் விலையை சமீபத்தில் அறிவித்தது. இதில் நெக்சான் EV மேக்ஸ் ரேன்ஜ் நீட்டிக்கப்பட்டு, சில வேரியண்ட்களின் விலை குறைக்கப்பட்டுள்ளது. 2023 நெக்சான் EV பிரைம் மாடலுக்கு ரூ. 25 ஆயிரம் எக்சேன்ஜ் போனஸ், ரூ. 20 ஆயிரம் கிரீன் போனஸ் மற்றும் ரூ. 15 ஆயிரம் கார்ப்பரேட் தள்ளுபடி வழங்கப்படுகிறது.

    2023 டாடா நெக்சான் EV மேக்ஸ் வாங்குவோருக்கு ரூ. 25 ஆயிரம் எக்சேன்ஜ் போனஸ், ரூ. 15 ஆயிரம் கிரீன் போனஸ், ரூ. 10 ஆயிரம் கார்ப்பரேட் தள்ளுபடி வழங்கப்படுகிறது. 2023 டாடா டிகோர் EV மாடலுக்கு ரூ. 25 ஆயிரம் எக்சேன்ஜ் போனஸ், ரூ. 15 ஆயிரம் கிரீன் போனஸ் மற்றும் ரூ. 10 ஆயிரம் கார்ப்பரேட் தள்ளுபடி வழங்கப்படுகிறது.

    • பாரதி ஏர்டெல் நிறுவனம் தனது குறைந்த பட்ச சலுகை விலையை தொடர்ச்சியாக மாற்றியமைத்து வருகிறது.
    • விலை உயர்வு தவிர நாடு முழுக்க 5ஜி சேவைகளை வெளியிடும் பணிகளிலும் ஏர்டெல் ஈடுபட்டுள்ளது.

    பாரதி ஏர்டெல் நிறுவனம் தனது குறைந்த விலை பிரீபெயிட் சலுகைகளின் விலையை உயர்த்தி இருக்கிறது. தற்போது நாட்டின் ஏழு டெலிகாம் வட்டாரங்களில் இந்த விலை உயர்வு அமலுக்கு வந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதன் மூலம் ஏர்டெல் நிறுவனம் ஒன்பது டெலிகாம் வட்டாரங்களில் விலை உயர்வை அமலுக்கு கொண்டுள்ளது.

    கடந்த ஆண்டு நவம்பர் மாத வாக்கில் ஹரியானா மற்றும் ஒடிசாவில் குறைந்த விலையில் கிடைத்த பிரீபெயிட் சலுகை விலையை 57 சதவீதம் அதிகரித்தது. தற்போது நாட்டின் ஏழு டெலிகாம் வட்டாரங்களில் குறைந்த பட்ச பிரீபெயிட் சலுகை விலை உயர்த்தப்பட்டு இருக்கிறது. இது குறித்து வெளியாகி இருக்கும் தகவல்களில் ஏர்டெல் ரூ. 99 சலுகை விலை தற்போது ரூ. 155 ஆக அதிகரித்துள்ளது.

    ஏர்டெல் ரூ. 99 விலை சலுகை 28 நாட்கள் வேலிடிட்டி, 200MB டேட்டா, உள்ளூர் மற்றும் எஸ்டிடி அழைப்புகளுக்கு நொடிக்கு 2.5 பைசா கட்டணம் போன்ற பலன்களை வழங்கியது. தற்போது புதிய குறைந்த விலை பிரீபெயிட் சலுகையான ரூ. 155 வெறும் 24 நாட்கள் வேலிடிட்டியை வழங்குகிறது.

    இதில் 1GB டேட்டா, 300 எஸ்எம்எஸ், அன்லிமிடெட் உள்ளூர் மற்றும் எஸ்டிடி அழைப்புகள், இலவச ஹெலோ டியூன்கள், வின்க் மியூசிக் சந்தா வழங்கப்படுகிறது. இந்த விலை உயர்வு நாட்டின் ஏழு டெலிகாம் வட்டாரங்களில் அமலுக்கு வந்துள்ளது. மேலும் இவை எந்தெந்த பகுதிகள் என்ற விவரம் தற்போது மர்மமாகவே உள்ளது.

    "சிறந்த வாடிக்கையாளர் சேவையை வழங்கும் எங்களின் குறிக்கோளை அடையும் வகையில், நாங்கள் மீட்டர்டு சலுகையை நிறுத்திவிட்டு, ரூ. 155 விலையில் எண்ட்ரி லெவல் சலுகையை அறிவித்து இருக்கிறோம். இதில் 1GB டேட்டா, 300 எஸ்எம்எஸ் போன்ற பலன்கள் உள்ளன. இது பயனர்களுக்கு சிறப்பான வசதிகளை வழங்கும்," என ஏர்டெல் செய்தி தொடர்பாளர் தனியார் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்து இருக்கிறார்.

    • ஏர்டெல் நிறுவனம் இந்திய சந்தையில் 5ஜி வெளியீட்டு பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறது.
    • 5ஜி வெளியீடு மட்டுமின்றி பிரீபெயிட் சலுகைகளை மாற்றியமைத்து வருகிறது.

    ஏர்டெல் நிறுவனம் இரண்டு புது பிரீபெயிட் சலுகைகளை இந்திய பயனர்களுக்கு அறிவித்து இருக்கிறது. புது சலுகைகளின் விலை ரூ. 489 மற்றும் ரூ. 509 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இவற்றில் முறையே 50 ஜிபி மற்றும் 60 ஜிபி டேட்டா வழங்கப்படுகின்றன. இவற்றின் வேலிடிட்டி ஒரு மாதம் ஆகும்.

    புதிய ரூ. 489 ஏர்டெல் சலுகைகள் 30 நாட்கள் வேலிடிட்டி, அன்லிமிடெட் உள்ளூர், எஸ்டிடி மற்றும் ரோமிங் அழைப்புகள் வழங்கப்படுகின்றன. இத்துடன் 50 ஜிபி அதிவேக டேட்டா மற்றும் 300 எஸ்எம்எஸ் உள்ளிட்ட பலன்கள் வழங்கப்படுகின்றன.

    ஏர்டெல் ரூ. 509 சலுகையில் அன்லிமிடெட் உள்ளூர், எஸ்டிடி மற்றும் ரோமிங் அழைப்புகள், 60 ஜிபி அதிவேக டேட்டா, 300 எஸ்எம்எஸ், ஒரு மாத வேலிடிட்டி வழங்கப்படுகிறது. இரு சலுகைகளிலும் நிர்ணயிக்கப்பட்ட பயன்பாட்டை கடந்ததும், எஸ்எம்எஸ் ஒன்றுக்கு ரூ. 1, 1MB டேட்டாவுக்கு ஒரு பைசா கட்டணம் வசூலிக்கப்படும்.

    இதுதவிர இரு சலுகைகளிலும் ஏர்டெல் தேங்ஸ் பலன்களான மூன்று மாதங்களுக்கு அப்போலோ 24|7 சர்கிள் சந்தா, ஃபாஸ்டேகிற்கு ரூ. 100 கேஷ்பேக், இலவச ஹெலோடியூன் மற்றும் வின்க் மியூசிக் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. இரு சலுகைகளும் ஏர்டெல் தேங்ஸ் ஆப் மற்றும் ஏர்டெல் அதிகாரப்பூர்வ வலைதளத்தில் பட்டியலிடப்பட்டுள்ளன.

    ×