என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "officers inspection"
- அமராவதி அணையில் துவங்கி கரூர் திருமுக்கூடலூர் பகுதியில் காவிரி ஆற்றுடன் அமராவதி ஆறு இணைகிறது.
- விவசாயத்திற்கு மட்டுமின்றி தென்னைநார் தொழிற்சாலை உள்ளிட்ட பல்வேறு தொழிற்சாலைகளுக்கும் நீர் எடுக்கப்படுகிறது.
உடுமலை:
திருப்பூர் மாவட்டம் உடுமலை அமராவதி அணை வாயிலாக திருப்பூர் ,கரூர் மாவட்டத்தில் 54, 637 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. வழி ஓரத்தில் உள்ள கிராமங்களுக்கும் குடிநீர் ஆதாரமாக உள்ளது.
அமராவதி அணையில் துவங்கி கரூர் திருமுக்கூடலூர் பகுதியில் காவிரி ஆற்றுடன் அமராவதி ஆறு இணைகிறது. திருப்பூர் ,கரூர் மற்றும் திண்டுக்கல் மாவட்டங்கள் வழியாக 148 கி.மீ தூரம் பயணிக்கும் அமராவதி ஆற்றின் இரு கரைகளிலும் நூற்றுக்கணக்கான மின் மற்றும் ஆயில் மோட்டார் வைத்து சட்ட விரோதமாக நீர் எடுக்கப்படுகிறது.விவசாயத்திற்கு மட்டுமின்றி தென்னைநார் தொழிற்சாலை உள்ளிட்ட பல்வேறு தொழிற்சாலைகளுக்கும் நீர் எடுக்கப்படுகிறது. ஒரு சில பகுதிகளில் ஆற்றுக்குள்ளேயே குழி தோண்டி மோட்டார்கள் அமைக்கப்பட்டுள்ளன.
பாசனம் மற்றும் குடிநீருக்கு திறக்கப்படும் நீர் பெரும் அளவு திருடப்படுவதால் பாசன நிலங்களில் வறட்சியும், அமராவதி ஆற்றின் கரையோர கிராமங்களில் குடிநீர் தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது. எனவே அமராவதி ஆற்றில் சட்ட விரோதமாக அமைக்கப்பட்டுள்ள மோட்டார்களை அகற்ற வேண்டும் என விவசாயிகளும் உள்ளாட்சி நிர்வாகத்தினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதையடுத்து ஆற்றில் சட்ட விரோதமாக அமைக்கப்பட்டுள்ள மின் மோட்டார்களை அகற்றவும் முறைகேடாக பெறப்பட்டுள்ள மின் இணைப்புகளை துண்டிக்கும் பணியிலும் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.
இது குறித்து நீர்வளத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-
உடுமலை ,மடத்துக்குளம் ,தாராபுரம், அரவக்குறிச்சி உள்ளிட்ட வழியோரத்தில் ஆற்றின் இரு புறமும் அதிகாரிகள் குழு ஆய்வு செய்து வருகிறது. முறைகேடாக அமைக்கப்பட்டுள்ள மோட்டார்கள்,பைப் கட்டுமானங்களை அகற்றி பறிமுதல் செய்யப்படுவதோடு போலீசில் புகார் தெரிவித்து வழக்கு பதிவு செய்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
ஆற்றின் கரையில் கிணறுகள் அமைத்தும் மோட்டார்கள் அமைத்தும் நீர் ஊறிஞ்சபடுவது கண்டறியப்பட்டால் விவசாய மின் இணைப்பை துண்டிக்க மின்வாரியத்திற்கு பரிந்துரை செய்யப்பட்டு அந்தப் பணிகளும் நடந்து வருகிறது. ஆற்றில் சட்ட விரோதமாக நீர் எடுத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.
- தேனி மாவட்டம் லோயர்கேம்பில் பெரியாறு மின் உற்பத்தி நிலையம் உள்ளது.
- அணைப்பகுதியில் ஆய்வு நடத்திய முதன்மை பொறியாளர் இரைச்சல் பாலத்தை ஆய்வு செய்தார். மேலும் அவருடன் தமிழக பொறியாளர்களும் கலந்து கொண்டனர்.
கூடலூர்:
தேனி மாவட்டம் லோயர்கேம்பில் பெரியாறு மின் உற்பத்தி நிலையம் உள்ளது. முல்லை–ப்பெரியாறு அணையில் இருந்து தமிழக பகுதிக்கு திறந்து விடப்படும் தண்ணீர் போர்பை அணைக்கு சென்று அங்குள்ள 4 ராட்சத குழாய்கள் வழியாக சென்று மின்சார உற்பத்தி நடைபெறுகிறது.
மின் உற்பத்தி இல்லாத காலங்களில் தண்ணீர் போர்பை அணை அருகில் இைரச்சல் பாலம் வழியாக தேனி மாவட்ட மக்கள் மற்றும் கால்நடை பயன்பாட்டிற்காக 100 கன அடி தண்ணீர் முல்லை ப்பெரியாறு வழியாக திறந்து விடப்படுகிறது.
மழை வெள்ள காலங்களில் இைரச்சல் பாலம் வழியாக கூடுதல் தண்ணீர் தமிழக பகுதிக்கு வெளியேற்றப்படும். கடந்த சில நாட்களுக்கு முன்பு அணைப்பகுதியில் ஆய்வு நடத்திய முதன்மை பொறியாளர் ஞானசேகரன் இரைச்சல் பாலத்தை ஆய்வு செய்தார். மேலும் அவருடன் தமிழக பொறியாளர்களும் கலந்து கொண்டனர்.
மழை வெள்ள காலங்களில் இதுவரை அதிகப்படியாக இரைச்சல் பாலம் வழியாக வினாடிக்கு 4 ஆயிரம் கன அடி தண்ணீர் சென்றுள்ளது. வரும் காலங்களில் அதுபோல் செல்வதற்கு தயார்படுத்தி வருகிறோம். இதன் மூலம் தண்ணீர் வீணாகி செல்வது நிறுத்தப்பட்டு மக்களுக்கு பயன்படும் வகையில் மின் உற்பத்திற்க்கோ அல்லது விவசாய பயன்பாட்டிற்கோ உதவும் என எதிர்பார்க்கப்ப–டுகிறது.
முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 129.40 அடியாக உள்ளது. வரத்து நேற்று 88 கன அடியாக இருந்த நிலையில் இன்று 464 கன அடியாக அதிகரித்துள்ளது. திறப்பு 700 கன அடி. இருப்பு 4568 மி.கன அடி.
வைகை அணையின் நீர்மட்டம் 54.33 அடி. வரத்து 298கன அடி. திறப்பு 869 கன அடி. இருப்பு 2612 மி.கன அடி. மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 48 அடி. வரத்து 58 கன அடி.
சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 85.43 அடி. வரத்து 9 கன அடி. திறப்பு 6 கன அடி.
பெரியாறு 27, தேக்கடி 18, கூடலூர் 4.6 மி.மீ. மழை அளவு பதிவாகி உள்ளது.
நிலக்கோட்டை:
நிலக்கோட்டை பூ மார்க்கெட்டிற்கு தினந்தோறும் ஏராளமான விவசாயிகள் பூக்களை விற்பனைக்காக கொண்டு வருகின்றனர். இதனை வாங்குவதற்கு உள்ளூர் மற்றும் வெளியூர் வியாபாரிகள் வருகின்றனர்.
இவர்களுக்கு பூக்கள் பிளாஸ்டிக் பைகளிலேயே வழங்கப்பட்டு வந்தது. நேற்று முதல் தமிழகம் முழுவதும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டதால் அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். அதன்படி நிலக்கோட்டை பேரூராட்சி செயல் அலுவலர் கோட்டைச்சாமி தலைமையில் இன்று அதிகாரிகள் ஆய்வுக்கு சென்றனர்.
பிளாஸ்டிக் பைகளில் பூக்களை வாங்கிச்சென்ற வியாபாரிகளிடம் அதனை பறிமுதல் செய்தனர். இதனால் ஆவேசமடைந்த வியாபாரிகள் எங்கு பிளாஸ்டிக் தயாரிக்கப்படுகிறதோ அங்கு பறிமுதல் செய்யாமல் எங்களை ஏன் தடுக்கிறீர்கள் என அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
பூமார்க்கெட்டில் இருந்த பல கடைகளிலும் பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்தியதை பார்த்து அதனை பறிமுதல் செய்தனர். இதனால் வியாபாரிகளுக்கும், அதிகாரிகளுக்கும் இடையே வாக்கு வாதம் ஏற்பட்டது. அதன்பின்னர் இன்று ஒருநாள் அவகாசம் கொடுப்பதாகவும், நாளைமுதல் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுவத்துவது தெரியவந்தால் அதனை பறிமுதல் செய்வதோடு அபராதமும் விதிக்கப்படும் என எச்சரித்து சென்றனர்.
இந்த சம்பவத்தனால் பூ மார்க்கெட்டில் பரபரப்பு ஏற்பட்டது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்