என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "old man dead"
- புதிய பஸ் நிலைய பகுதியில் சுமார் 65 வயது மதிக்கத்தக்க முதியவர் இறந்து கிடந்தார்.
- இதுகுறித்து தகவல் அறிந்து சென்ற பள்ளப்பட்டி போலீசார் முதியவரின் உடலை மீட்டு சேலம் அரசு மருத்துவமனையின் பிரேத பரிசோதனை கூட்டத்திற்கு அனுப்பி வைத்தனர்.
சேலம்:
சேலம் புதிய பஸ் நிலைய பகுதியில் சுமார் 65 வயது மதிக்கத்தக்க முதியவர் இறந்து கிடந்தார். இதுகுறித்து தகவல் அறிந்து சென்ற பள்ளப்பட்டி போலீசார் முதியவரின் உடலை மீட்டு சேலம் அரசு மருத்துவமனையின் பிரேத பரிசோதனை கூட்டத்திற்கு அனுப்பி வைத்தனர். இறந்த முதியவர் யார்? எந்த பகுதியை சேர்ந்தவர்? என்பது தெரியவில்லை. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- 4 ரோடு பகுதியில் கடந்த 19-ந் தேதி, 60 வயது மதிக்கத்தக்க முதியவர் இறந்த நிலையில் கிடந்தார்.
- பள்ளப் பட்டி போலீசார், முதியவர் உடலை மீட்டு, சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தினர்.
சேலம்:
சேலம் 4 ரோடு பகுதியில் கடந்த 19-ந் தேதி, 60 வயது மதிக்கத்தக்க முதியவர் இறந்த நிலையில் கிடந்தார். இதுகுறித்து தகவல் அறிந்து சென்ற பள்ளப் பட்டி போலீசார், முதியவர் உடலை மீட்டு, சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தினர்.
இதில், அந்த முதியவர் 4 ரோடு பகுதியில் பிச்சை எடுத்து கொண்டிருந்ததும், உடல்நிலை பாதிக்கப்பட்டு அவர் இறந்தது தெரிய வந்தது. ஆனால், இவரது பெயர், முகவரி தெரியாத நிலை யில், போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வரு கின்றனர்.
- 55 வயது மதிக்கத்தக்க தொழிலாளி ஒருவர் இறந்து கிடந்தார்.
- இறந்தவர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மங்கலம் :
திருப்பூர் மாவட்டம் பூமலூர் ஊராட்சி சரஸ்வதி கார்டன் அருகே உள்ள பள்ளத்தில் சுமார் 55 வயது மதிக்கத்தக்க தொழிலாளி ஒருவர் இறந்து கிடந்தார். பின்னர் அவ்வழியாக ஆடு மேய்த்துக்கொண்டிருந்த சிலர் இதனை பார்த்து மங்கலம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.சம்பவ இடத்திற்கு வந்த மங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜவேல் மற்றும் போலீசார் இறந்தவர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
பூமலூர் கிராம நிர்வாக அதிகாரி மங்கலம் போலீசில் அளித்த புகாரின் பேரில் மங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து இறந்து கிடந்த நபர் யார்?எந்த ஊரை சேர்ந்தவர் ? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- நெல்லிக்குப்பம் செல்லும் சாலை ஓரமாக 60 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் பிணமாக கிடந்தார்.
- குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து இறந்து கிடந்த முதியவர் யார் எந்த ஊரைச் சேர்ந்தவர் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடலூர்:
கடலூர் செம்மண்டலத்தில் உள்ள நெல்லிக்குப்பம் செல்லும் சாலை ஓரமாக 60 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் பிணமாக கிடந்தார். இதை அந்த வழியாக சென்ற பொதுமக்கள் பார்த்து கடலூர் புதுநகர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து இறந்து கிடந்த முதியவர் யார் எந்த ஊரைச் சேர்ந்தவர் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- மோட்டார் சைக்கிள் மோதியதில் தூக்கி வீசப்பட்ட முதியவர் தலையில் பலத்தகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
- அவருக்கு சுமார் 60 வயது இருக்கும். அவர் யார்? என்பது தெரியவில்லை.
போரூர்:
கோயம்பேடு, காளியம்மன் கோவில் சாலையில் கழிவுநீர் வாரிய அலுவலகம் அருகே நேற்று இரவு முதியவர் ஒருவர் சாலையை கடக்க முயன்றார்.
அப்போது அவ்வழியாக வந்த மோட்டார் சைக்கிள் முதியவர் மீது வேகமாக மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட முதியவர் தலையில் பலத்தகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
அவருக்கு சுமார் 60 வயது இருக்கும். அவர் யார்? என்பது தெரியவில்லை. இதுகுறித்து கோயம்பேடு போக்குவரத்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- கம்பத்தில் பார்வையற்ற முதியவர் கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்தார்
- கிணற்றில் விழுந்து முதியவர் சாவு
கம்பம் :
கம்பம் விவேகானந்தர் தெருவை சேர்ந்தவர் மாயாண்டி(82). இவருக்கு கண்பார்வை குறைவாக இருந்ததுடன் உடல்நலக்குறைவும் ஏற்பட்டது.தனியாக தோட்டத்து வீட்டில் வசித்து வந்தார். சம்பவத்தன்று தாகம் எடுத்ததால் தண்ணீர் குடிப்பதற்காக அருகில் உள்ள அறைக்கு சென்றார்.
அப்போது எதிர்பாராதவிதமாக தோட்டத்து கிணற்றில் தவறிவிழுந்து உயிரிழந்தார்.
இதுகுறித்து அவரது மகன் முருகன் கொடுத்த புகாரின்பேரில் கம்பம் வடக்கு போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
புதுச்சேரி:
வில்லியனூரில் பிரசித்தி பெற்ற திருக்காமீஸ்வரர் கோவில் உள்ளது. இக் கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்வது வழக்கம்.
நேற்று இரவு பக்தர்கள் தரிசனத்துக்கு பிறகு கோவில் பூட்டப்பட்டது. கோவில் காவலாளி காவல் பணியில் ஈடுபட்டு இருந்தார்.
கோவில் குளத்தை காவலாளி சுற்றி வந்து பார்த்த போது குளத்தில் முதியவர் ஒருவர் பிணமாக மிதப்பதை கண்டார். உடனே இது பற்றி வில்லியனூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
போலீசார் விரைந்து வந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கதிர் காமம் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் குளத்தில் பிணமாக மிதந்த முதியவர் வில்லியனூர் புதுநகர் 2-வது குறுக்கு தெருவை சேர்ந்த ஜெயராமன் (வயது 80), தச்சுத்தொழிலாளி என்பது தெரியவந்தது. அவர், குளத்தில் கால் கழுவ சென்றபோது, தண்ணீரில் தவறி விழுந்து இறந்திருக்கலாம் என கூறப்படுகிறது.
இதுகுறித்து வில்லியனூர் உதவி சப்-இன்ஸ்பெக்டர் செல்வராஜ், போலீஸ்காரர் சிவக்குமார் ஆகியோர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்