என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Omlet"
- வீடியோ வைரலாகி 80 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளை குவித்தது.
- வீடியோவை பார்த்த பயனர்கள் சிலர் அந்த பெண்ணின் செயலை விமர்சித்து கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
இந்தியாவில் கடந்த மாதம் முதலே பல நகரங்களிலும் இதுவரை இல்லாத அளவுக்கு அதிக வெப்பம் பதிவாகி வருகிறது. இந்த வெப்ப அலைக்கு காலநிலை மாற்றம் முக்கிய காரணம் என நிபுணர்கள் கூறுகின்றனர். இந்த வெப்ப அலையால் உடல் சோர்வு, வெப்ப பக்கவாதம் போன்றவற்றால் பலரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த கவலைகளுக்கு மத்தியில் வெயிலின் உக்கிரத்தை காட்டும் ஏராளமான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன.
அந்த வகையில் சாலை ஓரத்தில் பெண் ஒருவர் ஆம்லெட் போட்ட வீடியோ ஒன்று இணையத்தில் பரவி வருகிறது. அதில் சிவப்பு நிற உடை அணிந்த பெண் ஒருவர் சாலை ஓரத்தில் அமர்ந்து தண்ணீர் ஊற்றி சாலையை சுத்தம் செய்கிறார். பின்னர் கடாயில் ஆம்லெட் போடுவது போன்று சாலையில் எண்ணெயை ஊற்றி, முட்டையை உடைத்து போட்டு நேரடியாக சாலையில் ஆம்லெட் சமைக்கும் காட்சிகள் உள்ளன.
இந்த வீடியோ வைரலாகி 80 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளை குவித்தது. வீடியோவை பார்த்த பயனர்கள் சிலர் அந்த பெண்ணின் செயலை விமர்சித்து கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
- குழந்தைகளுக்கு இதை ஸ்நாக்ஸ் போன்று கொடுக்கலாம்.
- குடைமிளகாயில் வைட்டமின் சி நிறைந்துள்ளது.
தேவையான பொருட்கள்
குடைமிளகாய் - ஒன்று
முட்டை - 2
வெங்காயம் - ஒன்று
தக்காளி - 1 (விருப்பப்பட்டால்)
ப.மிளகாய் - 1
கேரட் துருவியது - 2 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
மஞ்சள் தூள் - கால் ஸ்பூன்
மிளகுத்தூள் - அரை ஸ்பூன்
எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை
தக்காளி, வெங்காயம், ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
குடைமிளகாயை மேற்பகுதி மற்றும் கீழ்பகுதி நறுக்கி விட்டு நடுவில் உள்ள விதையை எடுத்து விட வேண்டும் பின்பு அதனை வட்ட வட்டமாக நறுக்கிக் கொள்ள வேண்டும்
ஒரு பௌலில் முட்டையை உடைத்து விட்டு அதனுடன் வெங்காயம், தக்காளி, கேரட், ப.மிளகாய், மஞ்சள் தூள், மிளகு தூள், உப்பு சேர்த்து நன்கு அடித்துக் கொள்ள வேண்டும்.
தோசை கல்லை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி நறுக்கிய குடமிளகாயை அதில் வைக்கவேண்டும். இருபுறமும் குடைமிளகாயை திருப்பி திருப்பி விட்டு பின்னர் அதனுள்ளே அடித்து வைத்த முட்டை கலவையை ஊற்ற வேண்டும்.
ஒருபுறம் வெந்ததும் மறுபுறம் திருப்பி போட்டு இருபுறமும் திருப்பி திருப்பி விட்டு மிதமான தீயில் வேக வைத்து எடுக்க வேண்டும்.
இப்போது சுவையான குடைமிளகாய் ஆம்லெட் ரெடி
லைஃப்ஸ்டைல் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health
- உடல் எடையை குறைக்க நினைப்பவர்களுக்கு இது சிறந்த உணவு.
- இந்த ரெசிபியில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது.
தேவையான பொருட்கள்
முட்டை வெள்ளை கரு - 4
வெங்காயம் - 1
பூண்டு - 3 பற்கள்
ப.மிளகாய் - 1
பச்சை குடைமிளகாய் - பாதி
சிவப்பு குடைமிளகாய் - பாதி
காளான் - 7
எண்ணெய், உப்பு - தேவையான அளவு
மிளகு தூள் - 1 தேக்கரண்டி
கொத்தமல்லி, வெங்காயத்தாள் - சிறிதளவு
செய்முறை:
* வெங்காயம், ப.மிளகாய், பூண்டு, கொத்தமல்லி, வெங்காயத்தாளை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* காளான், குடை மிளகாயை நீளவாக்கில் மெலிதாக நறுக்கிகொள்ளவும்.
* முட்டை வெள்ளை கருவில் உப்பு மற்றும் மிளகு தூள் சேர்த்து நன்கு அடித்துக்கொள்ளவும் .
* கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் நறுக்கிய வெங்காயம், பூண்டு, பச்சை குடைமிளகாய், சிவப்பு குடைமிளகாய் சேர்த்து வதக்கவும்.
* பின்பு நறுக்கிய காளானை சேர்த்து 2 நிமிடம் வதக்கவும்.
* அடுத்து அதில் உப்பு, மிளகு தூள் சேர்த்து கலந்து 5 நிமிடம் வதக்கி இறக்கி வைக்கவும்.
* ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் அடுப்பை குறைந்த தீயில் வைத்து அடித்த வைத்துள்ள முட்டையை ஊற்றி கடாயை மூடவும்.
* பிறகு வேகவைத்த காய்கறிகளை முட்டையின் மீது பரப்பிவிட்டு பின்பு கடாயை மூடி வேகவிடவும்.
* இப்போது முட்டை வெள்ளை கரு வெஜிடபிள் ஆம்லெட் தயார்!
* உங்களுக்கு விருப்பமான காய்கறிகளையும் இதில் சேர்த்து செய்யலாம்.
ஆரோக்கியம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health
- டயட்டில் இருப்பவர்களுக்கு சிறந்த உணவு இது.
- இன்று இதன் செய்முறையை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
கடலைப் பருப்பு, துவரம் பருப்பு, பாசிப்பருப்பு - தலா 50 கிராம்
உளுந்து, முந்திரி, மக்காச்சோளம் - 50 கிராம்
முழு கோதுமை - 50 கிராம்
பச்சை மிளகாய் - 2
பெரிய வெங்காயம் - 1
கறிவேப்பிலை, கொத்தமல்லி, மஞ்சள் தூள், மிளகுத்தூள், உப்பு - தேவையான அளவு
செய்முறை:
வெங்காயம், கொத்தமல்லி, ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
கடலைப் பருப்பு, துவரம் பருப்பு, பாசிப்பருப்பு, உளுந்து, முந்திரி, மக்காச்சோளம், கோதுமை ஆகியவற்றை தனித்தனியாக வறுத்து, கொரகொரப்பாக அரைக்கவும்.
அத்துடன் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து தோசை மாவு பதத்துக்கு நன்றாகக் கரைத்துக்கொள்ள வேண்டும்.
பின்பு நறுக்கிய வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய், கறிவேப்பிலை, கொத்தமல்லி, மஞ்சள் தூள், மிளகுத்தூள், உப்பு ஆகியவற்றை கரைத்த மாவுடன் கலந்து ஆம்லெட் போல் தோசைக்கல்லில் ஊற்றி, வேக வைத்து எடுத்தால் சுவையான 'சைவ ஆம்லெட்' தயார்.
ஆரோக்கியம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health
- குழந்தைகளுக்கு மேகி நூடுல்ஸ் என்றால் மிகவும் பிடிக்கும்.
- இன்று மேகி நூடுல்ஸ், முட்டை சேர்த்து ஆம்லெட் செய்முறையை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
மேகி பாக்கெட் - 1
முட்டை - 2
கேரட் துருவல் - 2 டீஸ்பூன்
குடைமிளகாய் - 1
தக்காளி - 1 (சிறியது)
ப.மிளகாய் - 3
வெங்காயம் - 1 (சிறியது)
உப்பு, எண்ணெய் - சிறிதளவு
மஞ்சள் - 1 சிட்டிகை
கொத்தமல்லி - சிறிதளவு
செய்முறை :
வெங்காயம், ப.மிளகாய் , குடைமிளகாய், தக்காளி, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும் .
மேகியை கடாயில் போட்டு 1 கப் தண்ணீர் ஊற்றி வேக வைத்துக்கொள்ளுங்கள். அதில் இருக்கும் மசாலாவை மட்டும் போட்டு வேக வைத்தால் போதும். தண்ணீர் இறுகும்வரை வேக வேண்டும். தண்ணீர் அதிகமாகிவிட்டால் வடித்துக்கொள்ளுங்கள். மேகி குழையாமல் உதிரியாக இருக்க வேண்டும்.
ஒரு பாத்திரத்தில் முட்டையை உடைத்து ஊற்றி அதில் நறுக்கிய வெங்காயம், ப.மிளகாய், கேரட் துருவல், குடைமிளகாய், தக்காளி, கொத்தமல்லி, உப்பு சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.
தோசை தவாவை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு சூடானதும் முட்டை கலவையை நன்கு பரப்பி ஊற்றுங்கள். தீ குறைத்து வைத்து அதன் மேலே வேக வைத்த மேகியை தூவினாற்போல் போடுங்கள். சிறு தீயிலேயே 2 நிமிடங்கள் அப்படியே விடுங்கள்.
பின் தோசையை மடிப்பது போல் ஒரு புறமாக மடித்துக்கொள்ளுங்கள். திருப்பிப் போடக் கூடாது. மடித்த வாக்கில் அப்படியே தட்டி எடுத்து வைத்து பரிமாறவும்.
அவ்வளவுதான் மேகி நூடுல்ஸ் ஆம்லெட் தயார்.
- குழந்தைகளுக்கு சீஸ் என்றால் மிகவும் பிடிக்கும்.
- சீஸ் வைத்து பல்வேறு ரெசிபிகளை செய்யலாம்.
தேவையான பொருட்கள் :
முட்டை - 3,
குடைமிளகாய் - 1,
முட்டைகோஸ் - 100 கிராம், (விருப்பப்பட்டால்)
கேரட்- 1,
பெரிய வெங்காயம் - 1,
பச்சை மிளகாய் - 3,
கொத்தமல்லித்தழை - சிறிதளவு,
சீஸ் - ஒரு சிறு கட்டி,
எண்ணெய் - தேவையான அளவு,
மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை,
உப்பு - சுவைக்கேற்ப.
செய்முறை:
முட்டையை நன்கு அடித்து வைத்துக்கொள்ளுங்கள்.
சீஸை துருவிக்கொள்ளவும்.
வெங்காயம், பச்சை மிளகாய், குடைமிளகாய், கொத்தமல்லி, கேரட், கோஸ் எல்லாவற்றையும் பொடியாக நறுக்கிக்கொள்ளுங்கள்.
காய்கறிக் கலவையுடன் மஞ்சள்தூள், உப்பு சேர்த்து கலந்துவைத்துக்கொள்ளுங்கள்.
அடித்து வைத்திருக்கும் முட்டையில், நறுக்கிய காய்கறிகளைக் கலந்து வைத்துக்கொள்ளுங்கள்.
தோசைக்கல்லில் எண்ணெய் ஊற்றி சூடானதும் முட்டை, காய்கறிக் கலவையை சிறு அடைகளாக ஊற்றி, மேலே துருவிய சீஸைப் பரவலாகத் தூவி, வெந்ததும் திருப்பிப் போட்டு வேகவிடுங்கள்.
விருப்பப்பட்டால், மிளகுதூள் தூவிப் பரிமாறலாம்.
சூடாகச் சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.
- குழந்தைகளுக்கு சிக்கன் என்றால் மிகவும் பிடிக்கும்.
- அந்த ரெசிபியை செய்ய 15 நிமிடங்களே போதுமானது.
தேவையான பொருட்கள்
முட்டை - 3
சிக்கன் கொத்துக் கறி மசாலா - 100 கிராம்,
வெங்காயம் - 1
பச்சை மிளகாய் - 1
மஞ்சள் தூள் - 1 சிட்டிகை
மிளகாய் தூள் - 1/2 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
கொத்தமல்லி இலை - சிறிதளவு
எண்ணெய் - 2 தேக்கரண்டி
செய்முறை:
வெங்காயம், ப.மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
சிக்கன் கொத்துக் கறி மசாலாவில் இருக்கும் சிக்கனை பிய்ந்து வைக்கவும்,
ஒரு பாத்திரத்தில் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், மஞ்சள் தூள், மிளகாய் தூள், உப்பு, மற்றும் முட்டையை சேர்த்து நன்கு கலக்கவும். இறுதியாக நறுக்கிய கொத்தமல்லி இலை சேர்த்து கலக்கவும்.
அடுத்து கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் முட்டை கலவையை ஊற்றவும்.
மூடிவைத்து மிதமான தீயில் பாதி அளவு முட்டையை வேகவிடவும்.
பிறகு அதில் பிய்ந்து வைத்த சிக்கனை முட்டையின் மேல் தூவி மூடிவைத்து 1 நிமிடம் வேகவிட்டு மறுபக்கம் திருப்பி போட்டு வேகவிடவும்.
இப்போது சூப்பரான சிக்கன் ஆம்லெட் தயார்.
- முட்டை, மீன் வைத்து பல்வேறு ருசியான ரெசிபிகளை செய்யலாம்.
- இன்று மீன் ஆம்லெட் செய்முறையை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
மீன் - 2
முட்டை - 2
மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
பச்சை மிளகாய் - 2
வெங்காயம் - 1
கொத்துமல்லி தழை - சிறிதளவு
மிளகாய் தூள் - சிறிதளவு
மிளகு - விருப்பத்திற்கேற்ப
உப்பு, எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை
மீனை நன்றாக சுத்தம் செய்து கொள்ளவும்.
ப.மிளகாய், வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
சுத்தம் செய்த மீனில் மிளகாய் தூள், உப்பு சேர்த்து அரை மணி நேரம் ஊற வைத்த பின்னர் எண்ணெயில் போட்டு பொரித்து எடுத்து வைக்கவும்.
மீன் சூடு ஆறியதும் முள்ளை எடுத்து விட்டு சதை பகுதியை சிறிது சிறிதாக பிய்த்து வைக்கவும்.
ஒரு கிண்ணத்தில் முட்டையை உடைத்து ஊற்றி அதில் தேவையான அளவு உப்பு, மஞ்சள் தூள், பச்சை மிளகாய், வெங்காயம் சேர்த்து நன்கு கலக்கி கொள்ளவும்.
தோசை கல்லை அடுப்பில் வைத்து சிறிது எண்ணெய் ஊற்றி சூடானதும் முட்டை கலவையை ஊற்றி அதன் மேல் பிய்த்து வைத்த மீன், கொத்தமல்லி, மிளகு தூள் தூவவும். ஒருபுறம் வெந்ததும் மறுபுறம் திருப்பி போட்டு வேக வைத்து எடுத்து பரிமாறவும்.
இப்போது சுவையான வித்தியாசமான மீன் ஆம்லெட் தயார்.
- பன்னீரில் உள்ள அதிகளவு கால்சியம் எலும்புகளை வலுவாக்க உதவும்.
- சிறு வயதிலே மூட்டு பிரச்சினையால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு பன்னீர் சிறந்த தீர்வு.
தேவையான பொருட்கள்
முட்டை - 5
பன்னீர் - அரை கப்
பச்சை மிளகாய் - 4
மிளகுத்தூள் - அரை டீஸ்பூன்
உப்பு - தேவைகேற்ப
எண்ணெய் - தேவைகேற்ப
செய்முறை
பன்னீரை துருவிக்கொள்ளவும்.
ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் துருவிய பன்னீர், ப.மிளகாய், மிளகுத்தூள், உப்பு சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.
இதில் முட்டையை உடைத்து ஊற்றி நன்றாக அடித்து கொள்ளவும்.
தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் அடித்து வைத்த முட்டையை ஊற்றி சுற்றி எண்ணெய் விட்டு வெந்ததும் திருப்பி போட்டு வேக வைத்து எடுத்து பரிமாறவும்.
இப்போது சூப்பரான பன்னீர் ஆம்லெட் ரெடி.
- வழக்கமான ஆம்லெட் சாப்பிட்டு அலுத்துப் போயிருக்கும்.
- முட்டைப் பிரியர்களுக்கு கரண்டி ஆம்லெட் நல்ல மாற்று.
தேவையான பொருட்கள் :
முட்டை - 1
சின்ன வெங்காயம் - கைப்பிடி
ப.மிளகாய் - 1
கொத்தமல்லி, கறிவேப்பிலை, மஞ்சள் தூள், மிளகுத்தூள் - சிறிதளவு
எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை:
சின்னவெங்காயம், கொத்தமல்லி, ப.மிளகாயை பொடியாக நறுக்கிகொள்ளவும்.
ஒரு கிண்ணத்தில் முட்டையை உடைத்து ஊற்றி உப்பு சேர்த்து நன்கு கலக்க வேண்டும்.
அடுத்து அதில் பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம், கொத்தமல்லி, ப.மிளகாய், கறிவேப்பிலை, மிளகு தூள், மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.
ஒரு குழிக்கரண்டியை அடுப்பில் வைத்து சிறிதளவு எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் முட்டை கலவையை ஊற்றி ஒருபுறம் வெந்ததும் திருப்பி போட்டு மறுபுறம் வெந்ததும் எடுக்கவும்.
இப்போது சூப்பரான கரண்டி ஆம்லெட் ரெடி.
ஓட்டல்களில் ஒவ்வொருவருக்கும் இது போன்று செய்து கொடுக்க நேரமாகும் என்பதால், தற்போது தோசைக் கல்லிலேயே குழிகள் அமைக்கப்பட்டு அதிலேயே கரண்டி ஆம்லெட் சுடச்சுடத் தயார் செய்யப்படுகிறது.
- முட்டையை வைத்து பல்வேறு வகையான ஆம்லெட்டுகளை செய்யலாம்.
- இன்று உருளைக்கிழங்கு சேர்த்து ஆம்லெட் செய்முறையை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
முட்டை - 5
உருளைக்கிழங்கு - 2
மிளகாய் - 5
பெரிய வெங்காயம் - 1
வெண்ணெய் - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
கறிவேப்பிலை, கொத்தமல்லி தழை - சிறிதளவு
செய்முறை
கொத்தமல்லி, வெங்காயம், ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
உருளைக்கிழங்கை தோல் நீக்கி மெலிதாக சீவி, எண்ணெயில் போட்டு பொரித்தெடுத்து கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் முட்டையை உடைத்து ஊற்றி, அதனுடன் உப்பு சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.
அதனுடன் வெங்காயம், உருளைக்கிழங்கு, கொத்தமல்லி தழை, கறிவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து கிளறிக்கொள்ளவும்.
நான்ஸ்டிக் தவாவை அடுப்பில் வைத்து சூடானதும் வெண்ணெய் தடவி உருளைக்கிழங்கு முட்டை கலவையை ஊற்றி ஆம்லெட் போல வேகவிடவும்.
நன்கு வெந்ததும் மறுபக்கம் திருப்பி போட்டு வேக வைத்து எடுத்து பரிமாறலாம்.
சூப்பரான உருளைக்கிழங்கு ஆம்லெட் ரெடி.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்