என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "ommen chandy"
- கேரள மாநில முன்னாள் முதல்-மந்திரி உம்மன் சாண்டி கடந்த 18-ந்தேதி பெங்களூருவில் மரணம் அடைந்தார்.
- அவரது இறுதிச்சடங்கு சொந்த ஊரான கோட்டயம் புதுப்பள்ளியில் நேற்று நடந்தது.
கேரள மாநில முன்னாள் முதல்-மந்திரி உம்மன் சாண்டி கடந்த 18-ந்தேதி பெங்களூருவில் மரணம் அடைந்தார். அவரது இறுதிச்சடங்கு சொந்த ஊரான கோட்டயம் புதுப்பள்ளியில் நேற்று நடந்தது.
இந்நிலையில் நடிகர் விநாயகன் தனது முகநூல் பக்கத்தில் நேரலையில் தோன்றி உம்மன் சாண்டி குறித்து அவதூறு கருத்துக்களை பேசினார். அந்த வீடியோவில், "யார் இந்த உம்மன் சாண்டி. அவர் இறந்தால் அதற்கு நாங்கள் என்ன செய்ய வேண்டும். உங்களுடைய அப்பாவும் இறந்து விட்டார். உம்மன் சாண்டி இறந்ததற்கு எதற்கு 3 நாள் விடு முறை. அவர் நல்லவர் என்று நீங்கள் வேண்டும னால் சொல்லலாம். ஆனால் நான் சொல்ல மாட்டேன்" என்று கூறியிருந்தார். நடிகர் விநாயகனின் இந்த வீடியோ பதிவிற்கு பலரும் கண்டனம் தெரிவித்தனர்.
விநாயகன் வீடு
இதையடுத்து அவர், அந்த வீடியோவை தனது முகநூல் பக்கத்தில் இருந்து நீக்கிவிட்டார். இருந்த போதிலும் உம்மன் சாண்டி குறித்து அவதூறு வீடியோ வெளியிட்ட நடிகர் விநாயகன் மீது காங்கிரஸ் கட்சி சார்பில் கொச்சி உதவி போலீஸ் கமிஷனர் அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் புகார் கொடுக்கப்பட்டது. அதன் அடிப்படையில் நடிகர் விநாயகன் மீது எர்ணாகுளம் வடக்கு போலீசார் வழக்குபதிந்துள்ளனர். அதன் அடிப்படையில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்நிலையில் எர்ணாகுளம், கழுவூரில் உள்ள விநாயகனின் வீட்டின் மீது மர்ம நபர்கள் கற்களை வீசி தாக்கி உள்ளனர். இதில், அவரது வீட்டின் ஜன்னல் கண்ணாடிகள் உடைந்தன. விநாயகனின் வீட்டில் தாக்குதலில் ஈடுபட்டது காங்கிரஸ் தொண்டர்கள் என கூறப்படுகிறது. இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- நடிகர் விநாயகன் மலையாளத்தில் முன்னணி நடிகராக வலம் வருகிறார்.
- இவர் மறைந்த கேரள முன்னாள் மந்திரி உம்மன் சாண்டி குறித்து சர்ச்சையாக பதிவிட்டுள்ளார்.
மலையாளத்தில் முன்னணி நடிகராக வலம் வரும் விநாயகன் தமிழில் விஷாலின் 'திமிரு' படத்தில் வில்லனாக நடித்து பிரபலமானவர். தொடர்ந்து சிம்புவின் சிலம்பாட்டம், தனுசின் மரியான் ஆகிய படங்களிலும் நடித்துள்ளார். பின்னர் தமிழ் படங்களில் நடிக்காமல் இருந்த இவர் சுமார் 11 ஆண்டுகளுக்கு பிறகு ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் ஜெயிலர் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார்.
விநாயகன்
இந்நிலையில், நடிகர் விநாயகன், மறைந்த கேரள முன்னாள் மந்திரி உம்மன் சாண்டி குறித்து சர்ச்சையான வீடியோ ஒன்றை சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், "யார் இந்த உம்மன் சாண்டி. எதற்காக அரசு மூன்று நாட்கள் துக்கம் விசாரிக்க வேண்டும். ஊடகங்கள் ஏன் அவரது இறுதி ஊர்வலத்திற்கு முக்கியத்து கொடுத்தது. உம்மன் சாண்டி நல்லவர் என்று நீங்கள் நினைத்தால் அதற்கு நான் என்ன பண்ண முடியும்?" என்று பதிவிட்டுள்ளார்.
உம்மன் சாண்டி
இந்த வீடியோ வைரலானதைத் தொடர்ந்து கேரள முன்னாள் மந்திரி உம்மன் சாண்டியை அவமதித்ததற்காக நடிகர் விநாயகன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காங்கிரஸ் நிர்வாகிகள் காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளனர். இந்த புகாரை பெற்றுக் கொண்ட போலீஸ் அதிகாரி இதுகுறித்து விசாரித்து விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியுள்ளார்.
நடிகர் விநாயகன் பதிவிற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வந்ததால் அவர் இந்த வீடியோவை சமூக வலைதளத்தில் இருந்து நீக்கி விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
- கேரள முன்னாள் முதல் மந்திரி உம்மன் சாண்டி(79) உடல்நலக் குறைவால் இன்று காலமானார்.
- இவரது மறைவிற்கு அரசியல் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
கேரளாவில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவர் உம்மன் சாண்டி. காங்கிரஸ் சார்பில் 2 முறை முதல் மந்திரியாக பதவி வகித்துள்ளார். கடந்த சில மாதத்துக்கு முன் நிமோனியா காய்ச்சல் காரணமாக உம்மன் சாண்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார்.
இதையடுத்து கேரள முன்னாள் முதல் மந்திரி உம்மன் சாண்டி(79) உடல்நலக் குறைவால் இன்று காலமானார். சிகிச்சைக்காக பெங்களூரு மருத்துவமனையில் அனுமதிக்கப்படிருந்த நிலையில் உயிரிழந்தார் என அவரது மகன் தெரிவித்துள்ளார். அவரது மறவையொட்டி கேரளாவில் இன்று பொது விடுமுறை விடப்பட்டுள்ளது. இரண்டு நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என கேரள அரசு தெரிவித்துள்ளது.
இவரது மறைவிற்கு அரசியல் தலைவர்கள் பலரும் இரங்கள் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், நடிகரும், மக்கள் நீதிமய்ய கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் இரங்கல் தெரிவித்து சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், "தேசியத்தின் மேல் பெரும்பற்றும் மாநில வளர்ச்சியில் மாளாத அக்கறையும் கொண்டு மிக நீண்டகாலம் வெற்றிகரமான அரசியல் பணி செய்து மக்களின் மனதில் நீங்கா இடம் பெற்ற தலைவர் உம்மன் சாண்டியின் மறைவு நாட்டிற்கும், கேரளத்திற்கும் பேரிழப்பு. அவரை இழந்து வாடும் அனைவருக்கும் என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.
தேசியத்தின் மேல் பெரும்பற்றும் மாநில வளர்ச்சியில் மாளாத அக்கறையும் கொண்டு மிக நீண்டகாலம் வெற்றிகரமான அரசியல் பணி செய்து மக்களின் மனதில் நீங்கா இடம் பெற்ற தலைவர் உம்மன் சாண்டியின் மறைவு நாட்டிற்கும், கேரளத்திற்கும் பேரிழப்பு. அவரை இழந்து வாடும் அனைவருக்கும் என் ஆழ்ந்த இரங்கலைத்…
— Kamal Haasan (@ikamalhaasan) July 18, 2023
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்