என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Opposition meeting"
- முதல் ஆலோசனைக் கூட்டம் பீகார் தலைநகர் பாட்னாவில் நடந்தது.
- 2-வது முறையாக பெங்களூருவில் கடந்த 17, 18-ம் தேதிகளில் எதிர்க்கட்சிகள் கூடி மீண்டும் ஆலோசனை நடத்தின.
பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க.வுக்கு எதிராக பலம் மிக்க கூட்டணி அமைக்க காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.
இதற்கான முதல் ஆலோசனைக் கூட்டம் பீகார் தலைநகர் பாட்னாவில் நடந்தது. 2-வது முறையாக பெங்களூருவில் கடந்த 17, 18-ம் தேதிகளில் எதிர்க்கட்சிகள் கூடி மீண்டும் ஆலோசனை நடத்தின.
26 கட்சிகள் பங்கேற்ற இந்தக் கூட்டத்தில், எதிர்க்கட்சிகளின் அணிக்கு 'இந்தியா' (I.N.D.I.A) என பெயரிடப்பட்டது.
அடுத்தடுத்து கூட்டங்கள் நடத்தி தேர்தல் வியூகங்கள் உள்ளிட்டவற்றை வகுப்பது குறித்து முடிவு செய்யப்பட்டது.
இந்நிலையில், இந்தியா கூட்டணியின் 3வது ஆலோசனை கூட்டம் மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில், இம்மாதம் 31ம் தேதி மற்றும் செப்டம்பர் 1ம் தேதி என இரண்டு நாட்கள் நடைபெறும் என அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி உள்ளது.
இதுகுறித்து ஷிவ் சேனா உத்தவ் பாலசாஹேப் தாக்கரேவின் தலைவர் சஞ்சய் ராவத் கூறுகையில், " இந்தியா கூட்டணியின் ஆலோசனைக் கூட்டம் ஆகஸ்ட் 31ம் தேதி மற்றும் செப்டம்பர் 1ம் தேதி மும்பையில் நடைபெறும். கூட்டம் வெற்றிகரமாக நடைபெறும் என்பதை உறுதி செய்கிறோம்" என்றார்.
- மும்பையில் எதிர்க்கட்சிகளின் 3-வது ஆலோசனை கூட்டம் ஆகஸ்ட் 30-ம் தேதி நடைபெற உள்ளது.
- பாட்னா, பெங்களூருவில் ஏற்கனவே எதிர்க்கட்சிகளின் ஆலோசனை கூட்டங்கள் நடந்துள்ளது.
புதுடெல்லி:
பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க.வுக்கு எதிராக பலம் மிக்க கூட்டணி அமைக்க காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.
இதற்கான முதல் ஆலோசனைக் கூட்டம் பீகார் தலைநகர் பாட்னாவில் நடந்தது. 2-வது முறையாக பெங்களூருவில் கடந்த 17, 18-ம் தேதிகளில் எதிர்க்கட்சிகள் கூடி மீண்டும் ஆலோசனை நடத்தின. 26 கட்சிகள் பங்கேற்ற இந்தக் கூட்டத்தில், எதிர்க்கட்சிகளின் அணிக்கு 'இந்தியா' என பெயரிடப்பட்டது.
அடுத்தடுத்து கூட்டங்கள் நடத்தி தேர்தல் வியூகங்கள் உள்ளிட்டவற்றை வகுப்பது குறித்து முடிவு செய்யப்பட்டது.
இந்நிலையில், இந்தியா கூட்டணியின் அடுத்த கூட்டம் ஆகஸ்ட் 30-ம் தேதி முதல் செப்டம்பர் 1-ம் தேதி வரை மும்பையில் நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது.
- எதிர்க்கட்சிகளின் 2வது ஆலோசனைக் கூட்டம் பெங்களூருவில் நடைபெற்றது.
- 26 கட்சிகள் பங்கேற்ற எதிர்க்கட்சிகளின் அணிக்கு 'இந்தியா' என பெயரிடப்பட்டது.
மும்பை:
பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க.வுக்கு எதிராக பலமான கூட்டணி அமைக்க காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் திட்டமிட்டு உள்ளன. முதல் ஆலோசனை கூட்டம் பீகார் தலைநகர் பாட்னாவிலும், 2-வது கூட்டம் பெங்களூருவிலும் நடந்தன.
26 கட்சிகள் பங்கேற்ற இந்தக் கூட்டத்தில் எதிர்க்கட்சிகளின் அணிக்கு 'இந்தியா' என பெயரிடப்பட்டது. மேலும், தொடர்ந்து கூட்டங்கள் நடத்தி தேர்தல் வியூகங்கள் உள்ளிட்டவற்றை வகுப்பது குறித்து முடிவு செய்யப்பட்டது.
இதற்கிடையே, இந்தியா கூட்டணியின் அடுத்த கூட்டம் ஆகஸ்டு மாதம் 25 மற்றும் 26-ம் தேதிகளில் மும்பையில் நடைபெறும் என தகவல் வெளியானது.
இந்நிலையில், மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை இணை மந்திரி ராம்தாஸ் அத்வாலே செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், பீகார் முதல் மந்திரியான நிதிஷ்குமார் எப்போது வேண்டுமானாலும் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு திரும்பி வருவார்.
தற்போதைய சூழ்நிலையில் நிதிஷ்குமார் மகிழ்ச்சியாக காணப்படவில்லை. எதிர்க்கட்சி கூட்டணிகள் அடுத்த கூட்டம் நடைபெறும் மும்பைக்கு அவர் நிச்சயம் செல்ல மாட்டார் என தெரிவித்தார்.
- எதிர்க்கட்சிகளின் ஆலோசனை கூட்டம் மும்பையில் ஆகஸ்ட் 25-ம் தேதி நடைபெறுகிறது.
- இதுவரை பாட்னா, பெங்களூருவில் எதிர்க்கட்சிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றுள்ளது.
புதுடெல்லி:
பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க.வுக்கு எதிராக பலமான கூட்டணி அமைக்க காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் திட்டமிட்டு உள்ளன.
முதல் ஆலோசனை கூட்டம் பீகார் தலைநகர் பாட்னாவிலும், 2-வது கூட்டம் பெங்களூருவிலும் நடந்தன. 26 கட்சிகள் பங்கேற்ற இந்தக் கூட்டத்தில் எதிர்க்கட்சிகளின் அணிக்கு 'இந்தியா' என பெயரிடப்பட்டது. மேலும், தொடர்ந்து கூட்டங்கள் நடத்தி தேர்தல் வியூகங்கள் உள்ளிட்டவற்றை வகுப்பது குறித்து முடிவு செய்யப்பட்டது.
இந்நிலையில், இந்தியா கூட்டணியின் அடுத்த கூட்டம் ஆகஸ்டு மாதம் 25 மற்றும் 26-ம் தேதிகளில் மும்பையில் நடைபெறும் என தகவல் வெளியாகி இருக்கிறது.
காங்கிரஸ் உதவியுடன் நடைபெறும் இந்தக் கூட்டத்தை உத்தவ் தாக்கரேயின் சிவசேனா மற்றும் தேசியவாத காங்கிரஸ் இணைந்து ஒருங்கிணைக்கும் என்றும் எதிர்க்கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
- பீகார் முதல்-மந்திரி நிதிஷ் குமார் உள்பட 26 எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்றனர்.
- பாராளுமன்ற தேர்தலுக்கு முன்னதாக அனைத்து எதிர்க்கட்சிகளையும் ஒன்றிணைப்பதே எனது முயற்சி.
பாட்னா:
அடுத்த ஆண்டு நடக்க இருக்கும் பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க.வை வீழ்த்த எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரள முடிவு செய்துள்ளன. இது தொடர்பாக எதிர்க்கட்சி தலைவர்களின் முதல் ஆலேசானை கூட்டம் பீகார் தலைநகர் பாட்னாவில் கடந்த மாதம் நடந்தது.
அதை தொடர்ந்து, 2-வது கூட்டம் கர்நாடகா தலைநகர் பெங்களூருவில் நேற்று முன்தினம் நடந்தது. இதில் பீகார் முதல்-மந்திரி நிதிஷ் குமார் உள்பட 26 எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்றனர்.
கூட்டம் முடிந்த பிறகு எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் கூட்டாக நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர். ஆனால் இதில் நிதிஷ் குமார் பங்கேற்கவில்லை.
இதுகுறித்து பேசிய பா.ஜ.க. தலைவர் சுஷில் மோடி, எதிர்க்கட்சிகள் கூட்டணியின் ஒருங்கிணைப்பாளராக தன்னை அறிவிக்காததால் நிதிஷ் குமார் அதிருப்தி அடைந்ததாகவும், அதனாலேயே அவர் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பங்கேற்வில்லை எனவும் கூறினார்.
ஆனால் நிதிஷ் குமார் இதனை திட்டவட்டமாக மறுத்துள்ளார். இதுப்பற்றி அவர் கூறுகையில், "எதிர்க்கட்சி தலைவர்களின் கூட்டம் மிகவும் பயனுள்ளதாக இருந்தது, முடிவில் நாங்கள் அனைவரும் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறோம். உடனடியாக பாட்னாவுக்கு வர வேண்டியிருந்ததால், கூட்டத்துக்கு பிறகு பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்து கொள்ள முடியவில்லை. பாராளுமன்ற தேர்தலுக்கு முன்னதாக அனைத்து எதிர்க்கட்சிகளையும் ஒன்றிணைப்பதே எனது முயற்சி. இப்போது அது வடிவம் பெற்றுள்ளது. பாராளுமன்ற தேர்தலில் பாஜக அழிந்துவிடும்" என கூறினார்.
- நாளை நடைபெற உள்ள ஆலோசனை கூட்டத்திலும் மு.க.ஸ்டாலின் கலந்துகொள்கிறார்.
- இன்றைய தினம் நடைபெற உள்ள விருந்தில் மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி கலந்துகொள்ளவில்லை.
சென்னை:
எதிர்க்கட்சிகளின் 2-வது ஆலோசனை கூட்டம் கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இன்றும் (திங்கட்கிழமை), நாளையும் (செவ்வாய்க்கிழமை) நடைபெற உள்ளது.
இந்த கூட்டத்தில் தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் பங்கேற்க இருக்கிறார். இதற்காக இன்று காலை 11.20 மணிக்கு சென்னை விமான நிலையத்தில் இருந்து விமானம் மூலம் பெங்களூரு புறப்பட்டு செல்கிறார். இன்று மாலையில் நடைபெறும் விருந்திலும், நாளை நடைபெற உள்ள ஆலோசனை கூட்டத்திலும் மு.க.ஸ்டாலின் கலந்துகொள்கிறார். 2 நாள் கூட்டத்தை முடித்துக்கொண்டு பெங்களூருவில் இருந்து நாளை இரவு 9 மணிக்கு மு.க.ஸ்டாலின் சென்னை வந்தடைகிறார்.
பெங்களூருவில் எதிர்க்கட்சிகள் நடத்தும் 2 நாள் ஆலோசனை கூட்டத்தின் முதல் நாளான இன்று அரசியல் கட்சி தலைவர்கள் பங்கேற்கும் விருந்தும், நாளை ஆலோசனை கூட்டமும் நடைபெற உள்ளது.
இன்றைய தினம் நடைபெற உள்ள விருந்தில் மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி கலந்துகொள்ளவில்லை. நாளை நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில் மட்டும் கலந்துகொள்ள இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
- மம்தா பானர்ஜி கலந்து கொண்டதும், வெளிப்படையாக பேசியதும் ஆக்கப்பூர்வமான அறிகுறிகள்.
- நாங்கள் எல்லாம் தனித்தனி கட்சிகள். சில பிரச்சினைகளில் சிறிய மனமாச்சர்யங்கள் இருக்கலாம்.
பாட்னா:
கடந்த 23-ந் தேதி பாட்னாவில் எதிர்க்கட்சிகளின் ஆலோசனை கூட்டம் நடந்தது. அதில், டெல்லி அரசுக்கு எதிராக மத்திய அரசு கொண்டு வந்த அவசர சட்டம் குறித்து காங்கிரஸ் மவுனம் சாதிப்பதாக ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம் சாட்டினார்.
காங்கிரஸ் தனது நிலைப்பாட்டை தெரிவிக்காவிட்டால், வருங்காலத்தில் எதிர்க்கட்சி கூட்டங்களில் பங்கேற்க மாட்டோம் என்றும் அறிவித்தார். பத்திரிகையாளர்கள் சந்திப்பையும் அவர் புறக்கணித்தார்.
இந்நிலையில், இந்திய கம்யூனிஸ்டு கட்சி பொதுச்செயலாளர் டி.ராஜா, டெல்லியில் ஒரு தனியார் செய்தி நிறுவனத்துக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-
பாட்னாவில் நடந்த கூட்டம் மூலம் மதசார்பற்ற ஜனநாயக கட்சிகள் ஒன்று சேர்ந்திருப்பதையும், பா.ஜனதாவை தோற்கடிக்க உறுதி பூண்டிருப்பதையும் நாட்டு மக்களுக்கு தெரிவித்துள்ளோம். எந்த பிரச்சினையாக இருந்தாலும் நாங்கள் கூட்டாக முடிவு எடுக்க முடியும் என்று காண்பித்துள்ளோம்.
அக்கூட்டத்தில் மம்தா பானர்ஜி கலந்து கொண்டதும், வெளிப்படையாக பேசியதும் ஆக்கப்பூர்வமான அறிகுறிகள்.
கூட்டத்துக்கு பிறகு ஆம் ஆத்மி எடுத்த நிலைப்பாட்டை எதிர்க்கட்சிகளின் ஒற்றுமைக்கு ஏற்பட்ட பின்னடைவாக நாங்கள் கருதவில்லை. சொல்லப்போனால், அது நேர்மறையான அறிகுறி. அப்படித்தான் பார்க்க வேண்டும்.
நாங்கள் எல்லாம் தனித்தனி கட்சிகள். சில பிரச்சினைகளில் சிறிய மனமாச்சர்யங்கள் இருக்கலாம். ஆனால், அவற்றை கடப்போம். ஒன்றாக சேர சம்மதித்துள்ளோம். ஏனென்றால், நாடு சவாலான காலகட்டத்தை கடந்து கொண்டிருக்கிறது, அரசியல் சட்டம் அச்சுறுத்தலுக்கு உள்ளாகி இருக்கிறது என்பது எல்லோருக்கும் தெரியும்.
நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவுக்கு எதிரான அனைத்து கட்சிகளும் ஒன்று சேரும் என்று நம்புகிறோம். அந்த அணியில் இருப்பது பற்றி ஆம் ஆத்மிதான் முடிவு செய்ய வேண்டும்.
பிரதமர் வேட்பாளர் யார் என்பது ஒரு பிரச்சினை இல்லை. 1990-களில் ஐக்கிய முன்னணி ஆட்சியில் தேவேகவுடா, ஐ.கே.குஜ்ரால் ஆகியோரை எப்படி தேர்வு செய்தோமோ, அதுபோல் தேர்வு செய்வோம்.
தொகுதி பங்கீடு, வியூகம் உள்ளிட்ட பிரச்சினைகள் குறித்து அடுத்தடுத்த கூட்டங்களில் விவாதிப்போம்.
கர்நாடக தேர்தல் முடிவுகள் வெளியானதில் இருந்து பா.ஜனதா விரக்தியில் இருக்கிறது. நாடாளுமன்ற தேர்தல் முடிவுகளும் அக்கட்சிக்கு தெரிந்து விட்டது. எனவேதான், எங்கள் கூட்டணியை விமர்சிக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
இதுபோல், காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய மந்திரியுமான அஜய் மக்கான், தனது 'டுவிட்டர்' பக்கத்தில் ஆம் ஆத்மியை விமர்சித்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது:-
எதிர்க்கட்சிகளின் ஒற்றுமை குறித்த அரவிந்த் கெஜ்ரிவாலின் பிரகடனங்கள், இணக்கத்துக்கான வார்த்தைகளாக தெரியவில்லை. ஒற்றுமையை சீர்குலைத்து, பா.ஜனதாவுக்கு சாதகமாக நடந்து கொள்ளும் திட்டமிட்ட அணுகுமுறையாக தோன்றுகிறது.
ஊழல் வழக்குகளில் சிறை செல்வதை தவிர்க்கவே அவர் பா.ஜனதாவுக்கு சாதகமாக நடந்து கொள்கிறார். கோவா உள்பட பல மாநிலங்களில் ஊழல் பணத்தில்தான் ஆம் ஆத்மி போட்டியிட்டது. காங்கிரசின் வெற்றிவாய்ப்பை குறைத்து, பா.ஜனதாவுக்கு உதவி செய்தது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- ஜனநாயகம் எப்படி குழிதோண்டி புதைக்கப்படுகிறது என்பதை நாடு கண்கூடாக காண்கிறது.
- எதிர்க்கட்சிகள் அதிகாரத்திற்காக அல்லாமல் கொள்கைகளுக்காக ஒன்றிணைந்து செயல்படவேண்டும்.
பாட்னா:
பாட்னாவில் நடந்த எதிர்க்கட்சிகள் கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர் சந்திப்பு நடந்தது. அப்போது பேசிய ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தி, மகாத்மா காந்தியின் இந்தியாவை, கோட்சேவின் நாடாக மாற்றுவதை அனுமதிக்க முடியாது என்றார்.
நாட்டில் சிறுபான்மையினர் எவ்வாறு நடத்தப்படுகிறார்கள், ஜனநாயகம் எப்படி குழிதோண்டி புதைக்கப்படுகிறது என்பதை நாடு கண்கூடாக காண்பதாகவும், அதனை எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து எதிர்கொள்வதாகவும் மெகபூபா குறிப்பிட்டார்.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் மற்றொரு முன்னாள் முதல்வரும், தேசிய மாநாட்டு கட்சியின் தலைவருமான உமர் அப்துல்லா பேசும்போது, எதிர்க்கட்சிகள் அதிகாரத்திற்காக அல்லாமல் கொள்கைகளுக்காக ஒன்றிணைந்து, நாட்டில் ஜனநாயகத்தை உயிர்ப்புடன் வைத்திருக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
- நிதிஷ்குமார் நாடு முழுவதும் பயணித்து எதிர்க்கட்சி தலைவர்களை சந்தித்துப் பேசினார்.
- எதிர்க்கட்சிகளின் அடுத்த ஆலோசனைக் கூட்டம் சிம்லாவில் நடைபெறும்,
பாட்னா:
பீகார் முதல் மந்திரியும், ஐக்கிய ஜனதா தளம் கட்சித்தலைவருமான நிதிஷ்குமார் எதிர்க்கட்சிகளை ஓரணியில் திரட்டும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து எதிர்க்கட்சி தலைவர்களை சந்தித்துப் பேசினார்.
இதற்கிடையே, பீகார் மாநில தலைநகர் பாட்னாவில் இன்று எதிர்க்கட்சி தலைவர்களின் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் மல்லிகார்ஜூன கார்கே, ராகுல் காந்தி, தி.மு.க. சார்பில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத் பவார், சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ், டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜிரிவால், ஜார்க்கண்ட் முதல் மந்திரி ஹேமந்த் சோரன், மேற்கு வங்காள முதல் மந்திரி மம்தா பேனர்ஜி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் டி.ராஜா, சிவசேனா சார்பில் உத்தவ் தாக்கரே உள்ளிட்ட தலைவர்கள் என 16 எதிர்க்கட்சி தலைவர்கள் உள்பட 6 மாநில முதல் மந்திரிகள் பங்கேற்றனர்.
இந்நிலையில், கூட்டம் முடிந்ததும் முதல் மந்திரி நிதிஷ் குமார் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், இன்று நடைபெற்ற எதிர்க்கட்சிகளின் கூட்டம் பயனுள்ளதாக அமைந்தது. வரும் பாராளுமன்ற தேர்தலை அனைவரும் ஒன்றாக இணைந்து சந்திக்க திட்டமிட்டு உள்ளோம். அது குறித்து கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. விரைவில் மற்றொரு கூட்டம் நடைபெறும் என தெரிவித்தார்.
மேற்கு வங்காள முதல் மந்திரி மம்தா பானர்ஜி பேசுகையில், மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி தங்களுடன் இணைந்து செயல்படாமல் பிரதான எதிர்க்கட்சியான இடதுசாரிகளுடன் கை கோர்ப்பது எப்படி சரியாக இருக்க முடியும்? என கேள்வி எழுப்பினார்.
தேசிய மாநாட்டு கட்சியின் உமர் அப்துல்லா பேசுகையில், காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து வழங்கிய 370-வது பிரிவு நீக்க விவகாரத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் நிலைப்பாட்டை விமர்சித்தார்.
தேசியவாத காங்கிரஸ் தலைவரான சரத்பவார் பேசுகையில், மகாராஷ்டிர மாநிலத்தில் நாங்கள் இருவரும் 25 ஆண்டுகளாக கடுமையான எதிரிகளாக இருந்து சண்டை போட்டவர்கள். இப்போது இணைந்து செயல்படவில்லையா? அதேபோலதான் நாம் அனைவரும் பா.ஜ.க.வுக்கு எதிராக ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என கூறினார்.
- பாட்னாவில் நடந்த எதிர்க்கட்சிகளின் கூட்டத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார்.
- கூட்டம் முடிந்ததும் விமானம் மூலம் சென்னை திரும்பினார் முதல்வர் ஸ்டாலின்.
சென்னை:
பீகாரின் பாட்னாவில் நடைபெற்ற எதிர்க்கட்சிகளின் கூட்டத்தில் தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின் பங்கேற்றார். கூட்டம் முடிந்ததும் விமானம் மூலம் சென்னை திரும்பிய முதல்வர் ஸ்டாலின் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
பாட்னாவில் நடைபெற்ற எதிர்க்கட்சிகளின் கூட்டம் நம்பிக்கையையும், மகிழ்ச்சியையும் அளிக்கிறது.
தனிப்பட்ட ஒரு கட்சிக்கு எதிராக நடைபெற்ற கூட்டமாக இதைக் கருத வேண்டாம்.
எதிர்க்கட்சிகள் ஆலோசனை கூட்டத்தில் 7 முக்கிய கருத்துக்களை எடுத்து வைத்தேன்.
பிரதமர் வேட்பாளர் குறித்து இன்னும் முடிவு செய்யப்படவில்லை.
இந்தியாவின் பன்முகத்தன்மை, ஏழை, எளிய, ஒடுக்கப்பட்ட மக்களை பாதுகாக்க வேண்டும்.
மீண்டும் பா.ஜ.க. வரக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறோம்
வரும் பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. நிச்சயம் தோற்கடிக்கப்படும்.
மதச்சார்பற்ற கட்சிகளின் ஒற்றுமைதான் மிக முக்கியம் என்பதை வலியுறுத்தினேன் என தெரிவித்தார்.
- கூட்டம் நிறைவடைந்த பின்னர் தலைவர்கள் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளித்தனர்.
- இனி நடக்கும் எதிர்க்கட்சி கூட்டங்களில் பங்கேற்க மாட்டோம் என்று ஆம் ஆத்மி கட்சி கூறியுள்ளது.
வரும் பாராளுமன்றத் தேர்தலில் பாஜகவுக்கு எதிராக ஒன்றிணைந்து செயல்படுவது தொடர்பாக, பீகாரில் இன்று எதிர்க்கட்சிகள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் கார்கே, முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், மேற்கு வங்காள முதல் மந்திரி மம்தா பானர்ஜி, மகாராஷ்டிர முன்னாள் முதல் மந்திரி உத்தவ் தாக்கரே, காஷ்மீர் முன்னாள் முதல் மந்திரி மெகபூபா, ஜார்க்கண்ட் முதல் மந்திரி ஹேமந்த் சோரன், உத்தர பிரதேச முன்னாள் முதல் மந்திரி அகிலேஷ் யாதவ், கம்யூனிஸ்டு தலைவர் டி.ராஜா உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர்.
டெல்லி அவசர சட்டம் தொடர்பாக காங்கிரஸ் கட்சி தனது நிலைப்பாட்டை தெரிவிக்காதது குறித்து ஆம் ஆத்மி கட்சி கேள்வி எழுப்பியிருந்த நிலையில், இன்று எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் ஆம் ஆத்மி கட்சி பங்கேற்காது என்றே பேசப்பட்டது. ஆனால் கூட்டத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் பங்கேற்றார். கூட்டம் நிறைவடைந்த பின்னர் தலைவர்கள் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளித்தனர். ஆனால் செய்தியாளர் சந்திப்பில் ஆம் ஆத்மி பங்கேற்கவில்லை.
அதன்பின்னர் ஆம் ஆத்மி கட்சி வெளியிட்ட அறிக்கையில், டெல்லி அவசர சட்டம் தொடர்பாக காங்கிரஸ் கட்சி தனது நிலைப்பாட்டை தெரிவிக்காதது ஏன்? என கேள்வி எழுப்பியிருந்தது. காங்கிரஸ் கட்சி டெல்லி மக்கள் பக்கம் இருக்கிறதா? அல்லது மோடி அரசின் பக்கம் இருக்கிறதா? என்ற சந்தேகம் எழுவதாகவும், இதுபற்றி காங்கிரஸ் முடிவு செய்ய வேண்டும் என்றும் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
மத்திய அரசின் அரசாணையை காங்கிரஸ் பகிரங்கமாக எதிர்க்கும் வரை, இனி நடக்கும் எதிர்க்கட்சி கூட்டங்களில் பங்கேற்க மாட்டோம் என்றும் ஆம் ஆத்மி கட்சி குண்டைத் தூக்கி போட்டுள்ளது.
கூட்டத்தில் பங்கேற்ற 16 கட்சிகளில் 12 கட்சிகள் மாநிலங்களவையில் இடம்பெற்றுள்ளன. அதில் 11 கட்சிகள் அவசர சட்டத்தை எதிர்க்கின்றன.
- பாட்னாவில் எதிர்க்கட்சி தலைவர்களின் கூட்டம் இன்று நடைபெற்றது.
- இதில் 6 மாநில முதல் மந்திரிகள் உள்ளிட்ட 15க்கும் மேற்பட்ட கட்சி தலைவர்கள் பங்கேற்றனர்.
பாட்னா:
மத்திய அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் முயற்சியை பீகார் முதல் மந்திரி நிதிஷ்குமார் மேற்கொண்டு வருகிறார். பாட்னாவில் எதிர்க்கட்சி தலைவர்களின் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் காங்கிரஸ் தலைவர்கள் ராகுல் காந்தி, மல்லிகார்ஜூன கார்கே, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், மேற்கு வங்காள முதல் மந்திரி மம்தா பானர்ஜி, காஷ்மீர் முன்னாள் முதல் மந்திரி மெகபூபா, ஜார்க்கண்ட் முதல் மந்திரி ஹேமந்த் சோரன், உத்தர பிரதேச முன்னாள் முதல் மந்திரி அகிலேஷ் யாதவ், கம்யூனிஸ்டு தலைவர் டி.ராஜா உள்ளிட்ட தலைவர்கள் கலந்துகொண்டனர்.
சுமார் 4 மணி நேரம் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைப்பது குறித்து விவாதிக்கப்பட்டது. இதில் பங்கேற்ற தலைவர்கள் பா.ஜ.க. அரசை வீழ்த்த வேண்டியதன் அவசியத்தை எடுத்துரைத்தனர்.
எதிர்க்கட்சிகளின் அடுத்த ஆலோசனைக் கூட்டம் இமாசல பிரதேசத்தின் சிம்லாவில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை உள்ள கட்சிகளின் தலைவர்கள் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றனர். பாராளுமன்ற தேர்தலையொட்டி பொது தேர்தல் அறிக்கையை தயார் செய்வது குறித்து ஆலோசித்தோம். அடுத்த ஆலோசனை கூட்டத்தில் பொதுத் தேர்தல் அறிக்கை குறித்து முடிவெடுப்போம். எதிர்க்கட்சிகளின் அடுத்த ஆலோசனைக் கூட்டம் ஜூலை 10 அல்லது 12-ம் தேதி இமாசல பிரதேசத்தின் சிம்லாவில் நடைபெறும் என தெரிவித்தார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்