என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "oscar"

    • பிரிட்டிஷ்-இந்திய திரைப்பட இயக்குநர் சந்தியா சூரி இயக்கிய திரைப்படம் 'சந்தோஷ்'
    • ஆசிய திரைப்பட விருதுகளில் சிறந்த நடிகைக்கான பட்டத்தையும் ஷஹானா கோஸ்வாமி பெற்றார்.

    பிரிட்டிஷ்-இந்திய திரைப்பட இயக்குநர் சந்தியா சூரி இயக்கிய திரைப்படம் 'சந்தோஷ்' . கடந்த ஆண்டு இந்த படம் வெளிநாடுகளில் வெளியானது. 'சந்தோஷ்' படம் இங்கிலாந்து சார்பாக ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரைக்கப்ட்டது.

    இந்நிலையில் இந்த படத்தை இந்தியாவில் வெளியிட தணிக்கை வாரியம் (CBFC) தடை விதித்துள்ளது.

    கதை என்ன?

    வட இந்தியாவில் நடக்கும் கதையான இந்தப் படம், கணவன் இறந்த பிறகு அவருக்குப் பதிலாக காவல் பணியில் சேரும் ஒரு பெண்ணின் கதையைச் சொல்கிறது. பின்னர் அந்தப் பெண் போலீசிடம் ஒரு தலித் பெண்ணின் கொலை வழக்கு ஒப்படைக்கப்படுகிறது. வட இந்தியாவில் நிலவும் சாதிய பாகுபாடு, இஸ்லாமிய வெறுப்பு, பாலியல் வன்முறை ஆகியவற்றை பற்றி இப்படம் பேசுகிறது.

    என்ன பிரச்சனை?

    இந்நிலையில் படத்தில் உள்ள கருத்துக்கள் சமூகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் எனக் கூறி பல பகுதிகளை வெட்ட தணிக்கை வாரியம் கோரியுள்ளது. ஆனால் அதற்கு படக்குழு மறுத்துள்ளதால் படத்தை வெளியிட தடை ஏற்பட்டுள்ளது.

    இதுதொடர்பாக பேசிய படத்தின் ஹீரோயின் (பெண் போலீஸ் கதாபாத்திரம்) ஷஹானா கோஸ்வாமி. "படத்தை வெளியிடுவதற்குத் தேவையான சில மாற்றங்களின் பட்டியலை சென்சார் வழங்கியுள்ளது.

    எங்கள் முழு குழுவும் அதனுடன் உடன்படவில்லை, ஏனென்றால் அவர்கள் படத்தில் நிறைய மாற்றங்களைச் செய்ய விரும்புகிறார்கள், எனவே, இந்திய திரையரங்குகளில் வெளியிட முடியவில்லை.

    இந்தியாவில் வெளியிட இவ்வளவு வெட்டுக்களும் மாற்றங்களும் தேவைப்படுவது மிகவும் வருத்தமளிக்கிறது" என்று தெரிவித்துள்ளார். இந்த படத்திற்காக ஆசிய திரைப்பட விழாவில் சிறந்த நடிகைக்கான விருதை அவர் பெற்றிருந்தார்.

    படத்தின் எழுத்தாளரும் இயக்குநருமான சந்தியா சூரி, சென்சார் குழுவின் முடிவை ஏமாற்றமளிப்பதாகவும் மனதை உடைப்பதாகவும் தெரிவித்துள்ளார். 

    அவர் கூறியதாவது, "இது எங்கள் அனைவருக்கும் ஆச்சரியமான முடிவு, ஏனென்றால் இந்தப் படத்தில் காட்டப்பட்டுள்ள பிரச்சினைகள் இந்திய சினிமாவுக்குப் புதியவை என்றோ அல்லது இதற்கு முன்பு வேறு படங்களில் எழுப்பப்பட்டதில்லை என்றோ நான் நினைக்கவில்லை. சென்சார் வாரியம் வழங்கிய வெட்டுக்களின் பட்டியலை ஏற்றுக்கொள்ள முடியாது" என்று கூறினார்.

    • ஈரானில் ஹிஜாப் விவகாரத்தில் கடந்த செப்டம்பர் மாதம் அரசுக்கு எதிராக மாபெரும் போராட்டம் வெடித்தது.
    • அரசுக்கு எதிரான போராட்டத்தில் இதுவரை 495 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகின.

    டெஹ்ரான்:

    ஈரானில் ஹிஜாப் விவகாரத்தில் கடந்த செப்டம்பர் மாதம் அரசுக்கு எதிராக மாபெரும் போராட்டம் வெடித்தது. இந்த போராட்டத்தை வெளிநாட்டு சதி என குற்றம் சாட்டிய ஈரான் இரும்புக்கரம் கொண்டு போராட்டத்தை ஒடுக்கியது.

    அரசுக்கு எதிரான போராட்டத்தில் இதுவரை 495 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனிடையே போராட்டத்தில் கலவரம் செய்ததாக 18, 200 பேர் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்டவர்கள் மீது கோர்ட்டில் ரகசிய விசாரணை நடத்தி ஈரான் அரசு கடுமையான தண்டனை விதித்து வருகிறது. இதில் 2 பேருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டு, பொது இடத்தில் அவர்களுக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது. ஈரான் அரசின் இந்த நடவடிக்கைகளுக்கு சர்வதேச அளவில் கடும் கண்டனம் எழுந்தன.

    இதற்கிடையே, ஈரானிய நடிகை தரானே அலிதூஸ்தி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஈரானின் அரசு போராட்டக்காரர்களுக்கு தூக்கு தண்டனை விதித்ததற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் வீடியோ பதிவுகளை வெளியிட்டிருந்தார்.

    இந்நிலையில், போதுமான ஆதாரங்கள் இல்லாமல் ஈரான் அரசுக்கு எதிராக அவதூறு பரப்பும் வகையில் நடிகை தரானே அலிதூஸ்தி வீடியோ வெளியிட்டதாகக் கூறி அவரை அந்நாட்டு காவல்துறை கைது செய்துள்ளது. மேலும் அவரது இன்ஸ்டாகிராம் பக்கம் முடக்கப்பட்டது.

    நடிகை தரானே அலிதூஸ்தி ஈரானின் பிரபல நடிகை ஆவார். அவர் நடித்த 'தி சேல்ஸ்மேன்' திரைப்படம் ஆஸ்கார் விருதை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • ஹிஜாப் விவகாரத்தில் கடந்த செப்டம்பர் மாதம் அரசுக்கு எதிராக மாபெரும் போராட்டம் வெடித்தது.
    • ஈரான் அரசுக்கு எதிரான போராட்டத்தில் இதுவரை 495 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகின.

    டெஹ்ரான்:

    ஈரானில் ஹிஜாப் விவகாரத்தில் கடந்த செப்டம்பர் மாதம் அரசுக்கு எதிராக மாபெரும் போராட்டம் வெடித்தது. இந்தப் போராட்டத்தை வெளிநாட்டு சதி என குற்றம் சாட்டிய ஈரான் இரும்புக்கரம் கொண்டு போராட்டத்தை ஒடுக்கியது. அரசுக்கு எதிரான போராட்டத்தில் இதுவரை 495 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகின.

    போராட்டத்தில் கலவரம் செய்ததாக 18, 200 பேர் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்டவர்கள் மீது கோர்ட்டில் ரகசிய விசாரணை நடத்தி ஈரான் அரசு கடுமையான தண்டனை விதித்து வருகிறது. இதில் 2 பேருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டு, பொது இடத்தில் அவர்களுக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது. ஈரான் அரசின் இந்த நடவடிக்கைகளுக்கு சர்வதேச அளவில் கடும் கண்டனம் எழுந்தன.

    இதற்கிடையே, ஈரானிய நடிகை தரானே அலிதூஸ்தி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஈரானின் அரசு போராட்டக்காரர்களுக்கு தூக்கு தண்டனை விதித்ததற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் வீடியோ பதிவுகளை வெளியிட்டிருந்தார். அரசுக்கு எதிராக அவதூறு பரப்பும் வகையில் நடிகை தரானே அலிதூஸ்தி வீடியோ வெளியிட்டதாகக் கூறி அவரை அந்நாட்டு காவல்துறை கைது செய்துள்ளது.

    நடிகை தரானே அலிதூஸ்தி ஈரானின் பிரபல நடிகை ஆவார். அவர் நடித்த 'தி சேல்ஸ்மேன்' திரைப்படம் ஆஸ்கார் விருதை வென்றுள்ளது.

    தரானே அலிதூஸ்தி ஜாமீன் கோரி மனுதாக்கல் செய்தார். அவருக்கு ஜாமீன் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டது.

    இந்நிலையில், 18 நாட்களுக்கு பிறகு தரானே அலிதூஸ்தி விடுதலை செய்யப்பட்டார். சிறையிலிருந்து வெளியே வந்த அவருக்கு பூங்கொத்து ஆதரவாளர்கள் கொடுத்து வரவேற்றனர்.

    • இயக்குனர் விவேக் அக்னிஹோத்ரி இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான திரைப்படம் ‘தி காஷ்மீர் பைல்ஸ்’.
    • சிறந்த படத்திற்கான பரிசீலனைக்காக தேர்வு செய்யப்பட்ட 301 படங்களில் 'தி காஷ்மீர் பைல்ஸ்' இடம்பிடித்துள்ளது.

    இயக்குனர் விவேக் அக்னிஹோத்ரி இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான திரைப்படம் 'தி காஷ்மீர் பைல்ஸ்'. 1990-களில் காஷ்மீர் பகுதியில் நடைபெற்ற உண்மை சம்பவத்தை தழுவி எடுக்கப்பட்ட இந்த திரைப்படத்திற்கு சில மாநிலங்களில் வரி விலக்கும் கொடுக்கப்பட்டு இருந்தது. இப்படம் மொத்தமாக ரூ.340 கோடியை வசூல் செய்ததாக கூறப்பட்டது.


    விவேக் அக்னிஹோத்ரி 

    இந்நிலையில், 95-வது ஆஸ்கர் விருதுகளில் சிறந்த படத்தின் பரிசீலனைக்காக தேர்வு செய்யப்பட்ட 301 படங்களில் இந்தியத் திரைப்படமான 'தி காஷ்மீர் பைல்ஸ்' இடம்பிடித்துள்ளது. இந்தப் பட்டியலில் மேலும் நான்கு இந்தியப் படங்களும் இடம்பெற்றுள்ளன. இதனை தனது சமூக வலைதளப் பக்கத்தில் தெரிவித்துள்ள இயக்குனர் விவேக் அக்னிஹோத்ரி, இந்திய சினிமாவுக்கு இது ஒரு பெரிய செய்தி என்று பதிவிட்டுள்ளார்.


    விவேக் அக்னிஹோத்ரி 

    மேலும், பல்லவி ஜோஷி, அனுபம் கேர், மிதுன் சக்ரவர்த்தி மற்றும் தர்ஷன் குமார் ஆகியோர் 'சிறந்த நடிகர்' விருதுகளுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.



    • ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்த திரைப்படம் காந்தாரா.
    • இப்படம் அனைத்து மொழிகளிலும் வசூலை அள்ளியது.

    இந்த வருடம் வந்த படங்களில் சிறிய பட்ஜெட்டில் தயாராகி அதிக வசூல் குவித்து திரையுலகினரையும் ரசிகர்களையும் பெரிய ஆச்சரியத்தில் மூழ்கடித்த கன்னட படம் காந்தாரா. இது கன்னடத்தில் வெற்றி பெற்றதால் தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளிலும் டப்பிங் செய்து வெளியிட்டனர். இப்படம் அனைத்து மொழிகளிலுமே வசூலை அள்ளியது.


    காந்தாரா

    ரூ.8 கோடி செலவில் தயாரான காந்தாரா ரூ.400 கோடிக்கு மேல் வசூலை குவித்தது. இப்படத்தை ரிஷப் ஷெட்டி இயக்கி கதாநாயகனாக நடித்து இருந்தார். கர்நாடகத்தில் வாழும் பழங்குடி மக்களின் சமய வழிபாட்டை மையமாக வைத்து இப்பம் உருவாகியிருந்தது. ரஜினிகாந்த் உள்ளிட்ட முன்னணி நடிகர் நடிகைகள் படத்தை பாராட்டினர்.


    காந்தாரா

    இந்நிலையில் காந்தாரா திரைப்படம் ஆஸ்கர் விருதுக்கான தகுதிப் பட்டியலில் சிறந்த படம் மற்றும் சிறந்த நடிகர் ஆகிய இரண்டு பிரிவுகளில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது . இதை காந்தாரா படத்தை தயாரித்த ஹோம்பலே நிறுவனம் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளது. அதில், காந்தாரா இரண்டு ஆஸ்கர் தகுதிகளைப் பெற்றுள்ளதை பகிர்ந்து கொள்வதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்! எங்களுக்கு ஆதரவளித்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றி" என்று தெரிவித்துள்ளது.



    • 95-வது ஆஸ்கர் விருது வழங்கு விழா இன்று கோலாகலமாக நடைபெற்றது.
    • உலக அளவில் ஏராளமான திரைப்படங்கள் பல்வேறு பிரிவுகளில் கீழ் ஆஸ்கர் விருது பெற பரிந்துரைக்கப்பட்டது.

    அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் 95-வது ஆஸ்கார் விருது வழங்கும் விழா கோலாகலமாக நடைபெற்றது. உலக அளவில் ஏராளமான திரைப்படங்கள் பல்வேறு பிரிவுகளில் கீழ் ஆஸ்கர் விருது பெற பரிந்துரைக்கப்பட்டது. ஆஸ்கர் வெற்றியாளர்கள் தேர்வு இதற்கு முன்பே நடைபெற்ற நிலையில், ஆஸ்கர் விருது வழங்கும் நிகழ்வு அமெரிக்காவில் நடந்தது. இந்த முறை ஆஸ்கர் விருது வென்றவர்கள் முழு விவரம் தொடர்ந்து பார்ப்போம்.

    சிறந்த நடிகர் -பிரண்டன் பிரேசர்(BRENDAN FRASER) - தி வேல்

    சிறந்த துணை நடிகர் - கி கு யுவான் (KE HUY QUAN) - எவரி திங் எவரிவேர் அட் ஆல் ஒன்ஸ் (Everything Everywhere All at Once)

    சிறந்த நடிகை - மிஷெல் யோ (MICHELLE YEOH) - எவரி திங் எவரிவேர் அட் ஆல் ஒன்ஸ் (Everything Everywhere All at Once)

    சிறந்த துணை நடிகை - ஜாமி லீ கர்டிஸ் (JAMIE LEE CURTIS) - எவரி திங் எவரிவேர் அட் ஆல் ஒன்ஸ் (Everything Everywhere All at Once)

    சிறந்த அனிமேஷன் திரைப்படம் - குளேர்மோ டி டிரோஸ் பினோக்கியோ (GUILLERMO DEL TORO'S PINOCCHIO)

    சிறந்த ஒளிப்பதிவாளர் - ஜேம்ஸ் பிரண்ட் (James Friend) - ஆல் குயட் ஆன் தி வேஸ்டர்ன் ப்ரண்ட் (ALL QUIET ON THE WESTERN FRONT) 

    சிறந்த ஆடை வடிவமைப்பாளர் - ரூத் கார்ட்டர் (Ruth Carter) -பிளாக் பந்தர் : வக்காண்டா ஃபார் எவர் (BLACK PANTHER: WAKANDA FOREVER) 

    சிறந்த இயக்குனர் - டேனியல் வான் மற்றும் டேனியல் ஸ்கீனர்ட் (Daniel Kwan and Daniel Scheinert) - எவரி திங் எவரிவேர் அட் ஆல் ஒன்ஸ் (EVERYTHING EVERYWHERE ALL AT ONCE)

    சிறந்த ஆவணப்படம் - நவல்னீ (NAVALNY)

    சிறந்த ஆவண குறும்படம் - தி எலிஃபேண்ட் விஸ்பரர்ஸ் (THE ELEPHANT WHISPERERS)

    சிறந்த படத்தொகுப்பு - பால் ரோகர்ஸ் (Paul Rogers) - எவரி திங் எவரிவேர் அட் ஆல் ஒன்ஸ் (EVERYTHING EVERYWHERE ALL AT ONCE)

    சிறந்த சர்வதேச திரைப்படம் - ஆல் குயட் ஆன் தி வேஸ்டர்ன் ப்ரண்ட் (ALL QUIET ON THE WESTERN FRONT)

    சிறந்த ஒப்பனை - ஆட்ரின் மோரட், ஜுடி சின் மற்றும் அனி மேரி பிராட்லீ (Adrien Morot, Judy Chin and Annemarie Bradley) - தி வேல் (THE WHALE)

    சிறந்த ஒரிஜினல் ஸ்கோர் - வால்கர் பிரட்மேன் (Volker Bertelmann)- ஆல் குயட் ஆன் தி வேஸ்டர்ன் ப்ரண்ட் (ALL QUIET ON THE WESTERN FRONT)

    சிறந்த ஒரிஜினல் பாடல் - நாட்டு நாட்டு - கீரவாணி, சந்திர போஸ் (ஆர்.ஆர்.ஆர்)

    சிறந்த படம் - எவரி திங் எவரிவேர் அட் ஆல் ஒன்ஸ் (EVERYTHING EVERYWHERE ALL AT ONCE)

    சிறந்த புரொடக்ஷன் டிசைன் - ஆல் குயட் ஆன் தி வேஸ்டர்ன் ப்ரண்ட் (ALL QUIET ON THE WESTERN FRONT)

    சிறந்த அனிமேஷன் குறும்படம் - தி பாய், தி மோல், தி ஃபாக்ஸ் மற்றும் தி ஹார்ஸ் (THE BOY, THE MOLE, THE FOX AND THE HORSE)

    சிறந்த குறும்படம் - அன் ஐரிஸ் குட் பைய் (AN IRISH GOODBYE) - Tom Berkeley and Ross White

    சிறந்த ஒலி - டாப் கன் : மேவரிக் (TOP GUN: MAVERICK) - Mark Weingarten, James H. Mather, Al Nelson, Chris Burdon and Mark Taylor

    சிறந்த விஷுவல் எஃபெக்ட்ஸ் - அவதார்: தி வே ஆப் வாட்டர் (AVATAR: THE WAY OF WATER) - Joe Letteri, Richard Baneham, Eric Saindon and Daniel Barrett

    சிறந்த திரைக்கதை - வுமன் டாக்கிங் (WOMEN TALKING) - (சாரா போலே) Sarah Polley

    சிறந்த ஒரிஜினல் திரைக்கதை - எவரி திங் எவரிவேர் அட் ஆல் ஒன்ஸ் (EVERYTHING EVERYWHERE ALL AT ONCE) - டேனியல் வான் மற்றும் டேனியல் ஸ்கீனர்ட் (Daniel Kwan and Daniel Scheinert)

    • இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில் வெளியான படம் 'ஆர்ஆர்ஆர்'.
    • இப்படத்தின் ‘நாட்டு நாட்டு’ பாடல் சமீபத்தில் ஆஸ்கர் விருது வென்றது.

    ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர். நடிப்பில் ராஜமௌலி இயக்கத்தில் வெளியான படம் 'ஆர்ஆர்ஆர்'. இப்படம் உலகம் முழுவதும் கடந்த ஆண்டு மார்ச் 25-ஆம் தேதி வெளியானது. தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம், இந்தி மொழிகளில் வெளியான இப்படம் நல்ல விமர்சனங்கள் பெற்று வசூல் சாதனையும் நிகழ்த்தியது.


    நாட்டு நாட்டு (ஆர்.ஆர்.ஆர்.)

    இதையடுத்து, இப்படத்தில் இடம் பெற்றுள்ள 'நாட்டு நாட்டு' பாடல் சிறந்த பாடலுக்கான ஆஸ்கர் விருதை வென்றது. இது படக்குழுவினருக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும், 'ஆர்ஆர்ஆர்' படக்குழுவினருக்கு பலரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.


    ராம் சரண் -அமித்ஷா- சிரஞ்சீவி

    இந்நிலையில், உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆஸ்கர் விருது வென்ற 'நாட்டு நாட்டு' பாடலில் நடனமாடிய நடிகர் ராம் சரணை நேரில் சந்தித்து, வாழ்த்தினார். இந்தச் சந்திப்பின்போது நடிகர் சிரஞ்சீவியும் உடனிருந்தார். மேலும், அமித்ஷா தனது சமூக வலைதளத்தில் 'இந்திய சினிமாவின் ஜாம்பவான்களை சந்தித்ததில் மகிழ்ச்சி' என பதிவிட்டுள்ளார்.


    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ஆஸ்கர் விருதுக்கு படங்கள் பரிந்துரை செய்யப்படும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.
    • மொத்தம் 22 திரைப்படங்கள் பரிந்துரைக்கு அனுப்படுகிறது.

    இந்திய திரைப்பட கூட்டமைப்பு சார்பில் 96-வது ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரை செய்யப்படும் திரைப்படங்கள் குறித்த அறிவிப்பை பரிந்துரை குழுவினர் வெளியிடும் நிகழ்ச்சி சென்னை, அண்ணாசாலையில் உள்ள தென்னிந்திய வர்த்தக சபையில் நடைபெற்றது.

    இதில், தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், மராத்தி உள்ளிட்ட மொழிகளில் இருந்து 22 திரைப்படங்கள் ஆஸ்கர் விருது பரிந்துரைக்கு அனுப்படுகிறது.

    தமிழில் இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான 'விடுதலை -1', மாரிசெல்வராஜ் இயக்கத்தில் வெளியான 'மாமன்னன்', வெங்கி அட்லூரி இயக்கத்தில் 'வாத்தி', இயக்குனர் பொன்குமார் இயக்கத்தில் வெளியான '1947 ஆகஸ்ட் 16' திரைப்படமும் முன் மொழியவுள்ள பட்டியலில் உள்ளது.

    தமிழில் 4 திரைப்படங்களும், தெலுங்கில் 4 திரைப்படங்களும், இந்தியில் 11 திரைப்படங்களும், மலையாளத்தில் ஒரு திரைப்படமும், மராத்தியில் 2 திரைப்படமும் இந்த பரிந்துரை பட்டயலில் இடம்பெற்றுள்ளன. மலையாளத்தில் '2018' திரைப்படம் பரிந்துரைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • பிரபல இங்கிலாந்து இசை கலைஞர் எல்டன் ஜான் சிறப்புமிக்க ஈகோட் பட்டியலில் இடம் பெற்றுள்ளார்
    • ஜான் லெஜண்ட், ஹூபி கோல்ட்பர்க், ஆட்ரி ஹெப்பர்ன் உள்ளிட்ட புகழ்பெற்ற கலைஞர்களின் வரிசையில் இணைகிறார் எல்டன் ஜான்

    பிரபல இங்கிலாந்து இசை கலைஞர் எல்டன் ஜான் தனது  "எல்டன் ஜான் லைவ்,  ஃபேர்வெல் ஃப்ரம் டோட்ஜர் ஸ்டேடியம் " என்ற லைவ் வீடியோக்காக எம்மி விருதை பெற்று ஈகாட் பட்டியலில் இடம் பெற்றுள்ளார்.

    ஈகோட் பட்டியல் என்பது எம்மி, கிராமி, ஆஸ்கார், மற்றும் டோனி ஆகிய விருதுகளின் சுருக்க பெயராகும்.

    இந்த பட்டியலி்ல் ஜெனிபர் ஹட்சன், மெல் ப்ரூக்ஸ், ஜான் லெஜண்ட், ஹூபி கோல்ட்பர்க், ஆட்ரி ஹெப்பர்ன் போன்ற புகழ்பெற்ற கலைஞர் இருக்கும் வரிசையில் இணைகிறார் எல்டன் ஜான்.

    1995 மற்றும் 2020 ஆண்டுகளில் "ராக்கெட்மேன்" மற்றும் "தி லயன் கிங்" போன்ற படங்களின் இசைக்காக சிறந்த ஒரிஜினல் பாடல் பிரிவில் அவர் இரண்டு ஆஸ்கார் விருதுகளை வென்றார். 2000 ஆம் ஆண்டில், ஜான் "ஐடா" நாடகத்திற்காக எழுதப்பட்ட சிறந்த ஒரிஜினல் இசை மற்றும் பாடலுக்கான டோனி விருதைப் பெற்றார். மேலும் ஆறு கிராமி விருதுகளையும் பெற்றுள்ளார்.

    இந்த நிலையில் சமீபத்தில் நடைபெற்ற ராக் ஸ்டார் 2022 "டோட்ஜர் ஸ்டேடியம்" ஸ்பெஷலுக்கான சிறந்த பிரிவில் அவரது ஃபேர்வெல் ஃப்ரம் டோட்ஜர் ஸ்டேடியம் என்ற லைவ் வீடியோ விருதை பெற்றுள்ளது. எம்மிஸ் விழாவில் ஜான் கலந்து கொள்ள முடியாத நிலையில் அவர் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார் " திறமையான குழுவில் நானும் சேர்த்து இருப்பது நம்பமுடியவில்லை. இந்த இடத்தை சேர்த்தது எனது ஆர்வம், அர்ப்பணிப்பு மற்றும் உலகளவில் எனது ரசிகர்களின் உறுதியற்ற ஆதரவால் சாத்தியம் ஆகியிருக்கிறது. எனது வாழ்க்கை முழுவதும் என்னை ஆதரித்த அனைவருக்கும் நான் நன்றியுள்ளவனாக இருப்பேன்" என்று தெரிவித்தார்.

    • பிஎஸ் வினோத்ராஜின் அடுத்த படைப்பாக சூரி நடிப்பில் உருவாகியுள்ள கொட்டுக்காளி திரைப்படம் விளங்குகிறது
    • சமீபத்தில் ஜெர்மனியில் நடந்த 74 வது பெர்லின் சர்வதேச திரைப்பட விழாவில் கொட்டுக்காளி திரையிடையப்பட்டது.

    திரைப்படங்களுக்கு கிடைக்கும் அதிகப்பட்ச அங்கீகாரம் ரசிகர்களின் கைதட்டலே என்றாலும் சர்வதேச திரைப்பட விழாக்களில் தாங்கள் பிரசவித்த திரைப்படங்களுக்கு கிடைக்கும் அங்கீகாரம் இயக்குனருக்கு பெரும் உத்வேகத்தையும் தங்களின் பாதையில் சரியாவே பயணிக்கிறோம் என்ற உறுதியையும் தருவதாக அமைந்துள்ளது.

    அந்த வகையில், கடந்த 2022 ஆம் ஆண்டு இந்தியா சார்பில் ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட கூழாங்கல் படத்தை இயக்கிய அறிமுக இயக்குனர் பிஎஸ் வினோத்ராஜின் அடுத்த படைப்பாக சிவகார்த்திகேயன் தாயாரிப்பில் சூரி நடிப்பில் உருவாகியுள்ள கொட்டுக்காளி திரைப்படம் விளங்குகிறது. டீசர்மட்டும் வெளியிடப்பட்டுள்ள இந்த படம் இன்னும் திரையரங்குகளில் வெளியாகாத நிலையில் தற்போது சர்வதேச திரைப்பட விழாக்களில் அங்கீகாரங்களை குவித்து வருகிறது. 

     

    அந்த வகையில் தற்போது நடந்து வரும் 53 வது டிரான்சில்வேனியா சர்வதேச திரைப்பட விழாவில் சிறப்பு ஜூரி விருதை கொட்டுக்காளி திரைப்படம் வென்று அசத்தியுள்ளது. இந்த நிகழ்ச்சியில்  கொட்டுக்காளி பட இயக்குனர் பிஎஸ் வினோத்ராஜ், நடிகை அனா பென் ஆகியோர் கலந்துகொண்டனர்.

    சமீபத்தில் ஜெர்மனியில் நடந்த 74 வது பெர்லின் சர்வதேச திரைப்பட விழாவில் கொட்டுக்காளி திரையிடையப்பட்டது. இதுதவிர்த்து தற்போது நடந்து வரும் 53 வது டிரான்சில்வேனியா சர்வதேச திரைப்பட விழாவில் 'பிக் ஸ்க்ரீன் போட்டிப் பிரிவில்' தேர்வாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. 

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • ஜெர்மனியில் நடந்த 74 வது பெர்லின் சர்வதேச திரைப்பட விழாவில் கொட்டுக்காளி திரையிடையப்பட்டது.
    • சிறந்த படத்திற்கான 'GOLDEN LYNX' விருதை வென்ற 'கொட்டுக்காளி' திரைப்படம் வென்றுள்ளது.

    கடந்த 2022 ஆம் ஆண்டு இந்தியா சார்பில் ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட கூழாங்கல் படத்தை இயக்கிய அறிமுக இயக்குனர் பிஎஸ் வினோத்ராஜ் தனது அடுத்த படைப்பாக கொட்டுக்காளி திரைப்படத்தை இயக்கியுள்ளார்.

    சிவகார்த்திகேயன் தாயாரிப்பில் சூரி நடிப்பில் உருவாகியுள்ள இப்படத்தின் டீசர் மட்டும் வெளியாகியுள்ளது. இந்த படம் இன்னும் திரையரங்குகளில் வெளியாகாத நிலையில் தற்போது சர்வதேச திரைப்பட விழாக்களில் அங்கீகாரங்களை குவித்து வருகிறது.

    அந்த வகையில் தற்போது நடந்து வரும் 53 வது டிரான்சில்வேனியா சர்வதேச திரைப்பட விழாவில் சிறப்பு ஜூரி விருதை கொட்டுக்காளி திரைப்படம் வென்று அசத்தியுள்ளது.

    சமீபத்தில் ஜெர்மனியில் நடந்த 74 வது பெர்லின் சர்வதேச திரைப்பட விழாவில் கொட்டுக்காளி திரையிடையப்பட்டது. இது தவிர்த்து தற்போது நடந்து வரும் 53 வது டிரான்சில்வேனியா சர்வதேச திரைப்பட விழாவில் 'பிக் ஸ்க்ரீன் போட்டிப் பிரிவில்' தேர்வாகியுள்ளது.

    இந்நிலையில், போர்ச்சுக்கலில் நடைபெற்ற புதிய படங்கள், இயக்குநர்களுக்கான 20ஆவது FEST Festival விழாவில் சிறந்த படத்திற்கான 'GOLDEN LYNX' விருதை 'கொட்டுக்காளி' திரைப்படம் வென்றுள்ளது.

    இந்த தகவலை இப்படத்தின் தயாரிப்பாளரான சிவகார்த்திகேயன் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • ஒரு பக்கம் அரசியல் சாசனத்தின் நகலைப் பறைசாற்றிக் கொண்டிருக்கிறார் ராகுல் காந்தி.
    • மறுபுறம் அவரது கட்சி அதை இழிவுபடுத்துகிறது என்றார் பி.ஆர்.எஸ் கட்சி தலைவர்.

    ஐதராபாத்:

    பாரத ராஷ்டிர சமிதி கட்சியில் இருந்து 7 எம்.எல்.ஏ.க்கள், 6 எம்.எல்.சி.க்கள் மற்றும் ஒரு மாநிலங்களவை எம்.பி. ஆகியோர் காங்கிரஸ் கட்சிக்கு மாறினர்.

    இந்நிலையில், பி.ஆர்.எஸ். கட்சி தலைவரும், முன்னாள் முதல் மந்திரி சந்திரசேகர் ராவின் மகனுமான கே.டி.ராமாராவ் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    பாரதி ராஷ்டிர சமிதி கட்சியிலிருந்து விலகிய உறுப்பினர்களுக்கு எதிராக சட்டப் போராட்டத்திற்குத் தயாராகி வருகிறோம்.

    இதுதொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யத் திட்டமிட்டுள்ளோம். சமீபத்திய கட்சித் தாவல்களின் பிரதிபலிப்பாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    அரசியலமைப்புச் சட்டத்தின் பாதுகாவலர்களான அனைவரையும் சந்திப்போம்.

    ஒரு பக்கம் அரசியல் சாசனத்தின் நகலைப் பறைசாற்றிக் கொண்டிருக்கிறார் ராகுல் காந்தி. மறுபுறம் அவரது கட்சி அதை இழிவுபடுத்துகிறது. அரசியல் சாசனத்தைப் பாதுகாப்பதுபோல் ஆஸ்கார் லெவலில் செயல்படுகிறார்.

    பா.ஜ.க மற்றும் காங்கிரசால் பாதிக்கப்பட்ட அனைவரும் கட்சி மாறுதலுக்கு எதிராக ஒன்றுபட வேண்டும் என தெரிவித்துள்ளார்.

    ×