search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "p ranjith"

    • சூர்யாவின் 45 வது படத்தை இயக்க உள்ளதாக அறிவிப்பு வெளியானது
    • ரஞ்சித்தின் உதவி இயக்குநர் சித்தார்த் விஸ்வநாத் இந்த படத்தை இயக்கி உள்ளார்.

    நடிப்பு, இயக்கம் என பிஸியாக இயங்கி வரும் ஆர்.ஜே. பாலாஜி சூர்யாவின் 45 வது படத்தை இயக்க உள்ளதாக அறிவிப்பு வெளியானது. இந்நிலையில் ஆர்.ஜே. பாலாஜியும் புதிய படம் ஒன்றில் ஹீரோவாக நடிக்க இருக்கிறார். அந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை இயக்குனர் பா. ரஞ்சித் தற்போது வெளியிட்டுள்ளார்.

    ரஞ்சித்தின் உதவி இயக்குநர் சித்தார்த் விஸ்வநாத் இந்த படத்தை இயக்கி உள்ளார். படத்திற்கு சொர்கவாசல் என பெயரிடப்பட்டுள்ளது. ஸ்வீப் ரைட் ஸ்டூடியோஸ் தயாரித்துள்ள இந்தப் படத்தின் கதையை இயக்குநர் உடன் தமிழ்ப் பிரபா, அஸ்வின் ரவிச்சந்திரன் இணைந்து எழுதியுள்ளனர்.

    கடைசியாக ஆர்.ஜே.பாலாஜி அவரே இயக்கி நடித்த சிங்கப்பூர் சலூன் படம் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது. இந்நிலையில் சொர்கவாசல் பாலாஜிக்கு கை கொடுக்குமா என்பதைப் பொறுத்திருந்தே பார்க்க வேண்டும். 

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • காந்தாரா நாயகன் ரிஷிப் ஷெட்டி, தனது சமூக வலைதள பக்கத்தில் அவருடன் எடுத்த புகைப்படங்களை பகிர்ந்து அவர் குறித்து மனம் திறந்துள்ளார்.
    • எனது ஹீரோவை நேரில் சந்தித்ததால் உலகின் மிகவும் அதிஷ்டசாலியான மனிதானாக நான் உணர்கிறேன்

    பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவாகியிருக்கும் தங்கலான் படம் வரும் ஆகஸ்ட் 15 சுதந்திர தினத்தன்று வெளியாக உள்ளது. ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ள தங்கலான் படத்தின் இசைவெளியீட்டு விழா நேற்று முன்தினம் பிரமாண்டமாக நடந்து முடிந்தது.

     

    இதற்கிடையில் படத்தின் ப்ரோமோஷன் பணிகளில் விக்ரம் பிசியாக இயங்கி வருகிறார். தமிழ் சினிமாவில் குரல் கலைஞனாகத் தனது பயணத்தைத் தொடங்கிய விக்ரம், அசாதாரண நடிப்பாலும், தனித்துவமான குரலாலும் மக்களை வெகுவாகக் கவர்ந்தார். பாலா இயக்கத்தில் நடித்த சேது படம் விக்ரமிற்கு பிரேக்கிங் பாயிண்டாக அமைந்தது.

    தொடர்ந்து ஆக்ஷன் ஹீரோவாக தூள், ஜெமினி என கலக்கிய விக்ரம், ரியலிஸ்டிக் ஹீரோவாக பிதாமகன், காசி உள்ளிட்ட படங்களின் ஊடாகவும் தனது நடிப்புத் திறமையை பட்டை தீட்டிக் கொண்டார்.

    இந்தநிலையில் தற்போது, விக்ரமை சந்தித்துள்ள கன்னட திரையுலகின் வளர்ந்து வரும் சூப்பர் ஸ்டார், இயக்குனர், காந்தாரா நாயகன் ரிஷப் ஷெட்டி, தனது சமூக வலைதள பக்கத்தில் அவருடன் எடுத்த புகைப்படங்களை பகிர்ந்து அவர் குறித்து மனம் திறந்துள்ளார்.

     

    அவரது பதிவில், நடிகனாக உருவாவதற்கான எனது பயணத்தில் விக்ரம் சார் எனக்கு எப்போதும் பெரிய இன்ஷ்பிரேஷன், 24 ஆண்டுகள் கழித்து எனது ஹீரோவை நேரில் சந்தித்தது உலகின் மிகவும் அதிஷ்டசாலியான மனிதனாக என்னை உணர வைக்கிறது. என்னைப்போன்ற நடிகர்களுக்கு உந்துசக்தியாக இருப்பதற்கு மிகவும் நன்றி, தங்கலான் படத்துக்கு எனது வாழ்த்துக்கள் . லவ் யூ என்று தெரிவித்துள்ளார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    சில நடிகர்களுக்கு சமூகம் குறித்து அக்கறை இல்லை என்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் பா. ரஞ்சித் இதை கூறியுள்ளார். #pranjith

    சென்னையில், அமெரிக்க தூதரகம் மற்றும் நலண்டவே அறக்கட்டளை சார்பில் மாணவர்கள், இளைஞர்கள் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், அமெரிக்க துணை தூதர் ராபர்ட் புர்கெஸ், இயக்குநர் பா.ரஞ்சித் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    பா.ரஞ்சித் நிருபர்களுக்கு பேட்டி அளித்த போது கூறியதாவது:-

    “சாதியினை தவிர்ப்பதற்கு ஏற்கனவே பெரிய மருந்து இருக்கிறது. அது தான் பெரியாரும், அம்பேத்கரும். நாம் அந்த ஆர்ஜினில் இருந்துதான் வருகிறோம். குறிப்பாகத் தமிழகத்தில் பெரியார் இயக்கங்களின் வேலைகள் மிக முக்கியமானதாக இருந்தன. ஆனால், இப்போது பெரிய இடைவேளை உருவாகி உள்ளது.

    மக்கள் தங்கள் சாதி உணர்வை நோக்கி நகரும் போது கொஞ்சம் பயமாகத் தான் இருக்கிறது. திரும்பி இதை மாற்ற வேண்டும் என்றால், மக்கள் என்னவாக இருக்கிறார்கள் என்பதை சொல்ல வேண்டியிருக்கிறது. ஆனால், ஓட்டு அரசியல் இங்கிருக்கும் எல்லா சமூகத்தையும் தனித்தனியாக பிரித்திருக்கிறது. குறிப்பாக எல்லா சாதிகளிலும் தனித் தனி பிரிவுகளை உண்டாக்கி இருக்கிறார்கள்.

    வெறுமனே தலித்தில் மட்டுமல்ல, பிற்படுத்தப்பட்டவர்கள், மிகவும் பிற்படுத்தப்பட்டவர்கள் என எல்லா சாதிகளிலும் தனி பிரிவுகள் உருவாக்கி, இந்த பிரிவுக்கு நீ இரு... என்று எல்லாவற்றையும் உடைத்துவிட்டார்கள். பெரியாரிய இயக்கங்கள் இங்கு எல்லோரையும் ஒன்றாக்கியது. அப்படி ஒன்றாக்கியதை தற்போது உடைப்பதற்கான நிறைய வேலைகள் இங்கு நடந்து கொண்டுதான் இருக்கின்றன.

    நடிகர்களுக்கு மக்கள் மீதுள்ள அக்கறை பற்றிய கேள்விக்கு ‘விஜய்சேதுபதி உள்ளிட்ட நிறைய நடிகர்கள் மக்களுக்காக உதவிசெய்து வருகிறார்கள், சில நடிகர்களுக்கு சமூகம் குறித்து அக்கறை இல்லை என்பது வருத்தமளிக்கிறது” என்றும் கூறி உள்ளார்.

    ×