என் மலர்
நீங்கள் தேடியது "Padayappa 2"
காலா படத்தை தொடர்ந்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் நிலையில், அவர் அடுத்ததாக கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் படையப்பா 2-வில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. #Padayappa2 #Rajinikanth
நடிகர் ரஜினிகாந்த் ஒரு பக்கம் அரசியலில் வேகம் எடுத்துக்கொண்டே சினிமாவிலும் கவனம் செலுத்தி வருகிறார். காலா படத்தை தொடர்ந்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடித்து வருகிறார். அவர் நடிப்பில் உருவான 2.0 நவம்பர் 29-ம் தேதி வெளிவர இருக்கிறது.
இத்துடன் நடிப்பை விட்டு விட்டு தீவிர அரசியலில் இறங்குவார் என்று நினைத்த ரசிகர்களை ஏமாற்றும் விதமாக அடுத்து கே.எஸ்.ரவிகுமார் இயக்கத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வந்தது. இந்த படம் படையப்பா படத்தின் அடுத்த பாகமாக இருக்கலாம் என்று செய்தி வருகிறது. 1999-ம் ஆண்டு ரஜினிகாந்த் கே.எஸ்.ரவிகுமார் கூட்டணியில் வெளியான படையப்பா படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது.

அதன் பிறகு கே.எஸ்.ரவிகுமார் ரஜினியை வைத்து ஜக்குபாய் மற்றும் ராணா படங்களை இயக்குவதாக இருந்து அவை கைவிடப்பட்டன. பின்னர் இருவரது கூட்டணியில் லிங்கா வெளியாகி தோல்வி அடைந்தது. மீண்டும் ரஜினியை இயக்க இருக்கும் படத்துக்காக ரம்யா கிருஷ்ணனை அணுகி இருக்கிறார் ரவிகுமார்.
எனவே தான் படையப்பா 2 படத்தின் தொடர்ச்சி என்று செய்தி வருகிறது. ரவிகுமார் ரஜினியிடம் ஒரு கதை கூறி சம்மதம் வாங்கி இருப்பது மட்டுமே உண்மை. மற்ற எதுவும் இன்னும் உறுதியாகவில்லை என்கிறார்கள். #Padayappa2 #Rajinikanth