search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Padma Shri"

    • பத்ம விருது பெற தேர்வாகியுள்ளவர்களுக்கு பாமக கௌரவ தலைவர் ஜி.கே.மணி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
    • விஜயகாந்த் உள்ளிட்ட 17 பேர் பத்ம பூஷன் விருது பெறுகிறார்கள்.

    பத்ம விருதுகளுக்கு தேர்வாகியுள்ள நடிகர் விஜயகாந்த் உள்ளிட்ட அனைவருக்கும் பாமக கௌரவ தலைவர் ஜி.கே.மணி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், "இந்திய குடியரசு தினத்தை முன்னிட்டு மத்திய அரசின் பத்ம விபூஷன் விருது பெற்ற குடியரசு முன்னாள் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு பத்மபூஷன் விருது பெற்ற மறைந்த நண்பர் விஜயகாந்த் ஆகியோருக்கும் விருது பெற்ற மற்றவர்களுக்கும் வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

    இந்திய நாட்டின் இரண்டாவது உயர்ந்த விருதான பத்ம விபூஷன் விருது பெற்ற குடியரசு முன்னாள் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு, பத்மபூஷன் விருது பெற்ற மறைந்த நண்பர் விஜயகாந்த், தமிழ்நாட்டைச் சேர்ந்த பத்ம விபூஷன் விருது பெற்ற கலைஞர்கள் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் வைஜெயந்திமாலா, பத்மா சுப்ரமணியம், பத்மஸ்ரீ விருது பெற்ற கிராமிய கலையான கும்மி ஆட்ட பயிற்சியாளர் பத்தரப்பன், சின்னப்பா, இயற்கை விவசாயி செல்லம்மாள் உள்ளிட்ட விருது பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்" என பதிவிட்டிருந்தார்.

    • 2023-ஆம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது.
    • பத்ம விருதுகள் 106 பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

    இந்தியாவின் உயரிய விருதுகளில் ஒன்றாக பத்ம விருது . இந்த விருது ஒவ்வொரு ஆண்டும் பல்துறை சார்ந்த ஆளுமைகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் 2023-ஆம் ஆண்டிற்கான பத்ம விருது குடியரசு தினத்தையொட்டி 106 பேருக்கு அறிவிக்கப்பட்டது. பத்ம விருது வென்றவர்களுக்கு விருது வழங்கும் விழா டெல்லி ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்று வருகிறது.

    இந்த நிகழ்ச்சியில், பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை மந்திரி அமித்ஷா, சபாநாயகர் ஓம் பிர்லா உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். இந்நிலையில், தமிழகத்தைச் சேர்ந்த பாம்பு பிடி வீரர்களான வடிவேல் கோபால், மாசி சடையனுக்கு குடியரசு தலைவர் திரெளபதி முர்மு பத்மஸ்ரீ விருது வழங்கி கவுரவித்தார்.

    சுதந்திரம் குறித்து அவதூறாகப் பேசிய கங்கனா ரணாவத்தின் பத்மஸ்ரீ விருதை திரும்பப் பெற வேண்டும் என காங்கிரஸ் உள்பட பல்வேறு கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.
    புதுடெல்லி:

    பத்மஸ்ரீ விருது பெற்ற கங்கனா ரணாவத் தனியார் டி.வி. சேனல் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார். அப்போது அவர் பேசுகையில், 1947ல் நம் நாடு பெற்றது சுதந்திரம் அல்ல, பிச்சை. உண்மையான சுதந்திரம் 2014ல் தான் கிடைத்தது என தெரிவித்தார்.

    கங்கனா ரணாவத்தின் இந்த சர்ச்சையான பேச்சுக்கு காங்கிரஸ் உள்பட பல்வேறு கட்சியினரும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். 

    இந்நிலையில், எனது சில கேள்விகளுக்கு பதிலளித்தால் பத்மஸ்ரீ விருதை திருப்பி அளிக்கத் தயார் என பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத் தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக அவர் கூறுகையில், எனக்கு தெரிந்தவரை 1947-ம் ஆண்டில் எந்த போரும் நடக்கவில்லை. நடந்திருந்தால் அது பற்றி யாராவது எனக்கு சொல்லட்டும். வெள்ளையர்கள் நாட்டை ஏன் பிரித்தனர்?. 1947ல் சுதந்திரத்தைக் கொண்டாடுவதற்கு பதில், மக்கள் ஒருவருடன் ஒருவர் அடித்துக் கொண்டது ஏன்? 

    எனது கேள்விக்கான பதில்களை யாராவது சொல்லட்டும். அதன்பின், 1947ல் பெற்ற சுதந்திரத்தை பிச்சை என கூறியதற்காக பகிரங்கமாக மன்னிப்பு கேட்டு, எனக்கு வழங்கப்பட்ட பத்மஸ்ரீ விருதையும் திருப்பிக் கொடுத்து விடுவேன் என தெரிவித்துள்ளார்.

    குடியுரிமை மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து மணிப்பூர் டைரக்டர் அரிபம் ஷியாம் சர்மா பத்மஸ்ரீ விருதை திருப்பி அனுப்ப உள்ளார். #PadmaShri #AribamSyamSharma
    இம்பால்:

    வடகிழக்கு மாநிலமான மணிப்பூரை சேர்ந்தவர் அரிபம் ஷியாம் சர்மா (83). இவர் பிரபல மணிப்பூர் சினிமா டைரக்டராகவும், இசையமைப்பாளராகவும் இருந்து வருகிறார்.



    இவர் மத்திய அரசு தனக்கு வழங்கிய பத்மஸ்ரீ விருதை திருப்பி அனுப்ப உள்ளார். சமீபத்தில் மத்திய அரசு பாராளுமன்றத்தில் குடியுரிமை சட்ட மசோதா தாக்கல் செய்தது. அது மக்களவையில் நிறைவேற்றப்பட்டது.

    இதற்கு டைரக்டர் அரிபம் ஷியாம் சர்மா எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இந்த சட்டம் அண்டை நாடுகளான வங்காள தேசம், பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானில் இருந்து கடந்த 2014 டிசம்பர் 31-ந்தேதிவரை இந்தியாவில் குடியேறிய முஸ்லிம் அல்லாத சமூகத்தினருக்கு அதிவிரைவாக குடியுரிமை வழங்க வழி வகை செய்கிறது.

    இதற்கு மணிப்பூர், மேகாலயா உள்ளிட்ட வடகிழக்கு மாநில மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களின் உணர்வுக்கு மதிப்பளித்து இந்த விருதை திரும்ப அனுப்புவதாக அவர் தெரிவித்துள்ளார்.

    டைரக்டர் சர்மா பல தேசிய விருதுகளை பெற்று இருக்கிறார். அவருக்கு மத்திய அரசு கடந்த 2006-ம் ஆண்டு பத்மஸ்ரீ விருது வழங்கி கவுரவித்தது. #PadmaShri #AribamSyamSharma

    தமிழகத்தை சேர்ந்த டேபிள் டென்னிஸ் வீரரான சரத்கமல் மற்றும் கம்பீர், அஜய் தாகூர் உள்பட 8 பேருக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது. #PadmaShri #GautamGambhir
    புதுடெல்லி:

    மத்திய அரசு நேற்றிரவு அறிவித்த பத்ம விருது பெறுவோர் பட்டியலில் 9 விளையாட்டு பிரபலங்களும் இடம் பெற்று இருக்கிறார்கள். காமன்வெல்த் விளையாட்டில் 3 பதக்கம் வென்ற தமிழகத்தை சேர்ந்த டேபிள் டென்னிஸ் வீரரான சரத்கமல் பத்மஸ்ரீ விருதுக்கு தேர்வாகியுள்ளார்.

    இதே போல் இரண்டு உலக கோப்பையை வென்ற இந்திய கிரிக்கெட் அணியில் இடம் பிடித்தவரான கவுதம் கம்பீர், இந்திய கால்பந்து அணியின் கேப்டன் சுனில் சேத்ரி, கபடி அணியின் கேப்டன் அஜய் தாகூர், செஸ் வீராங்கனை ஹரிகா, வில்வித்தை மங்கை பம்பைய்லா தேவி, கூடைப்பந்து வீராங்கனை பிரசாந்தி சிங், மல்யுத்த வீரர் பஜ்ரங் பூனியா ஆகியோரும் பத்மஸ்ரீ விருது பெறுகிறார்கள். மலையேற்றத்தில் பல சாதனைகள் படைத்திருக்கும் உத்தரகாண்டை சேர்ந்த வீராங்கனை பச்சேந்திரி பாலுக்கு பத்ம பூஷண் விருது வழங்கப்படுகிறது. #PadmaShri #GautamGambhir
    ×