என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Pakistan Economic Crisis"
- விலைவாசி உயர்வால் அவதியடைந்து வரும் மக்கள் கடுமையான பெட்ரோல்-டீசல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
- விலை உயர்வை கண்டித்து கராச்சியில் மக்கள் போராட்டம் நடத்தினர்.
இஸ்லாமாபாத்:
பாகிஸ்தானில் கடும் பொருளாதார நெருக்கடி நிலவி வருகிறது. இதனால் அத்தியாவசிய பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்து உள்ளது. குறிப்பாக பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்த்தப்பட்டு வருகிறது.
சில நாட்களுக்கு பிறகு பெட்ரோல் விலை உயர்த்தப்பட்டு ஒரு லிட்டர் ரூ.280-க்கு மேல் விற்றது.
இந்தநிலையில் பாகிஸ்தான் வரலாற்றில் முதல் முறையாக பெட்ரோல் ஒரு லிட்டர் ரூ.300-ஐ தாண்டி உள்ளது.
பாகிஸ்தானில் தற்போதுள்ள காபந்து அரசாங்கம், பெட்ரோல் லிட்டருக்கு ரூ.14.91 உயர்த்தி உள்ளது. இதனால் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.305.36-க்கு விற்கப்படுகிறது. டீசல் லிட்டருக்கு ரூ.18.44 உயர்த்தப்பட்டு ரூ.311.84-க்கு விற்கிறது.
மண்எண்ணெய் விலை உயர்த்தப்படவில்லை. கடந்த ஆகஸ்டு 15-ந்தேதி காபந்து அரசாங்கம், எரிபொருளின் விலையை லிட்டருக்கு ரூ.20 வரை உயர்த்தி இருந்த நிலையில் இரண்டு வாரங்களில் மேலும் விலையை அதிக அளவில் உயர்த்தி உள்ளது மக்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
விலைவாசி உயர்வால் அவதியடைந்து வரும் மக்கள் இந்த கடுமையான பெட்ரோல்-டீசல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
விலை உயர்வை கண்டித்து கராச்சியில் மக்கள் போராட்டம் நடத்தினர். அதேபோல் மற்ற இடங்களிலும் போராட்டத்திலும் ஈடுபட்டனர்.
பொருளாதார நெருக்கடியை சமாளிக்க பாகிஸ்தான் அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. சர்வதேச நாணய நிதியத்திடம் கடன் கேட்டுள்ளது. இதற்காக சர்வதேச நாணய நிதியம் பல்வேறு நிபந்தனைகளை விதித்துள்ளது.
இதில் மானியங்களை தவிர்க்க கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இதனால் பெட்ரோல்-டீசல் விலை தொடர்ந்து உயர்த்தப்பட்டு வருகிறது.
- முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு பெட்ரோல், டீசல் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.
- கடந்த 15 நாட்களில் எரிபொருள் விலை லிட்டருக்கு ரூ.40 உயர்ந்துள்ளது.
பாகிஸ்தானில் பொருளாதார நெருக்கடி இருந்து வரும் நிலையில் அத்தியாவசிய பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.
இந்த நிலையில் பாகிஸ்தானில் பெட்ரோல்-டீசல் விலை மீண்டும் உயர்த்தப்பட்டுள்ளது. ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.290-க்கும், ஒரு லிட்டர் டீசல் ரூ.293-க்கும் விற்கப்படுகிறது. அங்கு முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு பெட்ரோல், டீசல் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.
கடந்த 15 நாட்களில் எரிபொருள் விலை லிட்டருக்கு ரூ.40 உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
- நிதி நெருக்கடியை தவிர்க்க அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் போதுமானதாக இல்லை.
- புற்றுநோய்க்கு சாதாரண வலி நிவாரணி மருந்து கொடுப்பது போல் அரசு நடவடிக்கை உள்ளது.
இஸ்லாமாபாத்:
இந்தியாவின் அண்டை நாடான பாகிஸ்தானில் கடுமையான பொருளாதார நெருக்கடி நிலவுகிறது.
அத்தியாவசிய பொருட்களின் விலை பல மடங்கு அதிகரித்துள்ளது. பெட்ரோலிய பொருட்கள் இதுவரை இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளது.
இந்த நிலையில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் சமீபத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
பாகிஸ்தானின் பொருளாதார நிலை நாளுக்கு நாள் மோசம் அடைந்து வருகிறது. பிரதமர் ஷபாஸ் ஷெரீப் தலைமையிலான அரசின் தவறான நிர்வாகமே இதற்கு காரணமாகும்.
மாவு உள்ளிட்ட உணவு பொருட்களின் விலை பல மடங்கு அதிகரித்துள்ளது. ஒரு கிலோ நெய் பாகிஸ்தான் மதிப்பில் 60 ஆயிரம் கோடி ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
நிதி நெருக்கடியை தவிர்க்க அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் போதுமானதாக இல்லை. புற்றுநோய்க்கு சாதாரண வலி நிவாரணி மருந்து கொடுப்பது போல் அரசு நடவடிக்கை உள்ளது.
உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் விரைவில் இலங்கைக்கு ஏற்பட்டது போன்ற நிலைமை நமக்கு ஏற்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
நெய் விலையை 60 ஆயிரம் கோடி ரூபாய் என வாய் தவறி இம்ரான்கான் பேசியது அந்த நாட்டில் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இதனை வைத்து பலரும் அவரை கேலி செய்து வருவதுடன் கடுமையாக விமர்சித்தும் வருகிறார்கள்.
- பாகிஸ்தானில் பெட்ரோல் விலை மீண்டும் அதிகரிக்கப்பட்டுள்ளது. பெட்ரோல் லிட்டருக்கு ரூ.22.20 உயர்த்தப்பட்டு ரூ.272-க்கு விற்கப்படுகிறது.
- மண்ணெண்ணெய் ஒரு லிட்டருக்கு ரூ.12.90 அதிகரிக்கப்பட்டு ரூ.202.73 ஆக உள்ளது.
பாகிஸ்தான் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வருகிறது. இதனால் அத்தியாவசிய பொருட்கள் விலை கடுமையாக உயர்ந்துள்ளதால் மக்கள் அவதியடைந்துள்ளனர். ஒரு லிட்டர் பால் ரூ.210-க்கு விற்கப்படுகிறது. கோழிகறி கிலோ ரூ.780 ஆக உள்ளது.
இந்த நிலையில் பாகிஸ்தானில் பெட்ரோல் விலை மீண்டும் அதிகரிக்கப்பட்டுள்ளது. பெட்ரோல் லிட்டருக்கு ரூ.22.20 உயர்த்தப்பட்டு ரூ.272-க்கு விற்கப்படுகிறது. அதே போல் மண்ணெண்ணெய் ஒரு லிட்டருக்கு ரூ.12.90 அதிகரிக்கப்பட்டு ரூ.202.73 ஆக உள்ளது. டீசல் லிட்டருக்கு ரூ.9.60 உயர்த்தப்பட்டு ரூ.196.68-க்கு விற்கப்படுகிறது.
இந்த விலை உயர்வு இன்று முதல் அமலுக்கு வருவதாக அரசு அறிவித்துள்ளது. அதே போல் பொது விற்பனை வரி 17 சதவீதமாக இருந்து 18 சதவீதமாக உயர்த்தப்பட்டு இருக்கிறது.
- சிலிண்டர்களுக்குப் பதிலாக பிளாஸ்டிக் பைகளில் அடைக்கப்பட்ட எரிவாயுவை பயன்படுத்தும் பழக்கம் அதிகரித்துள்ளது.
- பிளாஸ்டிக் பையில் உள்ள எரிவாயுவை சிறிய மின்சார பம்ப் உதவியுடன் மக்கள் பயன்படுத்துகிறார்கள்.
பொருளாதார நெருக்கடி மற்றும் பணவீக்கத்தால் பாகிஸ்தானில் பெட்ரோலிய பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இதனால் சாதாரண மக்கள் அவதியடைந்து வருகின்றனர். சமையல் எரிவாயு சிலிண்டர்கள் பற்றாக்குறை உள்ளதால் மக்களுக்கு உரிய நேரத்தில் எரிவாயு கிடைக்காமல் பரிதவிக்கின்றனர்.
இந்த நெருக்கடிக்கு மத்தியில், சமையல் எரிவாயுவைப் பெறுவதற்கு மக்கள் மேற்கொள்ளும் மாற்று நடவடிக்கைகளை காட்டும் பல வீடியோக்கள் சமூக ஊடகங்களில் வெளிவந்துள்ளன. சிலிண்டர்களுக்குப் பதிலாக பிளாஸ்டிக் பைகளில் அடைக்கப்பட்ட எரிவாயுவை பயன்படுத்தும் பழக்கம் அதிகரித்துள்ளது. பாகிஸ்தானின் வடமேற்கு பகுதியில் உள்ள கைபர் பாக்துன்க்வா மாகாணத்தில், சமையல் எரிவாயு சிலிண்டர்களின் கையிருப்பில் குறைந்து வருவதால், மக்கள் சமையல் எரிவாயுவை சேமிக்க பெரிய பிளாஸ்டிக் பைகளைப் பயன்படுத்துவதை வீடியோவில் காண முடிந்தது.
நாட்டின் எரிவாயு குழாய் நெட்வொர்க்குடன் இணைக்கப்பட்ட கடைகளில் இயற்கை எரிவாயுவை இந்த பிளாஸ்டிக் பைகளில் நிரப்புகின்றனர். கசிவைத் தவிர்க்க, விற்பனையாளர்கள் அந்த பையை வால்வு மூலம் இறுக்கமாக மூடுகின்றனர். பைகள் பின்னர் மக்களுக்கு விற்கப்படுகின்றன. பின்னர் அவர்கள் ஒரு சிறிய மின்சார பம்ப் உதவியுடன் எரிவாயுவைப் பயன்படுத்துகிறார்கள். பிளாஸ்டிக் பைகளில் மூன்று முதல் நான்கு கிலோ வரை எரிவாயுவை நிரப்ப சுமார் ஒரு மணி நேரம் ஆவதாக தகவல் வெளியாகியிருக்கிறது.
இரண்டு சிறுவர்கள் எரிவாயு நிரப்பப்பட்ட இரண்டு பெரிய வெள்ளை பிளாஸ்டிக் பைகளை எடுத்துச் செல்லும் வீடியோ வெளியாகி உள்ளது. "இந்த பிளாஸ்டிக் பைகள் வெடித்து விபத்து ஏற்படும் அபாயம் குறித்து எச்சரிக்கப்பட்டுள்ளது. இதனால் அச்சம் ஏற்பட்டாலும், சிலிண்டர்களின் விலை உயர்வால் ஏழைகளாகிய எங்களுக்கு வேறு வழியில்லை, என்கின்றனர் மக்கள்.
இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்த நடைமுறை மிகவும் ஆபத்தானது என்பதால், வீடியோவைப் பார்த்த பலரும் பாதுகாப்பு குறித்த கவலையை பதிவிட்டுள்ளனர். சிறிதளவு தவறு நேர்ந்தால்கூட வாயு கசிவு மற்றும் வெடிப்புக்கு வழிவகுக்கும் என்பதை பயனர்கள் குறிப்பிட்டனர். ''என்னால் இதை நம்ப முடியவில்லை. பாகிஸ்தானில் சரக்கு மற்றும் சேவை துறை என்ற ஒரு துறை இல்லையா? அடிப்படை பாதுகாப்பு தரநிலைகள் பின்பற்றப்பட வேண்டுமா, இல்லையா?'' என ஒருவர் கேள்வி எழுப்பி உள்ளார்.
கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் சிலிண்டர்களின் இருப்பு குறைந்ததால், விற்பனையாளர்கள் சப்ளையை குறைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. காரக் மாவட்டத்தில் உள்ள மக்களுக்கு 2007 ஆம் ஆண்டு முதல் எரிவாயு இணைப்புகள் வழங்கப்படவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. ஹாங்கு நகரில் கடந்த இரண்டு ஆண்டுகளாக எரிவாயு இணைப்பு இல்லை. எரிவாயுவை எடுத்துச் செல்லும் குழாய் உடைந்ததில் இருந்து சரிசெய்யப்படாமல் உள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்