search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Pakistan jail"

    • பாகிஸ்தான் சிறையில் வாடும் 682 இந்தியர்கள் பற்றிய பட்டியலை அந்நாடு இந்தியாவிடம் ஒப்படைத்தது.
    • இந்திய சிறைகளில் வாடும் 461 பாகிஸ்தானியர் பற்றிய பட்டியலை இந்திய அரசு பாகிஸ்தானிடம் ஒப்படைத்தது.

    இஸ்லாமாபாத்:

    இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே இருதரப்பிலும் தூதரக ரீதியில் கைதிகளை பரஸ்பரம் அணுகுவதற்கு வழிசெய்யும் ஒப்பந்தம் 2008-ம் ஆண்டு மே மாதம் 21–ம் தேதி கையெழுத்தானது.

    இந்த ஒப்பந்தத்தின்படி இரு நாடுகளும் பரஸ்பரம் தத்தமது சிறைகளில் வாடும் எதிர்நாட்டு கைதிகளின் பட்டியலை ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 1–ம் தேதியும், ஜூலை 1–ம் தேதியும் பரிமாறிக்கொள்ளும் நடைமுறை இருந்து வருகிறது.

    இந்நிலையில், இந்த ஒப்பந்தத்தின்படி, பாகிஸ்தான் சிறையில் வாடுகிற 633 மீனவர்கள், 49 சிவிலியன்கள் என 682 இந்தியர்கள் பற்றிய பட்டியலை அந்த நாட்டின் அரசு இஸ்லாமாபாத்தில் உள்ள இந்திய தூதரகத்திடம் ஒப்படைத்தது.

    இதேபோல், இந்திய சிறைகளில் வாடும் 116 மீனவர்கள், 345 சிவிலியன்கள் என 461 பாகிஸ்தானியர் பற்றிய பட்டியலை டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்திடம் இந்திய அரசும் வழங்கியது. மேலும், பாகிஸ்தான் சிறையில் உள்ள 539 பேரின் இந்திய குடியுரிமை உறுதிப்படுத்தப்பட்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    சிறையில் இருக்கும் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் செரீப்புக்கு உடல்நிலை மோசமாக உள்ளதால் அவரை மருத்துவமனையில் அனுமதிக்க மருத்துவக்குழு பரிந்துரைத்துள்ளது. #NawazSharif #Pakistan
    லாகூர்:

    பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் செரீப்புக்கு ஊழல் வழக்கில் அந்நாட்டு நீதிமன்றம் 7 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து கடந்த மாதம் 24-ந் தேதி தீர்ப்பளித்தது.

    இதையடுத்து அவர் உடனடியாக கைது செய்யப்பட்டு லாகூரில் உள்ள கோட் லக்பத் சிறையில் அடைக்கப்பட்டார்.

    நவாஸ் செரீப்புக்கு இதய நோய் பாதிப்பு இருக்கிறது. இதையடுத்து அவர் மருத்துவமனையில் நேற்று முன்தினம் அனுமதிக்கப்பட்டார். பரிசோதனைக்குப் பின் மீண்டும் அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.

    இந்த நிலையில் நவாஸ் செரீப்பின் உடல் நிலை மோசம் அடைந்துள்ளதாக அவரது டாக்டரும், இருதய நோய் நிபுணருமான அட்னன் கான் தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது:-

    நவாஸ் செரீப்பின் இருதய நோய் மிகவும் தீவிரம் அடைந்துள்ளது. அதன் காரணமாக அவரது உடல்நிலை மிகவும் மோசமாகி உள்ளது. சிறையில் வைத்து அவருக்கு சிகிச்சை அளிக்க முடியாது. எனவே அவரை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.

    நவாஸ் செரீப்பை மருத்துவமனையில் அனுமதிக்கவேண்டும் என்று ஏற்கனவே மருத்துவக்குழு பரிந்துரைத்துள்ளது. அந்த பரிந்துரையை அரசு ஏற்கவில்லை.

    இவ்வாறு அவர் கூறினார். #NawazSharif #Pakistan
    இந்தியாவுக்காக உளவு பார்த்ததாக பாகிஸ்தான் நாட்டு சிறையில் மூன்றாண்டுகள் தண்டனை அனுபவித்த ஹமித் நிஹால் அன்சாரி இன்று விடுதலை செய்யப்பட்டார். #Pakistanreleases #Indianprisoner #HamidNihalAnsari
    இஸ்லாமாபாத்:

    மும்பை நகரை சேர்ந்தவர் ஹமித் நிஹால் அன்சாரி(33). சமூக வலைத்தளம் மூலமாக பாகிஸ்தான் நாட்டு பெண்ணை காதலித்துவந்த அன்சாரி ஆப்கானிஸ்தான் எல்லை வழியாக பாகிஸ்தான் நாட்டுக்குள் நுழைந்த குற்றத்துக்காக கடந்த 2012-ம் ஆண்டில் கைது செய்யப்பட்டார்.

    உரிய ஆவணங்கள் ஏதுமின்றி இந்தியாவுக்காக உளவு பார்ப்பதற்காக தங்கள் நாட்டுக்குள் நுழைந்ததாக அன்சாரி மீது பெஷாவர் நகரில் உள்ள ராணுவ நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

    போலி அடையாள அட்டையுடன் பாகிஸ்தானுக்குள் நுழைந்த குற்றத்துக்காக இந்த வழக்கில் அவருக்கு மூன்றாண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

    இதைதொடர்ந்து, கடந்த 15-12-2015 அன்று அவர் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த தண்டனை காலம் கடந்த 15-ம் தேதியுடன் முடிவடைந்தும் அவர் சிறையில் இருந்து விடுதலை செய்யப்படவில்லை.

    அன்சாரி தொடர்பான ஆவணங்கள் ஏதும் சமர்ப்பிக்கப்படாததால் அவரை விடுதலை செய்யாமல் இருப்பதாக தெரிவித்த பெஷாவர் சிறைத்துறை அதிகாரிகளின் விளக்கத்தை ஏற்றுகொள்ள பெஷாவர் உயர் நீதிமன்றம் மறுத்து விட்டது.

    அன்சாரியை இந்திய அதிகாரிகளிடம் ஒப்படைக்க வேண்டும் என பெஷாவர் நீதிமன்றம் கடந்த ஆகஸ்டு மாதம் உத்தரவிட்டிருந்தது.

    இந்நிலையில், ஹமித் நிஹால் அன்சாரி  இன்று விடுதலை செய்யப்பட்டதாகவும், அவரை இந்திய அதிகாரிகளிடம் ஒப்படைக்கும் நடைமுறைகள் தொடங்கியுள்ளதாகவும் பாகிஸ்தான் நாட்டு வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் முஹம்மது பைசல் தெரிவித்துள்ளார். #Pakistanreleases #Indianprisoner #HamidNihalAnsari
    ×