search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Pakistan militants"

    பாகிஸ்தானில் பயங்கரவாத இயக்கங்கள் செயல்படுவது உண்மை என்று கூறிய பிரதமர் இம்ரான் கான் கருத்துக்கு கண்டனம் எழுந்துள்ளது. #Imrankhan
    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் 2 நாள் அரசுமுறை பயணமாக ஈரான் சென்று இருந்தார். அப்போது தெக்ரானில் ஈரான் அதிபர் ஹசன் ரக்கானியுடன் கூட்டாக பேட்டி அளித்தார்.

    அப்போது, “பாகிஸ்தானில் செயல்படும் பயங்கரவாத அமைப்புகளால் ஈரான் மிகவும் பாதிக்கப்படுவதை நான் அறிவேன். பயங்கரவாத அமைப்புகள் செயல்படுவதை ஈரானும், பாகிஸ்தானும் விரும்பவில்லை. அதில் உறுதியாகவும், நம்பிக்கையுடனும் இருக்கிறோம்.

    இரு நாடுகளிடையே நல்ல நிலையும், நட்பையும் உருவாக்கும் என நம்புகிறோம்” என்றார். இவரது இக்கருத்துக்கு பாகிஸ்தான் எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.

    பாகிஸ்தான் முஸ்லிம் லீக்-நவாஸ் கட்சி தலைவர் குர்ரம் தஸ்தகீர் கூறும்போது, “பாகிஸ்தானில் பயங்கரவாத இயக்கங்கள் செயல்படுவதாக பிரதமர் கூறியிருப்பது முதன் முறையாக நாட்டின் பாதுகாப்புக்கு எதிரானது.

    வெளிநாட்டு மண்ணில் இருந்து கொண்டு இத்தகைய ஒப்புதல் வாக்குமூலத்தை இதுவரை எந்த பிரதமரும் அளித்தது இல்லை. இந்த அறிக்கை மூலம் பிரதமர் இம்ரான்கான் ராஜ்ய ரீதியிலான மிகப்பெரிய தவறை செய்துவிட்டார். நாட்டின் பாதுகாப்புக்கு ஊறு இழைத்துவிட்டார். இதற்குமுன்பு இந்திய பாராளுமன்ற தேர்தலில் வெற்றிபெற்று மோடி பிரதமரானால் தான் காஷ்மீர் பிரச்சனையை தீர்க்க முடியும் என முரண்பாடான கருத்து கூறினார்” என்றார்.

    முன்னாள் வெளியுறவு மந்திரியும், பாகிஸ்தான் மக்கள் கட்சியின் எம்.பி.யுமான ஹினா ரப்பானி கூறும்போது, ‘இம்ரான்கான் இதுபோன்று கேலிக்கூத்தான கருத்துக்களை தொடர்ந்து கூறுவதால் நாட்டை பற்றிய எங்களின் கவலை அதிகரித்துள்ளது’ என்றார். #Imrankhan
    பாகிஸ்தான் எல்லை தாண்டிய தாக்குதல்களை தடுப்பதுடன், பயங்கரவாதிகளை வளர்ப்பதையும் நிறுத்த வேண்டும் என அமெரிக்கா வலியுறுத்தி உள்ளது. #IndiaPakistanConflict #MikePompeo
    வாஷிங்டன்:

    புல்வாமாவில் பிப்ரவரி 14ம் தேதி நடந்த பயங்கரவாத தாக்குதல் மற்றும் பாகிஸ்தான் பகுதிக்குள் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியா நடத்திய தாக்குதலுக்குப் பிறகு இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே பதற்றமான சூழல் நிலவுகிறது. பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கையில் இந்தியாவிற்கு அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளன.

    சமீபத்தில் இந்திய வெளியுறவு செயலாளர் விஜய் கோகலேவை அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜான் போல்டன் சந்தித்தபோது, இந்தியாவிற்கு அமெரிக்காவின் ஆதரவை தெரிவித்தார். பாகிஸ்தான் பயங்கரவாதக் குழுக்களுக்கு எதிராக "உறுதியான மற்றும் மீறமுடியாத நடவடிக்கை" எடுக்க வேண்டும் என்று பாகிஸ்தானிடம் அமெரிக்காவும் இந்தியாவும் கேட்டுக்கொண்டன.

    இந்த நிலையில் அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி மைக் பாம்பியோ அளித்த பேட்டியில் கூறியதாவது:-


    பாகிஸ்தான் பயங்கரவாதிகளால் கடந்த பிப்ரவரி 14 ந்தேதி  இந்தியாவில் என்ன நடந்தது என்பதை நாங்கள் கண்டோம். பாகிஸ்தானில் இருந்து வந்த பயங்கரவாதிகளால் மோதல் ஏற்பட்டது. எனவே இந்த விஷயத்தில் பாகிஸ்தான் நடவடிக்கையை தீவிரப்படுத்த வேண்டும். பயங்கரவாதிகளை  வளர்ப்பதை பாகிஸ்தான் நிறுத்த வேண்டும்.

    டொனால்டு டிரம்ப் நிர்வாகம் பாகிஸ்தானுக்கு எதிராக வேறு எந்த முந்தைய அரசாங்கங்களும் எடுக்காத நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. பாகிஸ்தான் பயங்கரவாதிகளை தடுத்து நிறுத்துவதில் அதிக அக்கறை செலுத்த வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார். #IndiaPakistanConflict #MikePompeo
    பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்புகளால் இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தானில் தாக்குதல்கள் தொடரும் என அமெரிக்காவின் உளவுத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். #PakMilitants #AttcksInIndia #USSpymaster
    வாஷிங்டன்:

    அமெரிக்காவின் தேசிய உளவுத்துறை இயக்குநர் டான் கோட்ஸ், உளவுத்துறைக்கான செனட் தேர்வுக் குழு கூட்டத்தில் கலந்துகொண்டு பேசினார். அப்போது, உலகளாவிய அளவில் பயங்கரவாத அச்சுறுத்தல் தொடர்பாக அவர் கூறியதாவது:-
     
    ஆப்கானிஸ்தானில் ஜூலையில் அதிபர் தேர்தல் நடைபெற உள்ளதாலும், தலிபான்களின் பெரும் தாக்குதல் காரணமாகவும் தெற்கு ஆசியாவில் பெரும் சவால்கள் 2019-ல் இருக்கும்.
     
    பாகிஸ்தான் அரசு பயங்கரவாத அமைப்புகளுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதில் குறுகிய எண்ணத்துடன் செயல்படுவதாலும்,  பயங்கரவாத அமைப்புகளை தன்னுடைய கொள்கை முடிவுகளின் ஆயுதங்களாக பயன்படுத்துவதாலும் பயங்கரவாத அமைப்புகளின் எச்சரிக்கை நேரடியாகவே உள்ளது.



    பாகிஸ்தானின் இதுபோன்ற செயல்பாடு பயங்கரவாதத்திற்கு எதிராக அமெரிக்கா மேற்கொண்டு வரும் நடவடிக்கையில் பாதிப்பை உண்டாக்கும். பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்புகளுக்கு ஆதரவு அளிப்பது, அவை பாதுகாப்பு புகலிடங்களை விஸ்தரிக்க வகை செய்கிறது.

    இந்த பயங்கரவாத இயக்கங்கள் இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தானில் தாக்குதலை நடத்தும். அமெரிக்க நலன்களுக்கு எதிராகவும் தாக்குதல் நடத்துவதற்கு வாய்ப்புகள் உள்ளன.

    இவ்வாறு அவர் கூறினார்.  #PakMilitants #AttcksInIndia #USSpymaster
    உத்தரபிரதேச மாநிலத்தில் கும்பமேளா நடக்கும் நாட்களில், கூட்டத்தோடு கூட்டமாக ஊடுருவி மிகப்பெரிய நாசவேலை செய்ய பாகிஸ்தான் பயங்கரவாதிகள் சதி திட்டம் தீட்டி இருப்பது தெரிய வந்துள்ளது. #KumbhMela
    லக்னோ:

    உத்தரபிரதேச மாநிலம் அலகாபாத்தில் கங்கை, யமுனா, கண்ணுக்குத் தெரியாத சரஸ்வதி ஆகிய 3 நதிகள் ஒன்று கூடும் திரிவேணி சங்கமத்தில் கும்பமேளா நடைபெற உள்ளது.

    வருகிற 14-ந்தேதி இந்த கும்பமேளா தொடங்க உள்ளது. 6 ஆண்டுகளுக்கு ஒரு தடவை நடத்தப்படும் கும்பமேளா என்பதால், இந்த கும்பமேளாவுக்கு சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    கும்பமேளா நடைபெறும் நாட்களில் நாடு முழுவதிலும் இருந்து சுமார் 15 கோடி பேர் கலந்து கொண்டு புனித நீராடுவார்கள் என்று கணிக்கப்பட்டுள்ளது. தினமும் ரெயில்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள்.

    இதையொட்டி அலகாபாத் ரெயில் நிலையம் ஒரே நேரத்தில் 10 ஆயிரம் பேரை கையாளும் வகையில் மேம்படுத்தப்பட்டுள்ளது. மற்ற ரெயில் நிலையங்களிலும் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    இந்த நிலையில் கும்பமேளா நடக்கும் நாட்களில், கூட்டத்தோடு கூட்டமாக ஊடுருவி மிகப்பெரிய நாசவேலை செய்ய பாகிஸ்தான் பயங்கரவாதிகள் சதி திட்டம் தீட்டி இருப்பது தெரிய வந்துள்ளது. உளவுத்துறையினர் கொடுத்த தகவலின் பேரில் இந்த எச்சரிக்கையை வட கிழக்கு ரெயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ளது.

    இதைத் தொடர்ந்து உத்தரபிரதேசம், பீகார் ஆகிய இரு மாநிலங்களிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கும்பமேளா நடக்கும் அலகாபாத் நகரம் பலத்த பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. தீவிர வாகன சோதனை நடந்து வருகிறது.

    உத்தரபிரதேசத்தில் பிரயக்ராஜ் (அலகாபாத்) தியோரியா, கோரக்பூர், பல்லியா, காசிப்பூர், மா, வாரணாசி, மிர்காபூர், பதோதி, ஜனுன்பூர், அசம்கர், குஷிநகர், மகராஜ்கஞ்ச் ஆகிய 13 மாவட்டங்கள் உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. பீகாரில் சப்ரா, சிவான், கோபால்கஞ்ச் ஆகிய மூன்று மாவட்டங்கள் உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

    ரெயில்களில் வரும் அனைவரையும் சோதனை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. கும்பமேளா பகுதியில் கண்காணிப்பு அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. பயங்கரவாத தடுப்புப் பிரிவு போலீசார் இப்போதே சாதாரண உடைகளில் கண்காணிப்பை தீவிரப்படுத்தி உள்ளனர். #KumbhMela
    பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகளுக்கு இந்தியாவில் கடல்வழியாக ஊடுருவி தாக்குதல் நடத்த தொடர்ந்து பயிற்சி அளிக்கப்பட்டு வருவதாக மத்திய உள்துறை இணை மந்திரி தெரிவித்தார். #Parliament
    புதுடெல்லி:

    மும்பையில் பயங்கரவாதிகள் கடல் வழியாக ஊடுருவி தாக்குதலை நடத்தியதில் பலர் உயிரிழந்தனர்.

    இந்த நிலையில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் மீண்டும் கடல் வழியாக ஊடுருவி இந்தியாவில் தாக்குதல் நடத்த திட்டமிட்டு உள்ளதாக மத்திய உள்துறை இணை மந்திரி ஹன்ஸ்ராஜ் பாராளுமன்றத்தில் ஒரு கேள்விக்கு பதில் அளித்த போது கூறினார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகளுக்கு இந்தியாவில் கடல்வழியாக ஊடுருவி தாக்குதல் நடத்த தொடர்ந்து பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. அதை தடுக்க தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறோம்.

    கடல் வழியாக ஊடுருவி தாக்குதல் நடத்த முடியவில்லை என்றால் துறைமுகம், கப்பல்கள், ஆயில் டேங்குகளை தாக்க திட்டமிட்டு இருக்கிறார்கள். அதையும் தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு பலத்த பாதுகாப்பு போடப்பட்டு இருக்கிறது.

    இவ்வாறு அவர் கூறினார். #Parliament
    ×