என் மலர்
நீங்கள் தேடியது "Pala Karuppiah"
- விழாவில் நடிகர் சிவக்குமார் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார்.
- என்னை விட பழ.கருப்பையா 2 வயது சிறியவர். என்றாலும் அவரது காலில் விழுந்து வணங்குகிறேன்.
பிரபல நடிகரான சிவக்குமார் சிறந்த ஓவியராகவும், எழுத்தாளராகவும் மட்டுமின்றி யோகாசனம் மற்றும் உடற்பயிற்சிகள் செய்து உடலை கட்டுக்கோப்பாக வைத்துள்ளார். பல்வேறு புத்தக வெளியீடு மற்றும் இலக்கிய விழாக்களில் சிறப்புரையாற்றி வருகிறார்.
அந்த வகையில் காரைக்குடி கண்ணதாசன் மணி மண்டபத்தில் பழ.கருப்பையா எழுதிய இப்படித்தான் உருவானேன் என்ற புத்தக வெளியீட்டு விழா நேற்று நடந்தது. விழாவில் நடிகர் சிவக்குமார் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார். அப்போது அவர் கூறியதாவது:-
என்னை விட பழ.கருப்பையா 2 வயது சிறியவர். என்றாலும் அவரது காலில் விழுந்து வணங்குகிறேன் என்று பழ.கருப்பையா காலில் விழுந்து வணங்கினார். விழா முடிந்து சிவக்குமார் கீழே இறங்கியபோது முதியவர் ஒருவர் ஆர்வத்துடன் அவருக்கு சால்வை அணிவிக்க முயன்றார். அவரிடம் இருந்த சால்வையை சிவக்குமார் பறித்து எறிந்தார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி பரவி வருகிறது. இதுபோன்று சில ஆண்டுகளுக்கு முன்பு ஒரு விழாவில் தன்னோடு செல்பி எடுக்க முயன்ற வாலிபரின் செல்போனை சிவக்குமார் பறித்து எறிந்த சம்பவம் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் தற்போது சிவக்குமார் சால்வையை பறித்து எறிந்தது மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
