search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Palak Poori"

    குழந்தைகளுக்கு பூரி என்றால் மிகவும் பிடிக்கும். இன்று பசலைக்கீரை சேர்த்து சத்தான பூரி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    பசலைக்கீரை - 1 கட்டு
    கோதுமை மாவு - 1 கப்
    சீரகத்தூள் - கால் டீஸ்பூன்
    கரம் மசாலாத்தூள் - சிறிதளவு
    ப.மிளகாய் - 1
    மிளகாய் தூள் - அரை டீஸ்பூன்
    மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்
    எண்ணெண், உப்பு - தேவையான அளவு



    செய்முறை

    பசலைக்கீரையை நன்றாக சுத்தம் செய்து பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    வாணலியில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி அது சூடானதும் பசலைக்கீரையை கொட்டி வதக்கவும்.

    அதனுடன் ப.மிளகாயையும் சேர்த்து வதக்கி ஆறியதும் விழுதாக அரைத்து கொள்ளவும்.

    ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவை போட்டு அதனுடன் அரைத்த கீரை விழுது, கரம் மசாலா துள், சீரகத்தூள், மஞ்சள் தூள், மிளகாய் தூள, உப்பு சேர்த்து நன்றாக கலந்து தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்தில் பிசைந்து கொள்ளவும்.

    மாவு மிருதுமான பதத்திற்கு வந்ததும பூரிகளாக தட்டி எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும்.

    சூப்பரான பசலைக்கீரை பூரி ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    ×