search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Panchayat Council President"

    • இதைதொடர்ந்து, போலீசார் வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வந்தனர்.
    • ஆராமுதன் கொலை வழக்கில் முக்கிய நபராக வண்டலூர் ஊராட்சி மன்ற தலைவி.

    சென்னை, வண்டலூர் அருகே கடந்த மாதம் 29ம் தேதி நாட்டு வெடிகுண்டு வீசி திமுக நிர்வாகி ஆராமுதன் கொடூரமாக கொலை செய்யப்பட்டார்.

    இதைதொடர்ந்து, போலீசார் வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வந்தனர்.

    இந்நிலையில், திமுக ஒன்றிய செயலாளர் ஆராமுதன் கொலை வழக்கில் வண்டலூர் ஊராட்சி மன்ற தலைவி கைது செய்யப்பட்டுள்ளார்.

    ஆராமுதன் கொலை வழக்கில் முக்கிய நபராக வண்டலூர் ஊராட்சி மன்ற தலைவி முத்தமிழ் செல்வி விஜயராஜ் இருந்தது அம்பலம்.

    ஊராட்சி மன்ற தலைவி செல்வியுடன், அவரது கார் ஓட்டுநர் துரைராஜ் ஆகியோரையும் போலீசார் கைது செய்தனர்.

    • மேலூர் அருகே முன்னாள் ஊராட்சி மன்றத்தலைவர் விபத்தில் பலியானார்.
    • அடையாளம் தெரியாத வாகனம் மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது.

    மேலூர்

    மேலூர் அருகே உள்ள அ.வளையப்பட்டியை சேர்ந்தவர் தர்மராஜ் (வயது51). அ.தி.மு.க. பிரமுகரான இவர் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவராக இருந்தவர்.

    இன்று காலை கீரைக் கட்டுகளை விற்பதற்காக தனது இருசக்கர வாகனத்தில் மாட்டுத்தாவணி மா்ாக்கெட்டிற்கு சென்றார். பின்பு அங்கிருந்து வீட்டிற்கு திரும்பினார். அழகர் கோவில் அருகே உள்ள அப்பன் திருப்பதி பகுதியில் வந்து கொண்டிருந்த அவர் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது.

    இதில் ரோட்டோரம் இருந்த ஓடைக்குள் தூக்கி வீசப்பட்ட அவர் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே பலியானார். அந்த வழியாக சென்றவர்கள் வெகு நேரத்திற்கு பின்னே தர்மராஜ் இறந்து கிடப்பதை பார்த்தனர்.

    இதுகுறித்து அப்பன் திருப்பதி போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து தர்மராஜ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுகுறித்து வழக்கு பதிந்து தர்மராஜ் மீது மோதிய வாகனம் பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வெங்கடாம்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் ஸாருகலா ரவி , தென்காசி மாவட்ட கலெக்டர் ரவிச்சந்திரனை நேரில் சந்தித்து மனு ஒன்று கொடுத்தார்.
    • மயிலப்பபுரம் காமராஜர் நகருக்கு செல்லும் பாதை நீர்நிலை புறம்போக்காக இருக்கும் இடத்தை பொது பாதையாக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

    கடையம்:

    கடையம் யூனியனுக்குட்பட்ட வெங்கடாம்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் ஸாருகலா ரவி மாவட்ட செயலாளர் சிவபத்த நாபன் தலைமையில், தென்காசி மாவட்ட கலெக்டர் ரவிச்சந்திரனை நேரில் சந்தித்து மனு ஒன்று கொடுத்தார். அந்த மனுவில் , முத்தம்மாள்புரத்தில் மறுகால் செல்லும் ஒடையில் பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கருத்தலிங்கபுரத்தில் பகுதி நேர ரேஷன் கடை அமைக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்தார். மேலும் மயிலப்பபுரம் காமராஜர் நகருக்கு செல்லும் பாதை நீர்நிலை புறம்போக்காக இருக்கும் இடத்தை பொது பாதையாக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார். அப்போது தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் சிவபத்மநாதன் உடன் இருந்தார்.

    ×