search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "panchayat poll"

    அசாம் மாநிலத்தில் இன்று நடைபெற்ற இரண்டாவதுகட்ட பஞ்சாயத்து தேர்தலில் சுமார் 75 சதவீதம் வாக்குகள் பதிவானதாக தகவல் வெளியாகியுள்ளது. #Assampanchayatpolls #Assampanchayatsecondphase
    கவுகாத்தி:

    அசாம் மாநிலத்தில் உள்ள 251 ஜில்லா பரிஷத் அமைப்புகள், 1304 பஞ்சாயத்து அமைப்புகள், 1304 கிராம பஞ்சாயத்து தலைவர் பதவிகள் மற்றும் 13 ஆயிரத்து 40 கிராம பஞ்சாயத்து உறுப்பினர்கள் பதவிக்கு டிசம்பர் 5 மற்றும் 9 தேதிகளில் இருகட்டங்களாக தேர்தல் நடத்த அம்மாநில தேர்தல் கமிஷன் தீர்மானித்தது.

    அம்மாநிலத்தை ஆளும் பா.ஜ.க.வுடன் சட்டசபையில் கூட்டணியாக செயல்படும் அசாம் கனபரிஷத் கட்சி இந்த தேர்தலை தனியாக சந்திக்கிறது. பா.ஜ.க., காங்கிரஸ், அனைத்திந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி, திரிணாமுல் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் தங்களது வேட்பாளர்களை களமிறக்கியுள்ளன.

    இங்குள்ள 16 மாவட்டங்களில் 15 ஆயிரத்து 899 பதவிகளுக்கு கடந்த ஐந்தாம் தேதி நடைபெற்ற முதல்கட்ட தேர்தலில் சுமார் 81.5 சதவீதம் வாக்குகள் பதிவாகி இருந்தன.



    இந்நிலையில், மீதமுள்ள 10 மாவட்டங்களுக்கு உட்பட்ட 169 ஜில்லா பரிஷத் அமைப்புகள், 895 பஞ்சாயத்து அமைப்புகள்,  895 கிராம பஞ்சாயத்து தலைவர் பதவிகள் மற்றும்  8950 கிராம பஞ்சாயத்து உறுப்பினர்கள் பதவிகளுக்கு இன்று இரண்டாம்கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது.

    இன்றிரவு எட்டுமணி நேர நிலவரப்படி, சுமார் 75 சதவீதம் வாக்குகள் பதிவானதாக முதல்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. சுமார் 900 வாக்குச்சாவடிகளில் கடைசி நேரத்துக்கு பின்னரும் வாக்குப்பதிவு நடைபெற்றதாக அம்மாநில தேர்தல் அதிகாரி ஹெச்.என்.போரா தெரிவித்தார். இதனால், வாக்குப்பதிவு சதவீதம் சற்று அதிகரிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    குறிப்பாக, இன்றைய வாக்குப்பதிவு அமைதியாக நடந்து முடிந்தது. கச்சார், கரிம்கஞ்ச், நல்பாரி மாவட்டங்களுக்கு உட்பட்ட 8 வாக்குச் சாவடிகளில் ஏற்பட்ட வன்முறை காரணமாக இங்கு வரும் 11-ம் தேதி மறுவாக்குப்பதிவு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    இருகட்ட தேர்தல்களிலும் பதிவான வாக்குகள் வரும் 12-ம் தேதி எண்ணப்பட்டு, அன்று பிற்பகலுக்குள் முடிவுகள் வெளியாகும். #Assampanchayatpolls #Assampanchayatsecondphase
    மேற்கு வங்காளம் உள்ளாட்சி தேர்தலில் வாட்ஸ்அப் மூலம் வேட்புமனு தாக்கல் செய்த 5 வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
    கொல்கத்தா:

    மேற்கு வங்காள உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகிறது. இதில், ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்யப்பட்ட தினங்களில் மாநிலம் முழுவதும் பரவலாக வன்முறை சம்பவங்கள் நடைபெற்ற காரணத்தினால் வாட்ஸ்அப் மூலம் வேட்புமனு தாக்கல் செய்யும் வசதிக்கு உயர்நீதிமன்ற அறிவுறுத்தலின் படி மாநில தேர்தல் ஆணையம் ஒப்புதல் வழங்கியது.

    அதன்படி 9 வேட்பாளர்கள் வாட்ஸ்அப் மூலம் வேட்புமனு தாக்கல் செய்தனர். அவர்களில் 5 பேர் இன்று வெற்றி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வெற்றி பெற்ற 5 நபர்களில் 3 பேர் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. #WestBengalPanchayatElections #TrinamoolCongress
    மேற்கு வங்க மாநிலத்தில் இன்று நடைபெற்ற பஞ்சாயத்து தேர்தலில் அரசியல் கட்சியினரிடையே ஏற்பட்ட மோதல் வன்முறையாக மாறிய நிலையில் இதுவரை 6 பேர் வரை உயிரிழந்துள்ளனர். #PanchayatElection #Pollviolence
    கொல்கத்தா:

    மேற்கு வங்க மாநிலத்தின் பஞ்சாயத்து தேர்தல் இன்று காலை துவங்கியது. 58 ஆயிரத்துக்கும் அதிகமான இடங்கள் உள்ள அம்மாநிலத்தின் 38,605 இடங்களில் இன்று தேர்தல் நடைபெற்று வருகிறது.

    வாக்குப்பதிவு துவங்குவதற்கு முன்பிருந்தே மேற்கு வங்காளத்தின் பல கிராம பகுதிகளில் அரசியல் கட்சியினரிடையே மோதல் வெடிக்கத் துவங்கியது. வாக்குச்சாவடிகளை கைப்பற்றுவது, பொதுமக்களை வாக்களிக்க விடாமல் தடுப்பது, வெடிகுண்டு தாக்குதல் போன்றவை அரங்கேறின.

    இந்நிலையில், சாந்திபூர் பகுதியின் நதியா மாவட்டத்தில் உள்ள தேர்தல் வாக்குப்பதிவு மையத்தை கையகப்படுத்தச் சென்ற திரிணாமூல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த இளைஞர் சவுஜித் பிராமனிக் அப்பகுதி மக்களால் அடித்துக் கொல்லப்பட்டார்.

    மேலும், பிரக்னாஸ் அம்டங்கா பகுதியில் நடைபெற்ற வெடிகுண்டு தாக்குதலில் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த ஒருவர் உயிரிழந்தார். மேலும், சுமார் 20 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.

    முர்ஷிதாபாத் பகுதியில் பாஜகவைச் சேர்ந்த பிரமுகர் ஒருவர் கொல்லப்பட்டதையடுத்து, திரிணாமுல் காங்கிரசை சேர்ந்த ஆரிப் அலி என்பவர் சுட்டுக் கொல்லப்பட்டார். கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த கணவன் மனைவி கொல்லப்பட்டு, அவர்களது வீட்டிற்கு தீ வைக்கப்பட்ட சம்பவமும் அரங்கேறியுள்ளது.


    தொடரும் கலவரங்கள் காரணமாக, பொதுமக்கள் வாக்குச்சாவடிகளுக்குச் செல்ல அச்சம் தெரிவித்துள்ளனர். வன்முறை கும்பலால் 5 பத்திரிக்கையாளர்களும் கடுமையாக தாக்கப்பட்டனர்.

    வடக்கு பிராக்னஸ் மாவட்டத்தில் உள்ள துட்டாபூர் வாக்குச்சாவடிக்குச் செல்ல முயன்ற பாஜகவைச் சேர்ந்த பெண் வேட்பாளர் திரிணாமூல் காங்கிரசைச் சேர்ந்தவர்களால் தாக்கப்பட்டுள்ளார். மேலும், அவருக்கு கொலை மிரட்டலும் விடுக்கப்பட்டுள்ளது. #PanchayatElection #Pollviolence 
    ×