என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "pandiraj"

    பாண்டிராஜ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் - அனு இம்மானுவேல், ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் உருவாகும் எஸ்கே 16 படத்தில் மேலும் 4 பிரபலங்கள் இணைந்துள்ளனர். #SK16 #Sivakarthikeyan
    சிவகார்த்திகேயன் நடிப்பில் ‘மிஸ்டர்.லோக்கல்’ படம் வருகிற மே 17-ந் தேதி திரைக்கு வரவிருக்கிறது. சிவகார்த்திகேயன் தற்போது ரவிக்குமார் இயக்கத்திலும், பி.எஸ்.மித்ரன் இயக்கத்திலும் நடித்து வருகிறார். இதுதவிர விக்னேஷ் சிவன் மற்றும் பாண்டிராஜ் இயக்கத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்.

    இதில் பாண்டிராஜ் இயக்கும் எஸ்.கே.16 படத்தை சன் பிக்சர்ஸ் சார்பில் கலாநிதி மாறன் தயாரிக்கிறார். இந்த படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக அனு இம்மானுவேல் நடிக்கிறார். ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஐஸ்வர்யா ராஜேஷ் ஒப்பந்தமாகி இருக்கிறார். ஐஸ்வர்யா, சிவகார்த்திகேயனின் தங்கையாக ஒரு அழுத்தமான கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

    இதுதவிர யோகி பாபு, சூரி, ஆர்.கே.சுரேஷ், நட்டி நட்ராஜ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கின்றனர். இந்த நிலையில், இயக்குநர் பாரதிராஜா மற்றும் சமுத்திரக்கனியும் படக்குழுவில் இணைந்துள்ளனர். பாரதிராஜா சிவகார்த்திகேயனின் அப்பாவாக நடிப்பதாக கூறப்படுகிறது.


    டி.இமான் இசையமைக்கும் இந்த படத்தின் ஒளிப்பதிவாளராக நிரவ் ஷாவும், படத்தொகுப்பாளராக ஆண்டனி எல்.ரூபனும், கலை இயக்குநராக வீர சமரும் ஒப்பந்தமாகி உள்ளனர். படப்பிடிப்பு விரைவில் துவங்கவிருக்கிறது. #SK16 #Sivakarthikeyan #Bharathiraja #Samuthirakani #NiravShah #AntonyLRuben

    பாண்டிராஜ் - சிவகார்த்திகேயன் கூட்டணி மூன்றாவது முறையாக இணையும் புதிய படத்தின் அறிவிப்பு சமீபத்தில் அறிவிக்கப்பட்ட நிலையில், இதில் சிவா ஜோடியாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பதாக கூறப்படுகிறது. #SK16 #Sivakarthikeyan
    சிவகார்த்திகேயன் நடிப்பில் மிஸ்டர். லோக்கல் படம் வருகிற மே 1-ந் தேதி திரைக்கு வர இருக்கிறது. அடுத்ததாக ரவிக்குமார் இயக்கத்தில் அறிவியல் சார்ந்த படத்தில் நடித்து வந்த சிவகார்த்திகேயன், தற்போது பி.எஸ்.மித்ரன் இயக்கும் புதிய படத்திலும் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் துவங்கியது.

    இந்த நிலையில், பாண்டிராஜ் இயக்கும் புதிய படத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பதாக அறிவிக்கப்பட்டது. ஏப்ரல் இறுதியில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது.



    இதில் சிவகார்த்திகேயன் ஜோடியாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க இருப்பதாகத் தகவல் கிடைத்துள்ளது. ஐஸ்வர்யா ராஜேஷ், சிவகார்த்திகேயனின் முதல் தயாரிப்பான ‘கனா’ படத்தில் நாயகியாக நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. #SK16 #Sivakarthikeyan #AishwaryaRajesh #Pandiraj

    வள்ளிகாந்த் இயக்கத்தில் உருவாகி இருக்கும் `செம' படத்தில் ஜி.வி.பிரகாஷ் ஜோடியாக நடித்துள்ள அர்த்தனா, படத்தின் இசை வெளியீட்டு விழாவில் உணர்ச்சிவசப்பட்டு அழுதார். #Sema #Arthana
    பாண்டிராஜ் தயாரிப்பில் வள்ளிகாந்த் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் `செம'. ஜி.வி.பிரகாஷ் நாயகனாக நடித்துள்ள இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக அர்த்தனா நடித்திருக்கிறார். இவர் `தொண்டன்' படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

    படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. அப்போது அப்போது நாயகி அர்த்தனா மேடையில் அழுதார். இது பரபரப்பை ஏற்படுத்தியது. 

    விழாவில் இயக்குநர் பாண்டிராஜ் பேசும்போது “இயக்குநர், தயாரிப்பாளர் தொல்லையால் அர்த்தனா அழுததாக சர்ச்சை கிளம்பினாலும் கிளம்பும். அதற்கு நாங்கள் காரணம் இல்லை. படப்பிடிப்பில் அவருக்கு எந்த தொல்லையும் கொடுக்கவில்லை. திருமணத்துக்கு பெண்பார்க்க செல்லும் ஒரு இளைஞன் சந்திக்கும் பிரச்சினைகளை குடும்பத்தோடு பார்க்கும் வகையில் நகைச்சுவையாக படமாக்கி உள்ளோம்” என்றார்.



    பின்னர் மேடையில் அழுத காரணம் குறித்து நடிகை அர்த்தனா கூறியதாவது:-

    “படப்பிடிப்பில் டைரக்டரோ, தயாரிப்பாளரோ எனக்கு தொந்தரவு கொடுக்கவில்லை. நான் அழுததற்கு காரணம் வேறு. எளிதில் நான் உணர்ச்சிவசப்படுவேன். படப்பிடிப்பில் இயக்குனரும், நடிகர்களும் கஷ்டப்பட்டதை பார்த்தேன். எல்லோருடைய வாழ்க்கையும் இந்த படத்தில் உள்ளது. அதை நினைத்து படம் நன்றாக ஓட வேண்டும் என்ற எதிர்பார்ப்பில் அழுகை வந்தது. இந்த படத்தில் கிராமத்து பெண்ணாக வருகிறேன். அடுத்து கடைக்குட்டி சிங்கம் படத்தில் கார்த்தியுடன் நடிக்கிறேன்”

    இவ்வாறு அர்த்தனா கூறினார். #Sema #GVPrakash #Arthana

    வள்ளிகாந்த் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் உருவாகி இருக்கும் `செம' படத்தில் நாயகியாக நடித்திருக்கும் அர்த்தனா அவரது அடுத்தடுத்த படங்களிலும் கிராமத்து பின்னணியில் வருகிறார். #Sema #Arthana
    ஜி.வி.பிரகாஷ் - அர்த்தனா நடிப்பில் உருவாகி வருகிற மே 25-ஆம் தேதி ரிலீசாக இருக்கும் படம் `செம'. வள்ளிகாந்த் இயக்கியிருக்கும் இந்த படத்தில் யோகிபாபு, கோவை சரளா, மன்சூர் அலிகான், சுஜாதா உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

    தொண்டன் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் முக்கி கதாபாத்திரத்தில் நடித்திருந்த அர்த்தனா இந்த படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமாகி இருக்கிறார். படம் பற்றி அர்த்தனா பேசும் போது,



    வள்ளிகாந்த் கதை சொன்ன விதமும், என்னுடைய மகிழினி கதாபாத்திரத்தை அவர் உருவாக்கியிருந்ததும் என்னை மிகவும் கவர்ந்தது. தென் தமிழக பின்னணியில், ஒரு பக்கத்து வீட்டு பெண் போன்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன். மகிழினி பெயருக்கேற்றார் போல உண்மையானவள், நம் வாழ்வில் எங்கேயாவது அவளை போன்ற ஒருவரை கடந்து வந்திருப்போம். அந்த கதாபாத்திரத்தில் என்னை பொருத்திக் கொள்ள உதவியாக இருந்த இயக்குனர் வள்ளிகாந்துக்கு நன்றி".



    அர்த்தனாவின் அடுத்த இரண்டு படங்களும் கூட கிராமத்து பின்னணியில் உருவாகும் படங்கள் தான். அவை கார்த்தியின் கடைக்குட்டி சிங்கம், விக்ராந்த்தின் வெண்ணிலா கபடி குழு. "இந்த இரண்டு படங்களிலுமே கிராமத்து பெண் கதாபாத்திரத்தில் நடிக்கிறேன். திருவனந்தபுரத்தில் பிறந்து வளர்ந்ததால், கிராமத்து பெண்கள் போல தாவணி உடை அணிய வேண்டும் என்று ஆசைப்பட்டிருக்கிறேன். என்னுடைய திரை வாழ்வை 'செம' தொடங்கி வைத்திருக்கிறது. மே 25-ஆம் தேதி ரிலீஸுக்காக ஆவலோடு காத்திருக்கிறேன். திரையரங்குகளில் ரசிகர்களோடு அமர்ந்து படத்தை பார்க்க ஆவலோடு இருக்கிறேன். என்னுடைய அடுத்தடுத்த படங்களில் நகரத்து பெண் கதாபாத்திரங்களிலும் நடிப்பேன்" என்றார். #Sema #GVPrakashKumar #Arthana

    வள்ளிகாந்த் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் - அர்த்தனா நடிப்பில் உருவாகி இருக்கும் செம படம் ரிலீசுக்கு தயாராகி இருக்கும் நிலையில், படத்தின் டிரைலரை நடிகர் சிவகார்த்திகேயன் இன்று வெளியிடுகிறார். #Sema #GVPrakashKumar
    தமிழ் சினிமாவில் கைவசம் அதிக படங்களை வைத்திருக்கும் நடிகர்களுள் ஒருவர் ஜி.வி.பிரகாஷ். தொடர்ந்து பல படங்களில் ஒப்பந்தமாகியும் வருகிறார். 

    அவரது நடிப்பில் கடைசியாக வெளியான நாச்சியார் படம் ஜி.வி.பிரகாஷூக்கு பெயர் சொல்லும் படமாக அமைந்தது. இந்த நிலையில், அவரது நடிப்பில் அடுத்ததாக `செம' படம் வருகிற மே 25-ஆம் தேதி ரிலீசாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கு முன்னதாக படத்தின் டிரைலர் இன்று வெளியாக இருக்கிறது. டிரைலரை நடிகர் சிவகார்த்திகேயன் இன்று மாலை 5 மணிக்கு வெளியிட இருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். 

    இயக்குநர் பாண்டிராஜின் உதவியாளரான வள்ளிகாந்த் இயக்கியிருக்கும் இந்த படத்தில் ஜி.வி.பிரகாஷ் ஜோடியாக அர்த்தனா விஜயகுமார் நடித்திருக்கிறார். யோகிபாபு, கோவை சரளா, மன்சூர் அலிகான், சுஜாதா உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.



    பசங்க புரொடக்சன்ஸ் சார்பில் பாண்டிராஜ் இந்த இந்த படத்தை தயாரித்துள்ளார். ஜி.வி.பிரகாஷ் இசையமைத்திருக்கும் இந்த படத்திற்கு, விவேக் ஆனந்த் ஒளிப்பதிவு பணிகளை மேற்கொண்டுள்ளார். #Sema #GVPrakashKumar #Sivakarthikeyan

    ×