search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "paneer pizza"

    குழந்தைகளுக்கு பீட்சா என்றால் மிகவும் பிடிக்கும். இன்று வீட்டிலேயே எளிய முறையில் பன்னீர் வைத்து பீட்சா செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    மிளகுத் தூள் - தேவையான அளவு
    காய்ந்த மிளகாய் - 4
    தக்காளி சாஸ் - 2 மேசைக்கரண்டி
    உப்பு - தேவையான அளவு
    வெங்காயம் - 2
    தக்காளி - ஒன்று
    சீஸ் - 50 கிராம்
    வெண்ணெய் - 2 மேசைக்கரண்டி
    பன்னீர் - ஒரு பாக்கெட்
    பீட்சா பேஸ் - ஒன்று



    செய்முறை :

    வெங்காயம் தக்காளியைப் பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    சீஸை நன்கு துருவிக் கொள்ளவும். (விரும்பினால் கடைகளில் கிடைக்கும் சீஸ் ஸ்லைஸைப் பயன்படுத்தலாம். இன்னும் நன்றாக இருக்கும்).

    பக்னீரைச் சிறு துண்டுகளாக நறுக்கி வைக்கவும்.

    காய்ந்த மிளகாயிலுள்ள விதைகளை தனியாக எடுத்துக் கொண்டு மிக்ஸியில் போட்டு ஒரு சுற்று சுற்றி எடுத்துக் கொள்ளவும்.

    அடுப்பில் பேனை வைத்து வெண்ணெய் ஊற்றி, அதில் பன்னீரைப் போட்டு லேசாகப் பொரித்தெடுக்கவும். பீட்சா பேஸில் வெண்ணெயைத் தடவிக் கொள்ளவும்.

    அதற்கு மேலே தக்காளி சாஸை நன்றாகத் தடவவும். பிறகு நறுக்கிய வெங்காயத்தை பரவலாக வைக்கவும்.

    வெங்காயத்திற்கு மேல் தக்காளியைப் பரவலாக வைக்கவும்.

    அதன் பிறகு பொரித்த பன்னீரைப் பரவலாக வைத்து, அதன் மேல் தேவையான அளவு உப்பு மற்றும் மிளகுத் தூளைத் தூவி, அரைத்து வைத்துள்ள மிளகாயைத் தூவவும்.

    அதன் மீது சீஸைத் தூவவும். கடைசியாக மைக்ரோவேவ் அவனில் 200 டிகிரியில் 15 நிமிடங்கள் வைத்தெடுக்கவும்.

    சுடச்சுட பன்னீர் பீட்சா ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    ×