என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "paramour"
களக்காடு:
தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகில் உள்ள புளியங்குளத்தை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 29). இவரது மனைவி செல்வராணி. இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். மணிகண்டன் தூத்துக்குடியில் உள்ள ஒரு கடலை மிட்டாய் கடையில் பணி புரிந்து வருகிறார். பணியின் காரணமாக தூத்துக்குடியில் தங்கியிருந்தாலும் அடிக்கடி ஊருக்கு வந்து செல்வது வழக்கம்.
இவரது தம்பி நயினார். கட்டிட தொழிலாளி. இவரது மனைவி இலக்கியா (21). இவர்களுக்கு ரஞ்சனா(2) என்ற பெண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் மணிகண்டனுக்கும், இலக்கியாவுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இது நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. இருவரும் நீண்ட நாட்களாக கணவன், மனைவி போல் பழகி வந்துள்ளனர்.
இந்த விவகாரம் உறவினர்களுக்கு தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் உறவினர்கள் கண்டித்தனர். இனிமேல் இருவரும் சந்திக்கக் கூடாது, பழக கூடாது என்று எச்சரித்துள்ளனர். இருப்பினும் அவர்களால் காதலை கைவிட முடியாமல் தவித்தனர். உறவினர்களுக்கு தெரியாமல் சந்திப்பை தொடர்ந்தனர்.
கடந்த 5-ந்தேதி இலக்கியா தனது குழந்தை ரஞ்சனாவை அழைத்துக் கொண்டு, தீபாவளிக்கு உடன்குடியில் உள்ள தாய் வீட்டுக்கு சென்று வருவதாக வீட்டில் கூறி விட்டு சென்றார். அதன்பிறகு அவர் வீட்டுக்கு வரவில்லை. அக்கம்பக்கத்தில் தேடியும் அவர் கிடைக்கவில்லை. இதையடுத்து நயினார் தனது மாமனார் இசக்கிமுத்து விடம் விசாரித்தபோது, இலக்கியா அங்கு செல்லவில்லை என்பது தெரியவந்தது.
அதே வேளையில் நயினாரின் அண்ணன் மணிகண்டனையும் காணவில்லை. இதையடுத்து தனது மனைவியை கண்டுபிடித்து தரக்கோரி குலசேகரன்பட்டினம் போலீசில் நயினார் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். விசாரணையில் இலக்கியா தனது குழந்தையை அழைத்துக்கொண்டு மணிகண்டனுடன் சென்றது தெரியவந்தது.
இதைதொடர்ந்து கள்ளக்காதல் ஜோடியை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். இதை அறிந்த கள்ளக்காதல் ஜோடியினர் போலீசார் தங்களை பிரித்துவிடுவார்களோ என்று பயந்தனர். வாழ்க்கையில்தான் ஒன்று சேர முடியவில்லை. சாவிலாவது இணைவோம் என்று நினைத்த அவர்கள் தற்கொலை செய்து கொள்வது என்று முடிவெடுத்தனர்.
நேற்று அவர்கள் இருவரும் குழந்தையுடன் நெல்லை வந்தனர். நெல்லை பஸ் நிலையம் அருகே வைத்து மணிகண்டனும், இலக்கியாவும் விஷத்தை குடித்தனர். பின்பு நெல்லை புதிய பஸ் நிலையத்தில் இருந்து சாத்தான்குளம் செல்லும் அரசு பஸ்சில் ஏறி சென்று உள்ளனர். அப்போது அவர்கள் பஸ்சிலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். சக பயணிகள் இருவரும் தூங்குவதாக நினைத்தனர்.
வெகுநேரமாக அவர்கள் எழுந்திருக்கவில்லை. குழந்தை ரஞ்சனா மட்டும் அழுதுகொண்டிருந்தாள். சந்தேகம் அடைந்த பஸ் டிரைவர் பஸ்சை மூலைக்கரைப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றார். அங்கு பரிசோதனை செய்தபோது இருவரும் ஏற்கனவே இறந்துவிட்டது தெரியவந்தது.
இதை தொடர்ந்து மூலக்கரைப்பட்டி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மணிகண்டன், இலக்கியா உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
நாகர்கோவில்:
சேலம் மாவட்டம் வாழப்பாடி பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன். இவரது மனைவி மஞ்சுளா (வயது 19). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.
மஞ்சுளாவுக்கும், அவரது எதிர் வீட்டில் வசித்த ஜோதி என்ற வாலிபருக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. அங்கு அவர்கள் தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்தனர். இதையறிந்த மஞ்சுளாவின் கணவர் மணிகண்டனும், உறவினர்களும் கள்ளக் காதலர்களை கண்டித்தனர்.
இதனால் கள்ளக்காதலர்கள் அடிக்கடி சந்திக்க முடியாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து கடந்த 6 மாதங்களுக்கு முன்பு மஞ்சுளாவும், ஜோதியும் வீட்டை விட்டு வெளியேறி குமரி மாவட்டம் வந்தனர். கன்னியாகுமரி அருகே உள்ள செங்கல்சூளையில் வேலை பார்த்து கணவன்-மனைவி போல் வாழ்ந்தனர்.
மஞ்சுளா மாயமானதால் மணிகண்டன் அவரை தேடி அலைந்தார். அவர் மாயமானது பற்றி போலீஸ் நிலையத்திலும் புகார் செய்தார். பின்னர் மஞ்சுளா கன்னியாகுமரியில் இருப்பதை அறிந்து மணிகண்டன் இங்கு தேடி வந்தார். உறவினர்கள் பேச்சுவார்த்தை நடத்தி மஞ்சுளாவை ஊருக்கு அழைத்துச் சென்றனர்.
அங்கு சிறிது காலம் மணிகண்டனுடன் வாழ்ந்த மஞ்சுளா கடந்த 15 நாட்களுக்கு முன்பு மீண்டும் காதலன் ஜோதியுடன் கன்னியாகுமரிக்கு ஓடி வந்தார். குழந்தைகள் நலன் கருதி மணிகண்டன், மஞ்சுளாவை தேடி கன்னியாகுமரிக்கு வந்தார். மஞ்சுளாவிடம் பேசி அவரை ஊருக்கு அழைத்து செல்ல தயாரானார்.
ஊருக்கு செல்வதற்காக மஞ்சுளாவும், மணிகண்டனும் நாகர்கோவில் ரெயில் நிலையம் வந்தனர். அவர்களுடன் கள்ளக் காதலன் ஜோதியும் சென்றார். ரெயில் நிலையத்தில் கள்ளக்காதல் விவகாரம் தொடர்பாக மணிகண்டனுக்கும், மஞ்சுளாவுக்கும் திடீரென வாய்த்தகராறு ஏற்பட்டது. ஆத்திரம் அடைந்த மணிகண்டன், கல்லை எடுத்து மஞ்சுளா தலையில் ஓங்கி அடித்தார். இதில் மஞ்சுளாவின் தலையில் பலத்த அடிபட்டு ரத்த வெள்ளத்தில் அவர் கீழே சரிந்து விழுந்தார்.
அந்த பகுதியில் நின்றவர்கள் மஞ்சுளாவை மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மஞ்சுளா இன்று காலை இறந்தார்.
மஞ்சுளா தாக்கப்பட்டது தொடர்பாக ஏற்கனவே அவரது கள்ளக்காதலன் ஜோதி, கோட்டார் போலீஸ் நிலையத்தில் புகார் செய்திருந்தார். அதன்பேரில் போலீசார் கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து மணிகண்டனை கைது செய்திருந்தனர். தற்போது மஞ்சுளா இறந்து விட்டதால் இந்த வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டு உள்ளது.
வாலாஜா:
ராணிப்பேட்டை சாமிநாதன் தெருவை சேர்ந்தவர் அக்பர் (வயது 31). மாட்டு வியாபாரி. இவரது மனைவி ரிகானாபேகம் (27). இவர்களுக்கு அப்துல்வாஹித் (3) என்ற ஒரு ஆண் குழந்தை உள்ளது. கடந்த மாதம் 7-ந் தேதி அக்பர் ராணிப்பேட்டை வாரச்சந்தைக்கு வீட்டில் இருந்து பைக்கில் சென்றார்.
அப்போது அவர், வன்னிவேடு அருகே கொல்லப்பட்ட நிலையில் பிணமாக மீட்கப்பட்டார். வாலாஜா போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினர். விசாரணையில், அக்பரின் மனைவி ரிகான பேகத் தனது கள்ளக்காதலன் காலித் அகமதுடன் சேர்ந்து திட்டமிட்டு கூலிப்படையை ஏவி தீர்த்துக்கட்டியது தெரியவந்தது.
கொலையில் தொடர்புடைய அக்பரின் மனைவி ரிகானா பேகம் மற்றும் கூலிப்படை கும்பல் விவேக், சதீஷ், லோகநாதன், கிருபாகரன் ஆகிய 5 பேரை வாலாஜா போலீசார் கைது செய்தனர். மேலும், முக்கிய குற்றவாளியான கள்ளக்காதலன் காலித்அகமது, சின்ன குட்டி, ராஜூ ஆகிய 3 பேரை தனிப்படை போலீசார் தேடி வந்தனர்.
இந்நிலையில் காஞ்சீபுரம் மாவட்டம் உத்தரமேரூர் கோர்ட்டில் கள்ளக்காதலன் காலித்அகமது சரணடைந்தார். பின்னர் அவர், வேலூர் ஜெயிலில் அடைக்கப்பட்டார். மேலும், சின்ன குட்டி, ராஜூ ஆகிய 2 குற்றவாளிகளை பிடிக்க தேடுதல் வேட்டை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
கொழிஞ்சாம்பாறை:
கேரள மாநிலம் காசர்கோட்டை சேர்ந்தவர் மனு (வயது 27). மெக்கானிக். இவருக்கும் கோட்டயத்தை சேர்ந்த மீனு (22) என்ற பெண்ணுக்கும் காதல் ஏற்பட்டது. முறைப்படி இருவரும் திருமணம் செய்தனர். 3 வயதில் ஆண் குழந்தை உள்ளது.
சம்பவத்தன்று காலை மனு வேலைக்கு சென்று விட்டார். சிறிது நேரத்தில் மனைவி செல்போனில் மனுவை அழைத்தார். அப்போது மீனு பேசும்போது தன்னையும், மகனையும் ஒரு கும்பல் கடத்த வீட்டுக்குள் புகுந்து கழுத்தில் கத்தியை வைத்து அறுப்பதாக கூறி முடிக்கும் முன்பே இணைப்பு துண்டிக்கப்பட்டது. பின்னர் கழுத்து அறுக்கப்பட்டது போன்ற போட்டோ அவரின் வாட்ஸ் அப்புக்கு வந்தது.
அதிர்ச்சியடைந்த மனு போலீசாருடன் வீட்டுக்கு சென்றார். அப்போது வீடு திறந்து கிடந்தது.
உள்ளே சென்று பார்த்தபோது ரத்தக்கறை ஆங்காங்கே சிதறி கிடந்தது. போலீசார் சோதனையில் ஈடுபட்டபோது ரத்தம் குறித்து சந்தேகம் ஏற்பட்டது.
அதில் தண்ணீர் ஊற்றி பார்த்தபோது அது ரத்தம் இல்லை. குங்குமம் என்று தெரிந்தது.
இதனால் மீனுவின் மீது போலீசாரின் சந்தேகப் பார்வை திரும்பியது.
மீனுவின் செல்போன் எண்ணை வைத்து சைபர் கிரைம் போலீசாருடன் அவரை பிடிக்க திட்டமிட்டனர். இந்நிலையில் அவர் கோழிக்கோடு ரெயில் நிலையத்தில் இருப்பதாக தெரியவந்தது.
அங்கு சென்ற போலீசார் மீனு, அவரது மகன் மற்றும் அவருடன் இருந்த வாலிபர் பினு என்ற வாலிபரையும் பிடித்தனர். 3 பேரையும் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் பல தகவல்கள் வெளியானது. காதல் திருமணம் செய்து குடும்பம் நடத்திய மீனுவுக்கும் அதே பகுதியை சேர்ந்த பினு (22) என்ற வாலிபருக்கும் இடையே கள்ளக்காதல் ஏற்பட்டது. இருவரும் வீட்டை விட்டு ஓடிப்போக திட்டமிட்டனர்.
அதற்கான சமயம் எதிர்பார்த்த நிலையில் ஒரு கும்பல் கடத்தியதாக நாடகமாடலாம் என்று திட்டம் வந்தது. சம்பவத்தன்று கணவருக்கு போன் செய்து கும்பல் கழுத்தை அறுத்து கடத்தி விட்டதாக கூறிவிட்டு மகனுடன் கள்ளக்காதலன் பினுவின் காரில் தப்பிச்சென்றது தெரியவந்தது.
போலீசார் வழக்குப்பதிவு செய்து மீனு மற்றும் கள்ளக்காதலன் பினு ஆகியோரை கைது செய்தனர்.
உத்தமபாளையம்:
தேனி அருகே உத்தம பாளையம் சின்னஓபுலாபுரம் வரதராஜபுரம் விநாயகர் கோவில் தெருவை சேர்ந்தவர் முத்துச்சாமி. இவரது மனைவி லதா(வயது38). இவருக்கும் அதேபகுதியை சேர்ந்த ராஜ்குமார்(22) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது.
நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. இருவரும் தனிமையில் சந்தித்து வந்தனர். இந்த விசயம் முத்துச்சாமிக்கு தெரியவரவே குடும்பத்தில் பிரச்சினை ஏற்பட்டது. இதனைதொடர்ந்து கணவன்-மனைவி இருவரும் பிரிந்து வாழ்கின்றனர்.
கள்ளக்காதலனுக்கு தனது மகளை திருமணம் செய்து வைத்தால் தங்களுக்கு எந்த இடையூறும் இருக்காது என லதா நினைத்தார். எனவே தனது 13 வயது மகளை தனது கள்ளக்காதலனுக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்தார்.
கடந்த 20-ந்தேதி ராஜ்குமாருக்கும், சிறுமிக்கும் திருமணம் நடந்துள்ளது. இதுகுறித்து முத்துச்சாமி ராயப்பன்பட்டி போலீசில் புகார் அளித்தார். போலீசார் ராஜ்குமார், லதா, தமிழன், ஈஸ்வரி ஆகிய 4 பேர் மீது வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தரங்கம்பாடி:
நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே செம்பனார்கோவில் அண்ணாநகரை சேர்ந்தவர் அறிவழகன் (வயது 48).
இவர் கோவையில் எலக்ட்ரீசியனாக வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி ரேகா (வயது 33). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளன. ரேகாவுக்கும் மேல பாதியைச் சேர்ந்த ராஜசேகர் (38) என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. இந்த கள்ளக்காதல் விவகாரம் அறிவழகனுக்கு தெரியவந்தது.
இதனால் அவர் மனைவி ரேகாவை கண்டித்தார். இதன் காரணமாக கணவன்- மனைவி இடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டு வந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் கோவையில் இருந்து அறிவழகன் செம்பனார்கோவிலுக்கு வந்தார். வழக்கம் போல் கள்ளக்காதல் குறித்து மனைவியிடம் தகராறு செய்தார்.
தொடர்ந்து கணவர் அறிவழகன் கள்ளக்காதலுக்கு இடையூறு செய்து வந்ததால் ரேகா ஆத்திரமடைந்தார். இதனால் கள்ளக்காதலன் ராஜசேகரை சந்தித்து கணவர் அறிவழகனை கொல்ல திட்டம் தீட்டினார். அதற்கு ராஜசேகரும் உடன் பட்டார்.
இந்த நிலையில் நேற்று இரவு மது குடித்து விட்டு அறிவழகன் வீட்டுக்கு வந்தார். அப்போது அவர் குடிபோதையில் மனைவி ரேகாவிடம் அவரது கள்ளக்காதல் குறித்து தரக்குறைவாக திட்டினார். பின்னர் சிறிது நேரம் பேசிய அறிவழகன் அப்படியே தூங்கி விட்டார்.
இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி ரேகா, அறிவழகனை கொல்ல முடிவு செய்து கள்ளக்காதலன் ராஜசேகரனுக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து அவர் அங்கு வந்தார். வீட்டில் தூங்கி கொண்டிருந்த அறிவழகனை ராஜசேகரும், ரேகாவும் தலையணையால் அமுக்கினர். இதில் மூச்சு திணறி அறிவழகன் பரிதாபமாக இறந்தார்.
இருவரும் மாரடைப்பால் அறிவழகன் இறந்ததாக கூறி உறவினர்களை நம்பவைத்து விடலாம் என்று திட்டம் போட்டனர். அதன்படி ரேகா, அறிவழகன் தூங்கும் போது மாரடைப்பால் இறந்ததாக உறவினர்களிடம் தெரிவித்தார். இதனால் உறவினர்கள் இன்று காலை அறிவழகன் வீட்டுக்கு வந்து அவரது உடலை பார்த்து கதறி அழுதனர். அப்போது அவர்கள் ரேகா பேச்சில் சந்தேகம் அடைந்தனர். இதனால் அறிவழகன் சாவில் மர்மம் இருப்பதாக கூறி உறவினர்கள் செம்பனார் கோவில் போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் மயிலாடுதுறை டி.எஸ்.பி. வெங்கடேசன் மற்றும் போலீசார் அறிவழகன் உடலை கைப்பற்றி மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதற்கிடையே ரேகாவிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது அவர் கள்ளக்காதலன் ராஜசேகருடன் சேர்ந்து கணவர் அறிவழகனை கொலை செய்து விட்டதாக கூறினார்.
இதையடுத்து போலீசார் ரேகாவை கைது செய்து தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். தலைமறைவாக இருந்து வரும் ராஜசேகரை போலீசார் தேடி வருகின்றனர்.
கள்ளக்காதலுடன் சேர்ந்து மனைவி கணவரை கொன்ற சம்பவம் மயிலாடுதுறை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்